சனி, 23 மார்ச், 2019

கள்ளர்களின் கவரடைப்பு

(மிகப் பழமையானதாக கருதப்படும் எகிப்திய விருத்த சேதன குகை ஓவியம். கி.மு 2350 முதல் 2000க்கு இடைப்பட்டதாக இருக்கலாம்)


கவரடைப்பு - மற்ற பெயர்கள் சேதனம், விருத்தசேதனம், சுற்றிவெட்டல், சுன்னத்து


ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியினர், ஆஸ்திரேலிய பழங்குடியினர், யூதர்கள், அரேபிய பழங்குடியினர் போன்றவர்களிடம் இருந்த சுன்னத் செய்யும் பழக்கம் மற்றும்  ஆப்பிரிக்காவில் சில பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவிலும் பழக்கத்தில் இருந்த வளைதடி (பூமராங்) கள்ளர் சமூகத்திடம் வழக்கத்தில் உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் காது வளர்க்கும் பழக்கம்,  70,000ம் வருடம் பலமையான  M 130 மரபணு இன்றும் கள்ளர்களிடம் மட்டுமே உள்ளது.   

எகிப்திய மம்மிகளில் காணப்படும் விருத்தசேதனம், வளரி 



ஆண் உறுப்பில் முன் பாகத்தில் உள்ள தோல் பகுதியை வெட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அவ்வாறு வெட்டிக்கொள்வதை அவர்களது மரபில் 'கத்னா', 'சுன்னத்' என்று அழைப்பார்கள். யூதர்கள் அவ்வாறு செய்துகொள்வது 'விருத்தசேதனம்;'( BRIT MILAH’) என்று அழைக்கப்படுகின்றது. இதை கள்ளர்கள் 'கவரடைப்பு' என்ற பெயரில் மேற்கொண்டு வருகின்றனர். 

யூதர்கள், கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமயத்தவருக்கும் பொதுவான 'முப்பாட்டனார்' என்று அழைக்கப்படுகின்ற ஆபிரகாம் (இப்ராஹீம் அலை) அவர்களது முன்னுதாரணத்தைப் பின்பற்றியே இன்றுவரை விருத்தசேதனம் செய்துகொள்வது யூதர்களுக்கும், ஆதிகாலக் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வழக்கில் இருந்து வருகின்றது.

கலாச்சார முறையிலும் குறிப்பாக நைஜீரியாவில் உள்ள சில குழுக்கள், அர்கம்லேண்ட், ஆஸ்திரேலியாவின் மத்திய மற்றும் மேற்கு பாலைவனங்களில் உள்ள பழங்குடிகள் ஆகியோரிடமும் விருத்தசேதன பழக்கம் உள்ளது.

'பிறமலைக்கள்ளர்' சமூகத்தில் விருத்தசேதனம் 'கவரடைப்பு' அல்லது 'கவரடப்பு' என்ற பெயரிலும், தற்காலத்தில் இது 'மார்க்கல்யாணம்' என அழைக்கப்படுகின்றது. கள்ளர்களில் நீண்டகாலமாக இருந்துவந்ததகக் கூறப்படுகின்ற இந்தப் பழக்கம், பிறமலைக்கள்ளர்களிடம் மட்டும்தான் தற்பொழுது எஞ்சியுள்ளது. கள்ளர் காது வளர்த்தல் பிறமலைக்கள்ளர் பூசாரிகளிடம் மட்டும் எஞ்சியுள்ளது.

கள்ளர்களின் "கவரடைப்பு"  மற்றும் சிறுகுடி கள்ளர் தாலியில்  "பிறைநிலவு விண்மீன்" சின்னம் உள்ளதை ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் முகமதியரோடு இணைகின்றார். ஆனால் அதற்கான எந்த தரவுகளும் யாரிடமும் இல்லை. 




குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள பாலாறுபட்டியில் உள்ள 'பிறமலைக்கள்ளர் சமூகத்தின்வழக்கப்படி 1௦ வயது சிறுவர்கள் ஒரு வாரம் ஊருக்கு வெளியே தங்கி, அந்த வழியாகச்செல்பவர்களிடம் வழிப்பறி செய்றது போன்று பணம் பெற்று, அந்தப் பணத்தில் கோவிலுக்குஎண்ணை வாங்கி ஊற்றிவிட்டு, மிகுதிப் பணத்தில் காவி வேட்டி எடுத்து கட்டுவார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படும்.

'மார்கல்யாணம்' பண்ணும்போது சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்புவோம். அவர்கள் சீர்செய்வார்கள் என்றும் கூறுகின்றார்கள்.

இது குறித்து சமூக அறிஞர் தொ.பரமசிவன் கருத்துத் தெரிவிக்கும் பொழுது:

'உலகத்தில் பல பழங்குடிகளிடம் இந்தப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக யூதர்களிடம்இருந்தது. தமிழ் சமுதாயத்தில் பல சமூகங்களில் இருந்துவந்த இந்தப்பழக்கம், தற்பொழுதுபிறமலைக் கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது. அவர்கள் முந்தைய காலத்தில்மார்கல்யாணத்தை கவரடைப்பு' என்ற பெயரில் அழைப்பார்கள். அந்த வழக்குச் சொல் தற்போதுமறைந்து வருகின்றது என்று தெரிவித்தார்.


Castes and tribes of southern India  - EDGAR THURSTON - 1909 - : ஆய்வில் கூறுவதை முதலில் பார்ப்போமானால் 


அவர் தன் ஆய்வில் கூறுவது 


புறமலை நாட்டைச் சேர்ந்த கள்ளர்கள் சுன்னத்து செய்து கொள்ளும் விசித்திரமான வழக்கத்தை மேற்கொள்கின்றனர். இந்த வழக்கத்தின் தோற்றம் ஊறுதியாகக் கூற முடியாததாக உள்ளது. மதுரை மாவட்டக் கையேட்டில் தங்கள் ஆட்சி முகமதியர் படையெடுப்பால் வீழ்ந்தவுடன் முகமதியர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட குறும்பர்கள் வடக்கு நோக்கி ஓடிவந்த பின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வழக்கம் இது எனக் மதுரை மாவட்ட விவரக் குறிப்பில் குறிக்கப்பட்டுள்ளது. 

சுன்னத்துச் சடங்குக்காக நிச்சயிக்கப்பட்ட நேரம் நெருங்கியதும் சடங்கு செய்து கொள்ளும் சிறுவனை அவன் தாய்மாமன் ஊருக்குப் புறத்தே உள்ள தோப்புக்கோ ஒரு வெட்டவெளிக்கோ தன் தோளில் வைத்துத் தூக்கிச் செல்வான். அங்கு கூடியுள்ள அனைவருக்கும் வெற்றிலை வழங்கிய பின் ஒரு நாவிதன் சடங்கினைச் செய்து முடிப்பான். அந்த இடத்திற்குச் சிறுவனைத் தூக்கிச் செல்லும் போது வழிநெடுகவும், சடங்கின் போதும் சங்கு முழக்கப்படும். அச் சிறுவனுக்கு அப்போது புதிய ஆடைகள் புனைவிப்பர். 

மதுரை மாவட்ட விவரக் குறிப்பில், “ஒவ்வொரு கள்ள இளைஞனும் தன் அத்தை மகளை மணந்து கொள்ளும் உரிமையை வற்புறுத்தலாம். அவனுடைய சுன்னத்துச் சடங்கின் செலவினை அவனுடைய அத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே போன்று ஒவ்வொரு சிறுமியும் பூப்படையும் போது மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்கான செலவுகளை அவளுடைய தாய்மாமன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு வற்புறுத்தப்படுவதற்குக் காரணம் அவன் தன் மகனுக்கே அவளை மணமுடித்துத் தர வேண்டும் எனக் கேட்கும் உரிமை பெற்றுள்ளமையாலேயே ஆகும். 

இந்த இரண்டு சடங்குகளும் ஒரே நேரத்தில் பல சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் செய்து வைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு நல்ல நாளில் சிறுவர் சிறுமியருக்கு நல்ல விருந்திட்டுச் சிறந்த ஆடைகளை அணிவித்து ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வர். பெண்களின் அன்னையர் வாழையிலையில் விளக்குச் செய்து ஏற்றி அதனை ஆற்று நீரில் மிதக்க விடுவர். சிறுவர்களுக்கு உள்ளூர் நாவிதன் சுன்னத்துச் சடங்கினை நிகழ்த்துவான்“ எனக் கூறப்பட்டுள்ளது. 

1901 மக்கள் கணக்கெடுப்பு அறிக்கையில் சிறுகுடி கள்ளர்கள் பயன்படுத்தும் தாலியில் முகமதியர் சின்னமான பிறைநிலவும் விண்மீனும் பொறிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

பல்லவர் நாடான தொண்டை மண்டலமே கள்ளர்கள் தொடக்கத்தில் வாழ்ந்து வந்த நாடாதல் வேண்டும். இவ் வகுப்பாரின் தலைவரான புதுக்கோட்டை மன்னர் இன்றும் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டு வருகிறார். கள்ளர்கள் குறும்பர்களின் ஒரு பிரிவினர் எனக் கொள்ள ஏற்ற பல காரணங்கள் உள்ளன. முதலில் படை வீரராக இருந்த இவர்கள் அதனைக் கைவிட வேண்டி வந்தவுடன், கொள்ளையில் ஈடுபட்டுத் தங்களுடைய திருட்டு, வழிப்பறி ஆகியவற்றால் மற்றவர் வெறுப்பினுக்கு மிகுதியும் ஆட்பட்டு விட்டதால் கள்ளன் என்ற பெயருக்கு உரியவர்களான இந்தச் சாதியினருக்கு அப்பெயரே சாதிக்குரிய பட்டப் பெயராக நிலைத்துவிட்டது (ஜி. ஒப்பெர்ட் - சென்னை இலக்கிய அறிவியல் இதழ். 1888-89, G.Oppert-Madras Joura. Lit. Science 1888-89). 

கீழ்த்திசைக் கையெழுத்து மூலங்களைத் தொகுத்த மறைத்திரு டபிள்யூடெய்லர் கள்ளர்களைக் குறும்பர்கள் என்றே இனங்காண்கின்றார். அவருடைய இந்த முடிவினைத் திரு நெல்சனும் ஏற்றுக் கொள்கின்றார். மக்கள் கணக்கொடுப்புப் பதிவுகளில் குறும்பன், கள்ளர் சாதியின் பல உட்பிரிவுகளுள் ஒன்றாகப் பதியப்பட்டுள்ளது“ என மதுரை மாவட்ட விவரக் குறிப்பில் கள்ளர்களைப் பற்றித் திரு எச்.எ.ஸ்டுவர்ட் கூறியுள்ளார்.

எட்கர் தர்ஸ்டன் கூறியது குறித்து ஆய்வோமானால் இதில் பாதிக்கு மேற்பட்ட விஷயங்கள் கற்பனையால் புனையப்பட்டது.


குறும்பன் பற்றி முதலில் பார்ப்போம்: 

குறும்பர் யார் என்றால் அவர்கள், இன்று ஒரு தனி சாதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் கள்ளர்களுக்கும், இன்று எதாவது தொடர்பு உண்டா என்றால் கண்டிப்பாக இல்லை. கள்ளர்கள் பட்டங்களான மலையமான், பண்ணையார் என்பன, இன்று தனி சாதியாக தங்களை அடையாளப்படுத்தினாலும், தங்களை கள்ளர்கள் என்றும், கள்ளர்களோடு நேரடி தொடர்பில் உள்ளனர். ஆனால்  கள்ளர்களுக்கு, குறும்பரோடு எந்த தொடர்பும்  இல்லை.

குறும்பர் என்பதற்கு அகராதி :  குறுநில மன்னர், ஒருவகைச் சாதியார், வேடர், கீழ்மக்கள், குறும்பிடையர் என்று குறிப்பிடுகிறது.


எலியட், செவ்வேல் முதலிய ஆராய்ச்சியாளர்கள் குறும்பர்கள் ஆடுமாடுகளை மேய்ப்பவர்கள்; இவர்களின் மன்னரே பல்லவர் என்று கருதுகின்றனர். சோழ மண்டலத்தில் வாழ்ந்து வந்த குறும்பர், கள்ளர், மறவர் ஆகியோரிடையில் இனக்கலப்பு ஏற்பட்டது. இவர்களுக்கிடையில் புதிதாகத் தோன்றிய ஒரு இனமே பல்லவர்கள் இன்று சிலர் கூறுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.


கள்ளர் சரப மரபினர் என்று வடமொழியிலும்,  தமிழ்மொழியில்  நாகர் இனம் என்றுதான் கூறுவர். ஆனால் குறும்பர்கள் நாகர் இனத்தை சேர்ந்தவர்களில்லை.


கள்ளரில் குறும்பர், குறும்பராயர் என்ற பட்டங்கள் உள்ளன. ஆனால் குறும்பர் பட்டம் உள்ள கள்ளர்களுக்கும், என்று குறும்பர் சாதியினருக்கும் ஏதும் தொடர்பு உண்டா என்றால் கண்டிப்பாக இல்லை. குறும்பர், குறும்பராயர் என்ற பட்டம் குறும்பரை வெற்றி கொண்ட கள்ளர்களுக்கு வழங்கிய பட்டமாக மட்டுமே இருக்கமுடியும்.

முகமதியர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட குறும்பர்கள் வடக்கு நோக்கி ஓடிவந்த பின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வழக்கம் சுன்னத் எனக் குறிப்பிடுகிறார். ஆனால் கள்ளர் தவிர வேறு சாதிக்கோ அல்லது குரும்பருக்கோ இந்த பழக்கம் இல்லை. கள்ளர் மற்றும் குறும்பருக்கு உள்ள ஒரே தொடர்பு இம்மண்ணின் பழங்குடி மக்கள் மட்டுமே.


தாலியில் முகமதியர் சின்னமான பிறைநிலவும் விண்மீனும் 

சிறுகுடி கள்ளர்கள் பயன்படுத்தும் தாலியில் முகமதியர் சின்னமான பிறைநிலவும் விண்மீனும் பொறிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இஸ்லாத்தில் திருமணத்தின் போதும், திருமணத்திற்குப் பிறகும் பெண் கழுத்தில் ஏதாவது அணிந்து தான் ஆக வேண்டும் என்பது தடுக்கப்பட்ட செயல் தான். இஸ்லாத்தைப் பொறுத்த வரை திருமணம் என்பது ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே ஆகும். இதற்கென எந்தவித அடையாளத்தையும் மார்க்கம் ஏற்படுத்தவில்லை. 

கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.

கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது' - வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.

தாலி என்பது பின்னால் ஏற்பட்டது. கள்ளர் தாலியில்  பிறைநிலவும் விண்மீனும் என்பதற்கு, அது முகமதியர் சின்னம் என்று, இவர் எந்த அடிப்படை ஆதாரம் இல்லாமல் கற்பனையில் எழுதியுள்ளார்.

கள்ளர் தாலியில் உள்ள இந்த சின்னம் கண்டிப்பாக, பிறை நட்சத்திரமா என்றால், கண்டிப்பாக இல்லை. இதனை அந்த கள்ளர்கள் வாழும் பகுதியை வைத்து ஆய்வு செய்வோமானால், அந்த பகுதில் கள்ளழகர் குடிகொண்டு உள்ளார். மேலும் அது பாண்டிய மன்னரின் தலைநகர்.  மேலும் இங்கு உள்ள கள்ளர்களும் தங்களை இந்திரகுலம் என்று கூறிக்கொள்கின்றனர்.

அந்த தாலியில் உள்ள சின்னம் கீழ் உள்ளது போல தான் இருக்கும், இந்த சின்னம் எதை குறிக்கும் என்றால்  




பொதுவாக இது பாண்டியரின் சந்திரா குலத்தின்  சின்னமாக  உள்ளது. இதை வைஷ்ணவ சின்னம் என்று கூறலாம். வைணவர்களின் கடவுளான திருமால் சந்திர குலமான யது குலத்தில் அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.




இந்திரன் தன் நெற்றியில் சந்திரா பிந்தியை சூடியுள்ளான். பொதுவாக இது சந்திரா குலத்தின் சின்னமாக உள்ளது . 








இதை வைஷ்ணவ சின்னம் என்றும் கூறலாம். சந்திரனின் பிறையும் அதன் நடுவே பிந்தியும் அதாவது புள்ளியும் உள்ளன. வைஷ்ணவத்தின் நாமம். சந்திரா பிறை சின்னமும் வாஜியாயுத சின்னமும் கூட ஒத்துப்போகின்றன. இது மஹாபலிபுர கற்கோவிலில் காணக்கிடைக்கும் இந்திரா வஜ்ராயுதமாகும் , நிலவின் பிறை போலவே உள்ளது. 


கள்ளழகர் தங்கள் முதல்வனாக வணங்கும் , இந்திரகுலம் இன்றும் குறிப்பிட்டப்படும் கள்ளர்கள் முகமதியர் பழக்கத்தில் இல்லாத தாலியை அணிந்தார்கள் என்றால் அது ஆதாரமற்ற செய்தி ஆகும். 


கவரடைப்பு பற்றி ஆய்வோமானால்  : 





"சமாதானமாப் போயிருவம்னு சொல்லி அதுக்கு அடையாளமா ஒருத்தரை ஒருத்தர் 'சிய்யா' ன்னு கூப்பிட்டுக்கிறது. கள்ளவீட்டு பயகளுக்கு 'கவுருகடப்பு' பண்ணுரதுன்னும்.  அவக வீட்டு பொம்பள புள்ளைக கருகமணி மாலை போட்டுக்கிர்றதுன்னும் முடிவாச்சாம்" என்று கள்ளர்களுக்கு இந்த பழக்கம் மாலிக்காபூர் மதுரை கைப்பற்ற முயற்சி செய்த போது ஏற்பட்ட உடன்படிக்கை என்று செவிவழி செய்தியாக சொல்லப்படுகிறது. இதற்க்கான ஆதாரம் ஏதும் இல்லை.

"ஆணுக்குன்னு உண்டான 'அந்த' உறுப்புல மேல் தோல மட்டும் எடுத்துவிட்டுட்டா நாளப்பின்ன நல்லது. 'அங்க' அழுக்குச் சேராது. சிக்கலான இடம் பாருங்க; சீக்கு வராது. ஒரு வயசுப் பயலுக்கு ஒரு நாவிதரு அந்தத் தோல வைத்திய முறைப்படி நீக்கிவிடற வைபவந்தான் 'மார்க்க கல்யாணம்'. அதைத்தான் நம்ம ராவுத்தமாருக 'சுன்னத்'துங்கிறாக..!''

(கள்ளிக்காடு இதிகாசம். பக்கம்:280)

கள்ளர்ககளுக்கு நாவிதன் "கவரடைப்பு" செய்கிறார்கள். நாவிதன் என்பவர்கள் மருத்துவ சாதியை சேர்ந்தவர்கள். முகமதியர் மூலம் வந்தால் இதனை ஒரு முகமதியரோ  அல்லது கள்ளர்களில் ஒருவரோ செய்திருக்கவேண்டும். ஆனால் இதனை முகமதியர்களுக்கு தொடர்பு இல்லாத நாவிதன் வந்து செய்வது குறிப்பிடத்தக்கது.

கவரடைப்பு பற்றிய இலக்கிய மற்றும் கல்வெட்டும் குறிப்புக்கள் எதுவும் தெளிவாக இல்லை. "சேதனப் படைஞரோடும்" என்று 15 ஆம் நூற்றாண்டு இலக்கியத்தில் குறிப்பிடுகின்றனர். கங்கைகொண்ட சோழபுறத்தில் ஒரு கல்வெட்டில் கவரடைப்பு பற்றிய குறிப்பு உள்ளதாக கோம்பை அன்வர் அவர்களின் தமிழ் முஸ்லிம்களின் வரலாறு என்கிற புத்தகத்தில் குறிப்பிடுவதாக உள்ளது.

பண்டைய காலத்தில் போருக்கு சென்ற சில போர்க்குடிகள் முழுநிர்வாணமாக போருக்கு செல்லும் பழக்கம் தமிழகத்தில் இருந்தது. அவர்களை மோப்ப நாய்கள் வாசம் பிடிக்காமல் இருக்க சுன்னத் செய்யும் பழக்கம் இருந்தது. 



முதலாம் பாண்டியப் பேரரசின் முற்பாதியில் சமணம் பாரிய செல்வாக்கைப் பெற்றுத் திகழ்ந்தது. சமண இலக்கியங்களும் பல தோன்றின. சமண சமயத்தின் செல்வாக்கை அவர்களின் குகைகள் பாண்டிய நாடு முழுவதும் காணப்படுவதை வைத்தே அறியலாம். சமண முனிவர்களின் குகைகள் ஆனைமலை, அழகர்மலை, நாகமலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கரடிப்பட்டி, முத்துப்பட்டி, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, சித்தன்னவாசல் போன்ற இடங்0களில் காணப்படுகின்றன. இதில் சமண மலை குறிப்பிடத்தக்கது. இங்கு எல்லாம் இன்றும் கள்ளர்கள் மட்டுமே வாழ்ந்துவருகின்றனர். நீண்ட காது வளர்த்தல், கவரடைப்பு என்பது எல்லாமே சமணர்களின் தொடர்பால் ஏற்பட்டிருக்கலாம். 

இன்று மருத்துவம் வியந்து நோக்கும் இந்த விருத்தசேதன முறை கள்ளர் சமூகத்தினர் மத்தியில் எவ்வாறு நுழைந்தது? எப்பொழுது நுழைந்தது? தமிழ் இனத்தில் வேறுஎந்தெந்த சமூகங்கள் மத்தியில் இந்த நடைமுறை முன்னர் இருந்திருக்கின்றது? பிறமலைக்கள்ளர் சமூகத்தை விட தமிழ் இனத்தின் வேறு சமூகத்தினர் மத்தியில் இந்த விருத்தசேதனபழக்கங்கள் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடிய ஆய்வுகள் தமிழரின் தொன்மையை நோக்கிய ஒரு பயணமாக அமையும் என்றே நினைக்கின்றேன்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்