'உச்சி
வெயிலுல செல்லாத்தா... நம்ம உச்சந்தல கருகல.
கொட்டுற
மழையில செல்லாத்தா... நம்ம குடுசைங்க ஒழுகல.
ஆண்டவனை
வேண்டல செல்லாத்தா... மாண்டவனை வேண்டல.
வாண்டையாரு
வடிவத்தில செல்லாத்தா... வணங்குவோம்டி கடவுள!'
நாற்று நடவு செய்யும் பெண்கள், அலுப்புத் தெரியாமல் இருக்க பெருங் குரலெடுத்துப் பாடுகிறார்கள் இன்றும் பூண்டியிலே.
சோழப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகள், நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. “அருள்மொழித்தேவன் வளநாடு - ராஜராஜன் வளநாடு - ராசாச்சரயன் வளநாடு - கேரளாந்தகன் வளநாடு” என்று பிரிக்கப்பட்டபொழுது, ‘நித்தவினோத வளநாடு’ என்று ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது. அந்த நித்தவினோத வளநாடுதான் பூண்டி மண்டலம். அந்த நித்தவினோத வளநாடுதான் சரித்திரப் பிரசித்திப்பெற்ற வெண்ணிப் பரந்தலைப் போர் நடைபெற்ற இடம். கரிகாற்பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. அதற்குப் பெயர் வெண்ணிக்கூற்றம்.
இந்தத் தஞ்சையில் எழுப்பப்பட்டு இருக்கிற பிரகதீஸ்வரர் ஆலயம், பொன்னியின் செல்வன் கட்டிய ஆலயம், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற, இந்தத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில், 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இன்றைக்கும் இருக்கிறது. அந்தக் கோவில் கல்வெட்டில், ‘நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றறத்துக் கீழ்ப் பூண்டியாகிய ஓலோக மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’ என்று கல்வெட்டு இருக்கிறது.
ஆயிரக்கணக்கான கழனிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பூமி, மன்னர் மரபு வழியில் வந்த பூண்டி வாண்டையார் குடும்பம், இன்றைக்கு அந்தப் பெயரிலேயே கல்லூரி அமைத்து, வசதியற்ற ஏழைப்பிள்ளைகளுக்கும் கல்வியைத் தருகிறார்கள். அந்தப் பூண்டி மண்டலத்தைத்தான் ‘நித்தவிநோத வளநாட்டு வெண்ணி கூற்றத்துக் கீழ்ப்பூண்டியாகிய ஓலோக மாதேவிச் சதுர்வேரித மங்கலம்’ என்று ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கல்வெட்டுக் கூறுகிறது.
பூக்கள் மண்டி கிடந்ததாலே பூ மண்டி - ‘பூண்டி’ ஆயிற்று. எத்தனைப் பூக்கள் குறிஞ்சிப் பாட்டிலே கபிலன் தருகின்ற பூக்கள்! அப்படிப் பூக்கள் மண்டிய பூமியாம் பூண்டியின் மன்னர்கள் பூண்டி வாண்டையார்கள்.
வாண்டையார் பிரபந்தத் திரட்டு
(1889 ).
(1889 ).
திரு. கி.வீரையா வாண்டையார் என்பவர் இராவ்பகதூர் திரு. A. வீரையா வாண்டையாரின் (1899 - 1970 ) தாத்தா ஆவார். திரு. கி.வீரையா வாண்டையார் பலநூல்கள் எழுதியுள்ளார். இதனை "தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்" என்ற நூலில் ஆராய்ச்சி அறிஞர், முனைவர் சுந்தர சண்முகனார் (தமிழ்-அகராதித் துறைப் பேராசிரியர்) பதிவு செய்துள்ளார்.
கி.வீரைய வாண்டையார் இயற்றிய நூல்களின் தொகுப்பு. இவர் தஞ்சையைச் சார்ந்த பூண்டி மாநகரம் இந்திர குல திலகர் என வழங்கப்பெறுகிறார். இவரது இந்நூலின் முதல் பதிப்பு - 1889. பார்வை: சுப்பிரமணிய ஐயர், தஞ்சை எஸ்.வி. இராம சுவாமி ஐயங்கர்ர் அச்சிட்டது. அச்சகம்: Tanjore “The Patriot Press”. மற்றும் ஒரு பதிப்பு 1926.
நூல்கள்:
புஷ்ப வன நாதர் சதகம்,
புஷ்ப வன நாதர் போற்றிப் பதிகம்,
புஷ்பவன நாதர் இரட்டை மணிமாலை
புஷ்ப வன நாதர் பதிற்றுப்பத் தந்தாதி,
புஷ்ப வன நாதர் நவ மணி மாலை,
புஷ்ப வன நாயகி மாலை,
புஷ்ப
வன அகவல். ஆகியவை
கிபி 1879 ல் HS Thomas என்கிற தஞ்சை மாவட்ட ஆட்சியரால் ராஜா
மிராசுதார் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டது.
மருத்துவமனைமுன் Founder:-
K.வீரைய்யா வாண்டையார்
(1879 வருடம்)
ஆண்டவனை
வேண்டல செல்லாத்தா... மாண்டவனை வேண்டல.
வாண்டையாரு
வடிவத்தில செல்லாத்தா... வணங்குவோம்டி கடவுள!'
கடலைச்
செடிக்கு களை கொத்தும் பெண்கள் பாடுகிறார்கள். தலைமுறை தலைமுறையாக தன்னுடைய விவசாய
நிலங்களில் பாடுபடும் பெண்களின் விசுவாசம் சங்கீதமாக ஒலிக்க... அதை ஆழக் கேட்டபடி
வரப்பில் நடக்கும் துளசி அய்யா வாண்டையார், ''ஆண்டவன்தான் அத்தனைக்கும் காரணம்..
மண்ணைக் கடவுளா நெனச்சுப் பாடுங்க புள்ளைங்களா.. என்னயப் பத்திப் பாடாதீங்க...''
என்று உத்தரவாகவே சொல்கிறார்.
அப்படியே
நம் பக்கம் திரும்பி, ''மண்ணை நேசிக்காட்டி அது நம்மளை நேசிக்காது. நம்ம மனைவி
மாதிரிதான் மண்ணும். நல்லா கவனிச்சு ஆசாபாசமா நடந்தோம்னா நாமளே தெய்வம்னு நெனச்சு
நமக்கு நல்லது செய்யும். நாம கண்டுக் காம விட்டுட்டோம்னு வையுங்க.. பாசத்துக்கு
ஏங்குற பொண்டாட்டி பாதை மாறிப் போயிடுற மாதிரி மண்ணும் மாறிப் போயிடும்'' என்று
வாழ்வியல் தத்துவத்தை மண்ணோடு சேர்த்து பிசைந்து, கொடுக்கிறார் எழுபத்தி எட்டு
வயது பெரியவரான வாண்டையார்!
தமிழகத்தின்
நெற்களஞ்சியம் என்று அழைக் கப்படும் தஞ்சை பகுதியில் விவசாயம் என்று சொன்னாலே...
முக்கியமான ஒரு சில குடும்பங்ளை வரிசைப்படுத்துவார்கள்.... அதில் துளசி அய்யா
வாண்டையார் குடும்பம் மிகவும் முக்கியமானது.
தஞ்சாவூர் அருகே இருக்கும் பூண்டி கிராமம் கிட்டத்தட்ட இவருடைய குடும்பத்துக்குச் சொந்தமாக இருக்கிறது. மொத்தமாக நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைக் கட்டி ஆண்ட பாரம்பரியம்.. இன்றைக்கும் பதினோரு கிராமங்களில் கிடக்கும் அறுநூறுக்கும் அதிகமான ஏக்கர் நிலத்தில் இவர் சொன்னால்தான் நடவு, அறுப்பு என நடக்கிறது விவசாயம்.
சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம்.... தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் என்று டெல்டா பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கானோரை பட்டதாரிகளாக உருவெடுக்கச் செய்த பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியை நிர்வகிக்கும் குடும்பம். என அத்தனை புகழாரங்கள் இருந்தாலும், ''நான் ஒரு விவசாயிப்பா..'' என்பதில்தான் பெருமை அடைகிறார் வாண்டையார்.
நிறுவனர் தலைவர்
இராவ்பகதூர் திரு. A. வீரையா வாண்டையார்
இராவ்பகதூர் திரு. A. வீரையா வாண்டையார்
நிறுவனர் செயலாளர்
திரு A. கிருஷ்ணஸ்வாமி வாண்டையார்
திரு A. கிருஷ்ணஸ்வாமி வாண்டையார்
முன்னாள் தலைவர்
திரு .V. அப்பாவூ வாண்டையார்
திரு . K. துளசி வாண்டையார்
நிறுவனர் தலைவர்
இராவ்பகதூர் திரு. A. வீரையா வாண்டையார்.
1899 - 1970
தஞ்சை
மாவட்ட பூண்டியில் 1899 இல் பாரம்பரிய மிக்கச் சான்றோர்கள் தோன்றிய மிகவும்
பிரபலமான கள்ளர் மரபில் பூண்டி ஜமீன் மகா-ள-ள-ஸ்ரீ அப்பாசாமி
வாண்டையார் அவர்களுக்கு
மகனாக பிறந்தவர்
திரு. வீரையா வாண்டையார்.
திரு. வீரையா வாண்டையாரின் சகோதரர் கிருட்டிணசாமி வாண்டையார் ஆவார் ( K. துளசி வாண்டையாரின் தந்தை).
வேளான்மையில் மேம்பாடு எய்தியமைக்காக பேராசி விக்டோரியா மகாராணியடம் விருது பெற்ற பேராளர். சமுதாய, நாட்டு நலப்பணிகளில் பங்கேற்று நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு உழைத்துப் புகழ் பெற்றவர். ஆங்கில அரசின் நட்பையும் பாராட்டுகளையும் பெற்று இராவ்பகதூர் பட்டமும் பெற்று சிறப்பிக்கப்பட்டவர். குடந்தையும், பாபநாசமும் ஒரே தாலுகாவாக இருந்தபோது தலைவராக 10 ஆண்டுகள் கடமையாற்றி தனது பயணப்படி ஊதியமான ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று 10 ஆண்டுகளும் வாங்காதவர் இவர் ஒருவரே.
6000 ஏக்கருக்கதிபதியாய் ஆளுவோரின் ஆரவணைப்பில் ஆட்சி மன்ற தலைவராய் இருந்தது தான் பிறந்த சமுதாயத்தை மறக்காது அதன் எழுச்சிக்காக பாடுபட்ட சமுதாய காவலர் இவரே. 1928ல் திருக்காட்டுபள்ளியிலும், 1933ல் தஞ்சையிலும் கள்ளர் இன இளைஞர் மாநாடு நடத்தியும், 1933 வரை கள்ளர் மகா சங்கச்செயலாளாரகப் பணியாற்றிய பெருமையயும் மிக்கவர். 1945ல் கள்ளர் இனமாணவர்களின் வசதிக்காக விடுதிகள் அமைக்க திட்டமிட்டு இரகுநாத இராசாளியார், ந.மு.வேங்ககட சாமிநாட்டாரின் தம்பி கோவிந்தராயநாட்டார், தஞ்சை வழக்குறைஞர் சுயம்பிரகாசம் ஆகிய பெருமக்களையும் இணைத்து நன்கொடைகள் வசூலித்து துறையூர் ஜமீந்தாருக்கு சொந்தமான தஞ்சை வடக்கு வீதி கட்டிடத்தையும், மேலவீதியில் அமைந்த கட்டிடங்களையும் கள்ளர் சங்கத்துக்காக வாங்கி முறையே பெண்கள் விடுதியும், ஆண்கள் விடுதியும் நடத்த ஏற்பாடுகள் செய்தார்.
இவரது
மணைவியார் திருமதி சேதுக்கண்ணம்மாள் 1950 மறைந்தார். துணைவியர் பிரிந்த துயரத்தில்
இருந்து தன்னை மீட்டுக்கொள்ள விரும்பியும் அறிவுலகம் கான விரும்பியும் 1954ல்
தனது ஐரேப்பிய பயனத்தை கப்பல் மூலம் மேற்கொண்டார். 6 மாத கடல்பயணத்தில் இத்தாலி,
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், ஒல்லாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து
முதலிய நாடுகளின் வளர்ச்சிகளையும், கலைச்செல்வங்களையும் பார்வையிட்டு மகிழ்ந்தார்.
இக்கால கட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தையும்
பார்வையிடும் வாய்ப்பினையும் பெற்றார். இதன் பிரதிபலிப்பாக தான் பிறந்த மண்ணில்
தன் உறவும் சமுதாயமும் வளர்ச்சியுற்று வளம் பெற விரும்பி 1956ல் பூண்டி புஸ்பம்
கல்லூரியை ஒரு முன் மாதிரி கல்விக் கழகமாகநிறுவி தஞ்சை வாழ் ஏழை எளிய மற்றும்
பிற்பட்ட வகுபினரை சார்ந்த ஆயிரகனக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி கிடைக்க உதவியவர்
வாண்டைய்யர் அவர்கள். தங்கள் குலதெய்வமான புஸ்ப வாணேஸ்வரனை நினைவில் கொண்டு ஸ்ரீ புஸ்பம் கல்லூரி எனவும் பெயருமிட்டார்.
இக்
கல்லூரி நிறுவப்பட்டதன் மூலம் மாணவர்கள் பல ஆயிரம் பேர் இலவச உயர்கல்வி பெரும்
வாய்ப்பினைப் பெற்று இன்று பொருளாதர நிலையில் மேன்மை அடைந்துள்ளனர் என்றால் அது
மிகையாகாது. தஞ்சை, திருவாரூர்,நாகை மாவட்டங்களிலும், கந்தர்வக்கோட்டை,
அறந்தாங்கி போன்ற பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய
இளைஞர்கள் இன்று பட்டதாரிகளாகவும், முதுநிலை பட்டதாரிகளாகவும்,
அரசியல்வாதிகளாகவும், உயர்நிலை அலுவலர்களாகவும் விளங்க காரணம் இக்கல்வித்
திருக்கோயில் தான். கள்ளர் மகாசங்கத்தில் தன்னை இனைத்துக்கொண்டு மக்கள் உயர்வடைய
வேண்டும் என்ற பெரு நோக்கில் அயராது உழைத்தவர் திரு. வீரையா வாண்டையார் அவர்கள்.
தான் வெகுநாட்களாக தலைமை ஏற்று நடத்திவந்த கள்ளர் மகாசங்கத்தை முக்குலத்தோர் நலத்தை கருத்தில் கொண்டு முக்குலத்தோர் சங்கத்துடன் இனைத்து திரு மாணிக்கம் ஏற்றாண்டார் தலமையில் நாடு தழுவிய வறுமை ஒழிப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக உழைத்த பெருமை இவருக்கு உண்டு. தனது சமூகம் சார்ந்த மற்றும் வறுமையில் வாடிய மாணவ மக்களுக்கு தனது கல்லூரியில் இலவச படிப்பும் உணவும் அளித்து அவர்களின் வாழ்கையில் மறுமளர்ச்சி ஏற்படுத்தியது என்றும் மறக்கமுடியாத ஒரு வரமாகும்.
தங்கள் குடும்ப சொத்தான நெற்களஞ்சிய நிலங்களை நாட்டின் அறிவுக் களஞ்சியமாக்கிய
வீரையா வாண்டையார் 1970ம் ஆண்டில் மறைந்தும் மாணவர்கள் மத்தியில் வாழும் ஒரு அற்புதமான
வரலாற்றுச்சிற்பி. இன்றும் தமிழக ஏழை மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி கிடைத்திட வழிவகுத்த
இப்பெருமானாரின் முயற்சியினால் கல்விப்பணியில் உயர்ந்து ஓங்கி நிற்கிறது இக் கல்லூரி
திரு . K. துளசி வாண்டையார்
''சமீபத்தில
ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் போயிருந்தேன். பிரபலமான ஆட்கள் ஒன்றாகக்
கூடி, தங்களை அறிமுகப்படுத்த, நான் என்னை ஒரு விவசாயினு சொன்னேன். அங்கிருந்த
அத்தனை பேருமே ஆச்சர்யம் மேலிட பார்த்தாங்க. விவசாயம் மூலமா ஒரு ஆள்
முன்னேறினான்னு அவங்களால நம்ப முடியலை. உலகமே விவசாயிகளை அப்படித்தான் பார்க்குது.
விவசாயினு சொல்லிக்க பலரும் வெட்கப்படுற நிலை உருவாகிடுச்சி. வயித்துக்குச் சோறு
போடுற வாழ்க்கையை விட உயர்ந்த வாழ்க்கை வேறென்னப்பு இருக்க முடியும்'' என்கிறார்
நெற்றியை உயர்த்தி.
அலங்காரத்துக்காக
வளர்க்கப்படும் செடி, கொடிகளை எல்லாம் தவிர்த்து விட்டு, பிரமாண் டமாக மூலிகைப்
பண்ணையை தன்னுடைய கல்லூரி வாயிலில் அமைத்திருக்கிறார் வாண்டையார். அதை வலம்
வந்தபடியே பேசியவர், ''காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் எல்லாம் இந்த மண்ணுல
விளையாதுனு பலரும் சொல்வாங்க. இதெல்லாம் மண்ணோட மகிமை புரியாத பேச்சு. அதுக்காகவே
அதை யெல்லாம் இங்கே பயிர் பண்ணி இருக்கேன். பாருங்க எப்படி விளைஞ்சிருக்கு. எந்த
விதமான செயற்கை உரங்களையும் பயன்படுத்துறது கிடையாது. இப்போ இந்த மண்ணோட சக்தி
எல்லாருக்கும் புரிஞ்சிடுச்சி. பத்து ஏக்கருக்கும் அதிகமான பரப்புல இதே மாதிரி
காய்கறிகளை பயிரிட ஏற்பாடு நடந்து கிட்டிருக்கு. விஷமில்லாத காய்கறிகளை எங்கள்
காலேஜ் விடுதி மாணவர்களுக்கு கொடுக்கணும் கிறதுதான் என்னோட ஆசை'' என்று குஷியோடு
சுற்றிக் காட்டுகிறார்.
''அப்பா
காலத்துல தினமும் ரெண்டு மணி நேரம் டிராக்டர் ஓட்டி உழுவேன். பெரியப்பா
நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை நேரடியா கவனிச்சு விவசாயம் பண்ணினவர். 'நாம
நிலத்தைப் பார்த்தாத்தான் நிலம் நம்மளைப் பார்க்கும்’னு அவர் சொன்ன பாடம் அப்படியே
அசரீரி மாதிரி உள் மனசுல கேட்டுக்கிட்டு இருக்கு. அதனால தான் எல்லா நிலங்களையும்
எம் பார்வையிலேயே கவனிச்சுக்கிட்டு இருக்கேன்.
இப்ப
விவசாயச் செலவுகளும் கூலியும் உயர்ந்த அளவுக்கு சரியான விகிதத்தில நெல் விலை
உயராததுதான் விவசாயத்தை முடங்க வெச்சிடுச்சி. வாழ்வாதாரமா இருக்கிற நெல்லுக்கு
ஒழுங்கான விலை நிர்ணயத்தை நம்ம அரசு ஏற்படுத்த தவறிடுச்சு. அதைக் கேட்க விவசாய
ஜீவன்களோட குரலுக்குச் சக்தி இல்லாமல் போயிடுச்சு. இயற்கை உரத்துக்காகக் கூட நாம
ஏங்க வேண்டிய நிலையாகிடுச்சு. 'பண்ணிய புண்ணியம் பயிரிலே தெரியும்’ணு சொல்வாங்க.
இயற்கைக்கு எதிரான எதுவுமே பாவம்தான். இயற்கையின் சக்தி புரியாம அதுகிட்ட மனுஷன்
மோதுறான். கடைசியில, தன்னோடு மோதுறவங்கள இயற்கை சிதறடிச்சிடும். இது தெரிஞ்சி
மனமுருக இயற்கையை வணங்கக் கத்துக்கணும்'' எனச் சொன்ன வாண்டையார்,
கடைசியாக
அழுத்தம் தெறிக்கச் சொன்னது- ''மண்ணை விட மகத்தான திருநீறு வேறில்லை. அதை மறந்தால்
நமக்கும் வேர் இல்லை. நம் சந்ததிக்கும் வேர் இல்லாமல் போய் விடும்.''
எத்தனை
சத்தியமான வார்த்தைகள்!
வியக்க வைத்த 'சித்தமல்லி’
சுமார்
நாற்பது வருடங்களுக்கு முன்பே தன் சொந்த ஊரான சித்த மல்லியில் இருபது வேலிக்கும்
அதிகமான நிலத்தை தனியாக ஒதுக்கி, நவீன முறையில் விளைச்சலை பெருக்கி முன் மாதிரியான
புரட்சியை செய்திருக்கிறார் வாண்டையார். அதற்கு 'சித்தமல்லி ப்ராஜெக்ட்’ என்றும்
பெயர் சூட்டியிருக்கிறார். 'பயிர்கள் தகுந்த இடைவெளியோடு காற்றோட்டம் செல்லும்படி
இருந்தால்தான் நல்ல விளைச்சல் கிட்டும்’ என்பதுதான் சித்தமல்லி ப்ராஜெக்ட்டின்
தாத்பர்யம். அதைத் தொடர்ந்து பலரும் அதை கடைபிடித்து பயன் பெற்றிருக்கிறார்கள்.
வாண்டையார்
சொல்லும் வழிமுறைகள்
எவ்வளவு
பெரிய ஆளாக இருந்தாலும் பரவாயில்லை, விவசாயத்தையும் நிலத்தையும் தங்கள்
கண்பார்வையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.
இயற்கையை
மிஞ்சியது எதுவுமில்லை. வீரிய உரங்களைக் கொண்டு விளைச்சலைப் பெருக்குவது சுலபம்.
ஆனால், விஷமில்லாத விளைச்சல்தான் நமக்கு முக்கியம். நுண்ணுயிர்களும்,
மண்புழுக்களும் மண்ணுக்குக் கிடைத்த வரங்கள். அவற்றைப் பாதுகாத்தாலே உரங்களுக்கான
பாதி செலவு நமக்கு மிச்சமாகி விடும்.
கால்நடைகள்
வளர்ப்பதை வெட்கப்படுகிற விஷயமாக நினைக்கக் கூடாது. இனி வரும் காலங்களில் பால்
விலையை விட எரு விலை அதிகமாகி விடும். பத்து மாடுகளை வளர்த்தால் நம் வயற்காடுகளின்
பசுமைக்கு துணிந்து உறுதி சொல்லலாம்.
விவசாய
கணக்கு வழக்குகளை விரல் நுனியில் வைத்துக் கொண்டு, அதற்குத் தக்கபடி விளைச்சலைப்
பெருக்கி பலன் காண வேண்டும். 'ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்’ என்பது
விவசாயத்துக்காகவே சொல்லப்பட்ட பழமொழி
“இந்த மண்ணுதான் எனக்கு திருநீறு!” துளசி அய்யா வாண்டையாரின் சொல்லே , வாண்டையார் குலத்துக்கு வேதவாக்கு
கல்வி வள்ளல் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார் 1991 முதல் 1996 வரை தஞ்சாவூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார் அவர்கள். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒருநாள் தவறாமல் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு உயர்கல்வியில் ஒரு மாபெரும் யுகப்புரட்சியை நடத்தியவர். ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு கல்வி வழங்கியவர். இலவசமாக உணவும் உறைவிடமும் அளித்து கல்வியில் சாதனை படைத்தவர் துளசிஐயா வாண்டையார்.
எவரிடமும் நன்கொடை பெறாமல், குறிப்பாக மாணவர்களிடம் எதுவும் பெறாமல் கல்லூரியை நடத்த முடியும் என்று நடத்திக் காட்டி வரும் சாதனையாளர்களில் இவரும் ஒருவர் . அத்துடன் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் தன் சொந்தப் பொறுப்பில் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்கும் கல்வி வள்ளல் இவர்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், ஐம்பதுகளைக் கடந்த பட்டதாரிகளை, ''எங்கே படித்தீர்கள்?'' என்று கேட்டால், அவர்களின் பெருவாரியான பதில், 'பூண்டி கல்லூரி’ என்பதாகத்தான் இருக்கும்.
'நாக்’ அமைப்பின் நான்கு நட்சத்திர அங்கீகாரத்தோடு, தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கும் திருபுட்பம் கல்லூரி, கல்வித் துறையில் தனியார் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம். சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை, குறைந்த கல்விக் கட்டணம் என்று கிட்டத்தட்ட ஓர் அரசுக் கல்லூரிபோலவே மாணவர்களுக்குச் சலுகை காட்டுகிறார்கள் என்கிறார்கள் முன்னாள், இன்னாள் மாணவர்கள்.
இப்போது 7,000 மாணவ - மாணவிகள் படிக்கிறார்கள். ஆண்டுதோறும் 200 மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. கல்லூரி வளாகத்திலேயே, அரசுப் பதிவு பெற்ற சித்த - ஆங்கில மருத்துவ மையம் இயங்குகிறது. மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை இங்கே இலவசம்.
நூலகத்துக்கு
என்றே தனி வளாகம். நாட்டின் சிறந்த 300 நூலகங்களில் ஒன்று என்ற பெருமையுடன்
கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த நூலகத்தில், லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன.
''இந்த நூலகமும் கல்லூரியின் முகப்பில் உள்ள பிரமாண்ட தியான மண்டபமும் ஒவ்வொரு
மாணவரும் தவறாமல் தினமும் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு
கட்டப்பட்டவை. கல்லூரியைச் சுற்றி உள்ள தோட்டங்களில் நெல்லும், காய்கறிகளும்
இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்துதான் விடுதி மாணவர்களுக்கு
உணவு தயாரிக்கப்படுகிறது. 'முதலில் ஒழுக்கம், அடுத்துதான் கல்வி’ என்பது
கல்லூரியின் தாளாளர் துளசி அய்யா வாண்டையாரின் கொள்கை. இயற்கை வேளாண்மையின்
முக்கியம் மாணவர்களுக்கு பயன்பாட்டின் அடிப்படையில் தெரிய வேண்டும் என்பார் அவர்.
பூண்டிக் கல்லூரி தன் மாணவர்களுக்குத் தர விரும்புவதும் இதைத்தான்''
திரு.
கிருஷ்ணசாமி வாண்டையார்.
கல்வி தானத்தைப்
போலவே சிறந்தது அன்ன தானம். அதனால்தான் அந்தக் காலத்தில்
இருந்து இன்றும் நாடிவருபவர்களுக்கு அன்ன தானம் வழங்கிவருகிறோம். இதைப் போன்ற பாரம்பரியக்
குடும்பத்தில் வந்ததால், நான் இழந்தது, என் சிறுவயது குறும்பு வாழ்க்கையை. ஏனென்றால்
ஏழு வயது வரை வீட்டிலேயே பாடம் படித்தேன். அதன் பிறகு தஞ்சாவூரில் தூய இருதயனார் பள்ளியில்
படிப்பு. குதிரை வண்டியில் செல்லும்போது எல்லாம் 'நம்மால் சாதாரண மனிதர்கள் போல வாழ
முடியவில்லையே’ என்ற ஏக்கம் எழும். அதனால், வீட்டில் யாருக்கும் தெரியாமல் சைக்கிளில்
நண்பர்களை அழைத்துக்கொண்டு 6 கி.மீ. தொலைவில் உள்ள குமுளக்குழி முனியாண்டவர் கோயிலுக்குப்
போய்விடுவேன். அதே போல ஆற்றில் குளிக்கப்போய் நேரம் போவதே தெரியாமல் நீச்சலடித்து அம்மா
கையால் அடி வாங்கியதும் உண்டு.
ஊரின்
பிரதானத் தொழில் விவசாயம் மட்டும்தான். தாத்தா காலத்தில் எல்லாம் யானை கட்டித்தான்
போரடிப்போம். மூன்று போகமும் நெல் விளைச்சல் இருக்கும் என்பதால், வருஷத்தில் 365
நாட்களும் வேலை இருக்கும். வைகாசி மாசம் நடக்கும் புஷ்பவனேஸ்வரர் கோயில்
திருவிழாவின்போது எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரும் திருவிழாவில்
கலந்துகொள்வார்கள். 11 நாள் ரொம்ப விமர்சையாக நடக்கும் அந்தத் திருவிழா. இந்த
ஊருக்குக் கீழே வரும் 18 கிராம மக்களும் இங்கேதான் அப்போது ஒன்றுகூடுவார்கள்
அந்தத் திருவிழாதான் எங்களுக்குப் பெரிய பொழுதுபோக்கு.
திருவிழாவின்போது இரவுகளில் 15 அடி உயரத்துக்குப் பூத வேஷம் போடுவார்கள். பார்க்கவே பயங்கரமாக இருக்கும். கண்விழித்து விடிய விடியப் பார்ப்போம். நாங்கள் இருக்கும் தெருவுக்கு வலவு தெரு என்று பெயர். ஆண்கள் எல்லோரும் அவர்களுக்கு என்று இருக்கும் பங்களாவில் இருக்க வேண்டும். அதே மாதிரி குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் தங்குவதற்கு தனியாக இன்னொரு பங்களா இருக்கும். அதை அந்தப்புரம் என்று சொல்வார்கள். பாட்டியில் இருந்து அம்மா, பெண், பேத்தி எல்லோருமே பகல் முழுவதும் அங்கேதான் இருக்க வேண்டும். அந்தப் பழக்கத்தை எல்லாம் இன்றுவரை எங்கள் அப்பா, அம்மா மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.
பூண்டி புஷ்பம் கல்லூரிக்காக, தஞ்சாவூரில் இருந்து சாலியமங்கலம் வரைக்கும் சிமென்ட்
ரோடு போட்டுத் தந்தார் அப்போதைய முதல்வர் காமராஜர். 1960-களில் போடப்பட்ட ரோடு
1985 வரைக்கும் இருந்தது. அதைப் போல், கல்லூரிக்காகவே வந்ததுதான் எங்கள் ஊர் குடிகாடு
ரயில்வே ஸ்டேஷன்.
வணிக நோக்கத்தை
பெரிதாக நினைத்து, சேவை செய்வதில் சின்ன குறைகூட வந்துவிடக்கூடாது என்பதனால்தான் பொறியியல்
கல்லூரி தொடங்க எவ்வளவோ வற்புறுத்தல்கள் வந்தும்கூட, நாங்கள் தொடங்க மறுத்துவிட்டோம்.
ஏனென்றால் வசதி, வாய்ப்பு, பதவியால் வருகிற மரியாதை கால ஓட்டத்தில் போய்விடும். ஆனால்,
கல்வியையும் அன்னத்தையும் தானமாக வழங்குவதால் கிடைக்கும் மரியாதை என்றும் போகாது.
தனசேகரன் வாண்டையார
The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency, Issue 9 - 1937
East India (Constitutional Reforms: Elections).: Return Showing the Results of Elections in India - 1922
குறிப்பு
:
1912 ஆம் ஆண்டு "பூண்டி கொலை வழக்கு" என்பது தஞ்சையில் மிக அதிகமாக பேசப்பட்ட கொலை வழக்கு. பெரிய மிராசுதாரர் பூண்டி வைத்தியநாத பிள்ளை. (கள்ளர் மரபினர் அல்ல) இவரின் மகன் அய்யாசாமி. மனவளர்ச்சி இல்லாத அய்யாசாமி தனது மாமன் சாமிதேவன் வீட்டில் வளர்த்தார். அய்யாசாமிக்கு தனபக்கியம் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் வைத்தியநாத பிள்ளை, மருமகளான தனபக்கியம் படுகொலை செய்யப்பட்டார். அதில் வைத்தியநாத பிள்ளை கைது செய்யப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார். இங்கு இதை பதிவு செய்ய காரணம் , சிலர் வைத்தியநாத பிள்ளை, பூண்டி வாண்டையார் குடும்பத்தை சேர்ந்தவர் என்று எழுதிவருகின்றனர். வாண்டையார் குடும்பத்தின் பாரம்பரியத்தை கெடுப்பதற்க்காக, ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த சில ஈன பிறவிகள் இதுபோல் எழுதிவருகின்றனர்.