சனி, 16 மார்ச், 2019

மண்ணையார் மரபினர்


"நண்ணற்‌ கருமுரண்‌ மண்ணைக் கடக்கம்" என்று ராஜேந்திர சோழத்தேவரின்  மெய்க்கீர்த்தி, யாராலும் வெல்லமுடியாத இராஷ்டிரக்கூடர்களின் தலைநகராகவும், சாளுக்கியர்களின் அதிமுக்கிய நகராகவும் இருந்துமானியக்கேடக் கோட்டை சோழ வீரர்களிடம் வீழ்ந்தது. இந்த வெற்றிக்கு காரணமாக மாவீரர்களுக்கு அளிக்கப்பட்ட பட்டமே மண்ணையார் / மண்ணையர் / மன்னையர் / மன்னையார் ஆகும். இன்றும் சோழநாட்டில் சிறப்புடனும், புகழுடனும் வாழ்ந்து வருகின்றனர். 

பாண்டிமண்டலத்து இருஞ்சோணாட்டு மண்ணையார் குறிச்சி, மண்ணையார் கோட்டை என்ற ஊர் பெயர்கள் கல்வெட்டில் பயின்று வருகின்றன. 


இன்று மண்ணையார் மரபினர் சோழமண்டலத்தில் நாஞ்சிக்கோட்டை, வடுவூர் கள்ளர் நாட்டில் மண்ணையார் தெருவிலும், தஞ்சாவூர் பூக்கார மண்ணையார் தெருவிலும், மேலும் திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை பகுதியில் பல கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

மண்ணிசோழன் என்பவன் மண்ணிப்படிக்கரை என்னும் தேவார சிவ தலத்தையும், மண்ணியாறு என்னும் ஆற்றையும் உருவாக்கி அரசாண்டவன் என்ற கூற்றும் உள்ளது. மண்ணி என்ற நதி பற்றிய பாடல் 

"சோணாட்டுள்ளதோர் நதி.மண்ணித்தென் கரைமேல் . . . நாங்கை (திவ். பெரியதி. 4, 1, 5).

மண்ணி நாடு பற்றி ராஜேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்று ‘ராஜேந்திர சிம்ம வளநாட்டு மண்ணி நாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கி மாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்று ஒரு தலத்தை குறிப்பிடுகிறது.

மண்ணிசோழனின் வழியினரே மண்ணையார் மரபினரே என்பர் சில ஆய்வாளர்கள்.

“இராச பாரம்பரியம்” என்று சோழர்களின் குலமுறை கிளத்தும் படலம். முதலாம் இராசேந்திர சோழனைப் பாடும்போது,

களிறு கங்கை நீர் உண்ண, மண்ணையில் காய் சினத்தோடே கலவு செம்பியன் குளிறு வெண்திரைக் குரை கடாரமும் கொண்டு மண்டலம் குடையும் வைத்ததுவும்

என்று பாடுகிறார். மூண்டு எரியும் சினத்துடன் பொருந்திய செம்பியன், மண்ணை எனும் ஊரில் தன் களிறு கங்கை நீர் உண்ணும்படிச் செய்தான்.

ராஜேந்திர சோழன் தனது வெற்றியினால் பெற்ற பட்டங்கள் "முடிகொண்ட சோழன்", "ஜெயசிம்ம சரபன்", "மண்ணைகொண்ட சோழன்" மண்ணை என்பது சாளுக்கிய தலைநகர் மான்யகேட்டாவைக் குறிக்கும். தமிழில் இதை மன்னைகடகம் என்றழைப்பர்.

சோழபுரம் எனும் கிராமத்தை ஒட்டி வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது மானம்பாடி எனும் சிறு கிராமம். இங்கு முதலாம் இராஜேந்திரர் சோழரின் மெய்க்கீர்த்தியை மட்டும் தெரிவிக்கின்றது. இக்கல்வெட்டில் உள்ள மெய்க்கீர்த்தியில் முதலாம் இராஜேந்திரர் கொள்ளிப்பாகை, மண்ணைக்கடகம் முதலிய நாடுகளை வென்றைதைக் குறிப்பிடுகிறது.

இந்த போரில் வெற்றிக்கு காரணமான போர் மறவர்கள் மண்ணைகொண்டார், மண்ணையார் என்ற பட்டங்களை பெற்றதாகவும் கூறுகின்றனர்.

மண்ணையார் சுதந்திர போராட்ட வீரர்கள்




12 ஆம் நூற்றாண்டில் ஶ்ரீவில்லிபுத்தூரில் சிங்கள படை, பாண்டியர் படையை தோற்கடிக்கிறது. இதனால் குலசேகர பாண்டிய மன்னர் தொண்டைமான் காட்டில் மண்ணையா ராயன், கள்ளர் வேளைக்காரர், முனையத்திரையர் பாதுகாப்பில் தஞ்சம் அடைகிறார் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன.



சோழமண்டலத்தில் உள்ள வாகுயர் நாடு என்று அழைக்கப்படும் நாஞ்சிக்கோட்டை. இராசராசசோழன் காலத்து தஞ்சாவூர் நகர தெற்கு எல்லை ஆகும். நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் உள்ள உடையான்கரை ஏரி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சோழர்கள் காலத்தில் நிர்மானிக்கப்பட்ட அய்யனர்கோவில் உள்ளது. இக்கோவில் நாஞ்சிக்கோட்டை மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பதினெட்டு கள்ளர் கிராமங்களுக்கும் குலதெய்வமாக விளங்குகின்றது.

இங்கு மண்ணையார், வாண்டையார், சாளுவர், தென்கொண்டார், மழவராயர், வல்லுண்டார் , இளமுண்டார், நாட்டார், காடவரார் என்ற கள்ளர் மரபினர் வாழ்கின்றனர்.

இதில் மண்ணையார்கள் பற்றிய முதல் கல்வெட்டு ஒன்று முதன் முதலாக பொ.ஆ.1550 ல் நிலம் தானம் வழங்கியதை குறிப்பிடுகிறது.

இவர்கள் நாஞ்சிக்கோட்டை பகுதியில் அரையர்களாவே வாழ்ந்துள்ளனர் என்பதனை அறியமுடிகிறது.

மாறவர்மன் சுந்தர பாண்டியன், தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி சோழப் பேரரசை அகப்படுத்திக் கொண்டான். மூன்றாம் ராஜ ராஜ சோழன் சுந்தர பாண்டியனிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான். 

இவனுக்கு பின் மூன்றாம் இராசேந்திரன் ஆட்சி கி.பி. 1279 வரை இருந்தது. இவன் ஆட்சி கீழ்நிலைக்கு வந்துவிட்டதால், சிற்றரசர் தொகையே குறைந்துவிட்டது. ‘சோழகங்கன், என்ற ஒருவனும் (சோழகங்கநாட்டார், சோழகங்கர் என்ற கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர்) களப்பாளன் (களப்பாளர், களப்பாடியார் என்ற கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர்) , என்ற ஒருவனுமே சிற்றரசராகக்” குறிக்கப்பெற்றனர். இராசேந்திரனுக்குப் பிறகு சோணாட்டைச் சோழ அரசன் ஆண்டதற்குச் சான்றில்லை. 

பாண்டியப்பேரரசிலும் வடக்கிலும் இங்குமங்குமாகச் சிலர் தம்மைச் சோழர் மரபினர் என்று கூறிக்கொண்டு சிற்றரசராகவும் அரசியல் அலுவலாளராகவும் 15-ஆம் நூற்றாண்டுவரை இருந்தனர் என்பது தெரிகிறது. இதில் வீரசேகர சோழன் (1511-1561) என்று பழையாறையிலிருந்து ஆட்சி செய்து வந்த ஒருவனை சேவப்ப நாயக்கன் (1532 - 1560) தஞ்சை மீது படையெடுத்து வென்று, முதல் நாயக்க மன்னராக தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தான்.

சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சி மறைவுக்குப் பின் நாயக்கன் ஆட்சி தொடக்கத்தில், இந்த தஞ்சையில் உள்ள நிலங்கள் கள்ளர் மரபினரிடமே இருந்துள்ளன. இதற்கு நல்ல ஆதாரமாக மண்ணையார் மரபினர் வழங்கிய நில தானம் நமக்கு உணர்த்தும்.

நாயக்க மன்னர், நாஞ்சிக்கோட்டை மண்ணையார்களை அழைத்து, அவர்களது எல்லையில் உள்ள நிலத்தில் ஏழுவேலி நிலத்தை பள்ளிவாசல் கட்டுவதற்கு தருமாறு கேட்டுக் கொண்டார்.


நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் 
பள்ளிவாசல் நில தானம்
( கிபி 1550)

செல்வப்பநாயக்கரின் கல்வெட்டுத்தூண் தஞ்சை இரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஷம்ஸ் மன்சூர் ஷாபீர் அவுலியா என்பாரது தர்க்காவில் முக்கிய நினைவுச்சின்னமாக அவுலியாவின் சமாதி அருகில் இன்றும் உள்ளது.

சாதாரண வருடம் மார்கழித் திங்கள் பதினான்காம் நாளாக சாசன நாள் குறிக்கப்பட்டுள்ளது. இது 1550 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமையைக் குறிப்பதாகும். தஞ்சை நகரில் திகழும் ஷம்ஸ்பீர் பள்ளி எனும் முகமதியர்களின் இந்த வழிபாட்டுத் தலத்தை நிருவகிக்கும் பக்கிரிகளிடம் நாஞ்சிக்கோட்டை மண்ணையர்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து ஏழுவேலி நிலத்தினைக் கொடையாகக் கொடுக்குமாறு செல்வப்ப நாயக்கர் கேட்டுக்கொண்டார். அதன்படி


1. சிலம்பா மண்ணையார்

2 .வேல் மண்ணையார்

3. கோபால் மண்ணையார்

4. தம்பா மண்ணையார்

5 ........... மண்ணையார்

என்ற ஐந்து நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ஏழுவேலி நிலத்தை ஷம்ஸ்பீர் பள்ளிக்கு அளித்தனர். இந்த ஏழுவேலி நிலத்திற்கும் நான்கெல்லையும் குறிக்கப்பட்டுள்ளது.











நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் 
திருப்பதியில் இருக்கும் நைனார் என்பவருக்கு வழங்கிய நிலம் 
( கி.பி .1741)



நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் 
ஸ்ரீரங்க கோவில் தானம்  
(கி.பி.1741)



நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் 
மராட்டிய மன்னர் மோடி ஆவணத்தில்
( கிபி 1861)
.

நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் நிலம் தொடர்பாக அளித்த சாசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மிராசுதாரர்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளனர். 

நாஞ்சிக்கோட்டை பக்கிரிசாமி மண்ணையார் 



நாஞ்சிக்கோட்டை - விளார் 
மண்ணையார் வழங்கிய நிலம் மற்றும் பபணம்
(கி.பி. 2013)

06-11-2013 ஆண்டு உலகத் தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது தமிழீழத்தில் கொல்லப்பட்ட, தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூரும் ஒரு முற்றம் ஆகும். இதனை தமிழ் செயற்பாட்டாளர் முனைவர் ஐயா நடராசன் மண்ணையார் விளார் கிராமத்தில் நினைவு முற்றத்திற்குத் தேவையான 1.75 ஏக்கர் நிலத்தை வழங்கினார் மேலும் தனக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவற்றை மேடையில் ரூ. 45 லட்சத்திற்கு விற்பனை செய்து, அந்த பணத்தையும் வழங்கினார்.





நாஞ்சிக்கோட்டை மண்ணையார் வம்சத்தினர்  , சேதுராயர் வீட்டு திருமண பத்திரிகையில்



1916ஆம் தமிழின் முதல் மருத்துவ அகராதியை தந்த மேதை 
"டி.வி.சாம்பசிவம் மண்ணையார்"


டி.வி.சாம்பசிவம் மன்னையார் அவர்களின் தம்பி மகன் 
ராஜபூசனம் மண்ணையார்



மண்ணையார்கள் 
1948  பத்திரப்பதிவு 


மருதப்பா மண்ணையார் நடிகர் திலகம் சிவாஜி சிலை அமைப்பு


மண்ணையார்




 







வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்