புதன், 13 மார்ச், 2019

புலமை வேங்கடாசலம் வன்னியர்




புலமை வேங்கடாசலம் வன்னியர் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் புள்ளவராயன் குடிகாட்டில் திருமான் பிச்சை வன்னியருக்கும், புல்லவராயர் குடும்பச் செல்வி சரஸ்வதி அம்மாளுக்கும் 20/6/1946ல் பிறந்தவர். 


இளநிலை (பி.ஏ.) தமிழ் இலக்கிய படிப்பினை பூண்டி ஸ்ரீ புஸ்பம் கல்லூரியிலும், முதுநிலை (எம்.ஏ.) இலக்கியப் படிப்பினை திருச்சி தேசியக் கல்லூரியிலும், சட்டப் படிப்பினை (பி.எல்.)சென்னை சட்டக்கல்லூரியிலும் பயின்றவர். 


திருநெல்வேலி மேலநினித்த நல்லூரில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கலைக்கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழகம் மொழிபெயர்ப்புத்துறை, வாழ்வியற் களஞ்சிய மையம் ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றிய பெருமை பெற்றவர். சிறந்த வழக்கறிஞராகவும் கடமை புரிந்த இவர், சிறந்த சிந்தனையாளராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் பரிநாமம் பெற்றவர். 



மகள் பெயர் - கண்னுக்கினியாழ் ( வழக்கறிஞர்) , மருமகன் - ஜெயக்குமார் பாலியார் 


இவர் எழுதிய திருமனச்சட்டம் என்னும் புகல் பெற்ற நூல் தமிழக அரசு தமிழ் வளர்சித் துறையின் மூலம் முதல் பரினை பெற்ற நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக் கள்ளர் பேரவைத் தலைவர், தமிழ்நாடு கள்ளர் பேரவை பொதுச் செயலாளர் என்ற சிறப்புமிகு பதவிகளையும் வகித்து கள்ளர் குல பெருமைகளை உலகறியச் செய்த பெருமை மிக்கவர்.




இலக்கியம், இன்சொல், வாய்மையால் அனைவரையும் கவர்ந்து வழக்கறிஞர் தொழில் மட்டும் தனது முழுக்கவனத்தையும் செழுத்தாது கள்ளர் குல முன்னேற்றத்திலும் அக்கரையுடன் செயல்படுகிறார்.





படைப்புகள்


01. இந்துத் திருமணச் சட்டம்


02. சட்டத்தமிழ் அகராதி


03. சட்டக் கட்டுரைகள் வாழ்வியற் களஞ்சியம்


04. சீவனாம்ச வழக்கு


05. கள்ளர் வரலாறு


06. கள்ளர் பட்டப்பெயர்கள்


07. தஞ்சாவூர் அரண்மனை வரலாறு


08. தஞ்சாவூர் பெரியகோயில் வரலாறு


09. மறவர் வரலாறு


10. புலன் விசாரணை


11. இந்திய முத்திரைச் சட்டம்


12. சிறப்புத் திருமணச் சட்டம்


13. உரிமையியல் விசாரணை முறைச்சட்டம்


14.குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறை


15. கள்ளரின மன்னன் இராசராசசோழன்


16. துன்ப கீதம்


17. நியாயக் குரல்


18. இழந்த காதல் மற்றும் 38 புத்தகங்கள்.



விருதுகள்


தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின்முதல் பரிசு (சிறப்புத் திருமணச் சட்டம்)

 

பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்