கிபி 1642ல் திருமலை நாயக்கர், வீரப்போர் புரிந்து மரணமடைந்த 18 கள்ளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வண்டியூர் எனும் ஊரை கள்ளர்களின் தலைவனாயிருந்த வீரத்தேவன் என்பவருக்கு அளித்து உள்ளார்.
வீரத்தேவனை வண்டியூருக்கு காவல் நாட்டாமையாகவும் நியமித்து சிறப்பு செய்துள்ளார். வீரத்தேவனை சார்ந்த மற்ற கள்ளர்களுக்கு நிலங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
திருமலை நாயக்கர் மதுரை கள்ளர்களின் உதவியை போர்க்காலங்களில் பயன்படுத்தியுள்ளதை செப்பேடு விளக்குகிறது.
ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
ஆய்வில் உதவி : திரு. முனிராஜ் வாணாதிராயர்