வியாழன், 19 செப்டம்பர், 2019

டாக்டர் விஜயபாஸ்கர் மழவராயர்



டாக்டர் விஜயபாஸ்கர் மழவராயர்  (பிறப்பு: 1974) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ராப்பூசல் கிராமம் இவரது சொந்த ஊர். தந்தை இரா.சின்னசாமி மழவராயர்

அ.இ.அ.தி.மு.கவில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2013, நவம்பர், 1 அன்று தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.


2016 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வென்று மீண்டும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவருக்கு ரம்யா என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்..