காடுவெட்டியார் வரலாறு
காடவராயர் பட்டத்துடன் தொடர்புடைய பட்டம் காடுவெட்டி என்றும், காடுவெட்டி என்பது பல்லவரது பெயராக சாசனங்களிலும் வருகிறது.
கங்கவேந்தர்களின் செப்பேடுகள் காஞ்சி மாநகரத்தை காடுவெட்டிகள் ஆண்டதாக கூறுகின்றன. காடுவெட்டி பேரரையன், காடுவெட்டி தமிழ் பேரரையன், விடேல் விடுகு காடுபட்டித் தமிழ் பேரரையன் என்போர் பல்லவ பெரு வேந்தர்களின் கீழிருந்த பல்லவ சிற்ரசர்கள், தலைவர்களென்றும் சுட்டுகின்றன. பழைய திருவிளையாடல் புரானத்தில் பல்லவ குல காடுவெட்டி என்பவனின் பெருமையும் அவனது பக்திச் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. காடுவெட்டி பட்டமுடையோர் புதுக்கோட்டை அம்மாவட்டத்தில் காடுவெட்டிவிடுதி, பாலக்குடிப்பட்டி, உஞ்சைவிடுதி, அரிமளம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காடுவெட்டிகள் சோழர் மற்றும் பல்லவர் மரபினர் என்றும் அறிய முடிகிறது.
இரண்டாம் இராசராசன் 7-ஆம் ஆட்சியாண்டில் குவலால நாட்டில் (கோலார் கோட்டம்) காடுவெட்டி என்ற சிற்றரசன் மலை மீது ஒரு கோவில் கட்டினான்.
கள்ளர் மரபினரின் - காடுவெட்டியார்
புதுவிடுதி கோவிந்தராஜ் காடுவெட்டியார்