திங்கள், 17 ஆகஸ்ட், 2020

கண்டியர் மரபினர்


கண்டியர் என்பதற்கு அகராதி தரும் விளக்கமாக பாணர், புகழ்வோர், பாடுவோர், கள்ளர் மரபினரின் பட்டப்பெயருள் ஒன்று.

கள்ளர் மரபினரின் கண்டியர் பட்டமுடையவர் வாழும் பகுதிகள்

கண்டியர் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம் , ஓரத்தநாடு வட்டத்தில் ஆம்பலாப்பட்டு வடக்கு ஊராட்சியில் அமைந்துள்ள கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

கண்டியர் தெரு :- திருவாரூர் மாவட்டம்,நீடாமங்கலம் வட்டம், எடமலையூர் ஊராட்சியில் உள்ள கண்டியர் பட்டம் கொண்ட  கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.


கண்டியர் தெரு:-  புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை  வட்டத்தில் ஆதனக்கோட்டை ஊராட்சியில் கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.


கண்டியன்காடு:- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் மூத்தக்குறிச்சி ஊராட்சியில்  உள்ள கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.


கண்டியன்காடு :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம்,  மண்டையூர் ஊராட்சியில் கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.


கண்டியன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், அம்புக்கோயில் ஊராட்சியில் கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.


மேலும் கண்டியர்கள் வாழும் ஊர்கள்:-

தஞ்சை வட்டத்தில் முத்துவீரக்கண்டியன்பட்டி, நந்தவனப்பட்டி, மனையேறிப்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கலூர் ஆகிய ஊர்களிலும்

ஒரத்தநாடுவட்டத்தில் கக்கரை, பின்னையூர், மண்டலக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஆர்சுற்றிப்பட்டு ஆகிய ஊர்களிலும்

மன்னார்குடி வட்டத்தில் பாமணி,
பைங்காநாடு, தலையாமங்கலம், எடமலையூர், வடுவூர், திருக்களர், பெருகவாழ்ந்தான், கருவாக்குறிச்சி, சொக்களாவூர், கீராலத்தூர், சோழபாண்டி ஆகிய ஊர்களிலும்

பட்டுக்கோட்டை வட்டத்தில்
ஆவிக்கோட்டை, பெரியகோட்டை, அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களிலும்

திருவையாறு வட்டத்தில்
திருச்சின்னம்பூண்டி, மகாராசபுரம் முதலிய ஊர்களிலும்

புதுக்கோட்டை மாவட்டத்தில்
கீழக்கரைமீண்டார்க்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, கீழாத்தூர் முதலிய பல ஊர்களிலும் வாழ்கின்றனர்
.



இலங்கை முழுவதும் சோழனின் ஆட்சி அமைய போர் படை அமைத்து தலைமை தாங்கி வெற்றி கண்டவன் திருக்கண்டியூர் இளவரசன் இராசகண்டியன்.

இதன்பின் இலங்கையின் மையப்பகுதியில் புதிய தலைநகரை உருவாக்கி இராச கண்டியன் மாநகரம் என்று பெயரும் சூட்டப்பட்டு சோழனின் பிரதிநிதியாக ஆட்சி ஏற்றான்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இராச கண்டியன் மாநகரம் கண்டி என்ற பெயருடன் ராஜதானியகவே திகழந்தது. இன்றும் சிங்கள மக்கள் கண்டியை மாநுவர என்ற பெயர் கொண்டே அழைக்கின்றனர். மாநுவர என்றால் சிங்கள மொழியில் தலைநகரம், மாபெரும் நகரம் அல்லது ராஜதானி என்று பொருள் படும்.

உலக நாடுகளில் முதன் முதலில் சோழனின் ஆதிக்கத்தை ஏற்படுத்திய பெருமை இராசகண்டியனுக்கே உரியது. இதனை பெருமைப்படுத்தவே இராசராச சோழன் இராசகண்டியன் என்ற சிறப்புப் பட்டத்தை தான் ஏற்றான் என்பதும் வரலாறு

கன்யாகுமரி சுசீந்திரம் கோவில் கண்டியர் கல்வெட்டு


சிங்கப்பூர் அப்பாவு கண்டியர்


கண்டியர் சுதந்திர போராட்ட வீரர்கள்






M. வடிவேல் கண்டியர் INA

ஆய்வாளர் ஜெயராம் கண்டியர்

கபடி தந்தை வீரையன் கண்டியர் 

கக்கரை ராமசாமி கண்டியர்


ஆடிட்டர் துரைராஜ் கண்டியர்




வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்