திண்டுக்கல் ஐ. பெரியசாமி சேர்வைக்காரர், தமிழகத்தில் 2006-2011 ஆண்டு காலத்தில் நடந்த தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர். இவர் தமிழகத்தின் வத்தலகுண்டுவில் 6 சனவரி 1953 அன்று பிறந்தவர். இவரது பூர்விகம் திருவையாறு. இவருக்கு இரண்டு மகன்கள். இவரது மூத்தமகன் இ.பெ.செந்தில் குமார் சேர்வைக்காரர் பழநி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இளைய மகன் ஐ. பி. பிரபு சேர்வைக்காரர் இளம் தொழில்முனைவர் ஆவார்.
1986 - 1991 வத்தலகுண்டு ஒன்றிய தலைவர், 1989 - 1991 மற்றும் 1996-2001 தமிழக சட்டமன்ற உறுப்பினர், 1996 - 2001 ல் மதிய உணவு அமைச்சர், 2006 - 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். தமிழக வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர். மூத்தமகன் ஐ.பி. செந்தில் குமார், சேலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர், அரசியல் ஈடுபாடு உடையவர். 2016 முதல் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
கூடைப்பந்து விளையாட்டு என்றாலே குதூகலம் ஆகிவிடுகிறார் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி சேர்வைக்காரர். இன்னும் விளையாட ஆர்வம் கொண்டவராய் களத்தில் இருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் கணவாய்ப்பட்டி பஸ்ட் ஸ்டெப் பள்ளி மைதானத்தில் நடந்த தென் மண்டல அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் ஐ.பெரியசாமி.
அங்கு பள்ளி மாணவர்கள் மற்றும் கூடைப்பந்து வீரர்கள் இடையே துவக்க உரையாற்றியபோது, தனது கூடைப்பந்து விளையாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கல்லூரிப் பருவத்தில் தனது இணை வீரர்களோடு மதுரையில் நடந்த கூடைப்பந்து போட்டியில் தியாகராஜர் கல்லூரி அணியுடன் மோதியதாகவும் ,மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு அணிகளும் சமநிலை பெற்றிருந்தபோது ஒரு பாய்ண்ட் வித்தியாசத்தில் தங்கள் அணி வெற்றி பெற்றது என கூறினார்.
மேலும் பேசிய அவர், என்னதான் டெக்னிக்கல் முறையில் விளையாடி கொண்டிருந்தாலும் இறுதியில் கூடைப்பந்து களத்தில் ஒரு அதிர்ஷ்டம் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் அதேபோல் மிக முக்கியம் ஆடியன்ஸ் சப்போர்ட். திருநெல்வேலியில் எங்கள் அணி ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது திருநெல்வேலி மாவட்டமே உள்ளூர் அணிக்கு சப்போர்டாக கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். மிகவும் டென்ஷனான தருணம் ஆகி விட்டது. யார் ஜெயிப்பார்கள் என்று தெரியவில்லை. உணர்ச்சி வசப்பட்ட ஒரு ரசிகர் பெண்மணி நான் பேஸ்கட்பாலினை தட்டி ஓடிக் கொண்டிருந்தபோது என் பனியனை பிடித்து இழுத்து விட்டார். அந்த அளவுக்கு ஒரு வெறித்தனம், ஆர்வம் அந்த பார்வையாளர்களிடம் இருந்தது. அந்த ரசிகர்கள் தந்த உற்சாகம் அந்த அணியை வெற்றி பெறவும் செய்தது. அதேபோல் இன்று நடந்த போட்டியிலும் இந்த போட்டியை நடத்தும் பஸ்ட் ஸ்டெப் பள்ளி முதல் சுற்றில் பின்தங்கி இருந்தாலும் சக மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கத்தி, கத்தியே உற்சாகப்படுத்தி தங்கள் பள்ளி அணியை வெற்றி பெறச் செய்து விட்டனர் என்று கூறினார்.