சனி, 1 ஜூன், 2019

தெய்வத்திரு.அ. தியாகராச காடுவெட்டியார்





புதுக்கோட்டை, திருமயம் சட்டமன்ற தொகுதிகளில் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ. தியாகராஜன் காடுவெட்டியார் 

இவர் 1962 தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் இருந்தும், 1971 தேர்தலில் திருமயம் தொகுதியில் இருந்தும், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

அனைத்து சமுதாய மக்களின் ஆதரவை பெற்றிருந்ததால் நகர்மன்றத்தேர்தலில் அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகள் போட்டியிட்ட போதினும் தனித்து நின்று நகர் மன்றத் தலைவரானவர்.

பிளவுபட்டுகிடந்த முக்குலத்தோரை ஒன்றிணைத்து வரலாறு காணாத மாநாட்டை புதுக்கோட்டையில் நடத்தியவர், வல்லமபர் கள்ளர் இனத்தினரே என்பதைச் சுட்டிக்காட்டி சட்டமன்றத்திலும் மாநாட்டிலும் தீர்மானம் கொண்டுவந்தவர்.

இலவச பாட புத்தகங்கள், குறிப்பேடுகள் அரசு வழங்குமுன்னர், தனது செலவில் ஏழைஎளிய மாணவ மாணவியருக்கு இன, மத பேதமில்லாது பாடப் புத்தகங்களும் படிப்புதவிகளும் செய்தவர்.

புதுக்கோட்டை நகரில் கடுமையான குடி நீர் பஞ்சம் நிலவியபோது தன் கிராமத்திலிருந்து டாங்கர் லாரிகளின் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நகர மக்களின் தாகம் தவிர்த்தவர்.

புதுக்குளத்தை செம்மை படுத்தி கடற்கரையைப் போல் மக்கள் பயன்பாடடையச் செய்தவர். காவிரிக்குடி நீர் வினியோகத்திற்கு வித்திட்டவர்.

ஒருவருக்கு, இரண்டு ஓய்வூதியம் கூடாதுஎன்ற் கொள்கை வழி நின்று சட்டமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியம் மட்டும் பெற்றுக்கொண்டு மொழிபோர் தியாகிகளுக்கான ஒய்ய்வூதியம் பெற்றுகொள்ள மறுத்தவர். வற்புறுத்தியவர்களிடம் தியாகம் செய்வதற்கு ஊதியம் பெற்றால் செய்த தியாகத்தை கொச்சைப் படுத்துவதாகும் என்று வாதிட்டவர்.



வாழ்வின் இறுதிவரை குடிசை வீட்டிலேயே வாழ்வை முடித்துக்கொண்டவர், புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் பேரன்பிற்குப் பாத்திரமானவர். மிகச்சிறந்த கால்பந்து விளையாட்டுவீரர், இந்தியாவின் பல நகரங்களில் ஆடியிருக்கீறார்.

முக்குலத்தோர் சங்க மாநில மாநாட்டில் வெண்ணவல்குடி இரா.நாகேந்திரன் முன் மொழிய் விஜய ரெகுனாத பல்லவராயரால் “மாவீரன்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது.





புதுக்கோட்டை ஐயா ஜெயசந்திரன் கூறுவது

ஐயாவோடு நாங்கள் பழகிய காலங்களில் என் நெஞ்சில் இன்னும் நிழலாடும் நிகழ்ச்சி ஒன்று. அதை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஐயா திமுகவை விட்டு ஒதுங்கியிருந்த போதிலும் திமுக ஐயாவோடு பாசத்தில் கட்டுண்டே இருந்தது. ஐயா சுயேட்சையாக போட்டியிட்டு அமோகவெற்றி பெற்று புதுக்கோட்டை நகர்மன்ற தலைவரானார். அப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த திமுக நகர நிர்வாகி அவரது பகுதியில் கவுன்சிலராக தேர்வானார். ஒருசமயம் நகரம் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வந்தது. அப்போது நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி ஆணையரிடம் அந்த திமுக நிர்வாகி... ஆணையர் அவர்களே... நகர்மன்ற தலைவர் வீட்டுவாசலில் வெயிலுக்காக போடப்பட்டிருந்த கொட்டகையை... ஆக்கிரமிப்பு என கூறி அதை ஏன் இன்னும் அகற்றவில்லை என வாதிட்டார். அதற்கு ஐயா ஆணையரிடம் நான் வீட்டுக்கு செல்லும்போது கொட்டகை இருக்கக்கூடாது என உத்திரவிட்டார். ஆணையரும் நகராட்சி ஊழியர்களை அனுப்பி கொட்டகையை அப்புறப்படுத்தினார். சிலவாரங்கள் கடந்து அந்த திமுக நிர்வாகி ஐயா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடி கொண்டிருந்தது. அப்போது ஐயா வாசலில் உள்ள சாய்மான திண்டில் படுத்திருந்தார். அப்போது நானும் சில நண்பர்களும் அங்கு சென்றோம்... அப்போது ஐயா என்னிடம் டேய்... இவன் ஒருமணி நேரமாக இப்படி நின்று அழுது கொண்டிருக்கிறான். என்ன என்று கேட்டால் எதுவும் சொல்ல மறுக்கிறான்... வீதியில் செல்வோர் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்... என்னவென்று கேள் என்று கூறினார்... அப்போது திமுக நிர்வாகி தேமிதேமி அழுதார்...நான் அண்ணே என்னவென்று சொல்லுங்கள் இல்லையெனில் இங்கிருந்து செல்லுங்கள் எனகூறிய போது... அவர், நான் போனமாதம் நகரசபை கூட்டத்தில் ஐயா ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என கூறி அவமானப்படுத்தினேன் ஆனால் ஐயா நேற்று என் மகனுக்கு நகராட்சியில் நிரந்தர பணி ஆணை வழங்கியிருக்கிறார் எனக்கூறி கதறியழுதார்... இதை ஐயாவிடம் நாங்கள் தெரிவித்தபோது அதற்கு ஐயா...அவனுக்கு தெரிந்ததை அவன் செய்தான்... எனக்கு தெரிந்ததை நான் செய்தேன்... காலம் காலமாக திமுகவில் இருக்கும் இவன் எதுவுமே சம்பாதிக்கவில்லை...ஏதோ அவன் குடும்பத்திற்கு உதவ எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே எனகூறி பெருமூச்சு விட்டார்... அந்த திமுக நிர்வாகி ஐயாவை கட்டிப்பிடித்து கதறியழுதார்... ஐயா அவரை தேற்றி அனுப்பி வைத்தார்... ஐயா வாழ்ந்தகாலங்களில் அனைத்து சமுதாய மக்களும் ஐயாவோடு இரண்டற கலந்தே வாழ்ந்தனர்... இன்று நினைத்தாலும் ஐயா தலைக்குமேல் கையை கட்டிக்கொண்டு அவர் வாசல் திண்டில் சாய்ந்தவண்ணம் இருந்த காட்சியே கண்ணில் நிற்கிறது... மீண்டும் எப்போதும் பார்க்க போகிறோம் அன்பால் புதுக்கோட்டையை வென்ற மாவீரரை!....

ஐயா தியாகராச காடுவெட்டியார் அவர்கள் தொடங்கி வைத்து இன்றும் அவர் பெயரால் வழங்கப்பட்டுவரும் இலவச பாடக்குறிப்பேடுகளை புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி மாணவர்கள் இன்றும் பெற்று மகிழ்கின்றனர் என்பது பெருமைக்குரிய ஒன்று.

பூமி உள்ளவரை ஐயா தியாகராச காடுவெட்டியார் அவர்களின் புகழ் நிலைத்திருக்கும்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்