தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயமாகத் திகழும் பாரதிராஜா தமிழ்நாட்டில், மதுரை மாவட்டம் அல்லி நகரத்தில் 1941- ம் வருடம் ஜூலைத் திங்கள் 17- ஆம் தேதி கள்ளர் மரபில் பெரிய மாயத் தேவர், மீனாட்சியம்மாள் (எ) கருத்தம்மாளுக்கும் பிறந்தவர்.
பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி, செல்லப் பெயர் பால்பாண்டி.
இளம்வயதில் மான் வேட்டையிலும், இலக்கியங்களிலும் ஈடுபாடுக் கொண்டிருந்த பாரதிராஜா, பின் நாட்களில் நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். "ஊர் சிரிக்கிறது", "சும்மா ஒரு கதை" எனும் அவர் எழுதிய நாடகங்களை தேனி, பழனி, செட்டிப்பட்டி கிராமங்களில் திருவிழா சமயங்களில் அரங்கேற்றியுள்ளார்.
ஆரம்ப நாட்களில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்த பாரதிராஜா, பள்ளிநாட்களிலிருந்தே தான் நேசித்து வந்த சினிமா ஆசையில் - தன் அம்மாவின் ஆசீர்வாதத்தையும், முந்நூற்று ஐம்பது ரூபாயையும் எடுத்துக் கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார்.
சென்னையின் ஆரம்ப நாட்களில் மேடைநாடகம் ("அதிகாரம்"), வானொலி நிகழ்ச்சிகள், பெட்ரோல் பங்க் வேலை என இருந்தபடியே திரையுலகில் நுழைய முயற்சித்தவர் முதலில் இயக்குனர் பி. புல்லையாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து அவரின் பிரதான சீடரானார்.
அதன்பின் 1977- ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் திருப்புமுனை 'டிரெண்டு செட்டர்' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட "16 வயதினிலே" படத்தின் மூலம் இயக்குனராகி, இன்று இயக்குனர் இமயமாய் திகழ்கிறார். பாரதிராஜாவின் மனைவி பெயர் சந்திரா லீலாவதி, மகன் மனோஜ், மகள் ஜனனி, மருமகள் நந்தனா.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விருதுகளும் பாராட்டுகளும்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
இயக்குநர் பாரதிராஜா திரைப்படங்கள்
திரைப்படத்தின் பெயர்
|
வெளியான ஆண்டு
|
ஓடியநாட்கள்
|
16 வயதினிலே
|
1977
|
30 வாரம்
|
கிழக்கே போகும் ரயில்
|
1978
|
52 வாரம்
|
சிகப்பு ரோஜாக்கள்
|
1978
|
25 வாரம்
|
புதிய வார்ப்புகள்
|
1979
|
25 வாரம்
|
நிறம் மாறாத பூக்கள்
|
1979
|
100 நாள்(இலங்கையில் 52 வாரம்)
|
ஸோல்வா ஸாவன்(ஹிந்தி)
|
1979
|
கல்கத்தாவில் 25 வாரம்
|
யார் குலாபி(தெலுங்கு)
|
1979
| |
கல்லுக்குள் ஈரம்(கதாநாயகன்)
|
1980
| |
நிழல்கள்
|
1980
| |
நிறம் மாறாத பூக்கள்(மலையாளம்)
|
1980
| |
ரெட் ரோஸஸ்(ஹிந்தி)
|
1980
| |
அலைகள் ஓய்வதில்லை
|
1981
|
25 வாரம்
|
சீதாகோகா சில்லகே(தெலுங்கு)
|
1981
|
100 நாள்
|
டிக் டிக் டிக்
|
1981
| |
காதல் ஓவியம்
|
1982
| |
ராகமாலிகா
|
1982
|
100 நாள்
|
வாலிபமே வா வா
|
1982
|
131 நாள்
|
மண்வாசனை
|
1983
|
286 நாள்
|
லவ்வர்ஸ் (ஹிந்தி)
|
1983
| |
புதுமைப்பெண்
|
1984
|
100 நாள்
|
மெல்லப் பேசுங்கள்(தயாரிப்பு)
|
1984
|
100 நாள்
|
சவரே வாலி கரடி(ஹிந்தி)
|
1984
| |
தாவணிக் கனவுகள்(நடிப்பு மட்டும்)
|
1984
|
100 நாள்
|
ஒரு கைதியின் டைரி
|
1985
|
100 நாள்
|
முதல் மரியாதை
|
1985
|
130 நாள்
|
யுவதரம் பிலிசிந்தி(தெலுங்கு)
|
1985
| |
ஈதரம் இல்லாளு(தெலுங்கு)
|
1985
| |
கைதிபேட்டா (தெலுங்கு)
|
1985
| |
கடலோரக் கவிதைகள்
|
1986
|
100 நாள்
|
நீதானா அந்தக் குயில்(திரைக்கதை மட்டும்)
|
1986
|
100 நாள்
|
வேதம் புதிது
|
1987
| |
ஜமதக் கனி(தெலுங்கு)
|
1987
|
100 நாள்
|
கொடி பறக்குது
|
1988
| |
நாற்காலிக் கனவுகள்(டப்பிங்)
|
1988
| |
என் உயிர்த் தோழன்
|
1990
| |
புது நெல்லு புது நாத்து
|
1991
| |
நாடோடித் தென்றல்
|
1992
| |
கேப்டன் மகள்
|
1993
| |
கிழக்குச் சீமையிலே
|
1993
| |
கருத்தம்மா
|
1994
| |
பசும்பொன்
|
1995
| |
தமிழ் செல்வன்
|
1996
| |
அந்தி மந்தாரை
|
1996
| |
தாஜ்மகால்
|
1999
| |
கடல் பூக்கள்
|
2000
| |
ஈர நிலம்
|
2003
| |
கண்களால் கைது செய்
|
2004
| |
கோதா ஜீவித்தாலு(தெலுங்கு)
| ||
ஆராதனா(தெலுங்கு)
|