இராமநாதபுரத்தை அடுத்து சிவகங்கையை நோக்கி திரும்பிய ஆங்கிலேயர் படை கிபி 1772 ல் ஜெனரல் ஸ்மித் தலைமையில் தாக்கினர். இந்த போரில் முத்துவடுகநாதர் வஞ்சகமாக கொல்லப்பட்டார்.
முத்துவடுகநாதருக்காக உதவியாக "நேரிய போரில் நிலையதனை விட்டகலா ஏரியூர் மல்லாக்கோட்டைக் கியல்புடைய சேதுபதியம்பலம் தீரன் வெகுசனமும் பேதமில்லா பெரியபிள்ளையம்பலமும்" (சிவ அம் பக் 122) மல்லாக்கோட்டை நாட்டு சேதுபதியம்பலம் தலைமையிலான் படை, பெரியபிள்ளை அம்பலம் படை முதலான நாட்டார் படைகள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆபத்தில் இருந்து காக்க உதவியுள்ளனர்.
முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பின்பு மருது சகோதரர்களுடன் வேலுநாச்சியார் ஐதரை சந்திக்க, கிபி 1780 ல் ஐதர் அலியின் படை உதவியை பெற்ற வேலுநாச்சியார் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து சீமை மீட்க புறப்பட்டபோது அவருக்கு ஆதரவாக " தாட்சிணிய மில்லாச் சனமும் விருதுடனே நாச்சியப்பன் சேர்வையும் "வெகு கள்ளர் பெருஞ்சமுங் கடுங்கோபமுள்ளவர்கள் மல்லாக்கோட்டை நாட்டவரும், சேதுபதியம்பலம் தீரனவன் சனமும், பேதகமில்லா பெரியபிள்ளை அம்பலமும் , துடியன் வயித்தியலிங்க தொண்டைமான் தன்சனமும், மருவத்த மன்னன் மா வேலி வாளனுடன் வெரிமருது சேர்வை"( சிவ அம் பக் 150-151)
வேலுநாச்சியாருக்கு ஆதரவாக மல்லாக்கோட்டை நாட்டை சேர்ந்த நாச்சியப்பன் சேர்வை போரிட்டுள்ளார்.
கிபி 1794ல் ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதி படமாத்தூர் கவுரி வல்லபதேவருக்கு ஆதரவாக இராமநாடு படையை அனுப்பி ஒரு சகோதர யுத்தத்தை நடத்தினார். அந்த போர் ஆனந்தூர் எனும் இடத்தில் நடந்தது. இப்போரில் மருதுபாண்டியருக்கு ஆதரவாக
" சமத்தான் தைரியவான் நாச்சியப்பன் சேர்வை நானூறு தளமதுவும் " ( சிவ அம் பக் 172-174)
மல்லாக்கோட்டை நாச்சியப்பன் சேர்வை, தலைமையிலான நானூறு பேர் கொண்ட படையும் மருதுபாண்டியருக்கு ஆதரவாக ஆனந்தூர் போரில் களம் கண்டுள்ளனர்.
இவரது சமாதி ஏரியூர் கக்குளக்கண்மாய் கரையில் உள்ளது.
இவ்வாறு சிவகங்கை சமஸ்தானத்தின் ஆபத்துக்காலங்களில் தக்க சமயத்தில் படைதிரட்டி சிவகங்கை சமஸ்தானத்துக்கு காவல் அரண்களாக அம்பலம் நாச்சியப்பன் சேர்வை இருந்துள்ளார்.