வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

மாவீரர் கருவபாண்டியன் சேர்வை



திருமலை, சிவகங்கை மாவட்டம், பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட இப்பகுதியை, 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் ராஜேந்திர சோழதேவர் கைப்பற்றினார். அதன்பின், 12ம் நூற்றாண்டில் பாண்டியர் வம்சத்தில் வந்த ஜடாவர்ம குலசேகர தேவர், சோழ மன்னரை வென்று நாட்டை மீட்டார். சிவபக்தனான ஜடாவர்ம குலசேகர தேவர், தான் வெற்றி பெற்றமைக்கு நன்றிக் காணிக்கையாக, நாமனூரை மையமாக வைத்து வடக்கு வட்டம் தெற்குவட்டம் என பிரிக்கப்பட்டிருந்த வடக்கு வட்டத்தில் அடங்கிருந்த திருமலை கிராமம் மலையில் சிவனுக்கு கோயில் எழுப்பி,” மலைக்கொழுந்தீஸ்வரர்” என்று பெயர் சூட்டினான்.







மிகவும் தொன்மையான இக்கோயிலில் கி.பி.2ம் நூற்றாண்டுகளில் வழக்கில் இருந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன. 

முன்மண்டபத்தில் கம்பீரமாக திருமலை பகுதிக்கு திசைக் காவல் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட கள்ளர் குடியில் பிறந்த காவல் தெய்வம் மாவீரர் கருவபாண்டியர் சிலை உள்ளது.

கோவிலுக்குள் முதலில் நம்மை எதிர்கொள்வது மாவீரர் கருவபாண்டியன் சுவாமி  சிலைதான். இந்தக் கோயில் பாண்டியர் காலத்தது என்றாலும் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோயிலின் முன்பகுதியைக் கட்டி அதனைச் சீரமைத்தவர் தான் இந்த மாவீரர் கருவபாண்டியன். 


அவர் பயன்படுத்திய  ஏறக்குறைய 200 வருடம் பழமை கொண்ட அந்த வாளை இணைத்தே சிலையோடு வைத்திருக்கின்றனர். அந்த வாளை கையில் கொடுத்து அதனைத் தூக்கிப் பார்க்கச் சொல்லி சந்தோஷித்தார் ஒரு முதியவர். அவர் இந்த மாவீரர் கருவபாண்டியன் சுவாமி பரம்பரையைச் சேர்ந்தவர். முதியவர். வயது 80க்கும் மேல் ஆனால் சுறுசுறுப்பான நடை. வேகமான பேச்சு, தெளிவான குரல். வயதை மறைத்து நின்றது அவரது சுறுசுறுப்பு.

யார் இந்த மாவீரன் கருவபாண்டியன் சேர்வை :

திருமலை அருள்மிகு பாகம்பிரியாள் சமேத மலைகொழுந்தீஸ்வர்ரின் அருளால் சேதுநாட்டிற்கு அனுப்பபட்ட மயில்ராயன்கோட்டை மாவீரன் கருவபாண்டியன் சேர்வை.

இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கருவபாண்டியை மகனாக பாவித்தார். பாசத்தங்கை அகிலாண்டேஸ்வரியை தன் மார்பிலும், தோலிலும் போட்டு வளர்த்தவன் கருவபாண்டி.

சிறுவயதில் குதிரையின் பின்னே ஓடிவந்து சேதுநாட்டை அடைந்தவர் குதிரை மீது அவ்வளவு ஆர்வம்.

வளறி எரிவதில் வல்லவர், வாள் வீச்சில் இவரை மிஞ்ச எவருமில்லை, கருவபாண்டி போருக்கு செல்லும்முன் தன் வாளை உருவி வடக்கு நோக்கி வணங்குவார்.

சேதுபதி மன்னர் இதைப்பற்றி கேட்டபொழுது, என் நாடு வடதிசையில் உள்ளது அங்குதான் என் குலதெய்வம் திருமலை ஈசன் உள்ளான். என் நாட்டையும், குலதெய்வத்தையும் வணங்கி தான் எந்தக்காரியத்தையும் வெற்றிகரமாக செய்கிறேன் என்றார் கருவபாண்டிய சேர்வை.

தங்கையை கட்டிக்கொடுத்த சிவகங்கை ஊருக்கு படைத்தளபதியாக அனுப்பி வைத்தார் சேதுபதி மன்னர். 

மல்லாக்கோட்டை நாடு வடக்கு வட்டத்தில் உள்ள திருமலை பகுதிக்கு மருதுபாண்டியர்களால் திசைக்காவலராக நியமிக்கப்பட்டிருந்தவர் கருவாப்பாண்டியன் சேர்வை.

இவர் கள்ளராயினும் இவர் திருமணம் செய்திருந்தது, கோவானுரில் வாழ்ந்த அகமுடையார் குல பெண்.

கிபி 1780 ல் நடைபெற்ற சிவகங்கை சீமை மீட்பு போரில் மருது பாண்டியரின் வீரமிக்க தளபதியாக பணியாற்றினார்.

கருவாப்பாண்டியனின் வீரதீரத்தை கண்டு வியந்த மருதுபாண்டியர்கள்" உனக்கு ஏதேனும் வேண்டுவது உண்டா? என கேட்ட போது , என் மரணத்திற்கு பிறகும் எனது நினைவு என்றும் இப்பகுதியில் நிலைத்து நிற்க வேண்டும் என்றாராம்.


கருவாப்பாண்டியனின் விருப்பப்படியே, மல்லாக்கோட்டை நாட்டில் உள்ள, திருமலை மலைகொழுந்தீசுவரர் கோயிலில் இவரது சிலையை மருதுபாண்டியர்கள் நிறுவினர்.

" பெருமை மிகத்தவறாப் பெரும்மாலைய நாடும் ராசவள நாடும் நல்லசிறு பூங்குடியும் மாசில்லாக் கள்ளர் மல்லாக்கோட்டை நாட்டவரும்" என மருதுபாண்டியருக்கு படை உதவி அளித்த கள்ளர் நாடுகளில் மல்லாக்கோட்டை நாட்டவரையும், சிவகங்கை சரித்திர கும்மி(18 ஆம் நூற்றாண்டு ஓலைச்சுவடிகள்) பாடுகிறது.

அகமுடையார் பெண்ணை திருமணம் செய்ததால் அந்த நாட்டு மக்கள் இவர்களை ஒதுக்கியே வைத்திருந்தனர். இதனால் மணமுடைந்த கருவபாண்டி நாட்டைவிட்டே கிளம்பி புதுக்கோட்டை மன்னர் கள்ளர்குல தொண்டைமானிடம் சென்றார்.

கருவபாண்டிக்கு உரிய மரியாதை அளித்து அவர்தம் குடும்பத்தினர் தங்க சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார் தொண்டைமான். கருவபாண்டியனின் வீரத்தை நன்கு அறிந்தவர் தொண்டைமான்.
தான் கற்ற அனைத்து கலைகளையும் தன்னுடைய ஐந்து மகன்களுக்கும் கற்றுக்கொடுத்து நிம்மதியாக வாழ்ந்து வந்தார் கருவபாண்டி சேர்வை.

சேது நாட்டில் இருந்து கருவ பாண்டி வந்ததால் சேதுநகர் என்று இன்றும் அந்த ஊரின் பெயர் உள்ளது.


திருமலை கோயிலில் இருந்த பழமை வாய்ந்த மகிஷாசுரமர்த்தினி வடிவத்தை பார்த்தேன். நேர்த்தியான பெரிய அளவிலான சிற்பம் அது.

நன்றி: மருத்துவர் சுபாஷினி
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. பரத் ராமகிருஷ்ணன் கூழாக்கியார்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்