சேந்தமங்கலத்தில் நிஜானந்த சரஸ்வதி’ என்னும் துறவியார் இருந்தார். அவர் காசியில் வாழ்ந்துகொண் டிருந்தவர். பூரீமத் சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் பூப் பிரதட்சிணம் செய்து வந்த போது காசிக்கும் சென்றார்கள். அப்போது அவரைத் தரிசித்து உபதேசம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு நிஜானந்தருக்குக் கிடைத்தது.
தம் குருநாதர் சஞ்சரித்துக்கொண்டிருந்த சேந்த மங்கலத்திற்கே அவரும் வந்துவிட்டார். அவரை எல்லோரும் காசி சுவாமிகள் என்றே அழைப்பார்கள்: அம்பிகையை உபாசனை செய்து சுவாமிகளின் திருவருளைப் பெற்றவர்.
சிவ விஷ்ணு, பிரம்ம சொருபியாகிய தத்தாத்ரேயர் அவதுரத பரம்பரைக்கே ஆதி குரு. தத்தாத்ரேயருக்கு - இவருடைய குருநாதர் சேந்தமங்கலத்தில் தாம் தங்கி யிருந்த சிறு குன்றில் கோவில் எடுத்தார். அதுமுதல் தான் அந்தக் குன்றுக்கு தத்தகிரி என்று பெயர் வந்தது.
அந்தத் தத்தாத்ரேயர் கோவில் திருப்பணிக்குக் காசி சுவாமிகள் பல இடங்களுக்கும் சென்று உபந்நியாசம் செய்து பொருள் தொகுத்துக் கொடுத்தார். பாஷ்யங்கள் எல்லாம் படித்தவர், வடமொழியிலே மட்டுமின்றித் தமிழிலும் சிறந்த பயிற்சி உள்ளவர் அருமையாகச் செய்யுள் இயற்றுபவர்; அவதூத வெண்பா மாலை: என்னும் பிரபந்தம் ஒன்றை அவரே தம் குருநாதரைப் பற்றி இயற்றியுள்ளார்.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், என்னுடன் காசி சுவாமிகள் என்ற நிஜானந்த பிரம்மேந்தி சரஸ்வதி சுவாமி அளவளாவி உரையாடிக் கொண்டிருந்தார். அவர் பிறப்பால் கள்ளர் என்றும் , வடமொழியில் புலமை பெற்றவர், உயர்ந்த பண்பாளர் என்றும் கூறிகிறார்.
மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் காசி சுவாமிகள் பற்றி கூறுவது :
நான் தமிழ்நூல்கள் பலவற்றைக் கற்றதில்லை. பள்ளிக்கூடத்தில் பாடமாக இருந்த சில கம்பராமாயணச் செய்யுட்களையும் பிறவற் றையும் கூர்ந்து படித்திருந்தேன். அவற்றைப் பற்றிப் பேசுவேன். தமிழார்வம் மிகுதியாக இருந்தது. நான் அப்போது வெண்பா முதலிய செய்யுட்களை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தேன். என்னிடம் காசி சுவாமிகள் மிக்க அன்பு கொண்டிருந்தார். அவருக்கு ஆசிரியப் பெருமானே நன்ருகத் தெரியும். தம்மிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பிள்ளை சிதம்பரம் சென்று ஆசிரியரிடம் பாடம் கேட்டு முன்னுக்கு வந்த செய்தியைச் சொன்னர். நீங்களும் அவரிடம் சென்ருல் அவர்கள் உங்களை அன்புடன் ஏற்றுக் கொள்வார்கள். உங்களுடைய தமிழ் அறிவும் பெருகும்' என்று என்னிடம் சொன்னர். அவர் சொன்ன கருத்து என் உள்ளத்தில் ஊன்றி முளைத்து வளர்ந்தது. முருகப்பெருமான் திருவருள் இருந்தால் ஆசிரியப் பெருமானிடம் செல்லலாம் என்ற அவா எனக்கு உண்டாயிற்று.
சேந்தமங்கலம் மிட்டாதார் ஐராவத உடையார் என்பால் மிகவும் அன்பு உடையவர். அவர் பெரும்பாலும் என்னுடன் இருந்து என்னுடைய நன்மையைக் குறித்தே பேசுவார். நான் நன்முகச் சொற்பொழிவு ஆற்றுவதையும், செய்யுள் இயற்றுவதையும் கண்டு மிகவும் வியப்பு அடைவார். நான் மேலும் பல தமிழ் நூல்களைக் கற்றுப் பெரும் புலவராக வரவேண்டுமென்ற ஆசை அவருக்கு உண்டாயிற்று. என்பால் தாயன்பு உடையவராகிய அவர், காசி சுவாமிகள் நான் ஆசிரியர் அவர்களிடம் போகலாம் என்று சொன்னவுடன் அப்படியே செய்வதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார்.
மதுரை - ராஜபாளையம் சாலையில் 40.கீ,மீ தூரத்தில் இருக்கும் டி,கல்லுப்பட்டியில் இறங்கி பேரையூரை அடைந்தால் அங்கு இவரது ஜீவசமாதி உள்ளது.