திருப்பரங்குன்றம் கலியத்தேவர் |
சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773இல் பராந்தக நெடுஞ்சடையன் (765-815) என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. கள்ளர்கள் பெரும்பான்மையினர் வாழும் பகுதி.
திருப்பரங்குன்றம் கோயில் கணக்கு :
திருப்பரங்குன்றம் கலியத்தேவர் அவர்கள், திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பாக எழுதி வைத்திருந்த சில கைப்பிரதிகள் கிடைத்தன.
1) திருப்பரங்குன்றம் தோன்றிய வரலாறு,
2) கோயில் திருவிழா மானியங்கள்,,
3) மதுரையை ஆண்ட மன்னர்கள்,
4) திருப்பரங்குன்றம் கோயில் கணக்குகள்
5) கணக்குகளைத் தொடர்ந்து நாயக்க மன்னருடன் எங்களது முன்னோர்களின் பிணக்குகள்,
6) அதைத் தொடர்ந்து சகாப்தம் 1635இல் திருப்பரங்குன்றம் கோயிலானது மதுரைக் கோயிலுடன் சேர்க்கப்பட்ட குறிப்புகளையும் திருப்பரங்குன்றம் கலியத்தேவர் எழுதி வைத்துள்ளார்.
3) மதுரையை ஆண்ட மன்னர்கள்,
4) திருப்பரங்குன்றம் கோயில் கணக்குகள்
5) கணக்குகளைத் தொடர்ந்து நாயக்க மன்னருடன் எங்களது முன்னோர்களின் பிணக்குகள்,
6) அதைத் தொடர்ந்து சகாப்தம் 1635இல் திருப்பரங்குன்றம் கோயிலானது மதுரைக் கோயிலுடன் சேர்க்கப்பட்ட குறிப்புகளையும் திருப்பரங்குன்றம் கலியத்தேவர் எழுதி வைத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு வீரபாகுத் தேவரை வழிவழியாக தங்கள் குலதெய்வமாக வணங்கி வரும் வம்சாவழியை சேர்ந்த கலியத்தேவர். இவர் எழுதி வைத்ததில், 8 பக்கங்களே கிடைத்தன. இவற்றைப் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தாலும், மொத்தத்தில், எழுதிவைத்தது மொத்தமாகக் கிடைக்கவில்லையே என்ற வருத்தமே மிகுகிறது.
திருப்பரங்குன்றம் கலியத்தேவர். இவர் எழுதி வைத்திருந்த திருப்பரங்குன்றம் கோயில் கணக்குகள் சில...., அவரது கைப்பிரதிகளில் இருந்தபடி....
கீழே தட்டச்சு செய்யப்பெற்றுள்ளன.
பக்கம் 6
வேறே கடுதாசியிலிருந்தது.
யாதாஸ்த்து உசூர் ரிக்கார்டிலிருக்கிற 1246 பசலியின் தேவஸ்தானம் சத்திரம் அர்ச்சனை கட்டளை கைபீது வேறு புஸ்தகத்திலிருந்து எடுத்து எழுதியது ----- திருப்பரங்குன்றம் கோவில் சுப்பிரமணிய சுவாமி -------- யில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ----தற்கம் வந்ததில் தேவாதிகள் மகாமேரு பருவதத்தினுடைய சிகரம் ஆதிசேஷனுடைய படத்தினால் மூடிக்
கொள்ளும்படியாயும் வாயுபகவானுக்கு சொல்பம் ஒரு சிகரத்தின் பேரிலிருக்கிற படம் வைத்து எடுக்கும்படியாயும் நிஷ்கரித்த்தில் வாயுபகவான் அஷ்டபலத்தினால் கிராயஞ் செய்ததில் ஒரு சிகரம் பிட்டு பூலோகத்தில் விஸ்தாரகமாகக் கொண்டுவந்து போட்
டார் அதில் --- பங்கு சத்திய பருவத சத்திய கிரிஈஸ்பரர் ஒரு பங்கு அநேக தீர்த்தமும் உற்பத்தியாச்சுது. இப்படி யிருக்கும் போது சூரபத்மாசூரனென்று ஒரு ராக்ஷஸன் பிறபலமாய் தேவாதிகளுக்கு ரெம்ப இம்சை செய்யப் பட்டான். அப்போது தேவாதிகள் பரமேஸ்பரனிடத்தில் போய் விசனப் பட்டார்கள். அப்போது பரமேஸ்பரன் தன்னுடைய குமாரன் சுப்பிரமணிய சுவாமிக்கு போய் சூரபத்மா வென்கிற ராக்ஷஸனுக்கு வதம் செய்து தேவாதிகளுடைய கஷ்ட பரிகாரம் செய்கிறது யென்றும் அனுப்பி விச்சார். அப்போது சுப்பிரமணிய சுவாமி திருப்பரங்குன்றம் என்கிற சத்தியகிரிக்கு வந்து சத்தியகிரீஸ்ரருடைய தருஷணம் (தெரிசனம்) செய்து கொண்டு வீரமஹேந்திர புரத்திலிருந்து சூரபத்மா வென்கிற ராக்ஷஸனுக்கு சம்மாரம் செய்து சத்தியகிரி பருவதத்திற்கு வந்து பார்க்கும்போது மேற்படி பருவதமும் தீர்த்தமும் ரெம்ப ரமனியமாய் இருந்ததினாலே இவிடத்தில் தானே வாசஞ் செய்யலாமென்று இருந்து விட்டார். அப்பால் தேவாதிகள் சகலத்திராளும் ரெம்ப சந்தோஷப்பட்டு தேவேந்திரனுடைய மகள் தேவநாயகியை கல்யாணம் செய்து வைத்தார்கள். தேவதா நிர்மாணஸதலம்
பக்கம் 7
அபலர்ல ---- சக்கரவர்த்தி ராஜா வானவர் காடு வெட்டி ஆலயம் கட்டினார். சிபி சக்கரவர்த்தி --- நவக்கிரக தோஷம் விமோசினார்த்தமாயி --- க்கு வந்து கங்கா தீர்த்தத்திலிருந்து சிவதீக்ஷிதானை வரவழைத்து அக்கிரகரா பிரதிஷ்டை செய்து பூஜைபடித் தரத்துக்கும் கைங்கரிய வகையறாவுக்கும் பிராமணாளுக்கு சதுர்வேதமங்கலம் என்கிற கிராமம் தானம் செ
ய்து அக்கிரகாரம் கட்டி சுவாமிக்கு பூஜை படித்தரம் நடப்பிவித்து வந்தார் (நடத்தி வந்தார்) அப்பால் சுந்தரபாண்டியன் சிவபிரதிஷ்டை செய்து பூஜை படித்திரத்துக்கு அச்சங்குளம் தருமத்துப்பட்டி உச்சப்பட்டி. 3 கிராமமும் விட்டு பூஜை படித்தரம் நடப்பிவித்து வந்தார். பராக்கிரம பாண்டியன் நாகையில் படித்தரத்துக்கு திருப்பரங்குன்றம் மேலக்குயில்குடி ரெண்டு கிராமும் ஸ்தானீகம் அர்ச்சகாளுக்கு நெடுங்குளம் குருக்கெட்டான் நாயக்கன் பட்டி முயிலாம்பட்டி கிராமம். 4 ஆக முன் உள்பட (10) கிராமம்விட்டு மேற்படி கிராமத்தின் ஆமிசத்தினால் பூசை படித்தரம் நடப்பிவித்து வந்தார்கள். அப்பால் ஆதிவாரணம் ராஜாவானவர் படித்திரத்துக்கு விட்டது கரிசப்பட்டி மேட்டுப்பட்டி (2) மேற்படியார் சமுசாரம் சோலையம்மாள் விட்டது ராயபாளையம் மலையம்மாவிட்ட்டது வேப்பங்குளம் ஆக முன்னுள்பட (14) கிராமத்தின் துகையினாலும் அப்பால் தணநாயக்கன் விட்டது வடிவேல்கரை பெரியவீரப்ப நாயக்கன் விட்டது கிருஷ்ணாபுரம் வெல்லப்பாரப்பாடி (3) அப்பால் விசுவநாத நாயக்கர் விட்டது சூரக்குடி அபிஷேக நல்லூர் அப்பக்காவி.வீரமொடையான் ஆக்கிறாமம் (4) ஆக முன்உள்பட (22) கிராமம் ஜாரியாயிருந்து மேற்படி கிராமத்தினை துகையினாலே படித்தரம் பூஜைவகையறா நடந்து கொண்டிருந்தது.
அப்பால் திருமலைநாயக்கர் ----சாலியவாகன சகாப்தம் (1545---ருத்ரோக்காரி வருஷத்தில் படித்தரத்துக்கு விட்டது ---யுதப் பேரி.1.வீரமுடையான் 1.வேல்லங்குளம் 1.ஆவியூர்.1.ஆக (4) கிராமும் ஸ்தானீகான் வகையறா சிப்பந்திகளுக்கு நிலமானிபமும் சர்வமானியமாக விட்டுப் படித்தரமவகையறா கிராமத்தின் அய்வேசில் எங்களுடைய பெரியோர்கள் பூஜைவகையறா சிலவு நடத்தி
பக்கம் 8
கணக்கு கருவேலத்தில் இருக்குது. வைத்திருக்கிறதாய் முன்னிருந்த யெங்களுடைய பெரி யோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்றோம் அப்பால் சிவல் மகாராஜாவிட்டது சிவகானப்பட்டிக சேதுப்பிள்ளை அய்யன்விட்டது செம்பக்குடி.1
வெட்டுமாவிலி ராஜா விட்டது. வடபளிஞ்சி. 1. ரெகுநாத சேதுபதி விட்டது தாமரைக்குகை. 1. ஆகமுன் உள்பட கிராமம் (30) அப்பால் குமாருசாமி முதலிகட்னைக்கு விட்டது. உலகாணி சந்நியாசியேந்தல் மூடத்துர் கிராம்ம் (3) முத்தம்பலமுதலி கட்டளைக்கு விட்டது. அபிஷேக நல்லூர். கொங்கர் புளியங்குளம் கிராமம். 2 பல்லவராயகட்டளை விட்டது கழுகெடை..1. சாலியவாகன சகாப்தம் 1610 அக்ஷய வருஷத்தில் திருவேங்கிடநாத நாயக்கர் பூஜைபடித்திரத்துக்கு விட்டது. வேடர்புளியங்குளம்.1. ஆகமுன் விட்டது உள்பட பூஜை படித்தரம் கிராம்ம் 25 கட்டளைக்கு விட்டது கிராமம் 5 நிர்வாக அர்ச்சனாபாகம் கிராமம் 4. சில்லரைத்தொள்ளாழிக்கு கிராமம் 3 ஆகக்கிராமம் (37) ம் விட்டு பூஜை படித்தரம் ஐவேசினால் விஜய ரெங்க சொக்கப்பநாயக்கர் அதிகாரம் வரை எங்களுடைய முன்னோர்கள் மானியமாகி பூஜைவகையறா---நடந்து அப்போதிருந்த அதிகாரிகள் ----கணக்கு ----யெங்க ளுடைய பெரியோர்கள் -----யெங்களுக்குத் தெரியும் சாலியவாகன சகாப்தம் 1621 பிரமாதி
வருஷத்தில் விஜய ரெங்க சொக்கப்ப நாயக்கன் அதிகாரத்தில் கோயில்பூஜை மிச்சம் வைகயறா சர்க்காரில் தாக்கல் செய்ய உத்தரவு கொடுத்தார். அதற்கு யெங்களுடைய பெரியோர்கள் சர்க்காரில் தாக்கல் செய்யக் கூடாதென்று விவகாரஞ் செய்து கேட்டதில் மாமூல்படி படித்திரதில் சேர்த்து நடப்பிவிக்கும்படி உத்தரவு கொத்து திருவிளையாடல் கிருமதத்துக்கு பூஜை மிச்சம் தேவையில்லை யென்றுயிரண்ணியோதகரதாரா பூர்வகம தானம் செய்துசாலிய வாகன சகாப்தம் 1635 விஜயவருஷத்தில் ஆடி மாஸத்தில் மீனாச்சி கோவிலுடன்(பக்கம் 8 முடிவுபெற்றது.)
பக்கம் 9 கிடைக்கப் பெறவில்லை....
அன்பன் காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் தேவர்