ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

பிறமலைக் கள்ளர்களின் சொல்லாடல்





பிறமலைக் கள்ளர்களின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க ஈர்க்க கூடிய விசயம் என்னவென்றால், அது அவர்கள் பேசும் தமிழ்.

அவர்கள் பேசும் தமிழில் தொழில், பாசம், நேசம், அன்பு, அதிகாரம், உணர்ச்சி, வேகம் என அனைத்தும் ஒன்றி போகும்.


1. ஓம்பாட்டுக்கு பேசிட்டே இருக்க 
( இடைவிடாமல் தன் விருப்பம் போல் பாட்டு பாடுவது போல பேசுவது)

2. ஆட்டும்பா 
( ஆகட்டும் என்று ஆணையிடும் சொல்)

3. அவனை செமிச்சு விடப்போறாங்கப்பா 
(அவனை கொன்று விடபோகிறார்கள்)

4. என்னேய்ய்ய்
(சலிப்புடன் அண்ணன் என்று இழுப்பது

5. ஓந்த் தாட்டியத்தை யார்ட்ட காட்டுற
(உன் திமிர யாரு கிட்ட காட்டுகிறாய்)








பிரமலைகள்ளர் சொல்லாடல்:-

1990-க்கு முன் தனது மாமன் மகளை செகுலி, குந்தானி, மூளி என்ற பட்ட பெயர் வைத்து செல்லமாக அழைப்பார்கள்.

செகுலி:- கன்னம் உப்பியவள் எனப் பொருள்.

குந்தாணி:- குண்டாக இருப்பவள் என்று பொருள்.

மூளி:- முன்பு கள்ளர் இனப் பெண்கள் காது வளர்த்து "தண்டட்டி" அணிவார்கள்.

1960-க்கு பின் பெண்கள் காது வளர்க்காமல் "தோடு" ஆணிவார்கள்.

காது வளர்க்காத பெண்ணை "மூளி அதாவது மூடிய காது உடையவள்" என்று கிண்டல் செய்வார்கள்.

பருத்திவீரன் படத்தில் கூட... "காது அறுந்த மூளி உன்னை கட்டுவண்டி தாலி" என பாடல் வரும்.


கிபி1977ல் ஒரு இஸ்லாமிய சகோதரர் பிறமலைக்கள்ளர்கள் பயன்படுத்தும் சொல்லாடல்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்.




பிறமலைக்கள்ளர்கள் நேரத்திற்காக பயன்படுத்தும் தமிழ்ச் சொற்கள்.

1. தலைக்கோழி - இரவு 12:00PM
2. சாமக்கோழி. - இரவு 12:00 மணிக்கு மேல்
3. நடுக்கோழி. - இரவு 3:00 முதல் 4:00
4. கடைசி கோழி- அதிகாலை 4:00 முதல் 5:00

கோழி கூவுதலின் அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தும் சொற்கள். இந்த நான்கு நேரங்களின் பயன்பாடு இரவு நேரங்களை கணிப்பதற்காகவே உபயோகிக்கப்படுகிறது.

தலை, சாமம், நடு, கடைசி என நான்கும் பெயரடைகளாகும். கூவுவது ஒரே கோழியாக இருந்தாலும் நேரத்திற்கு ஏற்றால் போல் நான்கையும் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் வைத்து வெவ்வேறு கோழிகளாக கருதுகின்றனர்.

பிறமலைக்கள்ளர்கள் இயல்பாகவே கோழி கூவும் உணர்வை வைத்தே அது சாமக்கோழியா அல்லது தலைக்கோழியா என்பதை கணித்து விடுவார்கள்.

சந்தேகம் வருமாயின் அதே நேரத்தில் வானில் இருக்கும் நட்சத்திரங்கள் அடிப்படையில் கூவுகின்ற கோழியை எந்த கோழி என்று சரியாக கணித்துவிடுவார்கள்.

இந்த நேரத்தை அடிப்படையாக கொண்டே விவசாயத்திற்கு செல்வோம் என ஆய்வில் கூறியுள்ளார்கள்.

இதேபோல் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு நேரத்திற்கு பயன்படுத்தியது எனக்கு வியப்பாகவே உள்ளது.

1. நெட்டி (அ) ரெட்டி வெள்ளி - நள்ளிரவு 1:00Am
2. தார்க்காப்பு வெள்ளி - நள்ளிரவு 2:00Am
3. நட்சத்திர வெள்ளி - அதிகாலை 4:00Am
4. விடிவெள்ளி - காலை 5:00Am

இரவுப் பொழுது வானத்தில் தோன்றும் நட்சத்திரங்கள் ஒவ்வொரு நேரத்திற்கு ஏற்றால் போல் தோற்றம் பெரும் அல்லது அதிக ஒளி பெரும். அதனை வைத்து தான் பிறமலைக்கள்ளர்கள் நட்சத்திரத்தை வைத்து நேரத்தை துல்லியமாக கணித்துள்ளார்கள்.

சரியாக 1:00Am நெட்டி (அ) ரெட்டி வெள்ளி வானத்தில் தோன்றியதை வைத்தும் சாமக்கோழி கூவுவதை வைத்தும் சரியாக நேரத்தை கணித்துள்ளார்கள்.

இந்த ரெட்டி வெள்ளிக்கும் ஒரு கதை சொல்கிறார்கள். ஒரு ரெட்டியார் சமூகத்தவர் நெட்டி வெள்ளி தெரிவதை பார்த்து நட்சத்திர வெள்ளி(4மணி) என்று நினைத்து தொழிலுக்கு கிளம்புகிறார். ஆனால் அது நள்ளிரவு என்பதால் திருடர்களால் கொலை செய்யப்படுகிறார். அதனால் தான் அதனை ரெட்டி குடிகெடுத்த வெள்ளி அல்லது ரெட்டி வெள்ளி என குறிப்பிடுவதாக கூறியுள்ளார்கள்.

தார்க்காப்பு வெள்ளி 2:00AMக்கு நடுக்கோழி கூவுவதையும்

4:00Am நட்சத்திர வெள்ளி என்ற நட்சத்திரம் மிகுந்த பிரகாசத்துடன் வானில் தெரிவதை வைத்து கடைசி கோழி கூவுவதையும் கொண்டு மிகச்சரியாக கணிக்கின்றனர்.

Natural astrology 

இந்த நேரக் கணக்கு நட்சத்திரத்தை பின் தொடருதல் இது அனைத்தும் விவசாயத்திற்காக உருவாக்கப்பட்டவாறு என்னால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால் 1:௦௦ மணிக்கு யாரும் விவசாயம் செய்யப் போவதில்லை.

பின்பு எதற்காக.....?  காவலுக்காக ஏற்படுத்தப்பட்ட நேரக் கணக்கீடாகவே அறிகிறேன்.


ஒவ்வொரு கள்ளன் & கள்ளச்சிக்கு இரண்டு பெயர்கள் இருக்கும்.

ஒன்று தந்தையின் குல சாமி பெயர் வைப்பார்கள். இரண்டாவது பெயர் பொதுவாக கூப்பிடும் பெயர் வைப்பார்.

உதாரணமாக (சாமி பெயர்) கலியாணி. கூப்பிடும் பெயர் செந்தில் குமார். குழந்தைக்கு சாமி பெயர் பிறந்த 3.. வது நாள் அல்லது 5 அல்லது 7 என்று ஒற்றை படை எண் வரும் நாளில் வைப்பார்கள்.

ஆண் குழந்தைக்கு புலி பல் தாயத்து கட்டுவார்கள். தற்காலத்தில் புலி பல் கிடைக்காத காரணத்தால் பிளாஸ்டிக் புலி பல் தாயத்து கட்டுவார்கள்.


அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்