இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவரகள் தமது அரசாங்க நிர்வாகத்தைத் தமையனாராகிய இவரிடம் ஓப்புவித்துவிட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று விட்டமையால், இவர் 1922 அக்டோபரிலிருந்து தாமே அரசாட்சியை நடத்தி வருகின்றார். இவர் 1872 ஏப்பிரல் 17-ல் பிறந்தவர்.
காலஞ்சென்ற மகாராஜா இராமச்சந்திர தொண்டைமான் சாகிப் அவர்களின் மூத்த பேரர். இவர் 1898-ல் காரிய நிரவாக சபையில் ஒருவராக அமைந்தனர். 1908-ல் இங்கிலாந்து சென்று திரும்பினர். 1990-ல் திவான் பதவியை ஏற்றுக்கொண்டனர். 1922-ல் அரசாட்சியை ஒப்புக்கொண்ட பின் நாட்டிற்கு அநேக நன்மைகள் புரிவதாக வாக்களித்து அங்ஙனமே செய்து வருகின்றார்.
இவர் இது காறும் செய்திருக்கிற நன்மைகளில், நகர பரிபாலன சபையில் 8-ஆக இருந்த அங்கத்தினர் தொகையை 12-ஆக உயர்த்தியிருப்பதும், 60 அங்கத்தினர்கள் கொண்ட புதிய சட்ட நிருமாண சபையொன்று ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத் தக்கவைகளாம்.