திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் கள்ளர்களின் மாவலியார் மரபினர் வாழும் மாவலியார் தெரு உள்ளது. மாவலியார் மரபினர் தஞ்சையின் பலப்பகுதியில் செறிந்து வாழ்கின்றனர். தஞ்சை மாவட்ட விவசாய பிரிவுத் தலைவர் கணபதி மாவலியார், திருவையாறு தமிழிசை மன்றத் தலைவர் ம. வேலு மாவலியார் போன்ற மாவலியார் மார்பினார்கள் இன்று சிறப்புடன் விளங்குகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், திருவையாறு தமிழிசை மன்ற தலைவர், மனிதநேய மாண்பாளர்
M.வேலு மாவலியார்
வரலாறில் மாவலியார் விளக்கமாக அமைவது
மாவலான் : குதிரையேற்றத்தில் வல்லவன் , குதிரைப்பாகன், யானைப்பாகன்.
மாவலி மன்னன் : மாவலி என்னும் மன்னன் உலகினைத் தூக்கும் ஆண்பன்றி போன்ற வலிமை படைத்தவன்.
மாவலிபுரம் : மாமல்லபுரம், பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர்.
மாவலி வாணன் : மாவலி வாணர் என்னும் வாணர்குலத்து அரசர்கள். ஒரு காலத்தே தமிழ்நாட்டுச் சிற்றரசர்களாகச் சிறப்புற்று விளங்கினர், விசயநகர வேந்தர்கள் காலத்தில் இவர்களின் சிறப்பு, சில சமயங்களில் பாண்டியரைக் காட்டினும் கூடியிருந்ததும் உண்டு. புகழ்பெற்ற பாண்டியவரசை அழித்துப் 'பாண்டிய குலாந்தகன் என்ற விருதையும் சூடிக்கொண்டனர் "வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம் அரசரணா மாவலிவா னா! (211) இதன்பாற் குறிப்பிடப்படும் வாணன் 'திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்' என்பர்.
"வெட்டுமாவலி" என்று சில கல்வெட்டுகளும் உள்ளன.
மாவலி சக்கரவர்த்தி
மாவலி என்னும் மன்னன் உலகினைத் தூக்கும் ஆண்பன்றி போன்ற வலிமை படைத்தவன். இவன் வானவர் வேள்வி செய்ய விடாமல் தடுத்தான்.
அதனால் தேவர்கள் திருமாலை வணங்கிக் காக்குமாறு வேண்டிக்கொண்டனர். திருமால் ஆலம் விதை போலக் குறள் வடிவம் கொண்டவராக, காசிபன் அதிதி ஆகியோரிக்கு மகனாகப் பிறந்தார். அந்தணன் கோலத்தில் மாவலியிடம் வந்தார்.
வாமணன் வந்தது கண்டு மாவலி எதிர் சென்று வரவேற்றான். “உன்னைக் காட்டிலும் சிறந்த அந்தணர் இல்லை; என்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லை!” என்று வாமணனிடம் கூறினான். அதனைக் கேட்ட வாமணன் “நீண்ட கையை உடையவனே! உன்னிடம் ஏதாவது ஒன்றை விரும்பி வந்தவர் பெறாமல் திரும்பியது இல்லை” என்றான்.
மகிழ்ச்சி கொண்ட மாவலி “என்ன செய்யவேண்டும்” என வினவினான். “மூன்று அடி மண் இருக்குமானால் தருக” என்றான் வாமணன். உடனே வாமணன் “தந்தேன்” என்றான்