கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ் அறிஞர்களால் 1911 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாகவே, மாத இதழ் ஒன்றின் தேவை உணரப்பட்டது. இதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. அரசாங்கத்தின் அனுமதி பெறுவதற்கும் நிதி திரட்டுவதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1919 ஆம் ஆண்டில் இதழுக்குத் தமிழ்ப் பொழில் என்ற பெயரும் இடப்பட்டது. ஆனாலும், நிதித் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1913ல் சங்கத்தின் முதல் தலைவர் உமாமகேசுவரனாரினால் தொடங்கப்பட்ட இம்முயற்சி தடைப்பட்டு வந்தது. 1925 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தமிழ்ப் பொழிலின் முதல் இதழ் வெளியானது. தமிழ்ப் பொழிலின் முதல் ஆசிரியர் கவிஞர் அரங்கவெங்கடாசலம் பிள்ளை ஆவார்.
ர்