வியாழன், 19 செப்டம்பர், 2019

கண்ணக்காரர்கள் எனும் கள்ளர்கள் வணங்கும் கீழாத்தூர் நாடியம்மன்



"மகராஜன் கண்ணக்காரன் மதுக்கிளப்ப தாமுசங்க” என்ற கும்மி பாடல் கண்ணக்காரர்கள் எனும் கள்ளர்கள் பெருமையை உணர்த்தும்.




















நாடியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது. அந்தக் காலத்தில் ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய் அன்று காப்புக்கட்டுதல் நடைபெறும். அடுத்த செவ்வாய் பாலி எடுப்பு விழா நடைபெறும் அதற்கு அடுத்து வரும் திங்கள் கிழமை காலையில் பத்து மணிக்கு மழையூரிலிருந்து சின்னக்கருப்பர், பெரியகருப்பர், மின்னோடியப்பர், அரசமகன், சன்னாசி மற்றும் ஐயனார் குதிரை போன்ற சாமிகளின் உருவாரங்கள் செய்து எடுத்து வருவார்கள். இந்த உருவாரங்களை செய்ய காப்புக் கட்டியவுடன் பிடிமண் கொடுத்து செய்யச்சொல்லி விடுவார்கள்.

இதில் ஐயனாரும் குதிரையும் திங்கள் அன்றே நாடியம்மன் கோவில் கீழ்புறம் உள்ள ஐயனார் கோவிலில் வைத்து இரவு சாமி கும்பிடுவார்கள். பாக்கி உள்ள சாமி உருவாரங்கள் கோவிலின் கீழ்புறம் காட்டுக்குள் இருக்கும். இவை செவ்வாய் இரவு பத்து மணியைப் போல் எடுத்து வந்து கோவிலில் வைக்கப்படும். இந்த உருவாரங்களுக்கு கண் திறப்பதற்கு அந்த சிலை செய்த வேளாரே வருவார். அவருக்குத் தங்கத்தால் ஊசி, கோழி, பூஜைக்கான பொருட்கள் கொடுக்க வேண்டும். தங்க ஊசியால் கண்களில் கீறி சாமிக்கு உயிர் கொடுப்பார். பிறகு பூஜை முடித்து கோழி, பொருட்கள், ஊசி இவற்றையெல்லாம் எடுத்துக்கொள்வார். தங்க ஊசி செய்வது சிரமமென்றால் வெத்திலை காம்பு கொண்டும் சாமிக்கு கண் திறப்பார்கள். இவ்வாறு செவ்வாய் இரவு சாமி கும்பிட்டு மறுநாள் புதன் மது எடுப்பு உற்சவம் நடைபெறும்.

பூ எடுத்தல் விழாவோ மண்டகப்படி விழாக்களோ அந்த காலத்தில் இல்லை. சரி, இந்த பூ எடுப்பு விழாவும் மற்ற விழாக்களும் எப்படி வந்தது என்று பார்ப்போம்....

பூ எடுத்தல் பல வருடங்களுக்கு முன்பு கோவிலின் எதிரே உள்ள சாலையில் ரெத்தினம்பிள்ளை என்பவர் பேருந்து டிரைவராக வேலைபார்த்தார். ஒரு நாள் பேருந்தில் ஏதோ கோளாறுகாரணமாக விபத்து ஏற்பட நேரிட்டது. அப்பொழுது ‘ அம்மா நாடியம்மா நீ தான் காப்பத்தணும்” .. என வேண்டினார். அந்த நேரத்தில் பேருந்து ஒரு மரத்தின் ஒரமாக லேசாக மோதி நின்றுவிட்டது. விபத்திலிருந்து நாடியம்பாள் காப்பாற்றியதாக நினைத்து அந்த டிரைவர் வடகாட்டிலிருந்து பூ எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்தார். பின் மூன்று வருடம் கழித்து கோவில்பட்டியிலிருந்து பூ எடுத்து வருடா வருடம் விழா செய்தார். அதன் பிறகு தான் கீழாத்தூர், கட்ராம்பட்டி, மேலாத்தூர், சிக்கப்பட்டி, ஊத்தப்பட்டி, கல்லம்பட்டி, சமத்துவபுரம் என மற்ற கிராமத்தினரும் பூ எடுப்பு விழாவை உற்சாகமாகக் கொண்டாட ஆரம்பித்தனர். இவர் முதன்முதலில் வடகாட்டிலிருந்து பூ எடுத்து வந்து விழா செய்ததால், அப்பகுதிமக்களும் அவரது தொடர்ச்சியாக அங்கிருந்து பூ எடுத்து வருகின்றனர்.

இந்த பூ எடுப்பு விழாவின்போது ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளில் (ரதம்) பல வகையான பூக்களை எடுத்து வருவார்கள். இப்படி எடுத்துவரும்போது கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற ஆட்டம் பாட்டத்தோடு கோவிலுக்கு வந்து சேர்வார்கள். பிறகு கொண்டுவரப்பட்ட பூக்களை அம்மனுக்கு காணிக்கையாக்குவார்கள்.


வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்