திங்கள், 23 செப்டம்பர், 2019

மாமனிதர் முத்துத் தேவர்



கைரேகைச்சட்டம் சட்டத்திற்கு எதிராக பெருங்காம நல்லூர் கலவரம் நடந்தபோது பக்கத்து கிராமமான போத்தம்பட்டியில் வசித்தவர் என் தந்தையார் பி. முத்துதேவர். அப்போது அவர் எட்டுவயது சிறுவனாக இருந்தார். கலவரம் பற்றி செய்தி பக்கத்து கிராமங்களில் பரவியது. கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கலவர பூமியைப் பார்த்து கதறி அழுதனர். அந்த சம்பவம் முத்துதேவர் மனதில் ஆழமாக பதிந்தது. இறந்தவர்கள் அனைவரும் பக்கத்து கிராம மக்கனின் உற்றாரும் உறவினர்களும் ஆவர்.

இந்நிலையில் முத்துதேவர் அவர்கள் உசிலம்பட்டி அரசுப் பள்ளியில் பயின்றபின்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜம்புநாத ஐயரின் பரிந்துரையால் சென்னை ஒய் எம். சி.ஏ வில் உடற்கல்வி பயிற்சி பெற்றார் ஒய் எம். சி.ஏ வின் முதல்வர் மிஸ்டர் பக் அவர்களும் அவரது துணைவியாரும் முத்து தேவரின் குற்ற பரம்பரைப் பின்னணி அறிந்து அவர்பால் அன்பை சொரிந்தனர். 

ஜமிந்தார்கள் மற்றும் செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் முத்து தேவருக்கு அரசின் சிறப்பு அனுமதி பெற்று உபகாரச் சம்பளம் பெற்று தந்தனர். பின்னர் 1930 - 40 களில் ராஜபாளையத்தில் சேவுக பாண்டியர் உயர் நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பன்னிரண்டு ஆண்டுகள்பணி ஆற்றினார்.

அப்பொழுது சேத்தூர் ஜமீன் மற்றும் இராமநாதபுரம் ராஜா ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் மூலம் கரந்தை தமிழ்ச்சங்க முதல்வர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் அறிமுகம் கிடைத்தது. அவர் எழுதிய கள்ளர் சரித்திரம் என்ற நூலை படித்தார். வேங்ககசாமி நாட்டாருடன் பேசிய முத்து தேவர் கள்ளர்களை பற்றி மட்டும் எழுதிய நீங்கள் மறவர் அகமுடையார் அனைவரின் சரித்திரத்தையும் சேர்த்து எழுதலாமே என்று கேட்டார். அதற்கு நாட்டார் அவர்கள் அப்பணியை நீங்களே செய்யாலாம் எனக் கூறியுள்ளார். அது தனக்கு விடுக்கப்பட்ட கட்டளையாகக் கருதி முக்குலத்தோர் சரித்திரம் எழுதவேண்டும் என்ற கரு முத்துத்தேவர் மனதில் உருவானது.


சேத்தூர் ஜாமீன்,ராமநாதபுரம் ராஜா ஆகியோர் தம்மிடம் இருந்த தகவல்களைக் கொடுத்து உதவினர். மேலும் சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களும் ஆவணங்கள் கொடுத்து முத்து தேவருக்கு உதவுமாறு நோட்டிஸ் அடித்து வெளியிட்டனர். மேலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பத்தில் அரசு ஆவனான்களைப் படிக்கவும் குறிபெடுக்கவும் அனுமதி பெற்றுத் தந்தனர். 1940 களில் அரசு ஆவணக் காப்பகத்தில் நுழைய முடியாது. மாவட்ட காவல்துறை அதிகாரி மற்றும் கலெக்டர் அனுமதி பெற வேண்டும்.

ஆவணக் காப்பகத்தில் அரிய நூல்களும் அரசு ஆவணங்களும் படித்து வேண்டிய குறிப்புகள சேகரித்தார். அதில் குறிப்பாக பிரமலை கள்ளர் பற்றியும், குற்றபரம்பரை சட்டம், லவ்லக் அறிக்கை, பிரமலை கள்ளர்கமீது ரேகைச்சட்ட அமல், பெருங்காம நல்லூர் கலவரம், துப்பாகிச்சூட்டில் பலியானவர்கள் விவரம் ஆகியவைகளுடன், மதுரைக் கள்ளர் நாடுகள், தமிழ்நாட்டில் முஸ்லிம் படை எடுப்பு,நாயக்கர் ஆட்சி,சேதுபதிகள்,பூலித்தேவர், மற்றும் மருது சகோதரர்கள் எழுச்சி, வெள்ளையருடன் தன்னரசு நாட்டுக் கள்ளர்களின் மோதல், பாளையப்பட்டு யுத்தம், வெள்ளையத்தேவனது வீரப்போர் மற்றும் ஏராளமான தகவல்களுடன் சுமார் நாற்பது ஆண்டுகளாக தகவல்களை முத்துதேவர் சேகரித்து வைத்திருந்தார்.

ராஜபாளையத்தில் பணியில் இருந்தபோது 1940 களில் வேட்டைக்கு வந்த மதுரை வெள்ளைக்கார கலெக்டர் முத்துதேவரை சந்தித்து ஆசிரியர் பணியில் இருந்து விலகி தன்னுடன் வருமாறு அழைத்தார். முத்துதேவரும் அவ்வாறே செய்தார். Rural Recreation Officer என்ற பதவியை ஏற்படுத்தி கள்ளர் குல மக்கள் வாழும் பகுதியில் சீர்திருத்தங்களை மதுரை கலெக்டர் அமல் படுத்தினார். மதுரை தவிர தஞ்சை, திருச்சி ராமநாதபுரம் கலெக்டர்களும் தேவமார் வசிக்கும் பகுதியில் முத்து தேவரின் சேவையை பயன்படுத்திக் கொண்டனர். இரண்டாம் உலக போர் நடக்கும் காலத்தில் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் தேவர் சமூக இளைஞர் களை சேர்ப்பதற்கு வசதியாக recruting officer ஆக பணியாற்றினார். அதற்கென சன்னத் எனப்படும் பட்டயத்தை ஆங்கில அரசு வழங்கியது.


1947 சுதந்திரம் பெற்ற பின்னர் வெள்ளையர் வெளியேறினர். அவர்களின் சேவை பிரிவுகள் கலைக்கப் பட்டன. முத்துதேவர் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் பயிற்சி பெற்று கூட்டுறவுத்துறையில் அலுவராகப் பணிபுரிந்து 1967 ம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின் மதுரை அருகே கருமாத்தூர் என்னும் கிராமத்தில் தங்கி இருந்தார்.

அதன்பின் நாற்பது ஆண்டுகாலமாக சேகரித்து வைத்து இருந்த தகவல்களை தொகுத்து மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு எந்த தமது ஆராய்ச்சி நூலை வெளியிடும் பணியை துவங்கினார். நூலை வெளியிட நாட்டமங்கலம் மொக்க மாயத்தேவர், கூடலூர் சிவன்காளைதேவர் மற்றும் கள்ளர் பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்கள் உதவியினை. பெற்று நூலின் முதல் பதிப்பை 1976ம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கத்தில் வைத்து திரு.மூக்கையாத்தேவர் முன்னிலையில் நடிகர் சிவாஜி கணேசன் வெளியிட்டார். இதன் மூலம் குற்ற பரம்பரையினர் பற்றியும், ஆங்கில அரசின் அடக்கு முறையும், பெருங்காம நல்லூர் கலவரம் பற்றியும் வெளிஉலகத்தின் பார்வைக்கு முதன் முதலாக வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டது. புத்தகம் வெளியிட்டாலும் அது தேவமார் சமூகத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.

அச்சிடப்பட்ட பிரதிகள் நன்கொடையாளர்களுக்கும், கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழப்பட்டு விட்டன. விளைவு கடலில் கரைத்த பெருங்காயம் போலாகி விட்டது. மக்களிடம் போதுமான புத்தக வாசிப்பு இல்லாதிருந்தது.1980 ம் ஆண்டு எனக்கு சென்னையில் அரசுப் பணி கிடைத்தது. நானும் தந்தை முத்து தேவரும் சென்னைக்கு வந்துவிட்டோம். 

இடைக்காலத்தில் சேகரித்த தகவல்களை மூல நூலுடன் இணைத்து இரண்டாம் பதிப்பு வெளியிட முடிவு செய்தார் முத்து தேவர் . சென்னையில் வசிப்பதால் நடிகர் சிவாஜிகணேசன் மற்றும் இயக்குனர் பாரதி ராஜா ஆகியோரை சந்தித்து நிதி உதவி கோரினார். அவர்களும் மனம் உவந்து ஒப்புக் கொண்டனர். ஆனால் அவர்கள் இல்லத்துக்கும் அலுவலகத்துக்கும் அந்த தள்ளாத வயதில் நடந்து நடந்து முத்துதேவர் மனம் நொந்துபோய்விட்டார்.

இறுதியில் கோவை முக்குலத்தோர் சங்கத்தலைவர் பொன். அருணாச்சல நாட்டார் அவர்கள் பொருள் உதவி செய்தார். மூவேந்தர்குல தேவர் சமூக வரலாறு இரண்டாம் பதிப்பு 520 பக்கங்களுடன்1982 ல் வெளியிடப்பட்டது.

அதன்பின் பசும்பொன் பைன் ஆர்ட்ஸ். ராஜராஜன் அறக்கட்டளை ஆகியவை முத்துதேவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினர். புத்தகங்களை ஒரு சிலரே விலை கொடுத்து வாங்கினர். பெறும்பாலான புத்தகங்களை இலவசமாகவே மக்கள் பெற்றுச் சென்றனர்.

முத்துதேவர் தனது இறுதிக்காலத்தில் கருமாத்தூர் ஸ்தல வரலாறு என்ற கோவில்கள் பல கொண்ட தனது பூர்வீக கிராமத்தைப் பற்றி எழுதி புத்தகமாக வெளியிட விரும்பினார். அதற்கான தகவல்களும் சேகரித்து வைத்திருந்தார் . ஆனால் அதை வெளியிடுவதற்கு முன் 1993 ம் ஆண்டு தனது 82 ஆவது வயதில் கருமாத்துரில் காலமானார்.

இணையத்தில் இந்நூலினைப் படிக்க இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு - முத்துத்தேவர்

மு. நமசிவாயம் தேவர்


கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்