ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

மொழிப்போரின் தளகர்த்தர் எல். கணேசன் கண்டபிள்ளை


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் 24-04-1934ல் பிறந்தவர் எல்.ஜி. என அழைக்கப்படும் எல். கணேசன் கண்டபிள்ளை.

கண்டபிள்ளை என்ற பட்டம் உடைய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தார். கண்டபிள்ளை என்பவர்கள் சோழர்கள் கல்வெட்டுகளில்  கையொப்பம் இடுபவர்களாக இருந்துள்ளனர்.

82 வயதை எட்டியுள்ள இவர், கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முழுவீச்சில் பங்கேற்றவர். 1967, 1971, 1989 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தவிர, 1982- 86-ல் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

1986-ல் சட்ட மேலவைத் தேர்தலில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டதாரி தொகுதியிலும், 2004 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியிலும் போட்டியிட்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்.

வைகோவை அண்ணாவிடம் முதலில் அழைத்துச் சென்றவர் சட்டக் கல்லூரியின் தமிழ் இயக்கப் பேரவையின் தலைவர் எல். கணேசன் கண்டபிள்ளை

கடந்த 1989-ல் முதல்வரின் பேரவைச் செயலராக இருந்த அவர், தற்போது திமுக தேர்தல் பணிக் குழுத் தலைவராக உள்ளார். அந்தக் காலத் தேர்தல் குறித்து அவர் தெரிவித்ததாவது:

1967 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என அண்ணா நம்பவில்லை. நம்பியிருந்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டிருப்பார். ஆனால், மாறாக, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால், கருணாநிதி மட்டும் திமுக ஆட்சியமைக்கும் என நம்பினார். அவருடைய நம்பிக்கைதான் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் என்னைப் போட்டியிடுமாறு ஊக்கப்படுத்தியவர் கருணாநிதிதான்.


அந்தத் தேர்தலில் ரூ. 10 லட்சம் நிதி திரட்ட வேண்டும் என திமுக முடிவு செய்தது. அப்போது, திமுக பொருளாளராக இருந்த கருணாநிதி ரூ. 11 லட்சம் நிதி திரட்டி அண்ணாவிடம் கொடுத்தார். அந்தச் சங்கடமான சூழ்நிலையிலும் கருணாநிதி காகிதப்பூ என்ற நாடகத்தை நடத்தி, ரூ. 10,000 நிதி திரட்டி எனக்கு வழங்கினார்.


1967 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் ஒரத்தநாட்டைச் சுற்றிலும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தோற்றது. நடுவில் நான் போட்டியிட்ட ஒரத்தநாட்டில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. இது, மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்ற பட்டியலில் மூன்றாவது இடமாகும்.

அந்தத் தேர்தலில் நான் போட்ட சட்டை, கட்டிய வேட்டியுடன்தான் களத்தில் இறங்கினேன்.

கருணாநிதி திரட்டித் தந்த ரூ. 10,000, கட்சி கொடுத்த ரூ. 4,500, அன்றாடம் வாக்காளர்களைச் சந்திக்கிற போது அவர்கள் தந்த சிறு, சிறு நிதியும்தான் நான் தேர்தலில் செலவிட்ட பணம். கொடியோ, பதாகையோ கொடுத்ததில்லை. ஒரு தோரணம்கூட வாங்கிக் கொடுத்ததில்லை. அனைத்தையும் அந்தந்த ஊர் கட்சிக்காரர்களே செய்தனர். எனக்கு வாக்கும் அளித்து, வாக்கு சேகரிக்க அழைத்து நிதியும் கொடுத்தனர்.

நான் இதுவரை 10 தேர்தல்களில் நின்றுள்ளேன். ஆனால், எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களுக்கு நான் பணம் கொடுத்ததில்லை.

விதிவிலக்காக ஏழைத் தொண்டர்கள் தாங்கள் செய்யும் வேலையை விட்டுவிட்டு தேர்தல் பணியாற்றுகிறபோது, அவர்களின் உணவுக்காகப் பணம் கொடுப்பதுண்டு.

1967-ல் நான் போட்டியிட்ட போது தலித்துகளுக்கும், பரம ஏழைகளுக்கும் காங்கிரஸ்காரர்கள் பணம் கொடுத்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதே தவிர, வெற்றி கிடைக்கவில்லை.

வாக்குக்காக மக்கள் பணம் வாங்கினாலும், அவர்கள் பணத்துக்காக வாக்களிப்பதில்லை. தாங்கள் விரும்புகிற வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கின்றனர்.

பணம்தான் தேர்தலை நிர்ணயிக்கிறது என்றால், காமராஜரோ, அண்ணாவோ முதல்வராகி இருக்க முடியாது.

1967 தேர்தலில் வாக்குக்குப் பணம் வாங்கியவர்கள் தங்கள் விருப்பப்படியே வாக்களித்தனர். அவர்களிடம் பெற்ற பணத்தில் ஒரு பகுதியை எனக்கு நிதியாகவும் தந்தனர்.

அப்போது ஒரு வாக்குக்கு ரூ. 2 கொடுத்தனர். அது, அடுத்தடுத்த தேர்தல்களில் ரூ. 5, ரூ. 10 என ஆனது. இப்போது, ரூ. 100, ரூ.200, ரூ. 500 எனப் பல மடங்கு பெருகிவிட்டது. அப்போது, ஒரு பகுதியில் தலித்துகள் 400 பேர் இருக்கின்றனர் என்றால், அந்தச் சமுதாயத் தலைவரிடம் 400 ரூபாயை கட்சிக்காரர்கள் கொடுப்பர். அதை மக்களிடம் சமுதாயத் தலைவர் பிரித்துக் கொடுப்பார். இப்போது, வாக்காளர் கையில் நேரடியாகக் கொடுக்க ஒவ்வொரு கட்சியும் ஏற்பாடு செய்கிறது.

என்னைப் பொருத்தவரை, தேர்தலில் ஈடுபடுகிற கட்சிகள் அத்தியாவசியச் செலவுக்குச் செலவிட வேண்டிய தொகையே அதிகமாக இருக்கிறது. இந்த வேறுபாட்டை என்னால் உணர முடிகிறது. முன்பைவிட தற்போது தேர்தல் செலவு அதிகமாகிவிட்டது.

தோரணம் கட்டுவதற்கான கூலி அப்போது ரூ. 5, 10 என இருந்து, இப்போது ரூ. 500 ஆகிவிட்டது. ஒரு தொண்டருக்கு அப்போது ரூ. 10 கொடுத்தால், அப்போது அது பெரிய தொகை. இப்போது, ரூ. 100 கொடுத்தால்கூட போதுமானதாக இல்லை.

சுவர் விளம்பரம், கொடி போன்ற வெளிப்படையான செலவினத்தைத் தடுக்கிறது. இதனால், இப்போதெல்லாம் தேர்தல் நடக்கிறதா எனச் சந்தேகமே வருகிறது. ஆனால், தேர்தலை நடத்துகிற மாநில அரசு நிர்வாக இயந்திரம் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இயங்குவதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலைமை மாற வேண்டும் என்றார் அவர்.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்