ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

உறந்தைவளர் நாட்டுவளப்பம்


உறந்தைவளர் நாட்டுவளப்பம் என்பது முத்தையன் சேதிராயர் எழுதிய நூல். இவர் கல்லாதவர் எனவும் இவர் பாடிய பாடல்களை இவர் தம்பி குறித்து வைத்துக் கொண்டு, ஏட்டில் எழுதியதாகவும், பின்னர் அதைத் தாம் பிழைத் திருத்தி நூலாக வெளியிட்டதாகவும் நக்கீரர் கூறுகிறார். ஒரத்தநாடு வட்டத்தின் உள்ளூர் மக்களின் வாழ்வியல். வழிபாட்டு முறைகள், பண்பாடு, சாதிப் பிரிவுகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். முத்தையன் பாடிய சந்தம் கொண்ட பாடல்களுக்கு உரைநடையிலும் விளக்கியுள்ளார் நக்கீரர். சில தகவல்களுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். பிற நூலாசிரியர்களின் சான்றுகள் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த சுற்றுப்புறத்து ஊர்களின் சென்ற நூற்றாண்டின் வாழ்வியலை அறிய முடிகிறது.


இறைவணக்கம்

இசை:

தானன தானன தானன தானன
தானன தானன தானன தானன
பாடல்:

சீர்பெருகு நாடுசி றந்தாள்உ றந்தையில்
பேர்பெருகு முன்தழுக்கைப் பிள்ளையாரே முன்னடவீர்!
முன்னடவீர் தென்னுறந்தை முருகா உனைப்பாடச்
சன்னதிப் புன்னைப் போல் தழைக்கும்உ றந்தையில்
மிக்க துவரைவி ளங்கனியாம் சர்க்கரை
சர்க்கரை பாலுடன்த ழைக்கும்உ றந்தையில்
முக்கனி சர்க்கரை முழங்கும்உ றந்தையில்
முக்கனி கொண்டவர் மெய்க்குவி நாயகர்
மெய்க்குவி நாயகரை வேண்டிஅ னுதினம்
தக்கோர் வளத்தைப்பாடச் சரஸ்வதியே முன்னடவீர்!
தஞ்சமென்றேன் உன்பாதம் சரசுபதித் தாயே
பூஞ்சோலை என்றுபொ ருப்பாள் பெரியவள்
கற்றோர் பெரியவர் கவிவாண ருக்கெல்லாம்
பற்புலவர் நற்புலவர் பாதம்ப ணிந்துநான்
முத்தையன் சொன்னதமிழ் எத்தேச காலமும்
வித்தை வளரருள்செய் மெய்க்குவி நாயகர்
உறந்தை வளநாடு சிறந்துப ணிகின்றோம்
குரும்பீசர் பாதத்தை விரும்புவோம் எந்நாளும்
பெருத்தச டையும்பி றையும்த ரித்தவர்
திருக்காக் குரும்பரைநான் துதிப்பேன் பலநாளும்


உறந்தைவளர் நாட்டுவளப்பம்/சிவன் வடிவழகும் திருவிளையாடலும்

திங்கள் சிரத்தவர் திரிநூ லணிந்தவர்
மங்கை பெரியவள் பங்கார் குரும்பீசர்
மானும் மழுவும்ம தியும்த ரித்தவர்
ஞானம் மிகுந்தவர் நல்லகு ரும்பீசர்
கரியை உரித்தவர் காளைமேல் கொண்டவர் (25)
நரியைப் பரியாக நடத்தும் குரும்பீசர்
ஆலவிடம் உண்டவர் அமிர்தங் கடைந்தவர்
காலனை உதையக்கணை கண்டார் குரும்பீசர்
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்பால் அடிபட்டார்
கட்டிப் பிடித்தமார்க் கண்டர் பயந்தீர்த்தார் (30)
திரிநூ லணிந்தவர் செந்தா மரைப்பாதம்
பரவைக்குத் தூதுசென்று வந்தார் குரும்பீசர்
கனக சபையில்நிதம் நடனம் புரிந்தவர்
மதனை எரித்துஇங்கே வந்தார் குரும்பீசர்
பொக்கணம் எடுத்தவர் புலித்தோ லணிந்தவர் (35)
முக்கண் தரித்தவர் முதலே குரும்பீசர்
சோளிகை எடுத்தவர் சூரர்களை வென்றவர்
காளியுடன் வாதுசென்று கண்டார் குரும்பீசர்
எரியை மதனைக்காத்த ஏழைபங் காளராம்
பெரியவள் பாதாரம் மதிசூடும் நாதராம் (40)
திருக்காக் குரும்பர்பாதம் சுமந்தேன் தலைமேலே


உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஊர்த்தெய்வ வணக்கம்


உரத்தநாட் டையன்பாதம் உரைப்பேன் பலநாளும்
பொங்குச டையும்பு கழுந் தரித்தவர்
எங்கள் புதுவூர்த் தெய்வங்கள் பெருமாளும்
ஏறும் பரிகள்வந்து சூழும் பனிநீரை
காரி அழகரைநான் பாதன் பணிந்தேனே
பொய்சொல்லா மெய்யன்புது மேஸ்திரி யாவரும்
மெய்சொல்லி அய்யன்பாதன் வேண்டிப் பணிகின்றோம்
பாலும் பழமும்ப சியாவ ரந்தரும்
பாலையடி அய்யனுடைப் பாதம் பணிந்துநான்
ஓங்கார முள்ளஉ றந்தை வளநாட்டில்
வேம்பய்யன் பாதத்தை விரும்பிப் பணிகின்றோம்
கலங்காதே யென்றுப லங்கள் தருகின்ற
இளங்கோவில் ஐயன்பாதம் விளங்குவோம் எந்நாளும்
வாழ்வும்பெ ருகும்வ ளரும்உ றந்தையில்
சேவுக ரையன்பாதம் சீர்பாதம் போற்றுவோம்
சரசகு ணமுந்த யவும்பெ ருகியே
பெரியமு தலியையன் துதிசெய்வோம் எந்நாளும்
ஐவர் பையில் அடைக்கலம் காத்தவர்
வைபோகம் எங்கும்புகழ் தெய்வங்கள் விநாயகர்
அசாரக் காரரவர் அபிமானங் காத்தவர்
ராஜாவூர் ஐயன்பாதம் நேசம் மறவேனே
உத்தமி எங்கள்உ றந்தை வலநாட்டில்
முத்துமகா மாரிபாதம் நித்தம் துதிசெய்வோம்
அலைகடலில் பள்ளிகொள்ளும் ஆயன்ச கோதரி (65)
மலையாள் பரங்கிமுத்து மாரி பெரியவள்
மலையாள் பரங்கிஉல காத்தாள்வில் லாத்தாளாம்
குலதெய்வம் என்றுநாங்கள் நிதமும் துதிசெய்வோம்
பூத தயவுகளும் பெருமைகளும் உண்டாக
மாதா பெரியவள் பாதம்ப ணிகுவோம் (70)

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/நாட்டார் பெருமைகள்

வீர மணவாளர் விருதுகளைக் கூறுவோம்
காறாளர் வீரர்க ணக்குக் கதிகாரி
தோறாத கோவிலூர் துலங்கும்வெள் ளார்கள்
தன்னர சுள்ளவர் தலைமை யவர்களாம்
முன்னர சுள்ளவர் பல்லவ ராயர்கள் (75)
கனவென்று சொன்னவரைக் காதை அறுமென்றார்
நெடுவாண்டா ராயரவர் படைகொண்ட மன்னவர்
அண்டின பேருக்கோ ராலவி ருட்சம்போல்
கண்டியர் தேவர்படை கண்டால் விடுவாரோ?
தீரங்கொண் டாயரென்று சொல்வார்உ றந்தையில் (80)
வீரங்கொண் டாயர்கள் வென்றுவ ருவார்கள்
சொல்லாளர் என்றுது லங்கும்உ றந்தையில்
வல்லாளர் தேவர்படை வெல்வார் நிசங்காணும்
சுண்டுவில் கொண்டுபோரில் துரத்தி வருவார்கள்
கண்டியர் தேவசாரம் கொண்டா ரிருபேரும் (85)
ஆலிங்க நெஞ்சுஅ ருமைதெ ரிந்தவர்
காலிங்க ராயர்போரில் கலங்காத வீரியர்
மாசுத்த வீரர்வ ளரும்உ றந்தையில்
பூபோதித்திச் சேதிராயர் ஆபத்துக் காத்தவர்
மானைக் கண்டுநடக்கும் மரியாதை ராமன்போல் (90)
சேனைக்கொண் டாயர்கள் செயங்கொண்ட மன்னவர்
சொல்லிக்கொண் டாடுவோம் சோலை வளநாட்டில்
மல்லிக்கொண் டாயர்கள் வில்லில்வி சையர்கள்
சிறந்த மணவாளர் செல்வார் உறந்தையில்
உறந்தை ராயரவர் உச்சித வீரர்கள்
வீராதி வீரர்வி சையர்இ வர்களாம்
போருக்கு வீரர் துரை சேதிரா யர்களாம்
சேதிரா யர்வளத்தா தேவர்வாண் டையாரும்
சேகர மாகச்சி றந்துவ ருவார்கள்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஆட்சிச் சிறப்பு

சொல்லுக்குத் தருமராம் மல்லுக்கு வீமராம்
வில்லுக் கருச்சுனர் வீர மணவாளர்
ஆர்த்தி தெரிந்தவர் அருளில் மிகுந்தவர்
கீர்த்தி யுரைக்குந்தமிழ் கேட்குஞ் செவிகொண்டு
உரையா லறிந்தவர் உறந்தை வளநாட்டில்
அரவும் எலியும்அ டைத்தா ரொருகூட்டில்
தளிகையும் கோவ்லும் தண்ணீர்த் தடாகமும்
புலியும் பசுவும்தண்ணீர் புசிக்கும் வளநாடு
தானம் பரிக்குலம் தழைக்கும்உ றந்தையில்
மானும் புலியும் வளர்த்தா ரொருகூட்டில்
வேதிய ருக்குக்கலி யாணஞ்சி றந்ததும்
சாதிக்குள் ளேபரிசம் வாரிச்சொ ரிந்ததும்
தானதரு மங்களுடன் நீதிதெ ரிந்தவர்
ஞானம் தெரிந்துஅபி மானம்து றந்தவர்
சலிக்காத் தமிழ்க்குச்செம்பொன் அளித்திட வல்லவர்
கெலிக்கும் சிங்கமுறந்தை புலிக்கொடி உள்ளவர்
வரராச கோபாலர் மனமகிழ்ந்த நன்னாடு
திருராசர் காவல்கொளும் தென்னுறந்தை நன்னாடு
ஆனைவ ளையுங்காணி அரசு பதினாறு
சேகர் மாகஒரு தாவளத்தில் வந்ததும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வீரக்குடி நாட்டுடன் ஒரு போர்

தாவளத்தில் வந்துகுரும் பீசரைப்ப ணிந்ததும்
வாளெடுக்கும் முன்னேதிரு நீறெடுத்த ணிந்ததும்
நீறணிந்த கையால்சமு தாடெடுத்துச் சேர்ந்ததும்
வீரமண வாளர்பதி னாறணியில் வந்ததும்
ஈட்டிகட் டாரிஇ டிகொம்பு சக்கரம்
பூட்டிய வில்லுமெங்கள் நாட்டுத் துரைகளும்
துப்பாக்கி சஞ்சாலி தொடர்ந்த சரம்போகி
கைக்கஞ்சு வாணங்கள் கவண்டி வளைதடி
ஓடிய காலுக்கொரு ஒண்டி மிதியடி
நாடிய சூரர்களைத் தேடிவந் தார்களாம்
வாடிக்குந் தெற்கேவ ளர்ந்தவீ ரக்குடி
வீரக் குடிநாடு சோக் கலியாட்டம்
சூரர் தனைவெட்டிச் செயங்கொண்டு வந்தார்கள்
வெட்டாத பேரைவெட்டி விருதும் பறித்தார்கள்
துட்டர் குணமடக்கிச் செயங்கொண்டு வந்தார்கள்
பெரிய நகராவுடன் பேரிகை பூரிகை
சரிகைமுண் டாசியுடன் தான்பறித்து வந்தார்கள்
நித்தச் சங்கீர்தம் நிஅரிந்த வளநாடு
வெற்றிச் சங்குபிடிக்கும் வீர மணவாளர்
வலியன் இடமாகத் தளிகை வலமாகப்
பெரியவள் பாதந்தேடித் துதிசெய்ய வந்தார்கள்
சிங்காரத் தோப்பிலும் தேரோடும் வீதியும்
வந்தார்கள் தென்னுறந்தை ரெங்கர் சபைபோல

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/பெரியநாயகி சூடிய மலர்கள்

நந்த வனமுஞ்சோலை நல்ல திருமதிள்
செந்தா மரைப் பொய்கை சிறந்தத ளிகையும்
மந்தாரை முல்லைஇரு வாட்சிம லர்களும்
செண்பகம் வேர்க்கொழுந்து செவ்வந்தி வில்வமும்
கொடிமல்லி கொன்றைதும்பை மலர்மல்லி கைகளும்
கொடிமல்லி புன்னைபிச்சி கொய்யாம லர்களும்
அடுக்கரளி செவ்வரளி ஆனதொரு மந்தாரை
குலத்தா லொருமலரைத் தரித்தாள் பெரியவள்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஏழு கன்னியர் வருகை

உறந்தை வளநாட்டில் குரும்பீசர் தோட்டத்தில்
வருந்தூது வண்டுகள் அரும்பும லர்ந்திட
நல்ல மலர்களுண்டு தென்னுறந்தை நன்னாட்டில்
உன்னத மாகவேழு கன்னியர்கள் வந்ததும்
மலரெல்லாம் கொய்துதிரு முடிமே லணிந்ததும் (155)
நலியாமல் கன்னியர்கள் தளிகைநீ ராடியே
ஆடிப் புடைவைதுகி லாடை யணிந்ததும்
ஓடிநூ லேணிவழி யாகநடந்ததும்
சப்தகன் னிகள்வந்து நித்தமலர் கொய்ததும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/பறவைகள் பாடுதல்

பித்தர் குரும்பரங்கே லட்சத்தோப்பில் வந்ததும்
கரும்பு கதலிதென்னை கமுக இளந்தோப்பில்
வருந்தாது வண்டுகள் மலர்கள் மலர்ந்திட
வருந்தூது கோவில்எங்கள் உறந்தை வளநாட்டில்
கோகிலமும் அன்னமும் குயிலும்பு றாக்களும்
வாகனத்து மேலேமுத்து மாரிவரப் பாடுது
தோரணசிங் காதனங்கள் சோதிக்கப் பாடுது
மாதவனைப் போலுறந்தை வாழ்ந்திருக்கப் பாடுது
என்னென்ன சொல்லுது ஏலங் கருங்குயில்
வர்ணங்கள் சிந்துவகை வகையாகப் பாடுது
விர்த்தங் கலித்துறை வெண்பாக்கள் சொல்லுது
சிந்துகள் கேட்கவென்று வந்தார்உ றந்தையில்
இந்தா வரங்களென்று தந்தாள்பெ ரியவள்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/கனிச்சாறு பெருக்கெடுத்து ஓடல்

சீரிய தென்றல்வந்து சோலையில் கோதியே
ஏறிய வானரங்கள் பீறிக் கனியெல்லாம்
சோலை மிகுந்துரசம் சாலைநீ றோடியே
வாரி சொரிந்துநெட்டை ஏரிபெருகவும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/தாராவின் முறையீடு

ஆராய்ந்து கொள்வது, நாரைஅ டைவதும்
தாராவின் முட்டைரசம் நீர்மேல் மிதப்பதும்
தாரா முறையிடுவ தேதென்றார் நாட்டார்கள்
வாரி யெழுந்திருந்து ஏரியில் வந்தார்கள்
தாராவின் முட்டையிலே சேதங்கள் போகாமல்
காராள ரையழைத்துக் கலிங்குதி றவென்றார்
கலிங்குதி றக்கவென்றால் குரும்பர் வரவேணும்
காணிக் குரும்பருந்தே ராணிக்கக் காரராம்
வந்துக தவும்ம தகும்தி றந்தார்கள்
சென்றோடிக் கெங்கைசி றந்தத ளிகையும்
குண்டுக ளந்தண்கு ளங்கள்குட் டையெல்லாம்
கண்டு விட்டராசன் கடலோடிப் பாய்ந்ததும்
கடலில் இருந்தசிப்பி எதிராக வந்ததும்
நிலைபார்ப்போம் என்றுவீர மணவாளர் சொன்னதும்
வலைகாரர் என்றுசொல்லி வாளைகு திப்பதும்
சிலைராமர் வாராரென்று சேல்கள்ப ரந்ததும்
பதறாதே யென்றுவீர மணவாளர் சொன்னதும்
சேலும்க யலும்சி றந்தவ ளநாடு

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/முத்து பிறக்கும் இடங்கள்

மால்தந்த யானைவ ளரும்உ றந்தையில்
சிப்பி கதலிசி றந்தக முகுகள்
முத்துநல் லாயியிடம் விஸ்தார மானதும்
சிறந்தது நல்லமுத்துப் பிறந்தவி தங்களும்
பிறந்தது முத்துஎங்கள் உறந்தை வளநாட்டில்
சிறந்த வயல்கள்கு ளங்கள்குட் டையெல்லாம்
நிரந்தர மாகமுத்துப் பிறந்துவி ளைந்ததும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/மன்னன் வருகை

துரந்தரனைத் தஞ்சைவளர் சோழ முசுகுந்தன்
புரந்தரனைக் காண்பதற்கு உறந்தையில் கந்ததும்
வந்தார்கள் தென்னுறந்தை வாழுமே ழுநாட்டார்
உம்பஅ அம்பலம் ஊர்மானி யங்களும்
வந்தகா ரியமாகச் சந்தோஷ மாய்ச்சென்று
தென்புறத் திலேலிருந்து சோறுண்டு வாருங்கள்
நீதிமந் திரியுடன் யூகமந் திரியும்
யூகிமந் திரியுடன் வாசல்மந் திரியும்

வாசல்மந் திரிநாட்டுச் சேதிஉ ரைத்ததும்
வீர மணவாளரைச் சோழ ரழைத்ததும்
வா ருமிரும் என்றூப சாரங்கள் சொன்னதும்
அந்திக் கொலுவிலும் ஆசார வாசலும்
சந்திப் பூக்கொண்டு தயிரிப்பூப் பெற்றார்கள்

பயிர்வேதி மெய்யுடனே கதிர்சாவி பேர்களும்
மன்னன் மலையரசன் வாழுமே ழுநாட்டார்
செந்நெல்லும் முத்தும்சி றந்துவி ளைந்ததும்
கார்நெல்லும் நெல்லும் கலந்துவி ளைந்ததும்
நெல்லுட னேபுஞ்சை நிறைந்துவி ளைந்ததும்
விளைந்தது செந்நெல்முத்து அளந்துத ருகின்றோம்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வீரமணவாளர் பெற்ற சிறப்புகள்

வளந்தேறி வாழுமெங்கள் உறந்தை வளநாட்டில்
அறிவில் மிகுந்தவர் வீர மணவாளர்
பெறுவார் பெறுவாரென்று சிவந்திரங்க ளுரைத்ததும்
உம்பளம் அம்பலம் ஊர்மானியங்களும்
கோவில்மா னியமும்கு ருக்கள்மா னியமும்
காளிமானி யமும்முத்து மாரிமா னியமும்
பிள்ளையார் மானியம்பெ ருமாள்மா னியமும்
அய்ய னார்மானியம் அரசுகு றுணியும்
கோவில்கு றுணியும்கு ருக்கள்கு றுணியும்
பிள்ளை யார்களுக்கு முன்னேகு றுணியும்
பெருமாள் குறுணியுடன் ருசுவாகச் சொல்கிறேன்
மூலைக் கதிருண்டு முடுக்குக் கதிருண்டு
வெள்ளைக் கதிருடனே பிள்ளை யரியுண்டு
கட்டுக் களங்கள் களவடி செவ்வடி
பொட்டிக் கதிரும்பண்ணைக் கட்டுக் கலமுண்டு
அட்ட வணைக்கணக்கைக் கிட்டே அழைத்ததும்
விட்டுவிடு கிறோமென்று கட்டளை விட்டதும்
ஆறில் ஒருவாரம் ஏழு குறுணியும்
பூரணி வாங்கிவந்தார் வீர மணவாளர்
சாலுவை சாலுவை சரிகைமுண் டாசியும்
போருவை துப்பட்டா பெரிய பீதாம்பரம்
நாலு வகையும்வெகு மானங்கள் செய்ததும்
வீரமண வாளரே ஊரேபோய் வாருங்கள்
நாடுசி றந்ததுடன் நல்லச பைகளும்
ஊரு சிறந்ததுடன் உயர்ந்தமா நியமும்
அரைக்காரச் செம்புருதி அட்டவளை அய்யரைக்
கூட்டுக் கொண்டு உறந்தை நாட்டார் வரச்சொன்னார்
அந்தக் கணமேநாலு தண்டக்கா ரோடியே
அந்தக் கணமேகூட்டம் அழைத்துவந் தார்களாம்
வந்தகா கிதவோலை வாசகம் செய்ததும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/பெண்கள் முத்துக் கொழித்தல்
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/திருவிழாக் கொண்டாடுதல்
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/கோயில் பணியாளர்கள்
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/முத்துமாரி உலா வரல்
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வாணவேடிக்கை
உறந்தைவளர் நாட்டுவளப்பம்/தேரோட்டம்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/மக்கள் நேர்த்திக் கடன்

தேர்நிலை கொண்டதும் சிறந்தமங் கையர்கள்
மாவிளக்கு ஏந்திவ ருந்திவ ருவார்கள்
நெய்விளக்கு ஏந்தியவர் நேர்ந்துகொள் வார்களாம்
கைவிளக் கேந்தியவர் காணிக்கை செய்வார்கள்
அங்கப் பிரதிஷ்டங்கள் எங்கும் வருவார்கள் (385)
இருப்புச் சலாகைஇ சைவாய் நிறுத்தொன்றார்
ஆரியத் தொம்பைகள் சாதக வித்தையும்
நேர்மே லிருந்துமுத்து மாரியம்மன் பார்த்ததும்
எள்ளுக்குள் எண்ணெய்போ லெங்குத் துலங்கவே

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/தண்ணீர்ப் பந்தல்

தண்ணீர்ப் பந்தலிலே தாசிகே ளிக்கையும் (390)
கேளிக்கை களும்வாண வேடிக்கைகளுடன்
ஆணிக் கனகமுத்து காணிக்கை செய்ததும்
சீரும் பெருமைகளும் வாழ்வும்மி குந்திட
மாரியம் மனுந்திருக் கோவிலில் வந்ததும்

உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வாழ்த்து

திருக்காக் குரும்பருடன் தேவிபெரியவள்
தழுக்கை விநாயகரும் சரஸ்வதியும் வாழியே!
இந்திரர் கோத்திரங்கள் எந்நாளும் வாழியே!
மலையாள் பரங்கிமுத்து மாரிமிக வாழியே!
சிலைராம ருந்தனுசு சீதைமிக வாழியே
மாதம் மும்மாரிம ழைகள் பொழிந்திட
வீரமண வாளர்கள் மேன்மேலும் வாழியே!
அளவிலாச் செம்பொன் அளகா புரிதனில்
துளசி மகாராசர் ஆல்போல் தழைத்திட
துலங்கும் புகழுறந்தை சுந்தரம் வாழியே!
இலங்குமார்க் கண்டர்போல் இலங்காவி வாழியே!
சிங்கார மாயர்கள் செட்டிபல வட்டரைகள்
எல்லாச்சி வாலயங்கள் எந்நாளும் வாழியே!
துன்னிய கீதம்து லங்கும்உ றந்தையில்
பண்ணும் தமிழும் பணிக்கலங்கள் வாழியே!

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்