புதன், 11 செப்டம்பர், 2019

தேவகோட்டை ஆகஸ்ட் புரட்சி


‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கத்தை காந்தியடிகள் 1942ம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சியாக அறிவித்தார். நாடெங்கிலும் சுதந்திர வேட்கையில் மக்கள் திரண்டெழுந்தனர். ஆங்கிலேயர்கள் மிரளும் அளவிற்கு திறந்தவெளி சிறைச்சாலையில் மக்கள் வெள்ளம். 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியன்று நாடெங்கிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டது. அதையும் மீறி தேவகோட்டையில் ஆங்கிலேயர்களை எதிர்த்து பொதுக்கூட்டம் நடந்தது. தேவகோட்டையை சேர்ந்த சின்ன அண்ணாமலை செட்டியார், டி.எஸ்.ராமநாதனை கைது செய்தனர்.

கைதானவர்களை திருவாடானை(தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது) சிறையில் அடைத்தனர். இதுதான் தேவகோட்டை பகுதியில் ‘ஆகஸ்ட் புரட்சி என்ற வேள்வித்தீ’ உருவாக காரணமாக இருந்தது. 

1942 ஆகஸ்ட் 15ம் தேதியன்று நள்ளிரவில் திருவேகம்பத்தூர், திருவாடானை இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள பாலங்களை தகர்த்தெறிந்தனர். போக்குவரத்து தடையை ஏற்படுத்தினர். 17ம் தேதி காலை அபிராமம் முத்தையா, திருவேகம்பத்தூர் ஜெயராம அய்யர் ஆகியோர் சைக்கிள் மூலம் தொண்டி சென்று தொலை தொடர்பு இணைப் புகளை துண்டித்தனர். 



திருவாடானை சிறைச்சாலையை சுதந்திர போராட்ட வீரர்கள் தகர்த்தெறிந்தனர். சின்னஅண்ணாமலை, டிஎஸ்ராமநாதன் மற்றும் கைதாகி இருந்த 30 பேரையும் மீட்டனர். சிறை கஜானாவை சூறையாடினர். தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், துணைப்பதிவாளர் அலுவலகம் சூறையாடப் பட்டது. அதனைத்தொடர்ந்து போராட்ட வீரர்கள் தேவகோட்டையை நோக்கி வந்தனர். ஆங்கிலேயர்கள் போராட்ட வீரர்களை சுட்டு வீழ்த்தப்போவதாக மிரட் டினர். ‘எதற்கும் தயார்’ என துணிந்து நெஞ்சை நிமிர்த்தி போராட்டத்தில் குதித்தனர். இதில் போலீசாரின் துப்பாக்கிக்கு முத்திருளப்பன் முதல் இரையானார்.

வெகுண்டெழுந்த வீரர்கள் தேவகோட்டை நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர். நீதிமன்றத்தை சூறையாடி அங்கிருந்த ஆவணங்களையும், பொருட்களையும் தீக்கிரையாக்கினர். வெள்ளையர்கள் நடத்திய சிம்சன் கம்பெனி பஸ்களை தீயிட்டு கொளுத்தினர். இதனைக்கண்டு ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர்கள் போராட்ட வீரர்கள் மீது துப்பாக்கியால் சரமாரி சுட்டனர். 

இதில் 75 தியாகிகள் தங்கள் உயிரை ஆங்கிலேயர்களின் தோட்டாக்களுக்கு பலிகொடுத்துள்ளனர்.இதில் கள்ளர்கள் மட்டும் 46 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். 

கைது செய்யப் பட்ட போராட்ட வீரர்களையும் சுட்டு வீழ்த்தி பிணமான வீரர்களையும் ஒரே வண்டி யில் கொண்டு சென்றனர். 

112 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. வெள்ளளூர் கள்ளர்நாட்டிற்கு அடுத்தபடியாக சுதந்திரத்திற்காக அதிக இரத்தம் சிந்திய பூமி தேவகோட்டைதான்.

இதன் நினைவாக இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தன்று சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக தியாகிகள் மடிந்த இடத்தில் பூங்கா உருவானது. அதில் நினைவு ஸ்தூபி எழுப்பினர். தேவகோட்டை நகராட்சி அலுவலகம் எதிரில் இப்போது கம்பீரத்தோற்றத் துடன் காட்சியளிக்கும் தியாகிகள் நினைவு ஸ்தூபி. நீதிமன்றம் கொளுத்தப்பட்ட வீதி தற்போது தியாகிகள் சாலை என பெயர் விளங்கி வருகிறது.


தியாகிகள் பூங்காவிற்கு கப்பலூர் கள்ளர்நாடு இராம.கரியமாணிக்க அம்பலம் நினைவு அறக்கட்டளை சார்பாக ₹45,000 வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர வேட்கையில் தேவகோட்டை யின் பங்கு என்பது மகத்தானது. அதை நினைவு கூறும் தியாகிகள் பூங்கா, தியாகிகள் சாலை என்பது காலத்தால் அழிக்க முடியாத சரித்திர சான்றாகும். இதுவே தேவகோட்டையின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றுகிறது.

மேலும் இந்த நிகழ்வுக்கு பல ஆண்டுகள் முன்பு  சிவகங்கைச்சீமைக் கள்ளர்கள் பாகனேரியில் ஒன்றுகூடித் தீர்மானம் நிறைவேற்றி, வெள்ளையருக்கு வரி செலுத்த மறுத்தனர், வெள்ளையரை எதிர்த்தனர். டேவிட்மோசுவின் குறிப்பு. 



.....
.....
crops (instantiating property as concrete force rather than abstract principle).  This had little practical effect. Formers and junior estate officers had begun actively and effectively to subvert the new demands, as reflected in the spate of reports in the early 1930s, legal suits, and convictions relating to embezzlement by revenue staff and village headmen (for Sivaganga, see TNSA, Court of Wards, October 31, 1931, 482 M; court of Wards, August 12, 1931, no.349; for Ramnad, see TNSA, 1938 proceedings in Court of Ward index, including eleven separate cases).  Then, under oppandams (ஒப்பந்தம், lit., "agreements." contracts) Villagers put up organized resistance.. When the taluk inspector and peons (Police) form the town of Manamadurai went to dis-train some bags of ragi (millet) and paddy in Rajagambiram Village, they were attacked by ryots (tenants), "who forcible took away their bulls and the bandy" (TNAS, administrative report, Fasli 1341, Court of Wards, December 15, 1932, no.31P; administrative report, Fasli 1340, Court of Wards, December 9, 1931, no.31P). Significantly, organized resistance to the estate focused precisely on those warrior-caste (Maravar or Kallar) "shareholders" of the old regime.  Initially these "Shareholders" organized to petition: Kallars, for example, under the Ramnad District Kallar Mahajana Sangam, met at Paganeri (an old natu center) and passed resolutions, including a demand for a 50 percent remission in cash rent.  Then, increasingly violent defiance and resistance was recorded in a rising number of arrests and many thousands of criminal cases between 1928 and 1932 (Mosse 2003, 130n65).  In 1931 the ryots of Kalapoor and Singampurari villages refused to pay rents.  An official report complained that "(w)hen on of them was arrested on a warrant an isolated against garlanded and took him in procession, obviously with the intention of appealing to the imaginations ....   ....
________________________________

Page 18
78 DAVID MOSSE
of other ryots and encouraging them to withhold rents from the estate" (TNSA, administrative report, Fasli 1340). Officials attempting to collect rent were excluded from villages, attacked, and  even shot

நன்றி : 
திரு. காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
திரு. மனு  சக்கரவர்த்தி 

ஆய்வு : பரத்  இராமகிருஷ்ணன் கூழாக்கியார்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்