செவ்வாய், 31 டிசம்பர், 2019

கூடநாணல்




தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அழகிய கிராமம் கூடநாணல். திருக்காட்டுப்பள்ளி தேர்வுநிலைப் பேரூராட்சியின் 15 வது வார்டாக இக்கிராமம் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இக்கிராமம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் கடுங்கால் வாய்க்காலுக்கும் பிள்ளைவாய்க்காலுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. மக்கள் வசிப்பிட அடிப்படையில் வடக்குக்கூடநாணல் என்றும் தெற்குக்கூடநாணல் என்றும் அழைக்கப்படுகிறது.



இதிகாசச் செய்தி பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொண்ட இடம் கண்டமங்கலம் என்றும் அவர்கள் கூடிய இடம் கூடநாணல் என்றும் கர்ணபரம்பரை செய்தி இன்றளவிலும் சொல்லப் பட்டு வருகிறது.

கூடநாணல் கிராமத்தில் உள்ள கள்ளர் கரைகள்:-

வகையறாக்கள்

1.சோழங்க தேவர் அம்பலக்காரர் +நாட்டார்
2.கொல்லத்திரையர்+வாணத்திராயர்+
கூழாக்கியார் (பூர்வீகமில்லை) +பல்லவராயர்
3.நாட்டார் + சக்கரை நாட்டார் +மழவராயர் + வங்கார்
4.நாட்டார் + சோழகர்
5.சேதிராயர் + சேர்வை

மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். நெல், கரும்பு, வாழை முதலியன பயிரிடப்படுகின்றன. மக்கள் 100% கல்வியறிவு பெற்றவர்கள்.



கோயில்கள்

குளத்தாளம்மன், இரட்டைப்பிள்ளையார், சங்கிலிகருப்பு, சாம்பான், மதுரைவீரன்,பெருமாள், நாகதேவதை, வன்னீஸ்வரன் முதலான தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. முதலில் குளத்தாளம்மனை வழிபட்ட பிறகே ஏனைய தெய்வங்களை வழிபடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வூரினர் இறந்துபடின் காவிரிக்கரையில் இவ்வூருக்கென உள்ள சுடுகாட்டிற்கே கொண்டு சென்று இறுதிக்கடன் செய்யும் வழக்கம் உள்ளது. இறுதி ஊர்வலத்தின்போது வடக்குக்கூடநாணலைச் சேர்ந்தவர்களின் சந்திமாக்கோட்டை வழிபாடு வன்னீஸ்வரன் கோயிலுக்கு எதிரிலும் தெற்குக்கூடநாணலைச் சேர்ந்தவர்களின் சந்திமாக்கோட்டை வழிபாடு நாகதேவதை கோயிலுக்கு எதிரிலும் நடைபெறுவது மரபு.









காமன் திருவிழா

மாசிமாதம் வளர்பிறை திருதியை திதியில் காமன்விழாவிற்கான கால்கோள் இடப்படுகிறது.மாசிப்பௌர்ணமி தினத்தன்று சிவன் காமனை எரித்தகதை நாடகமாக நடிக்கப் படுகிறது. காமனாகவும் இரதியாகவும் ஆண்களே வேடம் புனைத்து நடிப்பார்கள். சிவன் காமனை எரித்ததும் இரவு அனைவரும் குளித்துவிட்டே வீடுதிரும்புவார்கள். காமனை எரித்த மூன்றாம்நாள் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நல்லேர் /பொன்னேர் கட்டுதல்

தமிழ்வருடப்பிறப்பாகிய சித்திரை ஒன்றாம் தேதி நல்லேர் கட்டி வழிபாடு செய்வது இவ்வூரின் வழக்கமாக உள்ளது.











கூடநாணல் சேவல்கட்டு




வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்