வியாழன், 9 ஜனவரி, 2020

நடுகல்லில் கள்ளர்


தமிழகத்தில் கண்டறியப்பட்ட நடுகற்களில் 248 நடுகற்கள் ஆநிரைப்போர் மற்றும் குழுச்சண்டைகளில் மாண்டோர்க்கு எடுக்கப்பட்டவையாகும். பெரும்பாலான நடுகற்கள் மேற்கண்ட காரணங்களாலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. சாதாரண வீரர்கள் முதற்கொண்டு அரசர்கள் வரை நடுகற்களில் காணப்படுகின்றனர்.

சங்ககாலத்திலிருந்து பல்வேறு மன்னர்கள் ஆநிரைப்போர்களில் ஈடுபட்டதற்கு சான்றுகளாக புறநானூறும், பதிற்றுப்பற்றும் விளங்குகின்றன. மலையமான் திருமுடிக்காரியே ஆநிரைகளைக் கவர்ந்து வந்துள்ளான். அசோகரால் குறிப்பிடப்படும் சத்யபுத்ர மரபில் வந்த அதியமான் நெடுமானஞ்சி சேரர்களுடன் போரிட்டு இறந்து நடுகல்லாகினான். நெடுமிடல் மற்றும் எழினி, வேளிர்கள் -சேவகர்கள்- வீரர்கள் எனப்பலரும் நடுகற்களில் பேசப்படுகின்றனர்.

தமிழ் மண்ணின் போர்குடிகளான  முக்குலோத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையார் மக்களுக்கும் நடுகல் உள்ளன.


உலகிலே பழமையான கிரேக்க இதிகாசங்கள் இலியட், ஒடிசியில் கடவுள்களும் மிகப்பெரும் மன்னர்களும் ஆகோள் பூசலில் ஈடுபட்டத்தை மிக பெருமையாக பேசியிருப்பார் ஹோமர். கிரேக்கர்களின் பெரிய கடவுள் ஸுசின் மகன் ஹெர்மிஸ்( Messenger of Gods), தன் தகப்பனிடம் தோற்றுப்போன சூரிய கடவுள்களில் ஒருவரான ஹைப்பர்ரியானிடம் மிக லாவகமாக மாடு திருடினார் என்றிருக்கிறது. டிராய் போரில் ஈடுபட்ட அனைத்து கிரேக்க மன்னர்களும் டிராய் குடிகளிடம் ஆகோள் பூசலில் ஈடுபட்டார்கள். ஆடு மாடுகள் அபகரிப்பது திருடுவது மீட்பது என்பது ஆதி கால கடவுள்களுக்கும் கடவுள்களுக்கும் ஆதி போர்குடி சமூகங்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று. இந்நாட்களில் அது இகழ்வாக பார்க்க படுகிறது .





கற்கால நெறிமுறைகள் தெரியாத குடிகளால்.
கள்ளர்களும் கொண்டையங்கோட்டை மறவர்களும் ஆகோள் பூசலில் முழு மெட்ராஸ் ப்ரெசிடென்சியில், அதாவது ஆந்திர ஒடிசா எல்லை வரை அவர்களுக்கு நிகராக யாரும் இல்லை என்கிறார்கள் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர்கள். அது அவர்களுக்கு நீங்காத சந்தோஷத்தை கொடுத்தது என்கிறார்கள். அது புறநானுற்றில் சொல்லப்பட்ட போர்குடி பழக்கம் என்பதால் பிற்காலத்திலும் ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. முழு உலகிலும்
பழங்கால கடவுள்களுக்கும் , அரசர்களும் மாவீரர்களும் மட்டுமே உரித்தான ஒரு போர் நெறிமுறை ஆகோள் பூசல்.

கன்னியம்பட்டு நடுகல் 


உசிலம்பட்டி -திருமங்கலம் வழியில் இந்த ஊர் உள்ளது. இவ்வூரில் குதிரையில் அமர்ந்தபடி வலதுகையில் கத்தியும் இடதுகையில் கடிவாளத்தையும் பிடித்திருக்க, பணியாளர் குடைபிடிக்க எதிரில் ஒரு பெண் உள்ளார். குதிரையில் இருந்தபடியே இக்கள்ளர் மாண்டார் போலும். இந்நடுகல் அருகேயே மற்றோர் நடுகல்லில் குதிரையில் வீரனும், அவன் தலைக்குமேல் குடையும் வலது-இடமாக இரு பெண்களும் உள்ளனர் அவர்கள் இவனின் மனைவியராவர். மக்கள் அச்சிற்பத்தை "கள்ளக்காமன்"என்று வழிபடுகின்றனர்.

பட்டவன் சாமி நடுகல்

சொக்கத்தேவன்பட்டி பகுதியில் 7 நடுகற்கள் கள்ளர்களால் வணங்கப்படுகின்றன. அருகிலுள்ள தோட்டப்பநாயக்கனூர் பட்டவன்சாமி நடுகல்லும் கள்ளர்களால் வணங்கப்படுகிறது. போருக்கு சென்றால் எனக்கு என்ன கிடைக்கும்? என அவன் கேட்க ,. அதற்கு மக்கள் உன்னை தெய்வமாக வழிபடுவார்கள் என அரசனின் பதிலுரையை ஏற்று "பட்டவன்"சாமியானான் என்று இந்நடுகல் பற்றி அங்கே சொல்லப்படுகிறது.




குமரக்கோவில்  நடுகற்கள்


மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு தென்கிழக்கே குமரக்கோவில் எனும் ஊருள்ளது. இவ்வூரில் குருநாதன் கோயிலில் நான்கு நடுகற்கள் காணப்படுகின்றன. நடுகற்களின் மேற்பகுதியில் திருவாசி போன்ற அமைப்பு சிங்கமுகத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இவற்றை புத்தூர் மற்றும் நல்லூர்த்தேவன்பட்டியிலுள்ள கள்ளர் சமூகத்தவர் வழிபடுகிறார்கள்.

மலைப்பட்டி நடுகற்கள்


உசிலம்பட்டிக்கு தென்கிழக்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் மலைப்பட்டி என்ற ஊரில் திரு. சிவனாண்டித்தேவர் அவர்களின் பரம்பரை சொத்தான ஒரு தோட்டத்தில் மூன்று நடுகற்கள் காணப்படுகின்றன. மூன்று நடுகற்களிலும் வீரர்கள் குதிரை மீதமர்ந்திருக்க பணியாளர்கள் குடைபிடிக்க இச்சிற்பங்கள் உள்ளது. இவற்றை அவர் தமது முன்னோர்களின் சிற்பமாக வழிபட்டுவருகிறார்.

புதுப்பட்டி நடுகல்


புதுப்பட்டி எனும் ஊரில் உள்ள நடுகல் ஒன்று உச்சியில் சிங்கமுகத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பாயும் குதிரையின் மீது வீரன் வலக்கையில் வாள் மற்றும் இடக்கையில் கடிவாளம் பிடித்தபடி இருக்க, பணியாளன் குடைபிடிக்க இரு பெண்களுடன் காணப்படுகிறான். வாலாந்தூர் மற்றும் பாப்பாபட்டி மக்களுக்கிடையே உயிர் விட்ட கள்ளராக அவனை வழிபடுகின்றனர்.

கண்ணனூர் நடுகற்கள்


உசிலம்பட்டிக்குகிழக்கே 21கி.மீ.தொலைவில் செக்கானூரணி உள்ளது. இவ்வூருக்கு 3கி.மீ தூரத்தில் "பட்டசாமி" என்ற பெயரில் இரண்டு நடுகற்கள் உள்ளன. ஒருவீரன் வலக்கையில் குறுவாளினை ஏந்த, இடக்கை மார்பின் மீதுள்ளது. இரண்டாவது நடுகல்லில் வீரன் உயரம் குறைந்தவனாக உள்ளான். வலக்கையில் குறுவாளினையும்,இடக்கையில் வேலேந்தியும் உள்ளான். இரண்டு நாய்களின் உருவங்களுமுள்ளன. கொலையுண்ட சகோதரர்களாக இவர்கள் அப்பகுதி மக்களால் குறிப்பிடப்படுகின்றனர். தேவர் சமூகத்தவர் வழிபடுகின்றனர்.

குதிரைக்களவு

ஆநிரைக்களவு, மறித்தொறுக்களவு,எருமைத்தொறுக்களவு போல 17-18 ம் நூற்றாண்டில் குதிரைக்களவை பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கெதிராக தெற்கத்திக்கள்ளர்கள் செய்துள்ளனர். ஒருசில கள்ளர்கள் குதிரைக்களவின்போது பீரங்கி துப்பாக்கி குண்டுகளால் தங்கள் உடலுறுப்புகளை இழந்தனர். இதனை நொண்டி நாடக இலக்கியம் குறிப்பிடுகிறது.

தருமபுரி நடுகல் 

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி எனும் ஊரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (நடு. பக்.227)

ஸ்ரீ புருச பருமற்கு யா / ண்டு பத்தாவது பெரும்(பா) / ண முத்தரைசர் கங்கரை(சா)ள்ப் பாகற்றூர்த் தொறு "அருங்கள்வர்" கொண்ட ஞான் / று மீட்டுப் பட்டார் நொ / ச்சி சாத்தன் க(ல்)

கட்டாணை எனும் ஸ்ரீ புருசனுடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் முத்தரையரான பெரும் பாண கங்க அரைசர் ஆளும் பாகற்றூர் ஆநிரைகளை அருங்கள்வர் எனும் கூட்டத்தார் கவர்ந்து கொண்ட போது அவற்றை மீட்டு வீரசாவடைந்த நொச்சி சாத்தன் நினைவில் நட்ட நடுகல் இது. நொசசி சாத்தன் எவ் ஊரன், எந் நாடன், எவருடைய படைஆள் போன்ற செய்திகள் கல்வெட்டில் இல்லை.

பாண்டியர் ஆட்சி நடுகல்

பாண்டியர் ஆட்சிக் கால நடுகற்கள் மிகக் குறைவாகவே கிட்டி உள்ளன. இது பாண்டிய நாட்டில் நடுகல் மரபு அருகியே வழங்கியதைக் காட்டுகின்றது. பாண்டிய நாட்டில் தலைப்பலி நடுகற்கள் கூடுதலாக இருப்பது நோக்கத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகே உள்ள கழுகுமலை குசக்குடித் தெருவில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று காணப்படுகின்றது. (S. I. I. Vol. 14 No.31)

ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு யாண்டு இருபத்து மூன்று / அவ்வாண்டு மலை நாட்டு சடையங் கரு நந்தனார் / மேற் படை போய் அருவி ஊர்க் கோட்டை அழித்து / நன்று செய்து பட்டார் / பெரு நேச்சுறத்து எட்டி மண்ணனாயின மங்கல ஏனாதிகள் வீட்டு / கோயிற் சேவகரிருவர் அவனிலோருவன் / றொண்டை நாட்டு பூந்தண்மலி வினையந் தொழு சூரன் / ஒருவன் பேரேயிற் குடிச் சாத்தனக்கன்

நன்று - பெரிது, சிறப்பு, நல்லது; எட்டி - செட்டி(ச்+எட்டி), வணிகன், அரசன் வழங்கும் ஒரு பட்டம்; கோயில் – அரண்மனை
பாண்டியன் மாறன் சடையன் எனும் பராந்தக வீரநாராயணன் ( கி.பி. 866 - 911) உடைய இருபத்து மூன்றாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 889) மலை நாட்டை ஆளுகின்ற சடையன் கருநந்தன் மீது படை கொண்டு போய் அவனது அருவி ஊர்க் கோட்டையை பெருநேச்சுரம் எனும் ஊரை ஆளும் செட்டி மன்னனான மங்கல ஏனாதி என்பவனுடைய அரண்மனையில் காவல்பணி செய்யும் படைத் தலைவர்களான தொண்டை நாட்டின் பூந்தண்மலியைச் சேர்ந்த வினையன் தொழு சூரன் என்பவனும் மற்றொருவன் பேர் எயில்(கானப்பேரெயில்?) குடியைச் சேர்ந்த சாத்த நக்கன் என்பவனும் ஆகிய இருவரும் சேர்ந்து அழித்து பெருஞ் செயல் புரிந்து வீர சாவு எய்தினர்.

சடையன் கருநந்தன் சேரநாட்டின் மலைநாட்டை ஆண்ட ஆய் மரபு மன்னன். மங்கல ஏனாதி பாண்டியனுக்குக் கீழ்ப்பட்டு பெரு நெச்சுரம் எனும் கழுகு மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். இவன் சார்பில் போரிட்டு மாண்ட இரு மறவர்களும் வட தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல்லவர் ஆட்சிப் பகுதி நடுகறகளில் உள்ள சொற்களும் பாண்டியர் நடுகல் சொற்களும் வேறுபட்டிருக்கின்றன. இக்கல்வெட்டில் உள்ள மொழி அமைப்பு இக்கால் உள்ள மொழிஅமைப்பு போலவே இருப்பது நோக்கத் தக்கது.

நடுகல் கல்வெட்டு சொல்லும் வாண்டையார்!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் காட்டேரி என்ற ஊரில் அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல் இக்கால் வேலூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. (நடு. பக். 245)

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவீர பாண்டியனை / முடித்தலை கொண்ட / கோப்பரகேசரி பருமற்கு / யாண்டு நாலாவது பானைச் சுணையைப் பூத்து வாண்டை வந்தழித்த விடத்து ஒந் / டப்படுத்து எதிரே பத்தரம் மு / ருவிப் பட்டினத்துப் பட்டா / ன் தோவி டென்.

ஒண்ட - பதுங்கி, மறைந்து,ஒளிந்து; பத்திரம் - குற்றுவாள், அம்பு; பட்டினம் - கடற்கரை ஊர், காவிரிப் பூம்பட்டினம்.

சோழன் ஆதித்த கரிகாலன் உடைய நான்காம் ஆட்சி ஆண்டில் (கி.பி.954) சோழனுக்குப் படைத் தலைவனாய் இருந்த பூத்து வாண்டை என்பவன் பானைச் சுணை எனும் ஊர் மேல் படை கொண்டு வந்து அழித்த இடத்தில் மண்ணோடு மண்ணாகப் பதுங்கிப்படுத்து கொண்டிருந்த தோவிடன் என்ற படைஆள் வாண்டைப் படை தனக்கு அருகே வந்ததும் திடீரென்று எழுந்து திகைப்புற எதிரே தோன்றி குற்றுவாளை உருவிப் போரிட்டு கடற்கரை ஊரான காவிரிப்பூம்பட்டினத்தில் வீர சாவடைந்தான்.
கள்ளர்குலத்தில்வாண்டையார் என்ற பெயருடையோர் இன்றும் உள்ளனர். இவர்களுடைய முன்னோர் சோழப் பேரரசில் படைத்தலைவராய் பொறுப்பில் இருந்து உள்ளனர். காவிரி கடலில் கலக்கும் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை ஊரான காவிரிப் பூம்பட்டினம். அத்து என்ற சாரியை பூம்புகாரில் என்று பொருள் தருவதால் கடல் கொண்ட பின் சிற்றூராகிப் போன புகாரின் ஒரு அண்டைப் பகுதியில் பானைச் சுணை என்ற ஊர் இருந்து உள்ளது எனலாம். எனவே போர் சோழ நாட்டில் நடைபெற்று உள்ளது. ஆனால் மாண்ட தோவிடன் வாணியம்பாடி வட்டம் காட்டேரி ஊரைச் சேர்ந்தவன் என்பதால் அவன் நினைவில் இந் நடுகல் அவன் உறவினரால் அங்கு நடப்பட்டது. எனினும் தோவிடன் யார் சார்பில் போரிட்டான் என்ற செய்தி கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.

வீரத்தேவன் (எ) பட்டவன் சாமி


கிபி1311ல் பாண்டியர்களை வீழ்த்த டெல்லி சுல்தானாகிய அலவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் மதுரைக்கு பெரும்படையுடன் வருகிறார்.

அப்படி மாலிக்கபூர் மதுரைக்குள் நுழையும் முன் எல்லையில் கள்ளர்குல தளபதிகளான வீரத்தேவர்,கழுவத்தேவர் இருவரும் மாலிக்கபூர் படையுடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர்.

அப்படி உயிர் தியாகம் செய்த இருவருக்கும், போரில் பட்டு இறந்ததால் பட்டவன் என்கிற பெயரில் அந்த வட்டாரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் நடுகல் எடுத்து கடவுளாக வணங்கி வருகின்றனர்.

அந்த நடுகல்லில் வீரத்தேவர்,கழுவத்தேவருக்கு வலது கையில் வாளும்,இடது கையில் வளரியும் வைத்துள்ளனர்.

இன்றும் மதுரை கீழக்குயில்குடி சென்றால் அங்குள்ள மலையடி அய்யனார்,கருப்பு கோவிலில் இவர்களுடைய நடுகல்லை பார்க்கலாம்.

இதில் இன்னொரு கவனிக்ககூடிய விடையம் என்னவென்றால் கோவிலில் பாண்டிய மன்னனின் பழமையான சிலையை அந்த ஊரில் பாண்டியராஜன் சாமி என்று பூசை செய்து வணங்கி வருகின்றனர்.


கள்ளர் நாடான கீழக்குயில்குடியில் கள்ளருக்கு சொந்தமான பழமையான பாண்டியர் கோவிலில் இருக்கும் மன்னன் பாண்டியராஜனும் அவன் மகன் உக்கிரபாண்டியனும்

 திருச்சி ஆலம்பாக்கம் நடுகல்


தந்திநாட்டில் உள்ள ஆலம்பாக்கம் எனும் ஊரில் உள்ள சிவன்கோவில் கி.பி.10 ம் நூற்றாண்டு முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டுக்களின்படி இவ்வூர் தந்திவர்ம மங்கலம் என்றும் கோவிலின்பெயர் அமரேஸ்வரப்பெருமாள் கோயில் எனக்கூறுகிறது.








கள்ளர் பட்டையர்கள்;

சாய்ன சேமர்
முக்குடி சேப்ளார்
சேனப்ப சேப்ளயார்
காவேரியார்
கச்சராயர்
காவேரியார்
வல்லடியார்
அடக்கப்பாச்சியார்
வாண்டையார்...

புல்லி வம்ச நடுகல்








புல்லி வம்சத்தினன் இறந்ததை கூறுகிறது (பட்ட கல்), மதுரை மேலூர் சூரக்குண்டில் கள்ளரில் புல்லி வம்சத்தினர் என்ற ஒரு பிரிவினர் இன்றும் உள்ளனர். புல்லிகார் என்னும் பெருங்குடும்பம்  கள்ளந்திரியில் உண்டு.

காலத்தால் முற்பட்ட கூடலூர்  தமிழிக் கல்வெட்டு


வரலாற்றுச் சிறப்புமிக்க புலிமான் கோம்பை கல்வெட்டுகளைச் சமீபத்தில் காண நேர்ந்தது. இக்கல்வெட்டுகளைக் கண்டெடுக்கும் வரையில் முதல் தமிழிக் கல்வெட்டாக சங்ககாலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டைக் கருதி வந்தனர். ஆனால் 2006 ல் தேனிமாவட்டத்திலுள்ள புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டுகள் பொஆமு 4 ம் நூற்றாண்டு வரை பழமையானது என கருதப்படுகிறது.

'கல்

பேடு தீயன் அந்தவன்

கூடல் ஊர் ஆகோள்'

என்றுள்ளதுகல்வெட்டு. சங்கப்பாடலில் வரும் ஆநிரை கவர்தலே இங்கு 'ஆகோள்' என்று சுட்டப்படுகிறது. கூடலூரில் நடந்த இவ்வாநிரை கவர்தல் போரில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்ற வீரனுக்கு எடுப்பித்த நடுகல் இது. இக்கல்வெட்டுகள் இன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன. 

தேனீ கூடலூர் என்பது கள்ளர்கள் மட்டும் வாழும் ஊர். இந்த பகுதி கள்ளர்கள் பண்டைய காலம்முதல் ஆநிரை கவர்தலில் ஈடுபட்டுள்ளனர்.




கூடலூர் நகராட்சி பேயத்தேவர் பேரன் குபேந்திரன் தேவர்  இலவசமாக வழங்கியது


கீழக்கோட்டை குப்பான் அம்பலகாரரின் நடுகல்



குண்ணன்டார் கோயில் அரிகண்டம் நடுகல்


குண்ணன்டார் கோயில் வடமலை மற்றும் தென்மலை நாட்டு கள்ளர்கள் வாழும் முக்கிய ஊர் எனவும், இந்த கோயிலில் தான் நாட்டுக்கூட்டங்கள் நடைபெறுவதாகவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது.  கிபி 8 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோயில் உள்ளது.இக்கோயிலின் வலது புறம் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் ஒரு அரிகண்டம் நடுகல் உள்ளது. ''வீரர்கள், போரில் தன் அரசனுக்கு வெற்றி கிடைக்கவும், தன் தலைவன் உடல் நலம் பெறவும், ஊரின் நன்மைக்காகவும் காளி, கொற்றவை போன்ற தெய்வங்களை வேண்டிக்கொண்டு, அக்கோயில் முன்பு வாளால் தங்கள் தலையை தாங்களே அறுத்து அத்தெய்வங்களுக்கு காணிக்கையாகக் கொடுப்பர். இதனை கல்வெட்டுகள் 'தூங்குதலை குடுத்தல்' என்கின்றன. இந்தகைய வழிபாடு தலைப்பலி, அரிகண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. சிற்பத்தில் ஒரு வீரன் தனது கழுத்தை தானே அறுத்துக்கொள்வதை போன்று செதுக்கப்பட்டுள்ளது. வீரன் இடுப்பில் போர் வாள் உள்ளது. தற்காலத்தில் வழிபாடுகள் நடைபெறுவதாக தெரியவில்லை. 

தும்மக்குண்டு நடுகற்கள்








தும்மக்குண்டு கள்ளர் நாட்டில் வாள்,வேல், வளரியுடன் இருக்கும் கள்ளர் வீரர், வீராங்கனைகள்

' நன்றி: உயர் திரு . கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்