வியாழன், 12 டிசம்பர், 2019

வெண்கலக்குரல் வித்தகர் ஓ ஏ கே தேவர் (O.A.K. தேவர் வரலாறு)



மதுரை மாவட்டம் #உசிலம்பட்டி அருகில் உள்ள #ஒத்தப்பட்டி கிராமம்தான் ஒ.ஏ.கே. தேவரின் பூர்வீகம். பெற்றோர் இட்ட பெயர் #கருப்புத்தேவர். பள்ளிக்கூடத்தில் மற்றொரு கருப்பு இருந்ததால் ‘#ஒத்தப்பட்டி #ஐயத்தேவர் மகன் கருப்புத் தேவர்’ என்பதைச் சுருக்கி ஆசிரியர் வைத்த பெயர்தான் ஓ.ஏ.கே. தேவர். மதிய உணவு இடைவேளையில் நாடகப் பாடல்களைப் பாடுவதிலும் நீளமான வசனங்களைக் கணீர்க் குரலில் பேசுவதிலும் சிறந்து விளங்கினார்.

இதைக் கருப்புத் தேவரின் தந்தையிடம் பள்ளி வாத்தியார் பெருமையாகச் சொல்லிவிட்டுப்போக, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் ஐயத் தேவர். “இவனை இப்படியே விட்டா கூத்தாடிப் பயலா போயிடுவான். நாட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இருக்காது” என்று கூறி, பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊர் வழக்கப்படி மகனை ராணுவத்தில் சேர்த்துவிட்டார் ஐயத் தேவர்.

தந்தையின் சொல்லை மதித்து 17 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவர், அங்கேயும் பாட்டுப் பாடி, நடித்துக்காட்டி சக ராணுவ வீரர்களைச் சந்தோஷப்படுத்த, ஓ.ஏ.கே. வேலை செய்த சவுத் பட்டாலியன் முழுவதும் பிரபலமானார். நான்கு ஆண்டுகள் ராணுவச் சேவையை முடிந்திருந்த நிலையில் தந்தையார் இறந்த செய்தி தந்தியாக வர, அப்போது ஊருக்கு வந்தவர், திரும்பவும் தனது முகாமுக்குத் திரும்பவில்லை. நாடகம் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டது.



சக்தி நாடக சபாவின் மாணவர்


திருச்சியில் முகாமிட்டிருந்த ‘சக்தி நாடக சபா'வின்’ ‘கவியின் கனவு’ நாடகத்துக்குச் சென்றார் தேவர். நாடகம் முடிந்ததும், சபாவின் முதலாளி, சீர்திருத்த நாடகங்களின் சிற்பியாகக் கொண்டாடப்பட்ட ‘சக்தி’ டி.கே. கிருஷ்ணசாமியைச் சந்தித்தார்.

‘கவியின் கனவு’ நாடகத்தை தேவர் பார்ப்பது இது முதல்முறையல்ல; 25-வது முறை. சர்வாதிகாரியை எதிர்த்துக் கதையின் நாயகன் பேசும் வசனங்களை, கிருஷ்ணசாமியின் முன்னால் அட்சரம் பிசகாமல் கணீர்க் குரலில் தேவர் பேசிக்காட்ட, “ உன் ரத்தத்தில் நடிப்பு ஓடுகிறதடா!” என்று கிருஷ்ணசாமியிடமே பாராட்டு பெற்றார். கையோடு தனது சபாவிலும் சேர்த்துக்கொண்டார். எந்த நாடகத்தை நேசித்தாரோ அதே நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் தேவர். அப்படிப்பட்ட சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா உள்ளிட்ட பலர் நடிகர்களாக இருந்தனர்.

‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.




நாடக சபாவிலிருந்து மாடர்ன் தியேட்டர்


சக்தி நாடக சபாவில் சில ஆண்டுகளைக் கழித்த தேவருக்கு, அதன் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகிவந்த நிலையில், தனது சக நடிகர்களைப் போல் தனக்கும் சினிமா வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுகொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார்.

நண்பரைப் பிரிந்த தேவர், சென்னையில் எங்கே சென்று தங்குவது என்று தெரியாமல் பகல் முழுவதும் கீழ்ப்பாக்கம் ஸ்டூடியோக்களில் சுற்றித்திரிந்துவிட்டு, இரவில் மெரீனா கடற்கரையில் படுத்துறங்குவதை வழக்கமாகக் கொண்டார். கடற்கரையில் உறங்கினாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அதிகாலையில் எழுந்து குஸ்தியும் சிலம்பமும் விளையாடுவார்.

இதனால் தேவருக்குக் கடற்கரையில் நண்பர்கள் கிடைத்தார்கள். தினசரி கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு வரும் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்தித்தார். தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் வரச்செய்து மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே 100 ரூபாய் மாதச் சம்பளம் பெறும் துணை நடிகராக உயர்ந்தாலும் உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி வெளியே வந்தார் தேவர்.

மீண்டும் சென்னைக்கு வந்தவரை அரவணைத்துக்கொண்டார் உயிர் நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் கதவெண் 10-ல், ஐந்து ரூபாய் வாடகைக்கு ஒர் அறையை எடுத்துத் தங்கிக்கொண்டு, சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருடனும் மூன்றாவதாக இதே அறையில் வந்து சேர்ந்தார் ஓவியர் ராமச்சந்திரன்.















மறைத்தி௫ ஓ.ஏ.கே தேவ௫க்கும் மக்கள் கவிஞா் பட்டுக்கோட்டைக்கும் ஓவியா் ராமச்சந்திரனுக்குமான பந்தம் என்பது சொல்லில்
அளவிட்டுவிட முடியாது பட்டுக்கோட்டையும்
ராமச்சந்திரன் அவா்களும் ஒரே ஊா்க்காரர்கள் பட்டுக்கோட்டைக்கு அ௫கிலுள்ள தாமரங்கோட்டை கிராம ஊராட்சியிலுள்ள சிற்றூா் செங்கப்படுத்தான்காடு கிராமம்தான் கவிஞாின் ஊா் ஓவிய௫க்கு தாமரங்கோட்டைதான் சொந்த
ஊா். உசிலம்பட்டி நடிப்பு செங்கப்படுத் தான் காடு கவிதை தாமரங்கோட்டை ஓவியம் நடிகா் தேவா், கவிஞா் காா்காத்த வேளாளா், 
ஓவியா் செட்டியாா் மூவ௫மே மாபெ௫ம் திறமை சாலிகள் மட்டுமல்ல வறுமையிலும் நோ்மையும் தன்மானமும் காத்து போற்றும் நட்போடு புகழ் பெற வாழ்ந்தவா்கள் .


ரோஷத்துடன் மார்டன் தியேட்டரை விட்டு, வந்துவிட்டாலும் உடனடியாகத் துணை நடிகர் வாய்ப்பு கூட கிடைக்காத நிலை. பட்டுக்கோட்டைக்கும் வாய்ப்புகள் இல்லாமல் சாப்பாட்டுக்கே திண்டாடினார்கள். தேர்ந்த ஓவியரான ராமச்சந்திரன், சினிமா செட் வேலைகளுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அவர் வாங்கிவரும் வாரக் கூலிதான் நடிகரையும் கவிஞரையும் காப்பாற்றிவந்தது. ஒரு சூழ்நிலையில் ஓவியருக்கும் சம்பள பாக்கி விழ, பல நாட்கள் பட்டினியாகவே ஓடியிருக்கின்றன.

பசி தாள முடியாத நண்பர்கள், வீட்டு உரிமையாளரின் துணைவியாரிடம் சட்டைக்குக் கஞ்சி போட வேண்டும் என்று கூறி அரிசிச் சோறு வடித்த கஞ்சியை வாங்கிவந்து உப்பு போட்டுப் பருகிப் பசி தீர்த்திருக்கிறார்கள். இந்த இக்கட்டான நிலை ஓவியர் ராமச்சந்திரன் மூலம் கலைவாணருக்குத் தெரிய, தேவரை உடனே அழைத்துவரும்படி ஆள் அனுப்பினார்.

கைகொடுத்த கலைவாணர்

திறமையானவர்களைக் கைதூக்கிவிடுவதிலும் கையில் இருக்கும் அனைத்தையும் அள்ளிக் கொடுப்பதிலும் பெயர் பெற்ற வள்ளலாக விளங்கிய கலைவாணர், அப்போது பிரபல எடிட்டர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஓ.ஏ.கே. தேவருக்குப் பெற்றுக் கொடுத்தார். வீராசாமி என்ற அடியாளாக நடித்தாலும் அந்தப் படத்தின் மூலம் பளிச்சென்று அடையாளம் கிடைத்தது தேவருக்கு.

அந்தப் படத்தில் ஏற்ற கதாபாத்திரம் காரணமாக தேவருக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களே அமைய, மறுபடியும் கலைவாணரிடம் வந்து நின்றார் தேவர். அப்போது ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. எம்.ஜி.ஆரிடம் எடுத்துச் சொல்லி ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தை தேவருக்கு வாங்கிக் கொடுத்தார் கலைவாணர். திருமலை மன்னராக வெண்கலக் குரலில் தேவர் பேசி நடிக்க, மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.

எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பும் உருவானது. எம்.ஜி.ஆர் படங்களில் அடுத்தடுத்து இடம்பெறத் தொடங்கியதும் சிவாஜி நடிக்கும் படங்களுக்கும் அழைப்புகள் குவிந்தன. இருபெரும் கதாநாயகர்களின் படங்களில் மாறி நடிக்க ஆரம்பித்த தேவரின் நடிப்பு சிவாஜிக்குப் பிடித்துப்போக, தனது சொந்த நாடக மன்றமான சிவாஜி நாடக மன்றத்தில் மிகப் பெரிய இடம்கொடுத்தார் சிவாஜி. சிவாஜியுடன் திரையில் நடிக்கும் அதேநேரம் நாடகமேடையிலும் வெளுத்துக்கட்டினார் தேவர்.

அன்று இரக்கமில்லாத வில்லன் கதாபாத்திரங்கள் என்றால் எம். என். நம்பியார், பி.எஸ்.வீரப்பா, டி.எஸ். பாலைய்யா ஆகிய மூன்று நட்சத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். அதை மாற்றிக்காட்டியது 1957-ல் வெளியான ‘மகாதேவி’. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். பி.எஸ். வீரப்பாவுடன் இணைந்து நடித்தார்.

“வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய்ச் சொல் இந்த வார்த்தையை” என்ற தேவர் பேசிய வசனமும் அவரது நவரச நடிப்பும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக மிரட்டலான வில்லன் நடிகராக எழுந்து நின்றார். 

மேற்கத்திய கௌபாய் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், தமிழ் சினிமாவில் கௌபாய் ஜுரம் பரவிய 70-களின் காலகட்டம். கௌபாய் கதாநாயகனுக்கான இடத்தை மொத்தக் குத்தகை எடுத்துக்கொண்டவர் ‘தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட்’ எனப் புகழப்பட்ட ஜெய்சங்கர். கௌபாய் கதாநாயகனுக்கு சரியான சவாலாக அமையும் வில்லன் கிடைக்காவிட்டால், இந்த வகைப் படங்களுக்கே மவுசு கிடைத்திருக்காது. அந்தச் சவாலான இடத்தை நிரப்பியவர் ஓ.ஏ.கே. தேவர். ஜெய்சங்கரின் ‘கங்கா’ படத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவர்களில் ஒருவராக வந்து “அந்தக் கடவுளுக்கே நாங்க பயப்பட மாட்டோம்” என்று பகுத்தறிவு வசனம் பேசி நடித்தவர், கலைவாணர் மீது கொண்ட ஈடுபாட்டால் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கௌபாய் படங்களில் ஜெய்சங்கருக்கு உச்சமாக அமைந்த படம் ‘சி.ஐ.டி சங்கர்’. படம் தொடங்கியதும் வில்லனின் நிழல் உருவத்தையும் அந்த மிரட்டலான குரலையும் கண்டு மிரள ஆரம்பித்த ரசிகர்கள், யாரந்த வில்லன் என்று முகத்தைத் தேட ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்த காட்சிகளில் பார்த்துவிடலாம் என்று காத்துக்கொண்டிருந்தவர்களை அந்தக் குரல் மட்டுமே மிரட்டிக்கொண்டிருக்கும். படத்தின் இறுதிக் கட்டக் காட்சியில் வில்லனாகத் தோன்றினார் ஓ.ஏ.கே.தேவர். மிகவும் பிரபலமான தனது குரலை ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட முடியாத அளவுக்கு மாற்றிப் பேசிக் கதிகலங்க வைத்தார்.

அப்படிப்பட்டவர் ‘பூக்காரி’, ‘பட்டத்து ராணி’, ‘கங்கா கௌரி’ ‘நீயும் நானும்’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ உட்பட பல படங்களில் வில்லன் அல்லாத மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, தன் மீது படிந்த வில்லன் பிம்பத்தை மறக்கச்செய்தார். ‘சாது மிரண்டால்’ படத்தின் முதல் பாதி முழுவதும் ஆறு தோற்றங்களில் வரும் தேவர், இரண்டாம் பாதி முழுவதும் உறைந்த விழிகளோடு பிணமாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.

சமூகப் படங்களில் சாதனைகள் படைத்த கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் எல்லாப் படங்களிலும் இவர் தவறாமல் இடம்பெற்றுவிடுவார். கே.எஸ்.ஜி.யின் ‘குறத்தி மகன்’ படத்தில் கருத்து சொல்லும் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு அல்ல; தேவருக்குத்தான். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் விபீஷணனாக நடித்துக் கண் கலங்கவைத்தவர், அதே ஆண்டில் வெளியான ‘விக்கிரமாதித்தியன்’ படத்தில் கதிகலங்க வைக்கும் மந்திரவாதியாக நடித்திருப்பார். எல்லா ஒப்பனைகளும் ஆடைகளும் பொருந்தக்கூடிய தோற்றம் கொண்ட கலைஞராக ஓ.ஏ.கே. தேவர் விளங்கினார்.

சிவாஜிக்கே சவால்

வீரசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் உட்பட சிவாஜி மன்றம் நடத்திவந்த புகழ்பெற்ற நாடகங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்துவந்தவர் ஓ.ஏ.கே. தேவர். சிவாஜியுடன் நாடகங்களில் நடிக்கும்போது அடுத்த காட்சிக்கான ஆடையை மாற்ற மேடைக்குப் பின்புறமிருக்கும் ஒப்பனை அறைக்குச் செல்ல மாட்டாராம் சிவாஜி. மேடையின் பக்கவாட்டில் இருக்கும் மறைவான இடத்தில் நின்று தேவரின் நடிப்பைக் கவனித்துக்கொண்டே இருப்பாராம். “ஓ.ஏ.கே. கிட்ட கவனமா இருக்கனும்; எக்ஸ்ட்ரா டயாலாக் போட்டுக் கைதட்டல் வாங்கிடுவான். அடுத்த சீன்ல அதைவிட அதிகமா க்ளைப்ஸ் வாங்கணும்” என்று சிவாஜி பதற்றமடைவர் என குறிப்பிட்டுக்காட்டியிருக்கிறார் வானொலியாளர் கூத்தபிரான்.

தலைமுறைகளைக் கடந்து இன்றும் கொண்டாடப்படும் ‘கர்ணன்’ படத்தில், கனக மகாராஜாவாக நடித்திருப்பார் ஓ.ஏ.கே. தேவர். தனது மருமகனான கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்று தெரிந்ததும் கோபம் தலைக்கேறி, கர்ணனைக் கேலி செய்து புறக்கணிக்கும் காட்சியில் சிவாஜியுடன் போட்டிபோட்டு நடித்திருப்பார். சிவாஜியைத் திட்டுவதுபோல் உள்ள கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று சிவாஜியிடமே கேட்டிருக்கிறார் இயக்குநர் பி.ஆர். பந்துலு. “ஓ.ஏ.கே தேவரைத் தவிர அந்த வேடத்தில் வேறு யாரைப் போட்டாலும் எடுபடாது” என சிவாஜி சொல்லியிருக்கிறார்.

விட்டுக்கொடுத்த எஸ்.எஸ்.ஆர்.

ஓ.ஏ.கே. தேவர் தனது குரு சக்தி வி. கிருஷ்ணசாமி எழுதிய ‘வீரபாண்டிய கட்டப்போம்மன் நாடகத்தில் சிவாஜியைப் போலவே வீரபாண்டிய கட்டப்பொம்மன், வெள்ளையத் தேவன், உமைத்துரை ஆகிய எல்லா முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படமாகத் தயாரானபோது அதில் தேவருக்கு வேடம் இல்லை. உமைத்துரை வேடத்தை எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு ஒதுக்கியிருந்தனர். அவரும் ஏற்றுக்கொண்டார். படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று எஸ்.எஸ்.ஆர். கேட்க, அதில் ஓ.ஏ.கே. தேவருக்கு இடமில்லை என்றதும் கோபமாகிவிட்டார். “என் கேரக்டரை அவருக்கு கொடுங்க. அவர் இல்லாமல் வீரபாண்டிய கட்டப் பொம்மனா?” என்று தனது கதாபாத்திரத்தை அவருக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்.

இளையராஜாவுக்கு நாடக வாய்ப்பு

எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் ஓ.ஏ.கே. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ உட்பட பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தினார். சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இளையராஜா.

ஆனால் வாய்ப்பு அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய தயாரிப்பன ‘மாசற்ற மனம்’ நாடகத்தைத் திருச்சியில் அரங்கேற்ற ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன். பாவலர் சகோதர்களின் இசையை கம்யூனிஸ்ட் மேடைகளில் கேட்டிருந்த தேவர், உடனே சம்மதம் தெரிவித்தார். பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.

இந்த நாடகத்தில்தான் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.

எம்.ஜி.ஆர். கண்ட ஆதித்த கரிகாலன்

எம்.ஜி. ஆருடன் ‘பறக்கும் பாவை’, ‘விக்ரமாதித்தியன்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தாய்க்குப் பின் தாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் தேவர். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரே தயாரித்து, நடித்து, இயக்குவதாகத் திட்டமிடப்பட்டபோது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தானே ஏற்க விரும்பியிருக்கிறார் எம்.ஜி.ஆர். அதேபோல் குந்தவையாக வைஜெயந்திமாலா, அருண்மொழி வர்மனாக ஜெமினி கணேசன், வானதியாக பத்மினி என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஆட்களைத் தேர்வு செய்தவர் ஆதித்திய கரிகாலன் கதாபாத்திரத்துக்குத் தன்னைத் தேர்வு செய்திருந்ததை ஓ. ஏ. கே. தேவர் தன் நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார்.

மார்டன் தியேட்டரில் பணியாற்றும்போதே கலைஞர் மு.கருணாநிதி மீது தோழமை கொண்ட தேவர், கலைவாணரின் மறைவுக்குப் பிறகு அவருடன் மேலும் நெருக்கமானார். கலைஞர் கதை, வசனம் எழுதி வெற்றிபெற்ற ‘குறவஞ்சி’, ‘பூம்புகார்’ உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்தார். 1972 ல் தனது 48-வது வயதில் மறைந்த ஓ.ஏ.கே. தேவர், கடைசி வரை திமுகவின் மேடைகளில் பிரச்சார நட்சத்திரமாகவும் விளங்கினார். எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி கண்டாலும் எம்.ஜி.ஆர். மீது வைத்திருந்த நட்பை மாற்றிக்கொள்ளவில்லை. தேவர் இறந்தபோது அஞ்சலி செலுத்த முதலில் வந்தவர் எம்.ஜி.ஆர்.

தேவர் கடைசியாக நடித்த படங்கள் ‘வாழையடி வாழை’, ‘சிசுபாலன்’. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாக்தாத் பேரழகி’. தந்தையின் வழியில் நின்று திரை நடிப்பைத் தொடர்ந்துவருகிறார் அவரது மகன்களில் ஒருவரான ஓ.ஏ.கே. சுந்தர்.


எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் ஓ.ஏ.கே. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ உட்பட பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்தினார். சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இளையராஜா.

ஆனால் வாய்ப்பு அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய தயாரிப்பன ‘மாசற்ற மனம்' நாடகத்தைத் திருச்சியில் அரங்கேற்ற ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன். பாவலர் சகோதர்களின் இசையை கம்யூனிஸ்ட் மேடைகளில் கேட்டிருந்த தேவர், உடனே சம்மதம் தெரிவித்தார். பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன.

இந்த நாடகத்தில்தான் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்கள். பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.

மாமன் மகள் படத்தின் மூலம் அறிமுகமானார். 
மூன்றெழுத்து, 
நீயும் நானும், 
மகேஸ்வரி, 
உத்தம புத்திரன், 
எதிர் நீச்சல், 
தங்கச்சுரங்கம், 
பொற்சிலை, 
வீரபாண்டிய கட்டபொம்மன், 
சாது மிரண்டால், 
புதிய பறவை, 
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, 
வீரக்கனல், 
குறவஞ்சி, 
தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மகாதேவி, 
தாய்க்குப் பின் தாரம், 
உலகம் இவ்வளவு தான், 
வாழையடி வாழை, 
கர்ணன்,
ராமன் தேடிய சீதை, 
நான் ஆணையிட்டால், விக்கிரமாதித்தன்,
பறக்கும் பாவை, 
கண்ணன் என் காதலன்,
ராமு, 
பட்டத்து ராணி,
கங்கா கௌரி, 
கங்கா, 
பூக்காரி, 
அன்பு வழி , 
நான் யார் தெரியுமா, 
ஆதிபராசக்தி, 
பாக்தாத் பேரழகி [இவரது மரணத்திற்குப் பின் இப்படம் வெளிவந்தது.] 
இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கனத்த சாரீரமும், பருத்த உடல்வாகும், வளமான உச்சரிப்பும் கொண்டவர். இவர் தனது 49-வது வயதில் காலமாகிவிட்டார். இவரது மனைவி செல்லம் என்பவரும் நடிகையாவார். இவரது மகன் ஓ.ஏ.கே.சுந்தர் தற்போது திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார்.

மார்டன் தியேட்டர்ஸ் சேலத்தில் நடந்த சில சுவாரசியமான தகவல்:

முத்தையா ( கண்ணதாசன்), முக்தா சினிவாசன், ஜலகண்டபுரம் கண்ணன்
முக்தா ராமசாமி சேதுமாதவ நாயர் எங்கள் எல்லோருக்கும் தங்குவதர்க்கு modern theatres சேலம் சீரங்கபாளையத்தில் ஒரு வீடு எடுத்து தங்க வைத்தார்கள்

பின்னாலில் கலைஞர் அங்கு தங்கி கதை வசனம் எழுதினார். இதை தவிர Comedian A கருணாநிதி KK சௌந்தர் கோவிந்தன் OAK தேவர் கம்பெனி நடிகர்கள் தங்கினார்கள்

A கருணாநிதி எப்பவுமே Spring முடி
சின்ன கண்ணாடி ய பார்த்து சுருட்டி விட்டு கொண்டிருப்பார். அது ஒரு முக்கா மணி நேரம் சுருட்டி கொண்டிருப்பார்; பின்னாடி யே OAK தேவர் வருவார். பின்மண்டையில் தட்டி " எந்திரிடா... சதா மயிர சுருட்டிண்டு" ஓடுவார்" அதற்கு" you Bad man.. கச்சா முச்சான்னு கத்தி கொண்டு துரத்துவார். பெரிய காம்பௌண்ட் னால Tom and jerry போல ஓடி கொண்டிருப்பார்கள். 

இது தான் அங்கே உள்ளவர்களுக்கு Entertainment. Ellis Dungan OAK தேவரிடம் "Weight போடனும் (அப்ப ரொம்ப ஒல்லி யாக இருப்பார்). அப்ப தான் ரோல் கரெக்ட ஆக இருக்கும்ன்னு சொல்ல. A கருணாநிதி தான் advisor; அவர் இவருக்கு வேப்பங் கொழுந்தோ அல்லது வேறு கொழுந்து கொடுத்து . Non Veg எருமை தயிர்சாதம் இப்படி சாப்பிட வைத்து. மதியம் தூங்க வைத்து வெயிட்டை ஏத்திட்டார். Ellis Dungan பயந்து போய் "Oh my god.. you have put on more weight. you look so fat. ..you have to reduce weight.. திருப்பி அனுப்பிட்டார் OAK தேவர் " அடப்பாவி கண்டத தின்ன வச்சு காரியத்தை கெடுத்துட்டியே " கைல குச்சி யோட கருணாநிதிய துறத்த அவர் ஓடி கொண்டிருந்தார். இருந்தாலும் அவர்கள் நட்பு மாறலை.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்