சனி, 14 டிசம்பர், 2019

திருச்சி சிவா சேதுராயர்



திருச்சி சிவா சேதுராயர் அவர்கள் 6 ஜூன் 1954 ஆம் ஆண்டு ஆர். நடேசன் சேதிராயர் அவர்களுக்கு மகனாக தஞ்சை இளங்காட்டில் பிறந்தார்.

இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவை (மேலவை) உறுப்பினரும், திமுக வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான திருச்சி நடேசன் சிவா (அ) திருச்சி என். சிவா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான இவர் சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமாவார்.

வாழ்க்கை துணைவியார் தெய்வசிகாமணி. 

ஒருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், தற்போது 2019 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார்.












இலங்கைவாழ்த் தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் அதிகமாகக் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். நூல்கள் பலவற்றையும், அவரின் கட்சிப் பத்திரிகையான முரசொலியில் பல சமுதாய, விழிப்புணர்வு மற்றும் அரசியல் தொடர் கட்டுரைகளையும் எழுதியவர். அவர் எழுதிய நூல்களில் தலைநகரில் தமிழன் குரல் என்ற நூல் புகழ்பெற்ற நூலாகும், மேலும் குற்றவாளிக் கூண்டில் சாக்ரடீஸ் என்ற நூலையும் எழுதியுள்ளார். மாணவப் பருவத்திலேயே திமுக மாணவரணியில் சேர்ந்து கட்சித் தொண்டாற்றியவர். 1976 நெருக்கடி நிலையின் போது மிசாக் கைதியாகச் சிறை சென்றவர்.

2019 ஆம் ஆண்டின் மகாராஷ்டிராவின் 'லோக்மத்' மீடியா குழுமம் சார்பில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிற்கு, சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.  டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, விருதினை வழங்கினார். 

கடந்த 45 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நபர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று முதன்முறையாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்தவர் திமுக எம்பி திருச்சி சிவா.

மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதம், திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தாக்கல் செய்தார். அதில், "சமூகத்தில் சுமுகமான முறையில் திருநங்கைகளும் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்களை போலவே திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும்"  என்று குறிப்பிட்டிருந்தார்.

திருநங்கைகளின் வாழ்க்கைக்கான உரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாத்தல், உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாப்பது, அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது, கவுரவமான வசிப்பிடங்கள் மற்றும் அவர்களுக்கான குடும்பங்களை அமைப்பதற்கான உரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது.

இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய திருச்சி சிவா, ‘இது தான் சரியான நேரம். இந்த மசோதாவை நிறைவேற்ற இதைத் தவிர வேறு வழியில்லை என்றே நான் கருதுகிறேன். எனவே அரசு பெருந்தன்மையுடன் இதனை ஆதரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து இந்த மசோதாவை ஆதரித்து பல உறுப்பினர்களும் பேசினர். பின்னர் இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ‘திருநங்கைகள் உரிமை சட்டம் 2014’ என்ற பெயரிலான இந்த சட்டம் இனிமேல் நாடாளுமன்றத்துக்கு விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் அனுப்பிவைக்கப்படும். நாடாளுமன்றத்திலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதி ஒப்புதலுடன் இச்சட்டம் அமலுக்கு வரும்.

இது குறித்து செய்தியாளர்களிடம் திருச்சி சிவா கூறுகையில், ‘‘சமூகத்தில் திருநங்கைகள் புறக்கணிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு எதிரான உடலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் கருத்து ரீதியான வன்முறைகள் அதிகரித்த நிலையில் இது போன்றதொரு மசோதாவை தாக்கல் செய்யும் முடிவுக்கு வந்தேன். இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற ஒத்துழைத்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

இதற்கு முன்பு 1970ஆம் ஆண்டு தான் ஒரு தனிநபர் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அது உச்ச நீதிமன்றம் (கிரிமினல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அதிகார வரம்பை விரிவுபடுத்துதல்) தொடர்பானது ஆகும். அதன் பின்னர் 45 ஆண்டுகளில் இப்போது ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்