புதன், 25 டிசம்பர், 2019

விளாச்சேரி ஆதிசிவன் கோவில்





பாண்டியர் காலத்து கள்ளர்களுக்கு பாத்தியப்பட்ட கள்ளர் நாட்டு விளாச்சேரி ஆதி சிவன் கோவில். மேலஉரப்பனூர் வெள்ளைத்தேவர் மக்கள் நான்கு பங்காளி கூட்டம். விளாச்சேரி ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்றனர். 


விளாச்சேரியில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்கிவரும்

பெரியவெள்ளையன்
சின்னவெள்ளையன்
கூனன்
பட்டியான் வகையராக்கள்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் பல ஏக்கர் பரப்பளவில் இயற்கை வளத்தோடு, அமைதியும் பக்தியும் நிலவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான பழமையான ஆதி சிவன் கோவில் உள்ளது. இங்கு ஆதிசிவன் சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்புரிந்து வருவதாக ஐதீகம். சிவன் கோவில் என்றாலே அங்கு கருவறைக்கு முன்பு நந்தீஸ்வரர் வீற்றிருப்பார். ஆனால் பெருமை வாய்ந்த இந்த திருத்தலத்தில் நந்தீஸ்வரர் இல்லாமல் சிவன் எழுந்தருளியிருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

பல தலைமுறைகளாக வழிபட்டு வந்த இந்த கோவிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், அதற்கான திருப்பணி வேலைகளை தொடங்க மேல உரப்பனூர், விளாச்சேரி நான்கு தேவர்கள் வகையறாக்கள், திருப்பணி நிர்வாக குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி பெரிய கோவிலின் நுழைவு வாயிலில் 5 நிலைகள் கொண்ட 72 அடி உயர புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் 101 அடி நீளம், 51 அடி அகலம் கொண்ட பிரதான மண்டபத்துடன் இந்த கோபுரம் கட்டப்பட்டுள்ளது. சின்ன கோவில் வளாகத்தில் 67 அடி நீளம், 47 அடி அகலம் கொண்டு சிறப்பு மண்டபத்துடன் ஒரு சிறிய கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இவை கம்பீரமாக காட்சியளிப்பது, பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதில் மேல உரப்பனூர், விளாச்சேரி நான்கு தேவர் வகையாறாக்கள், கோவில் திருப்பணி நிர்வாக குழுவினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் நிற காவி உடை அணிந்து கைகளில் காப்பு கட்டி கடும் விரதம் தொடங்கினர். முகூர்த்தக்கால் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததையொட்டி 300 ஆண்டுகளுக்கு பின்பு மே 27,  2018  மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 















ஆய்வு : மணிமாறன் தேவர் 

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்