தஞ்சை, சீராளூர் (பெரம்புநாடு) அம்பலகாரர் ஶ்ரீமான், வள்ளல்!
ரா.இராமலிங்கசுவாமி வார் (ICS) ( London Bar in Law )
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அயல்நாட்டில் பயின்றவர் சீராளூருக்கு சொந்தக்காரர்; கள்ளர்களுக்காக உழைத்தவர்!
(அக்காலத்தில் வல்லம் 1ம் நம்பர் சாலையில் இரு கார்களுக்கு மட்டுமே இரவு 7 மணிக்கு மேல் அனுமதி ஒன்று ஆங்கிலேய ஆட்சியர்; இரண்டு இராமலிங்கசாமி நாட்டார் பயன்படுத்திய ரோல்ஸ் ராயல்)
மன்னர் அரசினர் சரபோஜி கல்லூரிக்கு 60வது ஏக்கர் நிலத்தினை தானமாக அளித்தவர் (இன்றும் இவரது பெயரில் விருதுகள் அக்கல்லூரியில் அளிக்கப்படுகின்றன)
பழனியில் பங்குனி உத்திர கள்ளர் மண்டகப்படிக்கு தலைவர்; அங்கே மண்டபமும் ஏற்படுத்தியுள்ளார்
முன்னாள் இராணுவ நலச்சங்கத்திற்கு ஒரத்தநாடு அருகே சுமார் 40 ஏக்கர் நிலத்தினை தானமாக அளித்தவர்
1969- ல் ₹9 லட்சத்தினை SBI ல் டெபாசிட் செய்தவர், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியை ஆரம்பித்தவர்.
ஏழை, எளியோருக்காக இயங்கும் செங்கிப்பட்டி (TB சானிடோரியத்திற்கு) 60 ஏக்கர் நிலத்தினை அளித்த கொடை வள்ளல் இன்றும் இவர் புகைப்படம் உள்ளது.
ராஜ மன்னார்சாமி நாட்டாழ்வார்
தஞ்சையில் மருத்துவக்கல்லூரி அமைய காரணமான தளகர்த்தாக்களில் ஒருவர்.
மத்திய கூட்டுறவு வங்கிக்கு துணைத்தலைவர், இன்றும் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியில் இவர் புகைப்படம் உள்ளது.
முன்னாள் கெளரவத்தலைவர் சிறுவர் சீர்திருத்த பள்ளி தஞ்சாவூர்
மேனாள் தலைவர் கள்ளர் பெருமன்றம், தஞ்சாவூர்
அனைத்து வங்கிகளின் கெளரவ சட்ட ஆலோசகர்
இவருடைய சகோதரர் ராஜ மன்னார்சாமி நாட்டாழ்வார் ராசாளியாரின் வீட்டில் மணம் முடித்தவர்; இதேபோல இவருடைய தாத்தாவின் தங்கையை இரெகுநாதா இராமானுஜ ராசாளியாருக்கு மணம்முடித்துக்கொடுத்துள்ளனர்.
நடுக்காவேரி வேங்கடசாமி நாட்டார் குடும்பத்தினருடனும் உறவுமுறை உள்ளது.
நடுக்காவேரி வேங்கடசாமி நாட்டார் குடும்பத்தினருடனும் உறவுமுறை உள்ளது.
இவர் மணம் முடித்தது கூனம்பட்டி ஜமீன் என்றழைக்க கூடிய மேற்கொண்டார் வீட்டில்.
இப்போது உள்ள ஐயா முருகையன் நாட்டாழ்வார் மணம் முடித்தது ஆற்காடு கூழாக்கியார் வீட்டில், இவருடைய தந்தை தண்டாயுதபாணி நாட்டாழ்வாருக்கு உற்ற தோழனாக விளங்கியவர் என் தாத்தா கருப்பையா கொல்லத்திரையர்.
மார்ஸ் அந்தோணிசாமி (அ. மார்க்ஸ்) தனது குறிப்பில்
ஒரு நாள் விடுதியில் யாரொ வந்திருப்பதாகச் சொல்லி என்னை அழைத்தனர். வெள்ளைச் சாமிச் சோழகர். வெள்ளை உடை, சிவந்த உடல். கையில் தங்க மோதிரங்கள். முகம் நிறையச் சிரிப்பு. ஏதோ பேப்பர்களில் கையெழுத்துப் போடச் சொல்லி வாங்கிச் சென்றார்.
அடுத்த மாதம் எனக்கு ராமலிங்கசாமி ஸ்காலர்ஷிப் உத்தரவாகியது. அரசு உதவித் தொகையைக் காட்டிலும் 50ரூ கூட. ராமலிங்கசாமி என்கிற கள்ளர் சமூக நிலப் பிரபு ஒருவர் கல்வியால் பின் தங்கியிருந்த தனது சமூக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தொடங்கி வைத்த என்டோமென்ட் ஸ்காலர்ஷிப், நான் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவன் இல்லை ஆயினும் அடுத்த மூன்றாண்டுகள் என்னக்குக் கிடைத்தது.
ஆய்வு : பரத் ராமகிருஷ்ணன் கூழாக்கியார்
ஆய்வு : பரத் ராமகிருஷ்ணன் கூழாக்கியார்