திங்கள், 30 டிசம்பர், 2019

பிரேமானந்தா சுவாமிகள்



ரவிகுமார் என்ற பிரேம்குமார் மழவராயர் இயற்பெயரைக் கொண்ட பிரேமானந்தா சுவாமிகள் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சோமசுந்தரம் மழவராயர் மகன் ஆவார்.  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு அருகில் உள்ள வளத்தாமங்கலம் அவரது சொந்த ஊர்

இலங்கையின் மலையகத்தில் மாத்தளை நகரில் தனது ஆசிரமம் ஒன்றையும் அனாதை இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார். ஈழப்போரை அடுத்து இவரும் இவரது சீடர்களும் 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். அவருடைய அனாதை இல்லத்தில் இருந்த சிலரையும் இவர் தன்னுடன் கூட்டிச்சென்றார். ஆரம்பத்தில் திருச்சிராப்பள்ளியில் ஓர் இடத்தில் தனது ஆசிரமத்தை ஆரம்பித்தார். 1989 இல் பாத்திமாநகருக்கு குடிபெயர்ந்தனர்.

இந்த ஆசிரமம் ஏறத்தாழ 150 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலமாகும். இந்த ஆசிரமத்தி, பல பெண்களும் சிறுவர்களும் அனாதைகளுமாக கிட்டத்தட்ட 200 பேர் வரை தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவ்வாசிரமத்தின் கிளைகள் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஏனைய பல நாடுகளிலும் திறக்கப்பட்டன.

இவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்ததாக 1997 ஆம் ஆண்டு எழுந்த பலத்த சர்ச்சை மற்றும் புகார்களின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.



இது ஒரு பொய் வழக்கு என்று பிரேமானந்தா சுவாமிகள் கூறுகிறார்.

அவர் பத்திரிகையில் தந்த விளக்கம்.

உங்களது ஆசிரமத்தில் பணிபுரிந்த ஓர் இளம் பெண்ணையே கற்பழித்தீர்கள். அதனை நேரடியாகப் பார்த்துவிட்ட ஒரு இன்ஜினீயரை கொலை செய்தீர்கள்... என்கிற புகார்களுக்காகத்தானே உங்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை?.

“அந்தப் பெண் கைக்குழந்தையா இருக்கும்போதே அவளை குளிப்பாட்டி, ஜட்டி போட்டுவிட்டு பெற்ற மகளைப் போல வளர்த்தேன். அந்தப் பெண்ணை எப்படி நான் கற்பழிக்க முடியும்? நான் என்ன மிருகமா? எனக்கு அப்படியொரு ஆசையிருந்தா, என்னிடம் இருந்த பணத்திற்கு அழகான பெண்களோடு இருந்திருப்பேன். காதல் வயப்பட முதலில் அந்தப் பெண் ஓரளவு அழகாக இருக்கவேண்டும். நான் கற்பழித்ததாகக் கூறப்பட்ட பெண் அப்படி இல்லை. தவிர, இன்றும் அந்தப் பெண் எனது ஆசிரமத்தில்தான் தங்கியிருக்கிறார். நான் கற்பழித்ததை நேரில் பார்த்த சாட்சியான நந்தகுமார் என்ற இன்ஜினீயரை கொலை செய்ததாக ஒரு வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் பதிவு செய்தனர். ஆனால் உண்மையில் நந்தகுமார் இன்ஜினீயரே அல்ல. ப்ளஸ் டூ வரை படித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அவர். தன்னைத்தானே எதையாவது எடுத்து தாக்கிக் கொள்வது அவரது வழக்கம். அப்படிப்பட்டவரை நான் முழங்காலுக்குக் கீழே பிரம்பால் அடித்ததாகவும், அதனால் அவர் இறந்ததாகவும் சார்ஜ் ஷீட் போட்டுள்ளனர். எனவே, இதெல்லாம் எனக்கு எதிரான சதி.’’

உங்களுக்கு எதிராக அப்படி சதி செய்தவர்கள் யார்?

“அப்படிக் கேளுங்க! திருச்சி ஆசிரமத்திற்கு அருகில் இருந்த நிலத்தை எல்லாம் வாங்கிப்போட்டு ஆசிரமத்தை விரிவுபடுத்தினேன். அந்த இடத்தை சசிகலா கேட்டதாகவும், நான் தர மறுத்ததால்தான் இப்படி பழிவாங்கப்பட்டதாகவும் ஊரே பேசிக்கொண்டது. பத்திரிகைகளில் என்னைப் பற்றி வந்த செய்தியின் அடிப்படையில் மாதர் சங்கத்தினர் எனக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள என்னைக் கைது செய்து உள்ளே போட்டுவிட்டார். கலைஞரும் ஆட்சியை காப்பாத்திக்கிறதுக்காக என்னை வெளியே விட மறுத்துவிட்டார்.

தவிர, ஆன்மிகரீதியான சதிகளும் இருக்கு. எனது ஆன்மிகப் பயணத்தினால் உலக நாடுகளில் இந்து மதத்தைத் தழுவியவர்கள் பலர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்ப்ளண்ட் கிறிஸ்ட் என்பவர் எனது ஆசிரமத்தில் இருந்த அம்பிகானந்தா என்பவரை எப்படியோ வளைத்துப்போட்டு, என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திவிட்டார். இது எனக்கு எதிரான சதி மட்டுமல்ல, இந்து ஆன்மிகவாதிகளுக்கு எதிரான சதியாகும்.’’

மதத்தையும் இதில் நுழைக்கிறீர்களே?

“ஆமாம். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ஜோசப் என்கிற பாதிரியார் எனக்குப் பிறகு செக்ஸ் மற்றும் கொலை வழக்கில் கைதானவர்தான். எப்பவோ அவர் ஜாமீனில் விடுதலையாகிவிட்டார். ஆனால் சங்கராச்சாரியாரை என்ன பாடு படுத்திவிட்டார்கள்.

உங்களுடன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திவ்யா என்ன ஆனார்?

“திவ்யாவை எனது மனைவி என்று பத்திரிகைகளில் எழுதிவிட்டார்கள். உண்மையில் அவர் என் உடன்பிறந்த சகோதரி. இப்படி உறவுகளையே கொச்சைப்படுத்தி எழுதியதால், அவர் அமெரிக்காவுக்குச் சென்று விட்டார். இனி இந்த மண்ணில் கால் பதிப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.’’

சரி... எப்படித்தான் இப்படி காவி உடைக்கு மாறினீர்கள் என்கிற கதையையும் சொல்லிவிடுங்களேன்?

“என் தந்தை பிறந்து வளர்ந்தது இந்தியாதான். பிழைப்புக்காக அவர் இலங்கை சென்றார். நான் இலங்கையில்தான் பிறந்தேன். கள்ளர் இனத்தைச் சேர்ந்தவன். பதினேழு வயது வரை மாமிசம் சாப்பிட்டு வளர்ந்தவன்தான் நான். சிறுவயதில் இருந்தே ஒருவரின் முகத்தைக் கண்டு, ‘உனக்கு இன்ன பிரச்னை, அடுத்து இப்படி நடக்கப் போகிறது’ என்று சொல்வேன். அது அப்படியே நடக்கும். சிறு வயதிலேயே விபூதி, பூமாலை போன்றவற்றை வரவழைத்து சித்துவேலை காட்டுவேன். இந்த விஷயம் பரவியதால் என்னிடம் பலரும் அருள்வாக்கு கேட்கத் தொடங்கினர். இப்படித்தான் வெறும் பிரேம்குமாராக இருந்த நான் பிரேமானந்தாவாக காவி உடைக்குள் வந்தேன்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, துறவு வாழ்க்கைக்கு மாறி இலங்கையின் பல பகுதிகளிலும் 29 ஆசிரமங்களை நிறுவினேன். அங்கு பவுத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள் கூட எனது அருள் வாக்கு கேட்டு இந்து சிங்களவர்களாக மாறினர். இதனால் 1983ல் தமிழர் சிங்களர் போரின்போது சிங்கள ராணுவம் எனது ஆசிரமங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியது. ஒரு முறை ராணுவ குண்டுவீச்சில் எனது ஒரு ஆசிரமம் தீப்பிடித்ததால், அங்கிருந்த குழந்தைகளை காப்பாற்றிக் கொண்டு எனது பக்தரான கலெக்டர் ஒருவர் உதவியுடன் இந்தியா வந்தேன்.

பிறகு ஆறு மாத காலம் சென்னையில் இருந்தேன். அப்போது இலங்கைத் தமிழர் ஒருவர் மூலம் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்தேன். அவர்தான் எனக்கு திருச்சியில் இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து ஆசிரமம் அமைக்க உதவினார். அதில் ஆசிரமம் அமைத்து இலங்கைப் போரில் பெற்றோரை இழந்து தவித்த ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து வந்தேன். பத்து ஆண்டு காலம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. 

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்திற்குக்கூட நான் சென்று இருந்தேன். என்னிடம் அருள்வாக்கு கேட்காத முக்கியப் பிரமுகர்களே இங்கு கிடையாது.’’

நீதி என்பதும் தர்மம் என்பது எளியவன் வாழ்க்கையில் மட்டுமே "அறம் பிழைத்தால் கூற்றமே அறம் ஆகும்" என்பதற்கிணங்க தொழிற்படும் !


21 பெப்ரவரி 2011ல் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மரணமடைந்தார்

பிரேமேசுவரர் கோவில்

பிரேமானந்தரின் சமாதி











.
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆராத்தி எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்