செவ்வாய், 24 டிசம்பர், 2019

வாலிபால் வீரர் முத்துசாமி கண்டியர்




மன்னார்குடி  எடமேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (21). வாலிபால் வீரர். இந்திய கைப்பந்து அணி நேற்று முதல் வரும் 22 ம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்பர்க் நகரில் நடைபெறும் 21 வயதுக் குட்பட்டோருக்கான  பிரிக்ஸ் 2018 வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகிறது. பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக முத்துசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முத்துசாமி எடமேலையூரில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு வரை படித்தார்.

அப்போது உள்ளூர் வாலிபால் கழகத்தில் பயிற்சி பெற்ற போது, முத்துசாமியின் திறமையை அறிந்த சங்கத்தினர் அவரை திருச்சி, சென்னை, கோவையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர்த்து பயிற்சி அளித்தனர். அப்போது முத்துசாமி பள்ளி மற்றும் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று  தனி முத்திரை பதித்தார். இதன் பின்னர் கல்லூரியிலும் வாலிபால் அணியில் இடம்பிடித்து சிறந்த வீரராக விளங்கினார். பல்கலைக்கழக அளவில் நடந்த போட்டிகளில் இவர் பங்கேற்ற அணிகள் வெற்றி வாகை சூடின.

பல்வேறு போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகனாக பரிசுகளை பெற்ற முத்துசாமிக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வேலை வழங்கியது. அத்துடன் அந்நிறுவனம் தனது கேரள அணியில் விளையாட முத்துசாமிக்கு அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து இந்திய வாலிபால் அணியில் இடம் பிடித்த முத்துசாமி கடந்த 8 மாதமாக இந்திய அணியின் பயிற்சி முகாமில் கலந்து  கொண்டார். தற்போது இந்திய அணியின் கேப்டனாகவும் முத்துசாமி உயர்ந்துள்ளார். இதுகுறித்து முத்துசாமியின் தயார் பாப்பாத்தி கூறுகையில், கணவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரும் சிறந்த கபடி வீரர் ஆவார். எனது மூன்றாவது பிள்ளை முத்துசாமி. எடமேலையூர் வாலிபால் கழகத் தினரின்  வழிகாட்டுதலில் தற்போது  இந்திய அணிக்கு கேப்டனாக உயரும் அளவிற்கு வந்துள்ளார். இது பெருமை அளிக்கிறது. முத்துசாமி இந்திய அணிக்கு கேப்டனாக சிறப்பாக விளையாடி பெருமைகளை பெற்று தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார்.

முத்துசாமி இந்திய வாலிபால் அணிக்கு கேப்டன் ஆனதை அறிந்த எடமேலையூர் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எடமேலை யூர் கிராம மக்கள் கூறுகையில், முத்துசாமி சிறந்த வாலிபால் வீரர். அவர் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தரும் அளவிற்கு சிறப்பாக விளையாடி ஊருக்கு பெருமை சேர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்