சனி, 30 மார்ச், 2019

கட்டலூர், பெரம்பூர் நரசிங்க தேவர் மற்றும் அழகியமணவாளத்தேவர்





ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு கூறும் பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியது. இது...  உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் - என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.




இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின.


வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. இப்பகுதியில் 1391இல் வடகோநாட்டு நாட்டவர், பேராம்பூர் அரசு என்ற ஆட்சி தலைவரான நரசிங்கதேவர்க்கு அரசு சுவந்திரம் என்ற ஆளும் உரிமையினை வழங்கியுள்ளனர். இதனால் இவ்வாட்சியர் தம் ஆளுகைக்கு உட்பட்ட புறகுடி மக்களிடமிருந்து வரியினைப் பணமாக வசூலிக்கும் அதிகாரத்தினைப் பெற்று உள்ளார். விளிம்புநிலையிலிருந்த புறகுடிமக்கள் வரிசெலுத்த வேண்டியிருக்க, உள்குடிமக்கள் பற்றிய குறிப்பு இல்லை.


சங்க இலக்கியமான புறநானூறில் குறிப்பிட்ட ஆவூர் கிழார் பாடல்களில் வரும் ஆவூர் இந்த பெரம்பூர், கட்டலூர் சிற்றரசர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான விராலிமலையில் உள்ள ஊர்களான கட்டலூர், பெரம்பூர் ஊரை மையமாக கொண்டு சோழர், பாண்டியர் காலம் முதல் ஆங்கிலேய ஆரம்ப காலம் வரை ஆட்சி புரிந்தவர்கள் நரசிங்க தேவர்கள்.

இந்த கள்ளர் குல சிற்றரசர்களை பற்றி முறையான கல்வெட்டுகள் கிபி1391ஆம் ஆண்டில் கிடைக்கப்பெருகிறது. அந்த கல்வெட்டுகளில் பெரம்பூர் அரசர்கள் என்றே குறிக்கப்பட்டுள்ளது.

முதல் கல்வெட்டில் சிவன்கோவில் தெற்கே பொரித்துள்ள வாசகப்படி பெரம்பூர் அரசு நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.

இரண்டாவது கல்வெட்டில் குன்னாண்டார் கோவிலில் பொரிக்கப்பட்ட வாசகப்படி சோழவளநாட்டு வடகோனாட்டு பெரம்பூர் அரசு அடைக்கலங்காத்தவனான நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.

இப்படியாக சோழர் காலம் தொட்டே பெரம்பூர் அரசை அரசாண்ட கள்ளர்குல சிற்றரசர் நரசிங்க தேவன் வழியினர்.

பிற்காலத்தில் திருமலை நாயக்கர் காலத்தில் சோழர்கள்,பாண்டியர்கள் வீழ்ச்சிக்கு பின்பு அரசர் இடத்தில் இருந்து பாளையக்காராக மாற்றப்படுகிறார்.

தஞ்சாவூர் ஜில்லாவில் நரசிங்க மங்கலம், நரசிங்கம்பேட்டை என்ற கிராமங்கள் இருக்கின்றன மேலும் நரசிங்கதேவர், நரங்கியதேவர் பட்டம் உடைய கள்ளர்கள் உள்ளனர். மயில்ராயன் கோட்டை நாட்டு கள்ளர்கள் மன்னத்தேவர், பொன்னத்தேவர், சீவிலித்தேவர், வல்லாளத்தேவர், நரசிங்கத்தேவர் ஆகியோரின் வழி வந்தவர்கள் என்று தங்களை பதிவு செய்கின்றனர்.


இந்த கள்ளர்குல நரசிங்க தேவன் வழியினர் கிபி1686ஆம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்காக கிறித்துவர்களுக்கு தேவாலயம் அமைக்க ஆவூர் பகுதியில் அனுமதி கொடுத்துள்ளனர்.


இந்த சம்பவத்தை சமகாலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் கட்டலூர்,பெரம்பூர் கள்ளர் அரசர் ஆவூரில் தேவாலயம் கட்ட அனுமத்தித்தார் என குறித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் புதுக்கோட்டை அரசு ஆவணத்திலும் பதிவாகியுள்ளது.

பிற்காலத்தில் இந்த பகுதி குளத்தூர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்படுகிறது.


பின்பு கிபி 1716ல் சொக்க நாத நாயக்கருக்கும்,குளத்தூர் தொண்டைமானுக்கும் ஏற்பட்ட போரில் நாயக்கர் படைகள் ஆவூரில் உள்ள தேவாலயத்தில் பதுங்கிய காரணத்தால் தொண்டைமானாரின் கள்ளர் படைகள் நாயக்கர் படையை விரட்டி, தேவாலயத்தையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.

இந்த சம்பவம் மத நல்லிணக்கத்தை விரும்பிய குளத்தூர் தொண்டைமானார் மனவருத்தமுற்று மீண்டும் தேவாலயம் கட்ட இடமும், அனுமதியும் அளிக்கிறார்.

இன்று கள்ளர் குல நரசிங்க தேவனின் ஆட்சிப்பகுதிகள் விராலிமலை சட்டமன்ற தொகுதியாக உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதியில் கள்ளர் இனத்தை சேர்ந்த அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மழவராயர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

அன்றும், இன்றும், என்றும் இப்பகுதி கள்ளர் தலைவர்களின் ஆளுமைகளுக்கே கட்டுப்பட்ட கள்ளர் நாடாக உள்ளது. மேலும் இங்கு புகழ்பெற்ற கள்ளர் நாட்டார்களால் நடத்தப்படும் தென்னலூர் ஜல்லிக்கட்டும் இங்குதான் நடைபெருகிறது.



பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர் கோவில்

கல்வெட்டு அரசு:வாணாதிராயர்; ஆண்டு: 14-ஆம் நூற்றாண்டு

செய்தி: செம்மயிர் பாடிகாவல் சண்டையில் நரசிங்க தேவர், சோழகோன், பல்லவராயர், பஞ்சவராயர்..........

மாவலி வானாதிராயர் காரியத்திர்க்கு..........

செவ்வலூர் உரவரும் வடபற்று நாட்டவரான செவ்வலூரு பஞ்சவராயர், நரசிங்க தேவர் உள்ளிட்டோர்க்கும் சோழ்கோனார், பல்லவராயர் உள்ளிட்டார்க்கும் விரோதமான செம்மயிர் விரோதமாய் வெட்டி.....

கள்ளர் மரபை சேர்ந்த பஞ்சவராயர்


கள்ளர் மரபை சேர்ந்த பல்லவராயர்


கள்ளர் மரபை சேர்ந்த சோழகர்






(அழகியமணவாளத்தேவர்)

இடம்: விராலிமலை,முருகன் கோவில் (கோயில் முகப்பில் புதுக்கோட்டை மன்னர் குடமுழக்கு நடத்திய கல்வெட்டும் உள்ளது)

விராலிமலை சுப்பிரமணியர் கோயில் உருவாக்கத்தில் பங்களிப்பு உடையவர்கள். விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கி.பி.1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவனது அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர், பேரம்பூர் ஆகிய இடங்களை தலைமையிட மாக கொண்டு ஆண்டுள்ளான். 


நரசிங்க தேவருக்குப்பிறகு வந்த அரசியல் தலைவன் அழகிய மணவாளத்தேவன் அருகில் உள்ள கத்தலூர், பேரம்பூர் ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு ஆண்டுள்ளான். இவனது கட்டுப்பாட்டில் விராலிமலை இருந்துள்ளது. இப்போது கோயில் இருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வந்தான். அவ்வாறு வரும்போது குரா மரம் இருக்கும் இடத்தில் வேங்கை காணாமற் போய் விடுகிறது. குரா மரம் இருக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பதாக எண்ணி வழிபாடு நடந்திருக்கிறது. வயலூரிலிருந்த அருணகிரிநாதரை, "விராலி மலைக்கு வா' என்று முருகப்பெருமான் அழைக்க அவ்வாறே வந்த அருணகிரிநாதர் குறிப்பிட்ட இடம் தெரியாமல் தவிக்க வேடன் ரூபத்தில் வந்த முருகன் விராலிமலைக்கு வழிசொல்லி அழைத்து சென்று மலையை அடைந்தவுடன் மறைந்து விடுகிறார்.

அஷ்டமாசித்தியை அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் வழங்கியதால் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இன்றளவும் கருதப் படுகிறது. திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்தலம் வெகு சிறப்பு வாய்ந்தது என்று புரிந்து கொள்ளலாம்.

இவ்வரசர்களைக்குறித்த செய்திகளில் இவர்கள் மறவரென்றும் கள்ளரென்றும் குறிப்புகள் காணப்படுகிறது. 

நரசிங்க தேவர்,  அழகியமணவாளத்தேவர் வகைறாக்கள் இன்றும் அதே பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.



விராலிமலை முருகன் கோயில் கல்வெட்டு

விராலிமலையில் மலைமேல் உள்ள முருகன் கோயிலைச் சுற்றி வரும் போது சண்டீசர் சந்திக்கு எதிரே  இந்த கல்வெட்டு உள்ளது.

இது விஜயநகரப் பேரரசின் வழிவந்த இரண்டாம் தேவராயர் (கி.பி. 1422 - 1446 )  காலத்தில் வெட்டப்பெற்றது என்றும், இவர் ‘அழகிய மணவாள தேவர்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளார் என்றும், இவர் பெரம்பூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தார் என்றும் கூறினர்.

கல்வெட்டில்  விஜய நகர அரசர் பற்றிய வரிகள் இல்லை. நிலக்கொடை பற்றிய பகுதிச் செய்தி மட்டுமே உள்ளது. நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்நிலத்தின் வருவாய் கொண்டு கோயிலில் கறியமுது படைக்கப்படுகிறது. தூணி அளவு நெல், கணியர் குடி (எல்லைப்பகுதி) வேம்பனூர் (எல்லைப்பகுதி)  ஆகிய தொடர்கள் உள்ளன. 

கல்வெட்டின் பாடம்:

1  . . . .ருளிச்செய்ய. . . . . . . . . .    டை
2  . . . . . .   மே . . . .  குடியு. . . .   தினப்ப குடிக்காபக
3 . . . வேம்பனூர் எல்லைக்கு மே(க்)கும் தெ
4 லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை (சோ0
5 கெல்லை கணியர்குடி எல்லைக்கும் ஆல
6 கெல்லைக்கு உள்ப்பட்ட நிலம் கொண்டு 
7 னாழிக்கு நெல் (தூணி) யும் கறியமிர்தும்

அதே கல்வெட்டின் வேறு படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.



இந்தக் கல்வெட்டு உள்ள இடத்திற்கு அருகே உள்ள சிற்பங்களின் படங்கள் இவை.




நன்றி

Saints,Goddess and kings by Dr.Susan Bally 
Gazetteer of Tamilnadu Pudukottai 
Tamilnadu archaeological department


திரு.சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு.முனிராஜ் வாணாதிராயர் 
திரு. பரத் கூழாக்கியார் 
திரு.சுதாகர் சம்பட்டியார்
திரு. காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
திரு. துரை.சுந்தரம்


ஆய்வு : சோழபாண்டியன் - ஏழுகோட்டை நாடு

வியாழன், 28 மார்ச், 2019

அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர்




இந்திய தேசிய விடுதலைக்காக தனது விரல்களை வெட்டிக்கொண்ட வீரர் அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர். 

ஆங்கிலேயரின் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கட்டை விரலை வெட்டிக்கொள், ரேகை வைக்காதே என்று தேவர் ஐயா கூறினார். இந்திய தேசிய விடுதலைக்காக இந்திய சுதந்திர போராட்டங்களில், தன்னுடைய போராட்டங்களில் தன் கை விரலை வெட்டிக்கொண்டவர், தியாகி பெரியதம்பி மழவராயர். அத்திவெட்டி காந்தி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பெற்றவர்.

மறைக்கப்பட்ட, போற்றப்பட வேண்டிய ஒரு மாவீரரின் வரலாறு :-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அத்திவெட்டி பிச்சினிக்காட்டை சேர்ந்த விவசாயி ஆ.பெரியதம்பி மழவராயர் என்பவர் கடுமையான பஞ்சக்காலத்தில் தன் குடும்பத்தை பாதுகாப்பதற்காக கப்பலில் சிங்கப்பூர் சென்று, 1936 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்ற ஆ.பெரியதம்பி மழவராயர் தண்ணீர் இலாக்காவில் வேலையில் சேர்ந்துள்ளார், அப்போது சிங்கப்பூர், மலேயா என்ற ஒன்றுப்பட்ட நாடாகவே இருந்துள்ளது. 

ஐப்பானிய ஏகாதிபத்தியத்தின் காலணி நாடாக இருந்ததால் எந்தவிதமான ஜனநாயக உரிமையும் கிடையாது, இந்தியாவில் தாதாகள் என்பது போல சிங்கப்பூரில் கேங்கர்களின் அராஜகம் தலைவிரித்து ஆடியகாலம், எதாவது ஒரு கேங்கரின் வேண்டிய ஆளாக இருந்தால் தான் தப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

பெரியதம்பி மழவராயர் வேலையில் சேர்ந்த வாட்டர் டிபார்ட் மென்ட்டில் அதிகாரியாக இருந்த லோலன் என்ற வெள்ளையன் பெரும் குடிகாரனாகவும், தொழிலாளியை கொடுமைப்படுத்துபவனாகவும் இருந்துள்ளான். எந்த நேரமும் போதையில் இருப்பதால் தொழிலாளியிடம் நாளை ஒரு இடத்திற்கு வரசொல்லிவிட்டு, அவன் வரமாட்டான், அல்லது வேறு ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்ப்பான். இவை தொழிலாளியாகிய இந்தியர்களை சங்கடப்படுத்தியுள்ளது. 

ஒரு நாள் ஆ. பெரியதம்பி மழவராயரிடம் நாளை காலை 7 மணிக்கு தாம்சன் ரோடு 7-வது மைலில் வந்து நில்லு நான் வந்து வேலை சொல்கிறேன் என்று சொல்லியுள்ளான். அவனது ஆணைபடி பெரியதம்பி மழவராயரும், அவருடைய ஆட்களும் குறிப்பிட்டபடி அங்கு சென்று இருந்துள்ளனர், அதிகாரி காலதாமதமாக 11 மணிக்கு வந்து இதுவரை என்ன செய்தாய் என்று கடுகடுத்த முகத்துடன் டேய் ஃபூல் உனக்கு இங்கு வேலை இல்லை போ, இந்தியாவிற்கு உங்கள் அப்பன் காந்தி வேலை தருவான் என்று பேசியுள்ளான். 

அவனுடைய பேச்சு அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது. மேற்படி பெரியதம்பி மழவராயர், காந்தி மீது மிகவும் பற்றுள்ள காந்தியவாதி, காங்கிரசில் சேர்ந்து இந்தியாவில் பல போராட்டங்களிலும் பங்கேற்றவர், எனவே காந்தியையும் இழிவுப்படுத்தி, பேசிவிட்டானே என்று இனி இந்த முட்டாள் கவர்மென்டில் வேலை பார்ப்பதில்லை என்று உறுதிகொண்டு கம்பெனி கொடுத்த உடைகளை எல்லாம் கலைந்து வெள்ளைக்கார அதிகாரியிடம் எரிந்துவிட்டு அவர் தங்கியிருந்த ரேஸ்கோர்ஸ் ரோடு 9-நம்பர் இல்லத்தில் மூன்றாம் மாடியிலிருந்து வந்தே மாதரம், வந்தே மாதரம் என உரத்த குரலில் சொல்லி கீழே குதித்துள்ளார்.

காலில், கையில் சில சிராய்ப்பு, சிறிது வலி இருந்துள்ளது வேறு பெரியகாயமோ, உயிருக்கு ஆபத்தோ இல்லாது தப்பித்துள்ளார். அவருடைய உறவினர் நண்பர்கள் பெரியதம்பிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று பேசிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் நடந்துள்ளது.

உடல்நிலை சரியானவுடன், சுதந்திரம் மற்றும், காந்தியின் மீது கொண்ட அன்பால், வெள்ளையர் மீது ஏற்பட்ட கோபத்தில் மாடியில் இருந்து குதித்து, தன் எதிர்ப்பை பதிவு செய்த பெரியதம்பி மழவராயரை, அவரின் சகோதரர் உட்பட அனைவரும் சேர்ந்து இந்தியாவில் இருந்த உறவினர்களிடம் தம்பிக்கு பைத்தியம் பிடித்துள்ளது ஊருக்கு அனுப்பிவைக்கிறேன் என்று கூறிவிட்டு, எனக்கு எந்த பைத்தியமும் இல்லையென்று சொன்னதையும் நம்பாமல், கேட்காமல் எல்லோறும் சேர்ந்து இந்தியாவில் சொந்த ஊரான அத்திவெட்டிக்கு அனுப்பிவைத்துவிட்டனர்.

மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிர் பிழைத்த பெரியதம்பி மழவராயர் அன்று முதல் மாமிசம் உண்பதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டு அதன்படியே நடந்துள்ளார். 

சொந்த ஊறுக்கு வந்த பெரியதம்பி மழவராயர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை அமைத்து செயல்பட துவங்கியுள்ளார். 

1939-ம் ஆண்டு வாக்கில் காந்திஜி கடவுளின் பெயரை சொல்லி உயிர் பலி (ஆடு, மாடு, கோழி) செய்ய கூடாது என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், இதையடுத்து அத்திவெட்டி வடக்கு தெரு கோவிலில் ஆடு வெட்டி சிறப்பு பூசை நடக்கிறது என்று தெரிந்தவுடன் அங்கே வந்து சுவாமியின் பெயரை சொல்லி ஆடு, கோழிகளை பலியிடாதே என்றும், ஜமீன் ஒழியபோகிறது, வெள்ளையன் வெளியேறப்போகிறான், நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க போகிறது என்று போர்டு எழுதிவைத்துவிட்டு, இதை பற்றி மக்களிடம் உரத்த குரலில் பேசிவிட்டு தனது கட்டை விரலை வெட்டி எதிரே வைத்துவிட்டு உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

இவரின் நடவடிக்கைகளை பார்த்த பொதுமக்கள் ஆடு, கோழி பலியிடுவதை நிறுத்திவிட்டு பெரியதம்பியை சமாதானப்படுத்தி உண்ணாவிரதத்தை முடிக்கவைத்தனர்.

1941-ம் ஆண்டு சுதந்திரம் கேட்டு கால் நடையாக டெல்லி சென்ற சத்தியாக்கிரகிகளுக்கு தஞ்சை மாவட்டத்தை கடக்கும் வரை தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுக்கும் பொறுப்பினை ஏற்று திறன்பட செயலாற்றியுள்ளார்.

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் போராட்டத்தின் போது 144 தடை உத்தரவை மீறி, சுதந்திரம் வழங்கு, என கோசமிட்டுக்கொண்டு நூற்றுகணக்கானவர்களுடன் பட்டுக்கோட்டை நகரத்திற்குள் ஊர்வலமாக சென்றதற்காக காவல்துறை தடியடி நடத்தி 50 பேர்களை மட்டும் கைது செய்து144 தடையை மீறியதற்காக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பெரியதம்பிக்கு மழவராயர் மட்டும் 8 மாதம் கடுங்காவல் தண்டனை மற்றவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து சிறையில் அடைத்தனர். பெரியதம்பி மழவராயர் அலிபுரம் ( ஆந்திரா மாநிலம்) சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அதே சிறையில், காந்திஜியும் இருந்துள்ளார், மகாத்மா காந்தி சிறையில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த போது பெரியதம்பியும் 21 நாட்களைக் கடந்து சிறையில் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.


தண்டனை காலம் முடிந்து வெளிவந்தது மீண்டும் 1943ல் பட்டுக்கோட்டை முன்சீப் கோர்ட்டுக்கு சென்று முன்சீப்பைப் பார்த்து காந்திஜியை காரணமின்றி கைது செய்து வைத்திருக்கும் ஏகாதிபத்திய வெள்ளையர் அரசாங்கத்தில் இந்தியனாகிய நீ வேலை செய்யாதே, வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளியேறு என கோசமிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியதால் கைது செய்யப்பட்டு 43 நாட்கள் ரிமாண்டில் வைத்திருந்தபோது அந்த 43 நாட்களும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

அதன் பிறகு நீதிமன்றத்தில் 1 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு அலிபுரம் சிறையில் அடைத்துள்ளனர். அலிபுரம் சிறைக்குள் கைதிகளை நடத்தும் கொடுமையை கண்டித்து போராட ஏற்பாடு செய்தபோது இதை அறிந்த சிறைக்காவலர்கள் தனிச்சிறையில் அடைத்து உணவு தண்ணீர் சரியாக கொடுக்காமல் கொடுமைபடுத்தியதை தாங்கிக்கொண்டு சிறை வாழ்க்கை முடிந்து வெளிவந்துள்ளார்.

1946ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்ற போது. எதிர்ப்பாளர்கள் சிலர் கூட்டத்தில் கல்வீசி கலாட்டா செய்துள்ளார்கள். இதனால் இது இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாறி பல விரும்பதகாத நடவடிக்கைகள் ஏற்பட்டபோது இதை எதிர்த்து இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி கைது செய்யப்பட்ட இருதரப்பினைரையும் வழக்கு இல்லாது விடுதலை செய்யக்கோரி, பட்டுக்கோட்டை சின்னக்கடைத் தெருவில் ஆள்காட்டி விரலை வெட்டி வைத்துவிட்டு சாகும்வரை உண்ணாவிரதம் என்று எழுதி ஒட்டிவிட்டு உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளார். 

இதற்கு ஆதரவாக திரளான மக்கள் இவருடன் உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளனர். நான்கு தினங்களுக்கு பின் பட்டுக்கோட்டை ஏ. நாடிமுத்து பிள்ளை சிறையிலிருந்த அ.கோபால்சாமி, சலீம் உள்ளிட்ட அனைவரையும் சிறையிலிருந்து விடுதலை பெற்று அவர் முன் கொண்டு வந்து நிறுத்தி பெரிய தம்பியிடம் உண்ணா விரத்தை கைவிட வேண்டியுள்ளார் கோரிக்கை நிறைவேறியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டுள்ளார்.

மூன்று தினங்கள் கழித்து இந்து –முஸ்லீம் இருதரப்பையும் சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் கலந்துக்கொள்ளும் கூட்டம் பட்டுக்கோட்டை சந்திராவிலாஸ் பங்களாத் தோட்டத்தில் ஏ. நாடிமுத்துபிள்ளை, ஆ. பெரியதம்பி மழவராயர் ஆகிய இருவரின் தலைமையில் இருதரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஒற்றுமைபடுத்தி இதற்கு மேல் நாங்கள் எந்த பிரச்சனையும் இன்றி ஒற்றுமையாக இருப்போம் என உறுதியளித்த பின் சேர்ந்து உணவருந்த வைத்து ஒற்றுமைப்படுத்தியுள்ளார்கள்.

இதே காலத்தில் கள்ளுக்கடை கூடாது மது அரக்கனை ஒழித்துக்கட்டு என்று பட்டுக்கோட்டை தாலுக்காவில் 6 இடங்களில் நடந்த கள்ளுக்கடை மறியலில் மேற்படி பெரியதம்பி மழவராயர் மதுக்கூரில் கலந்துக்கொண்டுள்ளார். இவறுடன் கோவிந்தசாமி செட்டியார் அவர்களும் கலந்துக் கொண்டுள்ளார் இப்போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர்களை கைது செய்து கால்நடையாக பட்டுக்கோட்டை அழைத்து சென்று ரிமாண்டு செய்துள்ளனர். 

கைதுசெய்தவர்களை விடுதலை செய்யசொல்லி மோதிர விரலை வெட்டி வைத்துவிட்டு உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். இதற்கு ஆதரவான இயக்கத்திற்கு வெளியில் ஏற்பாடு நடைபெறுவதை பார்த்த அதிகாரிகள் மருத்துவரை அழைத்து வந்து வைத்தியம் பார்த்து மறுதினமே அனைவரையும் விடுதலை செய்துள்ளனர்.

இதுபோன்று எண்ணற்ற போராட்டத்தை நடத்திய ஆ. பெரியதம்பி மழவராயர் அத்திவெட்டியிலும் சுற்றுவட்டாரத்திலும் இளைஞர்கள் மத்தியில் சுதந்திர வேட்க்கையையும் தேசப்பற்றையும் உருவாக்கியுள்ளார். இப்பகுதியில் இருந்த ஜமீன்தார்களை எதிர்த்து ஜமீன் ஒழிப்பை வலியுறுத்தி நடைப்பெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தி, சிறையில் அடைக்கப்பட்டு பல கொடுமைகளை அனுபவித்துள்ளார்.

1947 சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15க்கு சில தினங்களுக்கு முன்பு பெரியதம்பி மற்றும் தம்பிக்கோட்டை மரவக்காடு சீனிவாசன் உட்பட 16 பேர்களை போலீஸ் கைது செய்து பட்டுக்கோட்டையில் ரிமாண்டில் அடைத்துவைத்திருந்து ஆகஸ்ட் 21ல் சிறையிலிருந்து வெளியே விட்டுள்ளனர். 

1948 ஜனவரி 30ல் மதவெறி கோட்ச்சேயால் காந்திஜி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து வெள்ளை உடை அணிவதில்லை என்று சபதம் ஏற்று அதையே இறுதிகாலம் வரை கடைபிடித்து வந்துள்ளார். காந்தியின் மரணம் பெரியதம்பி மழவராயரை மிகவும் பாதித்துள்ளது. அவர் தெருவிலே வரும்போது யாரைப்பார்த்தாலும் வந்தே மாதரம் என்பார் பதிலுக்கு அவர்களும் வந்தே மாதரம் என்பார்கள். அனைவரிடமும் பற்றுதலாக இருப்பார்.ஆங்கிலேயரை விரட்டிய பிறகு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று நடத்திய முறைகளில் திருப்தி இல்லாது இருந்துள்ளார்.

இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினையும், அதையொட்டி நடந்த கலவரத்தில் மரணமடைந்த பல்லாயிரக்கணக்கானவர்களை நினைத்து இதற்காகவா சுதந்திரம் பெற்றோம் என கண்ணீர் வடித்து இயக்கத்தில் பங்கு பெறாமல் ஒதுங்கி இருந்துள்ளார். 

1950-ம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற நிர்மான ஊழியர் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு பயிற்சி அளிப்பதற்காக வந்திருந்த காந்திஜியின் பேரப்பிள்ளைகளான ஸ்ரீயுதகனு காந்தி, ஸ்ரீமதி ஆபா காந்தி, மற்றும் திரேந்திரமஜீந்தார், கிருஷ்ணதாஸ் காந்தி, சுவேனேஜி இவர்கள் பெரியதம்பியின் போர் குணத்தையும், காந்திஜி மீதான பற்றுதலையும் அறிந்து இதற்கு மேல் எந்த கோரிக்கைகாகவும் அங்ககீனம் செய்துகொள்ளகூடாது என்று வலியுறுத்தி பெரியதம்பியை பாராட்டி கௌரவித்து காந்திஜி மீது சத்தியம் பெற்றுள்ளனர், பெரியதம்பியை பட்டுக்கோட்டை பகுதி மக்கள் தியாகி காந்தி என்று தான் அழைப்பார்கள்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கிய 5 ஏக்கர் நிலம் அரசாங்கம் வழங்கியதை வறுமையின் காரணமாக பெற்றுக்கொண்டார். நிலம் கொடுத்த ஒலயகுன்னத்திற்கே சென்று சிறிது காலத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு வைரம்பாள், தனபாக்கியம் எனற இரு மனைவியும், ராமலிங்கம், மாணிக்கம் என்ற மகன்களும், காந்திமதி என்ற மகளும் இருந்தனர்.

இவருடைய கடும் உழைப்பால் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் சுதந்திரம் போராட்ட வீரர்கள் இருந்த ஊர் என்ற பெருமை அத்திவெட்டிக்கு கிடைத்தது. நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று கருதும் ஊழல், மோசடி ஆட்சியாளர்களை பார்க்கும் போது எழுதப்படிக்க தெரியாத பெரியதம்பி மதிக்கதக்க மாமனிதர் ஆவார்.

இந்தியாவின் தேசபற்று, தேச விடுதலை பெறவேண்டுமென்ற உயர்ந்த நோக்கம் எழுதப்படிக்க தெரியாத அந்த ஏழை விவசாயிடம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை அவர் குறித்த வாழ்க்கை குறிப்பில் பார்க்க முடிகிறது. 

குறிப்பு:
காந்தி எனது தெய்வம், என்னும் தியாகி பெரியதம்பியின் வாழ்க்கை வரலாற்று பிரசுரத்திலிருந்து

நன்றி : திரு. ஆர்.சி. பழனிவேல், மாநில மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-தஞ்சாவூர்















அத்திவெட்டி கள்ளர் மரபினரில் பல நூறு பேர் INA இருந்தவர்கள். அங்குள்ள பழமையான  சோழர் கோயிலில் மற்றும் அங்குள்ள கோயில்களில் கள்ளர்களுக்கு முதல் மரியாதை தரப்படுகிறது. சிங்கப்பூர்  Mr Singapore - 1962 ஆண்டு SR சந்திரன் மழவராயர்.

இங்கு கள்ளர் மரபினரின் வாணாதிராயர், மழவராயர், சேண்டபிரியர் , விஸ்வராயர் பட்டங்களை உடையவர்கள் உள்ளனர்.






புதன், 27 மார்ச், 2019

கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர்



கொடைக்கானலில் போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது.

கொடைக்கானல், மூணாறு ஆகிய இரண்டு ஊர்களுக்கு சாலை போடப்பட்டது. அந்த சாலை போடும் பணியை கொடைக்கானலுக்கு மானூத்து கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்ற C. A. வெள்ளைய தேவருக்கும், மூணாறுக்கு A.S. சுப்பன் செட்டியாருக்கும் வழங்கப்பட்டது.

கொடைக்கானலுக்கு சாலை போட்ட வெள்ளைய தேவர், அங்கு 13 பேருந்துக்களை CA. வெள்ளைய தேவர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் இயக்கினார்.


அதன் பிறகு 1947 வது வருடம் சுதந்திரம் பெற்ற போது காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி போட்டு கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த தேர்தலில் கொடைக்கானலுக்கு சிறு வணிகம் செய்ய வந்த JC என்ற ஜெயராஜ் செல்லத்துரைக்கும், C. A. வெள்ளைய தேவருக்கும் தேர்தல் பகை காரணமாக ஒரு பந்தயத்தில் பந்தய பொருளாக தனது 13 பேருந்துக்களை வைத்து, ஜெயராஜ் நாடாரிடம் 13 பேருந்துக்களை எழுதி கொடுத்து விட்டு பெரியகுளம் வந்துவிட்டார். அந்த பேருந்து தான் இன்று ஒடிக்கொண்டிருக்கும் J.C. பேருந்து ஆகும்.

C. A. வெள்ளைய தேவருக்கு பக்க பலமாக இருந்த போடி சுப்பன் செட்டியார், புதுக்கோட்டை மன்னர் ரகுநாத தொண்டைமான், T. V. சுந்தரம் ஐயங்கார் ( TVS குழுமம் தலைவர்) .

T. V. சுந்தரம் ஐயங்கார் வருடத்திற்க்கு ஒரு முறை C. A. வெள்ளையன் தேவருக்கு அவர்களுக்கு ஒரு புது FIAT கார் பரிசளிப்பார், அந்த வருடம் அந்த பழைய காரை வாங்கிக் கொண்டு புதிய கார் தருவார்.


போடி சுப்பன் செட்டியார் உடன், அவரது போடி வீட்டிற்கு வெள்ளையன் தேவர் சென்ற போது, சுப்பன் செட்டியாருக்கு பக்கபலமாகவும், உற்ற நண்பனாகவும் இருந்த பாலார்பட்டி பெரிய கருப்பத் தேவர் அறிமுகம், வெள்ளையன் தேவருக்கு கிடைத்தது. காலப்போக்கில் பாலார்பட்டி பெரிய கருப்பத் தேவர், வெள்ளையன் தேவர் சம்மந்தியாக மாறி பெண் கொடுத்து பெண் எடுத்தார்கள்.

பெரியகுளத்தில தனது சமுதாயத்தில் வீடு இல்லாத குடும்பங்களை கண்ட வெள்ளையன் தேவர், அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தனது செல்வாக்கில் நிதி கொண்டு ஒரு ஊரை உருவாக்கி ஒரு 20 வீட்டை கட்டினார்.

அப்போது கட்டும் பணிக்கு நிதி தேவைப்பட்டது, அதனை Kallar Reclamation Scheme Society அணுகி, அதில் நிதியை பெற்று, அதன் மூலம் வேலை நடைபெற்றது. Kallar Reclamation Scheme Society சூப்பர்வைசராக பணிபுரிந்த சூரியநாராயாணத் தேவர் அதாவது நடிகர் SSR ன் தகப்பனார் அவர்களும், இந்த வேலை நடைபெற முழுக்காரணம், அதனால் அந்த ஊரில் கரட்டூர் மந்தையம்மன்  கோவிலில் வெள்ளையன் தேவர், சூரியநாராயாணத் தேவர் குடும்பத்திற்க்கும் முதல் மரியாதை கொடுப்பார்கள், அந்த ஊர் கரட்டூர் என்று அழைக்கபடுகின்ற தெய்வேந்திரபுரம் ஆகும்.

வைத்தியநாதபுரத்தில், எல்லோரும் படிக்க பள்ளிகூடம் இல்லாததால் கள்ளர் பள்ளி ஒன்றை கட்டினார்.





 தெய்வேந்திரபுரம் பின்னால் கொடைக்கானல் 

நன்றி : திரு. காண்டீபன் மற்றும் திரு. செந்தில்

திங்கள், 25 மார்ச், 2019

வன்னிய சூரைக்குடி தொண்டைமான் கள்ளப்பற்று - கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு






புதுக்கோட்டை தொண்டைமான், சூரைக்குடி தொண்டைமானை தங்களுடைய முன்னோர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். வரலாறு மற்றும் மானுடவியல் ஆய்வாளர் நிக்கோலஸ் டிரிக்ஸ் இருவரும் ஒரே மரபினரே என்று குறிப்பிட்டுள்ளார்.




கிபி1311ல் டெல்லி சுல்தானாகிய அலாவுதீன் கில்ஜியின் முதன்மை தளபதி மாலிக் கபூர் ஒட்டு மொத்த இந்தியாவையும் கில்ஜியின் காலடி கொண்டு வந்தான். அதில் பாண்டிய நாடும் அடக்கம், கிபி. 1310 வாக்களில் பாரதம் போற்றிய பாண்டிய மன்னர்களான சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் தங்களுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தத்தால் மாலிக் கபூரால் மதுரையை இழந்து டெல்லி சுல்தான் ஆட்சிக்கு ஆட்சாரம் போட்டுவிட்டு தென்காசிக்கும், திருவாடனைக்கும் தப்பி சென்று சிறு பகுதியில் ஆட்சி செய்து வந்தனர்.

கிபி1320ல் டெல்லி சுல்தானாக துக்ளக் வம்சத்தினர் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்களுடைய பிரதி நிதிகள் மதுரையில் துக்ளக் ஆட்சி நடத்தினர்.

ஆனால் இதனை ஏற்காத கள்ளர்களின் ஒரு பிரிவினர், அவர்கள் வாழ்ந்த அப்போதைய மதுரை எல்லையில் அதாவது இன்றைய புதுக்கோட்டை எல்லையான காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் பாண்டியர்களுக்கு எல்லை அரையர்களாக இருந்த சூரைக்குடி தொண்டைமான்களும், அவர்தம் கள்ளர் குலத்தவர்களும் மதுரை சுல்தானுக்கு அடங்காமல் கலகம் செய்து வந்தனர். 

சூரைக்குடி கள்ளர் படைகள் மதுரை சுல்தானின் தளபதிக்கு கட்டுப்பட்ட, பொன் அமராவதி நாடான விராச்சிலை, கோட்டையூரில் சுல்தான் படைகளையும், ஊர்களையும் தாக்கி சூரையாடி பெரும் சேதத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் கோபமுற்ற சுல்தான் தனது முதன்மை தளபதியான இராஜாதிகான் தலைமையில் மூன்று உப தளபதிகளான மஞ்சிலிஸ் எலிஸ் கான்,ஆசாம் கான், முவாசம் கான் மற்றும் அவர்தம் பெரும் படைப்பற்றை வைத்து சூரைக்குடி கள்ளர் படைப்பற்றை தீக்கிரையாக்கி முற்றிலுமாக அழித்து தரைமட்டமாக்கிறார்கள்.

கிபி1359ல் தொடர்ந்து சுல்தானுக்கு கட்டுப்படாமல் இருந்த சூரைக்குடி தொண்டைமானையும் அவர்தம் கள்ளர் பற்றையும் அழித்து வாள் முனையில் இன்றைய காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அழித்தது மட்டும் இல்லாமல், சுல்தான் மாத்தூர் குளத்தில் பொன் அமராவதி நாடான விராச்சிலை மட்டும் கோட்டையூர் நாட்டுக்கூட்டத்தை கூட்டச் சொல்லுகிறார். 

அப்படி அந்த பொன் அமராவதி நாட்டுக்கூட்டத்தில் எங்களுக்கு எதிராக வாளை சுழட்டிய கள்ளர்களையும் அவர்களது தலைமை இடமான சூரைக்குடியையும் அழித்துவிட்டோம்.

இனி எங்களுக்கு எதிராக யாரும் வாளை சுழட்டினால் சூரைக்குடி கள்ளர் பற்றுக்கு என்ன நேர்ந்ததோ அதே கதிதான், இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.







இந்த சம்பத்தை திருக்கோலக்குடி நாயனார் கோவிலில் கல்வெட்டாக வெட்டியுள்ளனர். அந்த கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளரான உயர் திரு.சாமிநாத அய்யர் படி எடுத்து வைத்துள்ளார்.


இந்த பகுதிகளின் பாடிக்காவல் உரிமையும், நீதி பரிபாலனம் உரிமை அனைத்தும் மதுரை சுல்தான் கட்டுப்பாட்டிற்கு சென்றது, அந்த சமயத்தில் கிபி1369ல் காத்தூர் கோட்டை காரணவரும், அந்த ஊர் கிராமத்தாரும் நெடுஞ்சாலைகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சம்பவம் சுல்தானின் புதுக்கோட்டை பிரதிநிதிக்கு சென்றது, வழிப்பறியில் ஈடுபடாமல் இருக்க நாட்டு கூட்டம் கூட்டி சத்தியம் செய்ய வழியுறுத்தப்படுகிறது.


Manual of Pudhukottai state Vol.2


இதனால் கிபி1369 கார்த்திகை மாதத்தில் காரணவர்கள் கண்டதேவி நாட்டு கூட்டத்தில் வன்னியர் (கள்ளர் தலைவர் - வன்னியர் கள்ளர் பட்டம்), கள்ளர்களும் ( கள்ளர் மக்களும்), புறத்தூர் பட்டர், வித்துவான்கள், பாடகர் மற்றும் காரணவர்களின் எதிரியான அறந்தாங்கியார் ( அறந்தாங்கி தொண்டைமான்) மற்றும் அங்கு உள்ள மனிதர்கள் முன்னிலையில் வழிப்பறியில் ஈடுபட மாட்டோம் என சத்தியம் ஏற்கிறோம் என்று உறுதி மொழி ஏற்கிறார்கள்.














அப்படி அவர்கள் செய்த சத்தியத்தை மீறினால் கீழ்க்கண்ட தண்டனைகள ஏற்கிறோம் என உறுதியளிக்கின்றனர்

1.எங்கள் மீசை தாடிகளை மழிக்கிறோம்
2.எங்கள் பெண்களை எதிரிகளுக்கு அளிக்கிறோம்
3.எங்கள் எதிரிகளுக்கு அடிமையாகக்க கடவுகிறோம்
4.பிராமனர்களை கங்கையில் கொண்ற பாவத்தை ஏற்கிறோம்
5.எங்களை பெண் உருவமாக வடித்து கீழ்சாதிகள் ஆன பாணர், புலவர், பள்ளர், பறையர்களின் சிறுவர்களின் காலில் கட்டி எங்கள் தேசத்திலும், பிற தேசத்திலும் சுற்றட்டும்.

என தண்டனைகளை அவர்களே நிர்மாணிக்கிறார்கள்.














இந்த கல்வெட்டை முதன் முதலாக முன்னாள் உலக வராலாற்று ஆய்வகத்தின் உறுப்பினரும், இந்திய வரலாற்று ஆய்வாளரும் ஆன உயர்திரு. கிருஷ்ணசாமி அய்யங்கார் பதிவு செய்கிறார்.





அவருடைய பதிவில் சிறு, சிறு தவறுகள் இருந்ததை 08:04:86  ல் உஞ்சனை வட்டார கல்வெட்டு பகுதியில் திருத்தி படியெடுத்து புத்தகமாகவும் வந்தது. அந்த புது படியெடுத்த கல்வெட்டை அன்று தினதந்தி, தினமலர், தினகரன் நாளிதழ்களில் வெளி வந்தது.

மேலும் இதனை வரலாற்று ஆர்வலர் உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார் நேரடியாக கண்டதேவிக்கு சென்று படி எடுத்து, புகைப்படத்தையும் அளித்துள்ளார்.

உன்மை இப்படி இருக்க சில கோமாளிகள் ஏதோ கள்ளர்கள் பொண்டாட்டியை ஒப்படைப்பதாக சத்தியம் செய்தார்கள் என்று வலைதளங்களில் கிறுக்கியுள்ளார்கள். மேலும் பள்ளி சாதியினர்,  வன்னியர் என்று இங்கு குறிக்கப்பட்ட சூரைக்குடி தொண்டைமானை பள்ளி சாதி என்று கூறிவருகின்றனர்.

தேசத்தில் உள்ள வன்னியரும், கள்ளர்களும் என்று குறித்துள்ளது. இங்ஙனம் வன்னியர் என்பது ஒருமை அதை கூட புரிந்து கொள்ளாமல் அது ஜாதி பெயர் என ஒப்பாரி வைக்கின்றனர். இவர்கள் வன்னியர் என்பது சாதியாக மாறியது இந்த நூற்றாண்டில் என்பது நாம் அறிந்ததே. வன்னியர் என்ற பட்டம் இங்கு கள்ளர், மறவர், வலையர், பள்ளி என்ற பலதர சாதிகளுக்கு உள்ளது. 

புதுக்கோட்டை தொண்டைமான், அந்த பகுதி விசங்கு நட்டு கள்ளர்களை நாய் சங்கிலியால் கொண்டுவந்தார் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனால் தொண்டைமான் என்பது வேறு சாதி, கள்ளர்கள் வேறு சாதி என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ அதுபோல் உள்ளது பள்ளி சாதியினரின் கதை.

கல்வெட்டில் கள்ளர்கள் என்று குறிக்கப்பட்ட போது வன்னியர்கள் என்று ஏன் பன்மையில் குறிக்கவில்லை.....?

அதனால் தான் அய்யா கிருஷ்ணசாமி அய்யங்கார் சூரைக்குடி தொண்டைமானை கள்ளர் குடும்பம் என்றும் சூரைக்குடி கள்ளர்களின் தலைமையிடம் என்றும் பதிவு செய்தார்.


மேலும் பல கோமாளிகள் இதை கிபி16 ஆம் நூற்றாண்டு என்று பிதற்றுகிறார்கள். அவர்கள் ஹிஜிரா வருடத்தை பற்றிய புரிதல் இல்லாமல் பொய்யுரைக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு நன்கு தெரியும் ஹிஜிரா வருடம் என்றால் என்னவென்று.






இப்போது ஹிஜிரா வருடம் 1440ல் உள்ளது. இந்த வருடக் கணக்கை சூரிச் பல்கலைகழக கணக்கீடில் வைத்து தான் கிபி 1369 என்று கணக்கீடு செய்துள்ளேன்.


இன்றும் காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளில் கள்ளர்கள் அம்பலமாகவும்,நாட்டு சேர்வையாகவும் அனைத்து குடிமக்களுக்கும் நீதிபரிபாலனம் செய்தும் 150 க்கும் மேற்பட்ட கோவில்களில் சாமி கழுத்தில் உள்ள துண்டையே முதல் மரியாதையையாகவும், காளாஞ்சியமும் பெறுகிறார்கள்.


நன்றி

South Indian And Her Mohammadan Invaders by Honourable Mr.Krishnaswami Aiyangar
உஞ்சனை வட்டார கல்வெட்டுகள்
South Indian and her muhammadan invaders 
Institute of oriental studies:Zurich university 
திரு.சியாம் சுந்தர் சம்பட்டியார்

பதிவு நாள் : 09.12.2018

ஆய்வு  : சோழ பாண்டியன் - ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்