வியாழன், 14 ஜூலை, 2022

கக்கரைக்கோட்டை தோழர் இரா.நாராயணன்.

தஞ்சை நக்சல் நாராயணன் அல்லது  கக்கரைக்கோட்டை தோழர் இரா.நாராயணன்.

70 களின் இறுதிப்பகுதியில் தனது மாணவப் பருவத்தில் தோழர் பி.வி.எஸ். மூலம் இ.க.க (மா-லெ) விடுதலை அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு  90களின் இறுதிப் பகுதி வரை தலைவராக அரசியல் பணியாற்றியவர். இந்திய மக்கள் முன்னணியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக துடிப்புடன் இயங்கினார். 

கம்யூனிஸ்டாக இருந்துகொண்டே கக்கரைக்கோட்டை நாராயணன் கக்கரைக்கோட்டை ஊரின் கோவில் வழிபாட்டுக்காக தலித்துகளைத் திரட்டிக் கொண்டுபோய் தான் பிறந்த கள்ளர் சாதியினரால்  தாக்குதலை எதிர்கொண்டார். 


தஞ்சை மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் கக்கரைக்கோட்டை ஊரைச் சேர்ந்தவர். சி.பி.ஐ (எம்-எல்) விடுதலை கட்சியின் தமிழ்மாநிலக் குழுவில் 1993 வரை இயங்கிய தோழர் நாராயணன் நக்சல் நாராயணன் என அழைக்கப்பட்டார். அரசியல் கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர். மொழி பெயர்ப்பாளர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் முன் நின்றவர். 1983 இந்திய மக்கள் முன்னணி சார்பில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு " ஈழப்  போராளிகளுக்கு ஆயுதம் வழங்கு!" என வலியுறுத்தி நடைபயணம் சென்று தோழர்களுடன் சென்னையில் கைதானார். இலங்கைக்கு அமைதிப்படை எனும் பெயரில் இந்திய இராணுவத்தை அனுப்பிவைத்ததைக் கண்டித்து புதுக்கோட்டை வந்த இராஜீவ் காந்திக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டி தோழர்களுடன் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 

காவிரிப்படுகை மாவட்டங்களில் அறியப்பட்ட தலைவராக இயங்கியவர். 1991நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறைத் தொகுதியில் இந்திய மக்கள் முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் நிலவும் குழுவாதம், சி.பி.ஐ (எம்-எல்) விடுதலை அமைப்பில் நிலவிய குழுவாத, அதிகாரப் போட்டியில்  பலியானவர்களில் அர்ப்பணிப்புமிக்க தோழர் நக்சல் நாராயணன் குறிப்பிடத்தகுந்தவர். 






2007 ஆம் ஆண்டு இ.க.க (மா-லெ) மக்கள் விடுதலையில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து மன அழுத்தத்திலிருந்த தோழர் நக்சல் நாராயணன் இறுதி மூன்றாண்டுகள் கடுமையான மனக் குழப்பம். சி.பி.ஐ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.  தனது இறுதிக் காலத்தில் தன்னை அ.தி.மு.க வில் இணைத்துக் கொண்டார். உணர்ச்சிப் பிழம்பாக தன்னை ஆக்கிக் கொள்ளும் தோழர் நக்சல் நாராயணன் அரசியல் தற்கொலையாக மட்டுமில்லாமல், ஆகஸ்ட் 31 அன்று தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். 

அர்ப்பணிப்பு. அரசியல் ஆற்றல். தோழமை என முன்மாதிரியாகத் திகழ்ந்த தோழர் நக்சல் நாராயணன் எப்படி சரியக் கூடாது என்பதற்கும் முன்மாதிரியாகியுள்ளார். பாடம் கற்றுக் கொள்வோம்.

கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ ) மக்கள் விடுதலை சார்பில் தஞ்சையில் 14 -9-14 அன்று மாலை  நினைவேந்தல்  கூட்டம் நடை பெற்றது. சி.பி.எம்.எல் -மக்கள் விடுதலை தலைவர் தோழர் ஜெய,சிதம்பரநாதன் தலைமையில் சி.பி.ஐ (எம்-எல்) விடுதலை மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் தோழர் நக்சல் நாராயணன் படத்தைத் திறந்து வைத்தார்.


கட்டுரை மார்க்ஸ் பாண்டியன் 

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்