வியாழன், 7 ஜூலை, 2022

இலங்கை சினிமாதுறையின் முன்னணி நடிகர் திரு தர்ஷன் தர்மராஜ் பாச்சுண்டார்



புதுக்கோட்டை , வாராப்பூர்நாடு மாங்கோட்டை கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கை சினிமாதுறையின் முன்னணி நடிகர் திரு தர்ஷன் தர்மராஜ் பாச்சுண்டார் அவர்கள் லிங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட தர்சன் இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானை என்ற ஊரில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் பிறந்தார். அங்குள்ள சென் யோன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். தந்தை தர்மராஜ் ஒரு சிறந்த ஓவியக் கலைஞர். தந்தையிடம் ஓவியம் கற்றுக் கொண்டார். பள்ளிக்க்கூடத்தில் நாடகங்களில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். தந்தை இறந்தபிறகு, இவர் மீது குடும்பப் பொறுப்புகள் சுமத்தப்பட்டன. இதனால் வேலை தேடி கொழும்பு வந்தார். தொடக்கத்தில் மூட்டை சுமக்கும் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றினார்.

பிரபல சிங்கள இயக்குநர் சிட்னி சந்திரசேகராவின் தொலைக்காட்சி நாடகமொன்றில் நடிக்க புதுமுகங்கள் தேவை என்ற விளம்பரம் அவரது கண்களில் பட்டது. அதற்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வின் மூலம் நடிப்பதற்குத் தெரிவானார். 2008 ஆம் ஆண்டில் இந்நாடகம் ஒளிபரப்பானது. சிங்கள மொழியில் அப்போது சரளமாகப் பேசாவிட்டாலும், மூன்று மாதங்களுக்குள் அந்த மொழியைக் கற்றுக்கொண்டார். தொடர்ந்து பிரசன்ன விதானகே, அசோகா அந்தகம, பூதி கீர்த்திசேன ஆகிய புகழ்பெற்ற இயக்குநர்களின் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டில் பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம் ஒன்றின் மூலம் சிங்களத் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இத்தாலியின் சிறந்த தயாரிப்பாளரும், இயக்குநருமான உபெர்ட்டோ பசோலினியின் மச்சான் (2008) என்ற சிங்கள/ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 2008 முதல் 2010 வரை பன்னாட்டுத் திரைப்பட விழாக்கள் அனைத்திலும் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றது.

திரைப்படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக பல்வேறு விருதுகளை வென்ற தர்ஷன், பலராலும் அவதானிக்கப்பட்ட 'பிரபாகரன்', 'சுனாமி' உட்பட 25க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

2008ஆம் ஆண்டு வெளியான 'பிரபாகரன்' எனும் இருமொழி (சிங்கம் மற்றும் தமிழ்) திரைப்படத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாகப் பாத்திரமேற்று தர்ஷன் நடித்திருந்தார்.

இதனையடுத்து பிரபாகரன் திரைப்படமும், தர்ஷனும் சில தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

அசோக ஹந்தகம இயக்கி 2012ஆம் ஆண்டு வெளியான 'இனி அவன்' (Ini Avan - Him, Here After) தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தமைக்காக தர்ஷனுக்கு சிறந்த நடிகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்திருந்தன. இந்தத் திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் 'கான்' திரைப்பட விழாவில் (FESTIVAL DE CANNES), 2012ஆம் ஆண்டு பிரன்ச் மொழி உப தலைப்புக்களுடன் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏசியன் அமெரிகன் சர்வதேச திரைப்பட விழாவிலும் (Asian American International Film Festival) 'இனி அவன்' 2013ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இந்தத் திரைப்படத்தில் தர்ஷன் நடித்திருந்தார்.

தொலைக்காட்சி நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு

இலங்கையின் மலையகப் பிரதேசமான ரக்வானையில் பிறந்த தர்ஷன் தர்மராஜ் - 2008ஆம் ஆண்டு ஏ9 (A9) எனும் சிங்களத் தொலைக்காட்சித் தொடர் நாடகத்தின் மூலமாக நடிப்புத் துறைக்குள் நுழைந்தார்.

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'கோமாளி கிங்ஸ்'-இல், 'மோகன்' எனும் கதைப் பாத்திரத்தில் தர்ஷன் நடித்திருந்தார். 2018ஆம் ஆண்டு வெளியான 'கோ'மாளி கிங்ஸ்' முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக அமைந்திருந்தது.

இறுதியாக இவர் 'ரெல்ல வெரல்லட் ஆதரே' மற்றும் 'கொலம்ப' ஆகிய சிங்களத் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் நடித்து வந்தார்.

தர்ஷன் இறக்கும் போது அவருக்கு 41 வயது. அவரின் மனைவி சுபாஷினி. இவர்களுக்கு மகளொருவர் உள்ளார்.

'முரளி 800'

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கையை அடிப்படையாகக் கொண்ட 'முரளி 800' தமிழ் திரைப்படத்தில் தர்ஷன் நடிக்கவிருந்ததாகவும், அவருக்கு நேரம் கிடைக்காமை காரணமாக அந்தப் படத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை எனவும், 'முரளி 800' திரைப்படத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளரும் படத்தில் நடிப்பவருமான ஊடகவியலாளர் ஷியாஉல் ஹசன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

"தர்ஷன் கடினமான ஓர் உழைப்பாளி. எடுத்த காரியத்தை முடிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார். மற்றவர்களுடன் மிகவும் நட்பாகப் பழகக் கூடியவர். திரைப்படத்துறையில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக பொருளாதாரத்தில் மிகக் கஷ்டங்களை எதிர்கொண்டார்" என, தர்ஷன் குறித்து ஷியா கூறுகின்றார்.

"தர்ஷனுடன் 'நெதயோ' எனும் சிங்கள நாடகத்தில் இணைந்து நடித்த குறும்பட இயக்குநரும், ஊடகவியலாளருமான மணிவண்ணன் பிபிசி தமிழுடன் பேசும்போது; "தர்ஷன் கனிவான மனிதர்" என்றார்.

"புதிய கலைஞர்களுடனும் அன்பாக பேசுவார். அவர் பங்களிக்கும் படைப்புகளின் வெற்றிக்காக மேலதிக பொறுப்புக்களை தானாக முன்வந்து அவர் செய்வதை நான் கண்டிருக்கிறேன்" என்கிறார் மணிவண்ணன்.

'அத்தி பூத்தாற் போல்', சிங்கள சினிமாவில் எப்போதாவது சில தமிழர்கள் ஒளிர்வதுண்டு. அவ்வாறானவர்களில் தர்ஷனும் ஒருவர். ஆனால், அந்த ஒளி விளக்கு இத்தனை விரைவாக அணைந்து விடும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்