இராப்பூசல் கலிங்கிப்பட்டி கோவில்பண்ணை தெய்வதிரு. பெரியசாமிபட்டையார் மகன் திரு.தங்கவேல் பட்டையார் அவர்களுக்கு இருந்திரப்பட்டி அருள்மிகு முத்துமாரியம்மன்கோவில் பரிவட்டம் கட்டியபோது.
ராப்பூசல் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமம் ஆகும். இவ்வூர் நார்த்தாமலைக்கு நேர்மேற்கிலும், ஒவியப்புகழ்பெற்ற சித்தன்னவாசலுக்கு வடமேற்கில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இராத்திருவிழா’, ‘இராப்பூசை’ எனக் கல்வெட்டுகளில் வழங்குமாறு போலவே ‘இராப்பூசல்’ என்ற பெயரில் அமைந்த, ஆநிரை போர் இரவில் நடந்த ஒரு என்பதால் ஊரின் பெயர் இராப்பூசல் என வழக்கப்படுவதாக கருதப்படுகிறது. இவ்வூர் இலுப்பூர் ஊரையொட்டி இருக்கிறது. இவ்வூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு இரவு நேர பஞ்சாயத்து கூடுமிடமாகவும் இருந்திருக்கிறது. இரவுப்பூசல்- இரப்பூசல்- இராப்பூசல்- ராப்பூசல்
ராப்பூசல் கிராமம் 1000 தலக்கட்டு என்று அப்பகுதி மக்கள் அழைப்பதுண்டு. ஏனெனில் இவ்வூரில் மக்கள் தங்கள் சொந்தமான விவசாய நிலங்களுக்கு அருகில் தங்களது வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். அதை பண்ணை, களம் என அழைக்கப்படுகிறது. அவற்றில் பண்ணை என்பதில் பு
துக்குடியான் பண்ணை,
தீத்தான் பண்ணை,
சின்னையன் பண்ணை,
கந்தன் பண்ணை,
மல்லாரி பண்ணை,
குட்டையன் பண்ணை,
அப்பச்சி பண்ணை,
கருமாயி பண்ணை,
பூசாரி பண்ணை,
குஞ்சாயி பண்ணை,
மங்காயி பண்ணை,
பேவரன் பண்ணை,
கொக்காயி பண்ணை,
பாசிக்காரன் பண்ணை,
மேற்கத்தியான் பண்ணை ஆகியன அடங்கியுள்ளது.
அடுத்து களம் என்பதில்
முன்சீப் களம்,
பட்டையார் களம்,
அப்புக்குட்டி களம்,
கீழக் களம்,
சிவக்களம்,
பாறைக்களம்,
மருச்சுக்கட்டி களம்,
பொல்லி களம்,
மாத்துரார் களம்,
கல்லுகாட்டு களம்,
குரும்பட்டி களம்
ஆகியன அடங்கியுள்ளது.
ஸ்ரீ தாயுமானவர் கோவில் ராப்புசல் கிராம வரலாற்றை பறைசாற்றும் வகையில் மிகப்பழமையான கோவிலாக அமைந்துள்ளது.
கிராம மக்கள் தங்களின் முதன்மைக்கடவுளாக ஸ்ரீ முனியாண்டவர் கோவிலை வணங்குகின்றனர். ஆண்டுதோறும் ஸ்ரீ முனியாண்டவருக்கு ஆடி மாதம் சிறப்பு பூஜை நடைபெறும். இக்கோவிலில் கோவில்காளை ஒன்று வளர்க்கப்பட்டு வருகின்றது.கோவில்காளையை மையமாக வைத்துதான் தைப்பொங்கல் மற்றும் பங்குனி மாதம் ஜல்லிக்கட்டு எனப்படும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. இதில் கோவில்காளை வலம் வரும் பாதையில் மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடுவது வழக்கம். ஒரு காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு தான் ராப்பூசல் கிராமத்திற்கு அடையாளமாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராப்பூசல் கிராம மக்கள் குலதெய்வ வழிபாடு முறையை வழக்கத்தில் கொண்டுள்ளனர். ஸ்ரீ பாசிக்கருப்பர், ஸ்ரீ மணியன் கருப்பர், ஸ்ரீ கூவமுட்டிகருப்பர்,ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன், ஸ்ரீ குட்டையப்பர், ஸ்ரீ பகவதி அம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டுவருகின்றனர்.
மிகப்பெரிய சிவாலயமாக இருந்து அழிந்திருக்க வேண்டும்
ராப்பூசல் கிராமத்தில் அதிகமாக கள்ளர் சமூகத்தினர் மழவராயர், உத்தமுண்டார், பாண்டுரார், கங்கைநாட்டார் போன்ற பட்டப்பெயர்களோடு வாழ்கின்றனர். தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மழவராயர் ராப்பூசல் கிராமத்தை சேர்ந்தவர்.
ராப்பூசல் ஜல்லிக்கட்டு
முருகாநந்தம் அவர்களின் காங்கேயன் காளை விராலிமலை ஜல்லிக்கட்டில் கார் பரிசாக பெற்றது.
ஜல்லிக்கட்டில் சிறந்த பேச்சாளர் ராப்பூசல் பெ.செங்குட்டுவன் மழவரார்