#கள்ளர்
#பழையாறை
#கடைசி சோழனின் தலைநகரம்
தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.
இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பழையாறை பம்பப்படையூர் கிராமத்தினைச் சார்ந்தவர். இவரது தந்தை பழையாறை சுந்தரராஜன் வன்னியர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவர் ஆவார்.
1940ல் ஜூன் 24ல் பிறந்த இவருடைய தற்போதைய வயது 82 ஆகும். கும்பகோணம் அரசுப் பள்ளியில் கல்வி பயின்ற ஐயா கல்யாணசுந்தரம், திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதி ஆவார்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கல்யாணசுந்தரம் தனது 16வது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, பேரறிஞர் அண்ணா அறிவித்த மாணவர் போராட்டத்தில் பங்காற்றினார்.
கனகவள்ளி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் முத்துச்செல்வன் என்ற மகன் தற்போது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராக உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த ஐயா. கல்யாண சுந்தரம் சுமார் 27 ஆண்டுகளுக்கு 1972-1998 வரை கும்பகோணம் ஒன்றியச் செயலாளராக பணியாற்றி வந்தார்.
1989ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவையாறு அடுத்த பாபநாசம் தொகுதியில் மூப்பனாரை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக களம் கண்ட கல்யாணசுந்தரம் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதன் பிறகு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார்.
இவர், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவராகவும் உள்ளார்.
2022ஆம் ஆண்டு சூன் மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக மனுத்தாக்கல்செய்திருந்தார். இத்தேர்தலில் போட்டி இல்லாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.