சங்க காலத்தில் ஆதிமந்தியார், பாரிமகளிர், பூதப்பாண்டியன் தேவி, பெருங்கோப்பெண்டு ஆகிய அரச மகளிர் அனைவரும் பெண் புலவர்களே. அந்த வரிசையில், புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த ஜானகி ராஜாயி சாஹேப் என்ற அரச மகளிர் மாரியம்மன் பேரில், கீர்த்தனைப் பாமாலை பாடியவர்
இவர் இயற்றிய கீர்த்தனைப் பாமாலை எனும் இந்நூல் புதுக்கோட்டை நாரதா மலையில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் மீது பாடப்பட்ட சிந்து, பல்லவி, அநுபல்லவி, கும்மி வடிவில் பாடப்பட்ட பாமாலையின் தொகுப்பாகும். இந்நூல் திரிசிரபுரம் டீ சில்வா அச்சுயகதிரசாலையில் 1920 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.