வெள்ளி, 26 மே, 2023

விஜயரவி பல்லவராயர்



பல்லவராயர்கள் வழிவந்த விஜய ரகுநாத பல்லவராயர் மகன் திரு. விஜய ரவி பல்லவராயர்.

பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவரான திரு விஜய ரவி பல்லவராயர் சகோதரர்கள் திரு. ராஜசேகர் பல்லவராயர், தெய்வத்திரு திரு. முத்து மார்த்தாண்டன் பல்லவராயர் .

கறம்பக்குடியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சாமியின் பெயர் ஆனந்தேஸ்வரமுடையார், அம்மனின் பெயர் அகிலாண்டேஸ்வரி. வரலாற்று சிறப்பும், பழமை மிக்கதுமான இந்த கோவில் பல ஆண்டு களாக சீரமைக்கப்படாமல் சிதலமடைந்திருந்தது. ராஜகோபுரம் உள்ளிட்ட கோவில் மூலஸ்தான விமானங்களும் இடிந்த நிலையில் கிடந்தன. பல்வேறு காரணங்களால் கோவில் புனரமைப்பு பணி மற்றும் கும்பாபிஷேகம் தடைப்பட்டு வந்தது. 

கடந்த 100 ஆண்டுகளில் பலமுறை முயற்சி செய்தும் பணிகள் தடைப்பட்டு வந்தன. இந்நிலையில் கறம்பக்குடி சிவன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது என கோவில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. கட்டிடக்குழு தலைவர் விஜயரவி பல்லவராயர் அவர்கள் தலைமையில், முகூர்த்தகால் நடப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்ட கால்பந்துக் கழகத் தலைவர் விஜயரவி பல்லவராயர் ஆவார். இன்றும் இலக்கியம், விளையாட்டு, ஆன்மிகம் மற்றும் பொது தொண்டு என தன்னுடைய பங்களிப்பை மக்களுக்கு செய்து வருகிறார்.




வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்