செவ்வாய், 2 மே, 2023

திருமங்கையாழ்வார் வரலாறு / Thirumangai Alwar History in Tamil

திருமங்கையாழ்வார் வரலாறு
Thirumangai Alvar History in Tamil
திருமங்கை ஆழ்வார் 

600 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம்  ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ பதிப்பகத்தில் அச்சில் வெளியிடப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வார் பற்றி

திருக்குறையலூரிலே கள்ளர் தலைவராய்

நீலன் எனும் பெயரில் கள்ளர் குலத்தில் அவதரித்த

திருக்குறையலூரில் கள்ளக்குடி மரபில் தலைவனாய்

என திருமங்கை மன்னன் குறித்த பல அரிய தகவல்கள் அடங்கிய பழமையான நூலாக இது அமைகிறது



8-ம் நூற்றாண்டில் கள்ளர் மரபில் காவிரி நதி சோழ நாட்டின், திருவாலிநாடு, திருக்குறையலூரில், ஆலிநாடுடையாருக்கும் - வல்லித்திரு அம்மைக்கும் மகனாக திருமங்கையாழ்வார் அவதரித்தார்.

நீலன் பரகாலர் என்ற திருமங்கையாழ்வார் கள்ளர் குடியில் தான் பிறந்தவர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று வினா எழுகிறது. ஆதலால் இங்கு பல ஆய்வாளர்களின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பக்கங்கள் இணைக்கப்பட வேண்டியிருந்தது. 

மேலும் எல்லா ஆய்வாளர்களும் திருமங்கை ஆழ்வாரை கள்ளர் சாதி என்றே குறிப்பிடுகின்றனர். காராளர், மிலேச்சர், நான்காவது வருணம் என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுவதை எல்லா ஆய்வாளர்களும் அறிவர். அதனால் காராளர் என்பதால் வெள்ளாளர் என்றும், மிலேச்சர் என்பதால் வெளியில் இருந்து வந்தவர் என்றும், நான்காவது வருணம் என்பதால் தாழ்த்தப்பட்டவர் என்றும் யாரும் குறிப்பிடவில்லை. இதற்கான விளக்கத்தை கீழே காணலாம்.


சோழர் கல்வெட்டில் 

1235  ஆம் ஆண்டு திருப்பதியை அடுத்த திருச்சானூர் எனும் அலர் மேல் மங்கைபுரக் கோவில் சோழர் காலத்தில் ‘இளங்கோவில் எனப்பட்டது. அதனில் பெரிய நாட்டவர்’ கார்த்திகை மாதத்திற் கூடிக் கோவில் சம்பந்தமான காரியங்களைக் கவனித்தனர் ; காராளர் கற்பகம்’ எனப் பட்ட திருமங்கையாழ்வார்க்கு நாட்பூசை செய்ய ஏற் பாடு செய்தனர் என்று மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்து (19-ஆம் ஆட்சி ஆண்டு)க் கல்வெட்டுக் கூறு கிறது. இந்த பகுதியானது புதுக்கோட்டை தொண்டைமான்களின் பூர்விக பகுதியாகும்.


காராளர் கற்பகமான திருமங்கையாழ்வார்க்கு என்ற வரி உணர்த்துவது என்ன வென்றால் கற்பகம் : கற்பகம்" என்றால் கேட்பதெல்லாம் கொடுப்பது. கற்பக விநாயகர் என்றால், வேண்டியதை தரக்கூடியவர். காராளர் கற்பகமான திருமங்கையாழ்வார்க்கு, அதாவது காராளர் வேண்டியதை தரக்கூடிய திருமங்கையாழ்வார்க்கு என்பதே பொருள். இதையே கல்வெட்டில் தொல்லியல் துறையும் குறிப்பிட்டுள்ளது. இதில் காராளர் என்பவர்களின் வணங்கும் தெய்வம் திருமங்கையாழ்வார். இந்த காராளர் என்பது வெள்ளார் என்பவர்களை மட்டுமே குறிக்காது என்பதற்கு பல தரவுகள் உள்ளன. மேலும் காராளர் என்ற பட்டமுடைய கள்ளர்களும் உள்ளனர் சோழமண்டலத்தில் இன்று.




காராளர் என்பதற்கு பல விளக்கங்கள் அகராதியில் உள்ளது. தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பொருளில் ஆளப்பட்டுள்ளது. இதை வள்ளல் தன்மையைக் குறிக்கும் சொல்லாகவும், மழையால் பயன் விளைப்போர், முற்காலத்திருந்தஒரு முருட்டுச்சாதியாரையும், சூத்திரர் என்றும் குறிப்படப்படுகிறது. 

மிலேச்சர், காராளர், நான்காவது வருணம் என்பதற்கு பல பொருள் உள்ளன. மிலேச்சர், காராளர், நான்காவது வருணம் என்று வருவதால் இவரை வெளியில் இருந்து வந்தவர் என்றும், காராளர் என்பதால் வெள்ளாளர் என்றும் எழுதிவருகின்றனர். ஆனால் திருமங்கையாழ்வார் கள்ளர் மரபில் வந்தவர் என்று தெளிவாகவே குறிக்கப்பட்டுள்ளது.






இயற்பெயர் நீலன்

பகைவர்களுக்குக் காலன் போன்று திகழ்ந்ததால், ‘பரகாலன்' என்ற பெயரும் நீலருக்கு உண்டாயிற்று. பரகாலர் என்பதற்கு காலத்தைக் கடந்து நிற்பவர் என்னும் தத்துவ விளக்கப் பொருளும் உண்டு.

திருமங்கையாழ்வார் கள்ளர் மரபில் வந்தவர் என்று 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்


புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் கல்வெட்டில் 


கல்வெட்டுகளில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் தங்களை கள்ள திருமங்கையாழ்வார் மந்திரியினுடைய (சோழனின் மந்திரியாகிய) வங்குஷம் என்றும், இந்திர குல வங்குஷம் என்று கூறுகின்றனர்.



கள்ளர் குடியில் உதித்த திருமங்கை மன்னன் 
தமிழக தொல்லியல் துறை. 
( கல்வெட்டு இதழ் 2011, தமிழக தொல்லியல் துறை)



ஸ்ரீரங்கம் / திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வேடுபறியில் முதல் மரியாதை கள்ளர் மரபினருக்கு வழங்கப்படுகிறது.  

கள்ளர் இனத்தில் அவதரித்த திருமங்கை நாட்டு மன்னன்  திருமங்கை ஆழ்வார்வேடுபறி நிகழ்வில் கள்ளர் மரபினர் முதல் மரியாதை பெறும் ஊர் மற்றும் கோவில்கள் சில 

1. திருவாலி திருநகரி (திருவாலி அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் உள்ள கல்யாண ரங்கநாதர் கோயில்

திருநகரி இளைஞர்கள் மற்றும் கள்ளர் குல திருமங்கை மன்னன் வருடம் தொடரும் திருவேடுபறி உற்சவம் மற்றும் திருத்தேர் கள்ளர் சமுதாயம்மற்றும் பொது மக்கள் இனைத்து  நடத்தும் திருவிழா 

திருநகரி திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வார் அன்னபறவையில் காட்சி அளித்த போது













2. ஸ்ரீரங்கம் (ரெங்கநாதர் )



3. மன்னார்குடி (ராஜகோபால சுவாமி கோவிலில்) தை மாதம் வேடுபறிவிழா  நடக்கிறது  இதிலும் கள்ளர் மரபில் ஆதித்தஉடையவர் பட்டமுடையவர்களுக்கு தான் முதல் மரியாதை.


4.மதுரை (அழகர் கோவில்) 

5.திருக்கோஷ்டியூர் (சவுமிய நாராயணர் கோவில்)

திருக்கோஷ்டியூர் கோவிலில் பட்டமங்கலம் நாட்டு அம்பலக்காரர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது.




6.திருக்காட்டுப்பள்ளி (அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்)

7.மதுரை (கூடலழகர் கோவில்)

8.பாபநாசம் அருகே திருபுவனம் என்ற கிராமத்தில் (சின்ன ஸ்ரீரங்கம் கோவில்)

9. திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் - நாகப்பட்டினம் 



10. திருக்குறுங்குடி( நம்பிராயர் கோவில்)

நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருக்குறுங்குடி 1500 வருடம் பழமையான இந்த புண்ணிய 108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்த அழகிய நம்பிராயர் கோயில். திருமங்கையாழ்வார் அவருடைய ஆயுதங்களை தன்னுடைய கடைசி காலத்தில் திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானிடம் ஸமர்ப்பித்து சரணாகதி அடைந்தார். இன்றளவும் திருக்குறுங்குடி  திருக்கோவிலில் சிவா தேவர் (மறவர்) பாதுகாப்பில் இருக்கிறது இங்க நடக்கும் வேடுபறி விழா மற்றும் தேரோட்டத்தில் முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது.






அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில் திருக்குறுங்குடி வேடுபறி முதல் மரியாதை தேவர்  ராஜேந்திர பாண்டிய தலைவர்  அவர்களுக்கு 



11. தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி (ஆதிநாதர்‌ கோயிலில்‌)


ஆழ்வார் திருநகரி, ஆதிநாதர்‌ கோயிலில்‌ இப்புராணம்‌ உள்ளூர்த்‌ தன்மையுடன்‌ நிகழ்த்தப்படுகின்றது. கோயில்‌ தலபுராணம்‌ இதற்கு “மன்னன்மடிபிடி' எனப்‌ பெயரிடுகின்றது. இது மக்களால்‌ “கள்ளர்‌ திருவிழா” என அழைக்கப்படுகின்றது. தேவர்‌ சாதி இளைஞர்களால்‌ தூக்கிவரப்படும்‌ திருமங்கையாழ்வார்‌ சப்பரம்‌ இரதவீதியின்‌ சந்திப்பில்‌ நிறுத்தப்படுகின்றது. இச்சப்பரத்துடன்‌ கள்ளர்‌ வேடம்‌ தரித்த ஆண்கள்‌ கையில்‌ கம்பு, வேல்கம்பு ஆகியவந்றுடன்‌ வருகின்றனர்‌. இறைவனும்‌ இறைவியும்‌ மணக்கோலத்தில்‌ நகைகள்‌ அணிந்து இரதவீதிக்கு வருகின்றனர்‌. இதனைத்‌ திருமங்கை மன்னன்‌ மூன்றுமுறை வலம்‌ சுற்றுகின்றார்‌. இறைவன்‌ தப்பித்து ஓடுவது போல்‌ முன்னால்‌ செல்கிறார்‌. திருமங்கை மன்னனது சப்பரத்தைத்‌ தூக்கி வருபவர்களில்‌. சிலர்‌ “விடாதே பிடி', “விடாதே பிடி' எனச்‌ சத்தம்‌ எழுப்பியவாறு இறைவனின்‌ சப்பரத்தின்‌ பின்னால்‌ ஓடுகின்றனர்‌. இந்நிகழ்வு மூன்று சந்திப்புகளில்‌ நடைபெறுகின்றது. கோயில்‌ வடபுறத்துச்‌ சந்திப்பில்‌ இருசப்பரங்களும்‌ எதிராக நிறுத்தப்படுகின்றன.

பெருமாள்‌ சப்பரத்தில்‌ இருக்கும்‌ அர்ச்சகர்‌ கோயிலின்‌ நகைப்பட்டியல்‌ கொண்ட ஓலை ஏடு ஒன்றினை வாசிக்கின்றார்‌. அதனை இறைவன்‌ அணிந்திருக்கும்‌ நகைகளோடூ ஒருவர்‌ ஒப்பிட்டுப்பார்க்கின்றார்‌. அர்ச்சகர்‌ ஓலையைக்‌ கிழித்துப்‌ போடுவதுபோல்‌ பாவனை செய்கின்றார்‌. அப்போது அடியவர்கள்‌ “கணக்குச்‌ சரியில்லை”, “கணக்குச்‌ சரியில்லை எனத்‌தங்களுக்குள்‌ பேசிக்‌ கொள்கின்றனர்‌. இரண்டாவது ஓலை ஒன்றினைஎடூத்து முன்புபோல்‌ வாசித்து அதனையும்‌ கிழித்துப்‌ போடூவதுபோல்‌ பாவனை செய்கின்றார்‌. இப்போதும்‌ அடியவர்கள்‌ “கணக்குச்‌ சரியில்லை' எனப்பேசுகின்றனர்‌. மூன்றாவது ஓலை ஒன்றினை எடூத்து அதனை வாசிக்கின்றார்‌. இப்போது நகைப்பட்டியலின்‌ வாசிப்பு நண்டு செல்கின்றது. அடியவர்கள்‌ “கணக்குச்‌ சரியாகிவிட்டது' எனத்‌ தங்களுக்குள்‌ பேசுகின்றனர்‌. அதாவது திருடப்பட்ட நகைகள்‌ திரும்பப்பெறப்பட்டு விட்டன. நகைவாசிப்பு நிறைவு பெற்றவுடன்‌ திருமங்கை மன்னனுக்கு இறைவன்‌ காட்சி கொடுக்கின்றார்‌. தேவர்சாதி முதியவர்‌ ஒருவருக்குப்‌ பரிவட்டம்‌ கட்டி மரியாதை செய்யப்படுகின்றது. இத்திருவிழாவில்‌ இக்கோயிலைச்‌ சுற்றியுள்ள கிராமங்களில்‌ வாழும்‌ தேவர்‌இனமக்கள்‌  பெருமளவில்‌ பங்கேற்கின்றனர்‌.

திருமங்கைமன்னன்‌ திருமணக்கோலத்தில்‌ வந்த இறைவனின்‌ நகைகளைக்‌ கொள்ளையிட முற்பட்டபோது இறைவன்‌ அவருக்குக்‌ காட்சி கொடுத்தார்‌ என்பது வைணவப்‌ பொதுக்கதையாகும்‌. இது ஆதிநாதர்‌ கோயிலில்‌ பனைஓலையில்‌ எழுதப்பட்டுள்ள கோயில்‌ நகைப்பட்டியலை வாசித்தல்‌ என்னும்‌ சடங்கோடு உள்ளூர்த்தன்மை பெறுகின்றது. கோயிலைச்‌ சுற்றியுள்ள கிராமங்களில்‌ வாழ்கின்ற தேவர்‌இன மக்களைத்‌ தன்னுடன்‌ இணைத்துக்கொள்ள ஆதிநாதர்‌ கோயில்‌ இக்கதையாடலையும்‌ சடங்கினையும்‌ பயன்படுத்துகின்றது.

பெருங்கோயில்‌ சடங்குகளில்‌ மக்கள்‌ பக்தி உணர்வோடும்‌ உறவினர்‌ என்ற உணர்வோடும்‌ பங்கேற்கின்றனர்‌. நெல்லையப்பர்‌ கோயில்‌ “மூங்கில்‌ சடங்கில்‌' (இராமக்கோன்‌ கோனார்‌ சாதியைச்‌ சார்ந்தவர்‌) கோனார்‌ சாதியார்‌ பங்கேற்பதும்‌, திருமங்கைமன்னன்‌ கள்ளர்‌ குலத்தைச்‌ சார்ந்தவர்‌ என்பதால்‌ தேவர்‌ இனத்தவர்‌ “மன்னன்மடிபிடி' திருவிழாவில்‌ பங்கேற்பதும்‌ இந்த உணர்வினாலே ஆகும்‌






The Indian Antiquary Vol-xxxv 
(1906)

Ancient India, by Aiyangar, S.K
(1911)

கள்ளர்  மரபு என உரக்க உரைத்த தமிழ் அறிஞர் ' மு இராகவயங்கார்" 


தமிழ் கல்விச்சங்கம் (1929)



Muttaraiyar belonged to the Kallar caste
Journal of Oriental Research, Madras - Volume 3 -1929



திருமங்கையாழ்வார் வைபவம்  12 ஆம் நூற்றாண்டு



ஊத்துமலை பாளையக்காரரான மருதப்ப தேவர் தங்களை திருமங்கையாழ்வார் அவதரித்த திருக்குலமென்று கூறுகின்றனர்.





தமிழ் அகராதி -1957


பாண்டி கல்வெட்டில் 

ரசன் ஆணைப்படி பாண்டி மண்டலத்து மிழலை கூற்றத்தில்  ( இன்றைய புதுகோட்டை சிவகங்கை மற்றும் ராமநாத புரத்தின் சில பகுதிகள் ) செய்த அகரம் கலியுக ராம சதுர்வேதி மங்கலம் என்ற ஊரை உருவாக்கி அதனை  32 பட்டர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது. இந்த தானம் செய்த நாள் திரு கார்த்திகை நாள் அன்று அன்று கலியன் எனும் திருமங்கையாழ்வார் அவதார நட்சத்திரம் இதுவே இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் பிறந்த நட்சத்திரமாகவும் கல்வெட்டு சொல்கிறது நம்கலியன் மற்றும் நம்நட்சத்திரம் என்ற வாசகங்கள் மூலம் கலியன்பிறந்தது கள்ளர் குலம் என்பதும் கலியனை நம் என கல்வெட்டில் வீரபாண்டியன் சொல்வதன் மூலம் பாண்டியர் குலமும் கள்ளர் / மறவர் என்பதும் தெளிவாகிறது.  

 




கள்வரும்‌ கள்வனும்‌
















மிலேச்சர் என்பதற்கு விளக்கமாக : (மிலேச்ச குலத்தில்)

1) மஹாபாரதம் உத்யோக பர்வம் : - மலைகள் மற்றும் அணுகவியலாத காடுகளிலும் வசிப்பவர்களும், உயர்ந்த வம்ச வழியும், வயதில் முதிர்ச்சியும் கொண்ட பல மிலேச்ச குல வீரர்கள் ஒன்றாகக் கூடி, பல்வேறு ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு, பாண்டவர்களின் காரியத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.  

2) சிந்து சமவெளியில் (பலுச்சிஸ்தான்) இருந்து வந்தவர்கள் பெலுச்சர் (மிலேச்சர்) என அழைக்கப்பட்டனர். 

3) காவல் மரபினர் (தமிழ் அரசர்களுக்கு மெய்காப்பாளராக யவனர், மிலேச்சர் ஆகியோர் காவல் புரிந்த செய்திகள் சங்க இலக்கியமான முல்லைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. ("படம் புகு மிலேச்சர் உழையர் ஆக")

4) தேஜ்பூர் மிலேச்ச அரசமரபினர் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் வழித்தோன்றல்கள் என்று கூறி கொள்கின்றனர். 

5) வேற்று மொழி பேசும் ஆரியர்.

6) யயாதி மன்னன்நான்காவது மகன், அனுவின் வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் என்று அழைக்கப்பட்டனர்..



காராளர் என்பதற்கு விளக்கமாக :



1) முற்காலத்திருந்தஒரு முருட்டுச்சாதியார். 
2) சேலம் மலைவாசிகளானஒரு வேடச்சாதியார்
3) சூத்திரர். (பிங்.) 
4) வேளாண் மக்களில் சில வகையினரை குறிக்க பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பொருளில் ஆளப்பட்டுள்ளது. 
5) வள்ளல் தன்மையைக் குறிக்கும் சொல்லாகவும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.



நான்காவது வருணம் என்பதற்கு விளக்கமாக : 

வேடன் , சூத்திரன் , வேளாளன் 


தொல்காப்பிய மரபியல், ‘’வைசியகன் பெறுமே வணிகவாழ்க்கை’ என்று அறுதியிட்டு உரைப்பதுபோலக் கூறுகிறது. இனிச் சூத்திரர் என்ற சொல்லோ வருணாசிரமதர்மத்தில் அதற்குத் தருகின்ற விளக்கமோ தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. 







ஆய்வாளர்களின் குறிப்புகள் நூல்களில்

Book  : The Brahmavâdin 
Author  : M.C. Alasingaperumal, 1913


Book  : Tamil Studies by Aiyangar, M. Srinivasa
(1914)


நூல்:  திருமங்கைமன்னன். 
ஆசிரியர் : பாஷ்யம் அய்யங்கார் - 1927




பல்லவர் வரலாறு (1944) ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார் 


சோழர் வரலாறு  
1947: டாக்டர் மா. இராசமாணிக்கனார் 


கைக்களஞ்சியம், Volume 6
தமிழ் வளர்ச்சிக கழகம், 1954 



Madras Government Oriental Series, Issue 157 - (1957)


The Tamils and Their Culture (1967 ) 
Author  : K. S. Ramaswami Sastri 



தமிழ் இலக்கிய வரலாறு
C. Balasubramanian-1967



பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய 6000 படி குரு பரம்பரா ப்ரபாவம்.
பின்பழகிய பெருமாள் ஜீயர் - 1968 


தென் இந்திய வரலாறு
Kolappa Pillay Kanakasabhapathi Pillay
1969



Śrimat Pakavata Kīta, Śrī Kītācarya Suprapata Pracāra Niti Kaṅkārya Sapai, 1974 


சோழநாட்டு திருப்பதிகள்
நா குப்பு ரெட்டியார்
Volume 2 (1981)


Alvarkal, Annamacariyar patalkalil Kannan pillait tiruvilaiyatalkal
A. Cutakar. 1984


மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை வாழ்க்கை வரலாறு
கருப்பையா - 1985


அழகர் கோயில்
பரமசிவம் - 1989


பரகாலன் பைந்தமிழ்
பேராசிரியர் டாக்டர் க. சுப்பு ரெட்டியார் - 1992


ஆழ்வார்களின் தமிழ்த்தொண்டு
M. நாராயண வேலுப்பிள்ளை




Hindu Mythology 
T. Renga Rajan Iyengar - 1998


தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும் 
கே.கே. பிள்ளை - உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
2000


பக்தி இலக்கியத்தில் சமுதாயப்பார்வை
த. ஈஸ்வர பிள்ளை - 2000 
Devotional literature



தமிழ் இலக்கிய வரலாறு
கிருஷ்ண மூர்த்தி - 2001



ஸ்ரீவைஷ்ணவம் / Srivaishnavam
வேணு சீனிவாசன்  - 2012 





நாளிதழ் கட்டுரை 
தினமணி 


தினசரி
ஆனந்த விகடன்

இந்து

THE HINDU


THE NEWS MINUTE

பாண்டியர் வழி மன்னர் பூஞ்சோலை தம்பிரான் கட்டிய கோயில் "கூடல் அழகிய பெருமாள் கோயில்" ஆகும்.இந்த கோயிலை 2004-ல் மறு சீரமைப்பு செய்தார்கள். இதற்கு 

திருமங்கைையாழ்வார் வழி வந்த TTV.தினகரன் முனையதரையர் 

4லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து உள்ளார். 




திருமங்கையாழ்வாரே கள்ளர்  குலதெய்வமாகவும் உள்ளார்

" திருமாலிருஞ்சோலை மலைதனிலே அணியான ஜாரிக்கள்ளர் குடியாகிய பேர்கள் அனேகருண்டு அதில் நானொருவன் கண்டீர் அவர் அத்தனை பேர்க்கும் நான் எத்தன் கண்டீர் துதிக்கொண்டு வாழ்ந்திருந்தேன் சூரசோர னென்றெனக்கு பேரழைப்பார்,  திருமங்கை யாழ்வாரைக் குல தெய்வ மென்றே வைத்துக் கைத்தொழுவேன்"

கிபி பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நொண்டி நாடகத்தில் "  சோர சூரன்" எனும் கள்ளர் வீரன் குறிப்பிடப்படுகிறார்.  

அழகர் கோயிலை சுற்றி வசிக்கும் கள்ளர்களில் ஒருவரான இவர் திருமங்கை ஆழ்வாரை தனது குல தெய்வமாக வணங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

கள்ளர் மரபினரில் ஒரு பிரிவினர் திருமங்கை ஆழ்வாரை தங்களது கள்ளர் குலத்தின் தெய்வமாகவே வணங்கி வந்தது இவ்விலக்கியத்தின் மூலம் உறுதிப்படுகிறது.


திருமங்கையாழ்வார் வேடுபறி  

ஸ்ரீரங்கம் வேடுபறி

ஸ்ரீரங்கம் பகுதில் வேடுபறி ” உற்சவத்தில்  வலையர்கள் அதிகம் கலந்துகொள்வதால் திருமங்கையாழ்வார் தங்கள் இனமாக கூறிவருகின்றனர். ஆனால் ஆழ்வார் கொள்ளையடித்து, உபதேசம் பெற்ற சம்பவத்தை மையமாக வைத்து நடத்தப்படும் உற்சவத்துக்கு பெயர் “திருவேடுபறி” உற்சவம். இன்றும் பல திவ்ய தேசங்களில் நடைபெறுகிறது உதாரணம் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, மன்னார்குடி என பல ஊர்களில் நடைபெறுகிறது.  







மதுரையில் கள்ளர் மரபினரின் திருமங்கையாழ்வார் வேடம் மற்றும் மரியாதை


ஸ்ரீரங்கம் இராப்பத்து 8ஆம் நாள், திருமங்கை ஆழ்வார் வேடுபறி (வேடர்பறி!) பெரிய கோவில் ஆலிநாடன் திருவீதி (ஆலிநாடனான திருமங்கை ஆழ்வார் அமைத்தது), உள் மணல்வெளியில் நடைபெறும். அங்கே 'கோண வையாளி' என்னும் குதிரை ஓட்டம் செய்வார். தெற்கு,வடக்காக நூறு மீட்டர் தூரம் மூன்று முறை வேகமாக ஓடுவார்.பின்னர் ஒரு வட்டமாக 20/30 மீட்டர் தூரம் மூன்று முறை வேகமாகச் சுற்றி வருவார். இந்தக் கோண வையாளி சமயத்தில் நம்பெருமாளின் நிரந்தர ஸ்ரீபாதம் தாங்கிகள் தாங்காமல்,ஸ்ரீரங்கத்து ஸ்ரீவைஷ்ணவ இளைஞர்கள் கூட்டமாக வந்து மிகுந்த குதூகலத்துடன் தாங்கிக் கொண்டு ஓடுவார்கள்.


குதிரைக்கு (வாகனத்துக்கு) கடலைச்சுண்டலும், நம்பெருமாளுக்குப்பானகமும், "விடாய்பருப்பும்" (ஊறவைத்த பாசிப்பருப்பு) நிவேதனம் செய்யப்படும். பெரிய கோவில் கள்ளர் மிராசுக் காரர்கள், பரம்பரை பரம்பரையாக காவல் காப்பவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது அறநிலையத் துறையினர் (!) ) நம்பெருமாளை வலம் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா, என்று பார்த்துச் செல்வார்கள்.


திருமங்கை மன்னர் 'நீலன்' (ஆழ்வார்) ராஜ அலங்காரத்தில் கம்பீரமாக வருவார். வலது கண்ணோ ரத்தின் கீழ் வைத்த பிடியும், தாழ்ந்த தோளும், மடித்த இடக்காலும், மண்டிபோட்ட வலக்காலும், சக்கரமாய் வளைத்த வில்லுடன் வந்து, நம்பெருமாளும், கைங்கர்ய பரர்களும் விழித்துக் கொண்டு இருக்கிறார்களா? தூங்குகி றார்களா? என்று துப்பறிந்து போவார். அவருடைய பரிஜனங்களாக, திருமங்கையாழ்வார் அவதரித்த கள்ளர் குலத்தினர்பலரும், சந்திரபுஷ்கரணி பக்கமிருந்து, கத்தி,வேல், நீண்ட தடிகள், தீப்பந்தங்கள் ஆகியவற்றைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து நம்பெருமாளைப் சுற்றி, சுற்றி வந்து செல்வார்கள்.


துப்பறிந்த கலியன் தம் பரிஜனங்களோடு வந்து, நம்பெருமாளுடைய திவ்ய ஆபரணங்களையும், பொருட் களையும் கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவார். நம்பெருமாளின் காவலர்களும் ஓடிப்போய் , அவர்களைப் பிடிக்க முடியாமல் திரும்பி விடுவார்கள்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீராமாநுஜர் சந்நிதியில் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி அன்று ததியாராதனை கைங்கர்யத்தை இன்றும் அந்த ஊர் கள்ளர்கள் நடத்தி வருகிறார்கள். கள்ளர் குடியில் பிறந்த இயற்கை வழி வேளாண் அறிஞர் பசுமை போராளி கோ.நம்மாழ்வார் பார்புரட்டியார் ஊரில் அரங்கனுக்கும், சம்பிரதாயத்திற்கும் பெரும் தொண்டாற்றிய குவளக்குடி சிங்கமய்யங்கார் பாடசாலையும் அதற்குண்டான நிலங்களும் இன்றும் உள்ளன. ஒரு காலத்தில் நாத்திக கோட்டையாக மாறியது. இன்றும் தங்கள் ஆச்சார்யனாக ஸ்ரீகூரத்தாழ்வான் திருவம்சத்தை சேர்ந்த ஸ்ரீபராசர பட்டர் ஸ்வாமிகளை இன்றளவும் கொண்டாடுகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினரை மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் ஸ்வாமிகள் அவர்கள் அந்த ஊருக்கு அடிக்கடி விஜயம் செய்து ஸ்ரீவைணவ கோட்பாட்டில் திளைக்க வழி காட்டி வருகிறார்கள்.

மதுரை கள்ளழகர் கோயில் வேடுபறி

திருமங்கையாழ்வார் வேடுபறி என்னும் திருவிழா அழகர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் இன்றளவும் அத்திருவிழாவில் கள்ளர் வேடம் பூண்டு அதற்கான கோயில் மரியாதைகளை மேலநாட்டின் முக்கிய ஊரான மாங்குளம் கிராமத்தை சேர்ந்த கள்ளர்களே பெறுகிறார்கள். 

திருவாலி திருநகரியில் வேடுபறி 




சீர்காழி,  திருக்குறையலூர் பகுதியில் பிறந்த
திருமங்கை மன்னனின் தலையை, பெருமாள் தன்னுடைய திருக்கரத்தால் வருடி "நம் கலியனோ" என்று அழைத்து, செவியில் திருமந்திரத்தை உபசேதித்தார். உடனே மன்னரின் ஆணவம் மறைந்தது, அகங்காரம் போனது, ஞானம் பிறந்தது, அக்கணமே தன்னை மாற்றிக்கொண்டு எம்பெருமான் அருகிலேயே நின்று ஆழ்வாரானார். "வாடினேன் வாடி" என்று தொடங்கும் முதல் பாசுரம் இவர் திருவாயில் பிறந்தது. "ஆலிநாடன்' என்றே தன் பாசுரங்களில் தன்னை அழைத்துக் கொள்கிறார். இது நடந்த மாதம் பங்குனி (உத்திர நட்சத்திரம்). ஞானம் பிறந்த இடம் அருகிலுள்ள வேதராஜபுரம்.
 
இந்நிகழ்வை நினைவு படுத்தும் விதத்தில் ஆண்டுதோறும் வேதராஜபுரத்தில் இந்த விழாவானது, வேடுபறி விழா' என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான கிராம மக்கள் குழுமியிருக்க வெகு சிறப்பாக நடைபெறும். இவ்வாண்டு மார்ச் 20 -ஆம் தேதி மாலை திருவாலியில் ஸ்ரீ கல்யாண ரங்கநாதர் திருக்கல்யாணமும், இரவு வேதராஜபுரத்தில் திருமங்கை ஆழ்வாருக்கு ஞானஜன்மாவதார திருவேடுபறி உத்ஸவமும் நடைபெறுகின்றது. திருவாலி - திருநகரி சீர்காழியிலிருந்து பெருந்தோட்டம் பேருந்து மார்க்கத்தில் உள்ளது.

தஞ்சை கோவிலடி அப்பக்குடத்தான் பெருமாள் ஆலயம்

வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை , கோவிலடி அப்பக்குடத்தான் பெருமாள் ஆலயத்தில் நீலன், பரகாலன், ஆலிநாட்டு கள்ளத் திருமங்கையாழ்வாரின் வேடுபறியில் முதல் மரியாதை பெறும் கள்ளர் பெருங்குடிகள்:-

1.நரங்கியர் 
2.திராணியார்
3.வாச்சார்
4.சேதுராயர்





திருமங்கையாழ்வார்

மிலேச்ச குலத்தில் அல்லது நான்காவது வருணத்தில் அவதரித்த திருமங்கையாழ்வார் என்று ஸ்ரீ திருமங்கையாழ்வார் வைபவத்தின் விளக்கத்தினை ஒவொருவரும் மாற்றி எழுதியுள்ளனர்.



திருமங்கையாழ்வார் 
வரலாறு  


* திருமங்கை மன்னர் மதயானைகளை கொண்ட பெரும்படையின் தலைவன் என திவ்ய சூரி சரிதம் எனும் பழைய நூல் கூறுகிறது. 

* போர்களில் பங்கேற்று, எதிரிகளுக்கு எமனைப்போன்று வீரம் காட்டியதால் பரகாலன் என போற்றப்படுகிறார்.

* திருமங்கை ஆழ்வார் மிகப்பெரிய சேனையை கொண்டிருந்ததாகவும், யானைப்படையை வழிநடத்துவதில் வல்லவர் என்றும் பெரிய திருவாய்மொழி பாடல்கள் கூறுகின்றது. 

("வாட்டிறற் றானை மங்கையர் தலைவன்":- பெரிய திருவாய்மொழி 10,9,10)/( "அமரிற் கடமா களியானைவலான்":- 2,4,10)/ " கடமாருங் கருங்களிறு வல்லான் வெல்போர் கலிகன்றி" :- 2,5,10)

* பெரிய குதிரை வீரரென்றும், வில் வித்தையில் எதிரிகளை வெல்பவர் என்றும் பெரிய திருவாய்மொழி பாடுகிறது.

("ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல்மாவலன்" :- 5,8,10)/ "மருவலர்தம் உடல்துணிய வாள் வீசும் பரகாலன்":- 3,9,10)

* வைணவத் திருப்பணிகளில் ஈடுபட்டதால் சோழ மன்னருக்கு கப்பம் செலுத்த இயலாமல் சோழனின் கோபத்துக்கு ஆளானார் திருமங்கை மன்னன். சோழ மன்னர் திருமங்கை மன்னருக்கு எதிராக சண்டீசுவரன் எனும் தளபதி தலைமையில் படையை அனுப்பினார். ஆனால் திருமங்கை ஆழ்வார் " ஆடல்மா" எனும் தனது குதிரையின் மேலேறி போரிட்டு சோழர் படைகளை புறமுதுகு கண்டார். வாளை வீசி யானைகளின் பனை போன்ற துதிக்கைகளை வெட்டி, யானையின் மத்தகங்களை (யானையின் நெற்றி) பிளந்து,கிம்புரி எனும் அணிபூண்ட தந்தங்களை அறுத்து, குதிரைப்படையை அழித்து சோழரின் படைகளை திருமங்கை மன்னன் புறங்கண்டார் என பரகாலன் சருக்கம் கூறுகிறது.. வைணவ பணிகளில் ஈடுபட்ட போதும் கள்ளர் மரபின் வீரம் குறையவில்லை.

* திருமங்கை ஆழ்வாரின் யானையின் பெயர் கடமா களியானை ஆகும்.

தமிழ் வேதங்களில் பங்களிப்பு:-

* ஆசு, மதுரம், சித்தம், விஸ்தாரம் ஆகிய நான்கு நடைகளில் கவிதைகளை இயற்றும் திறன் பெற்று இருந்ததால் நாற்கவிப்பெருமாள் எனும் பட்டத்தை பெற்றார்.

* தமிழ் வேதங்கள் என அழைக்கப்படும் வைணவ இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அதிக (1361) பாடல்களை பாடிய பெருமைக்கு உரியவர். 
இவர் படைத்த பாசுரங்கள் பின்வருவன:- 

திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்) 

சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்)

பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்) திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்) 

திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்) 

பெரிய திருமொழி (1084 பாடல்கள்)



ஆலிநாடர், சோழனின் படைத் தலைவராக இருந்தார். நீலன் கற்க வேண்டியவற்றைக் கற்று , வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நிலைபெற்று வளர்ந்தார்.

திருமாலடியாரான அவர் திருமாலின் திருவருளாலே ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்த்தாரக்கவி என நான்கு வகைக் கவிகளையும் பாடும் திறமையும் வல்லமையும் பெற்றிருந்தார்.

கள்ளர் என்னும் வீரர் மரபில் தோன்றியவர் என்பதால், வாள், வில், வேல் முதலிய படைக் கலங்களை பயன்படுத்தி போர் செய்வதில் வல்லவராகத் திகழ்தார். பகைவரை சுலபமாக வெற்றி கொள்ளும் தன்மை அவருக்கு வாய்க்கப் பெற்றிருந்தது. நீலனின் கல்வி திறமை வீரத்தை கண்ட சோழ மன்னன் அவரைத் தன் படைத் தளபதியாக ஆக்கிக் கொண்டான்.

அந்தக் காலத்தில் ‘நாலுகவிப் பெருமான்’ என்னும் சிறப்புடைய புலவன் , நீலனிடம் வாதிட்டு தோல்வியைத் தழுவினான். எனவே தன் பட்டத்தினை, நீலருக்கு இட்டு, ‘நாற்கவிப் பெருமான்’ என்கிற விருதை அவருக்கு அளித்தான்.

இதையறிந்த சோழ மன்னன், நீலரை அழைத்து அவருக்கு மேலும் விருதுகளை அளித்துப் பாராட்டினான்.

பின்னர் நீலர் அந்தச் சோழனுக்காக போர்கள் பலவற்றை மேற்கொண்டு எதிரிகளை விரட்டி வெற்றிவாகை சூடினார். இதனால் மகிழ்ந்த சோழ மன்னன், நீலரின் வீரத்தையும் அறிவுக் கூர்மையையும் வியந்து பாராட்டி, தன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த திருமங்கை நாட்டுக்கு மன்னனாக்கி மகிழ்ந்தான்.

திருமங்கைக்கு நீலர் மன்னரானதும் அவரை எல்லோரும் ‘திருமங்கை மன்னன்’ என்றே அழைக்கலாயினர்.


திருமாலடியாரும், திருநாங்கூரில் வசித்து வருபவருமாகிய மருத்துவர் அவரது மகள் குமுதவல்லியைப் பற்றிய செய்தி பரகாலரை எட்டியது. அவர் திருநாங்கூரிலுள்ள மருத்துவர் இல்லத்துக்குச் சென்று, குமுதவல்லியைத் தனக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

பெண்ணோ பிராமணப் பெண். பரகாலர் கள்ளர் ஜாதி. இருந்தும் தந்தை, பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.

ஆனால் குமுதவல்லியாரோ, ‘திருவிலச்சினையும், திருநாமமும் உள்ள வைணவனுக்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன்’ என்று மறுத்துரைத்தாள்.

மேலும் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவர்களை அமுது செய்வித்து, அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ஏற்றுக்கொள்ள மொழிந்தாள்.

இந்த இரண்டையும் செய்வதாக நீலரும் ஒப்புக் கொண்டார், அதன்படி அவரது முதல் கடனை முதலில் நிறைவு செய்தார்.

இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்ற ஒருவர் நீலர்தான்.

குமுதவல்லியாரை அவள் பெற்றோர் திருமங்கை மன்னருக்கு நாடும் ஊரும் அறிய நல்லதோர் நாளில் மணம் செய்து கொடுத்தார்கள்.

திருமங்கை மன்னன் அரசுக்குச் சேர வேண்டிய பகுதிப் பணம் விரைந்து வந்தாக வேண்டும் என்னும் செய்தி தாங்கிய ஓலையுடன், தன் தூதுவர்களை திருமங்கை மன்னனிடம் அனுப்பினான் சோழமன்னன்.

திருமங்கை சென்ற தூதுவர்கள் பகுதிப் பணத்தை விரைவில் தருமாறு பரகாலரை வற்புறுத்தினார்கள். பரகாலருக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. விளைவு – தூதுவர்களை அடித்து விரட்டினார்.

சேனாதிபதியும் யானை, குதிரை, காலாட் படைகளுடன் சென்று பரகாலரை வளைத்துப் பிடிக்கப் போனான். மங்கை மன்னனோ தன் குதிரையின் மேலேறித் தம் படைகளுடன் வந்து, சேனைகளை எல்லாம் துரத்தியோட்டிவிட்டார்.

மீண்டும் சதுரங்க சேனைகளுடன் வந்து பரகாலரை வளைத்தனர். பரகாலரும் வாளின் பலத்தினால் படையை அழிக்கத் தொடங்கினார்.



இதனைக் கண்ட அரசன் இவரைப் பார்த்து, ‘நீர் எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை. உமது வீரம் கண்டு மகிழ்ந்தேன். நீர் செய்த தவறுகளை எல்லாம் மறந்தேன். அஞ்சாமல் என்னை நம்பி வாரும்’ என்று அழைத்தான். பரகாலரும் அரசன் மீதான பகைமை மறந்து உடன் சென்றார்.

அரசனும் பரகாலரை நோக்கி, ‘ தரவேண்டிய பகுதிப் பணத்தை தந்துவிட வேண்டும், அதுவரையில் அமைச்சர்களின் பாதுகாவலில் பரகாவலர் இருக்க வேண்டும்’ எனவும் பணித்தார். அமைச்சர்களும் பரகாலரைப் பிடித்துக்கொண்டு, ஒரு தேவாலயத்தில் சிறை வைத்தனர்.

திருமங்கை மன்னரது கனவில் பேரருளாளப் பெருமான் எழுந்தருளி, ‘உமது பகுதிக்கு வர வேண்டிய பணம் நாம் தருகிறோம். காஞ்சிபுரத்துக்கு வாரும்’ என்று அருளினார். பரகாலரும் மறுநாள் அமைச்சர்களிடம், ‘காஞ்சிபுரம் வந்தால் உங்கள் பகுதியைத் தருகிறேன்’ என்றார்.

அமைச்சர்கள் அதனை அரசரிடம் தெரிவித்தனர். அரசரும் இதற்கு உடன்பட்டு, தக்க காவலுடன் பரகாலரை காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைத்தார்.

காஞ்சிபுரம் சென்ற பரகாலர், புதையல் பொருளைக் காணாது வருந்திக் கிடந்தார். அவருடைய வருத்தமுற்ற மனத்தை மகிழ்விக்க எண்ணிய காஞ்சி பேரருளாளப் பெருமான், ‘அஞ்சாது நீர் அதை எடுத்துக் கொள்ளும்’ என்று பணம் இருக்கும் இடத்தை அடையாளமாகக் காட்டியருளினான்.

வேகவதி நதிக்கரையில் அவருக்குப் புதையல் கிடைத்தது. பேரருளாளன் காட்டிய இடத்துக்குச் சென்ற பரகாலர், அங்கே பணம் இருக்கக் கண்டு, அதை எடுத்து கப்பம் செலுத்த வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, அதுபோக மீதி இருந்த பணத்தை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவளிப்பதற்காக வைத்துக் கொண்டார்.

நடந்த நிகழ்ச்சியை அரசனுக்கு அறிவித்த அமைச்சர், அரசர் முன்பாக திருமங்கை மன்னர் தந்த கப்பப் பணத்தை வைத்தார். வேந்தனோ, காஞ்சி அருளாளப் பெருமானான வரதராஜப் பெருமாளே பணம் தந்த செய்தியைக் கேட்டு பெருவியப்படைந்தான். இவர் மனிதர்களுள் மேம்பட்ட பெருமை கொண்டவர்; அவரை மதியாமல் இப்படி நடந்துகொண்டோமே என்று வருந்தினான்.

காஞ்சிப் பேரருளாளன் அளித்த கப்பப் பணத்தை தனது கருவூலத்தில் சேர்க்க அவனுக்கு மனம் வரவில்லை. எனவே திருமங்கை மன்னரை அழைத்தான். அவரிடமே அப்பணத்தையும், சிறப்பாக வெகுமதிகளையும் அளித்து அவற்றை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உணவிட வைத்துக் கொள்ளுமாறு வேண்டினான். அதன் மூலம், திருமங்கை மன்னரை மூன்று தினங்கள் பட்டினி போட்ட பாவத்தைப் போக்கிக் கொண்டான். திருமங்கை மன்னன் தன் ததியாராதனப் பணியைத் தொடர்ந்தார்.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததீயாராதனம் குறைவற நடைபெற்று வந்தது. ஆனால், ஆழ்வாரின் கருவூலத்தில் இருந்த திரவியமோ குறைவுற்று வந்தது. பணம் யாவும் செலவழிந்ததும், திருமங்கை மன்னன் ததீயாராதனம் தொடர்ந்து நடைபெற என்ன வழி என்று யோசிக்கலானார்.

பரகாலன் ஒரு வினோதமான முடிவெடுத்தார். செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் வழிப்பறித்து அன்னதானம் செய்ய கூட்டாளிகளை உடன் வைத்துக் கொண்டு வழிப்பறி செய்தார்.


திருமந்திர அர்த்தம் விளங்கப் பெற்ற பரகாலன், தாம் அறிந்த திருமந்திரத்தையும், அதற்கு உள்ளீடான ஸ்ரீமந் நாராயணனுடைய வடிவமாகிய உருவத்தையும் அருள்மாரி என்னும் பெரிய பிராட்டியின் அருளாலே நேரில் கண்டு தரிசித்து திருமங்கை ஆழ்வாரானார்.

திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால் 
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன் 
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா 
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய்.

கஷ்டத்தில் இருப்பவர்களிடம் இனிமையாகப் பேசினால்கூடப் போதும். அதற்கும் நேரமில்லாமல் பல உயிர்களைக் காரணமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறேன் என்று தப்பை ஒப்புக் கொள்வதற்கு மிகுந்த மன முதிர்ச்சி வேண்டும்.

திருமால் திருத்தல தரிசனம் செய்யும் அவா மிகப் பெற்றார். தலங்கள் தோறும் சென்று, ஆங்காங்கு எழுந்தருளியுள்ள திருமாலை வணங்கிப் பின் சோழ மண்டலத்துக்கு எழுந்தருளினார்.

திருமங்கை ஆழ்வார் பல தலங்கள் தோறும் சென்று தலத்து இறைவனைச் சேவித்து திருவரங்கம் வந்தார். அங்குள்ள பெரிய பெருமாளுக்கும் அழகிய மணவாளனுக்கும் விமானம், மண்டபம், திருத்தளிகை, திருமதில், கோபுரம் முதலிய தொண்டுகள் செய்ய விரும்பினார். அதற்காக நாகப்பட்டினம் சென்று பெரும் பொன்னை எடுத்து வந்தார்; அதனை விற்றுப் பெற்ற பொருளைக் கொண்டு விமானம், மண்டபம் முதலியன கட்டுவித்தார்.

இதனைக் கண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார், மலர் பறிக்கும் தமது ஆயுதத்துக்கு திருமங்கை மன்னருடைய பெயர்களுள் ஒன்றான ‘அருள்மாரி’ என்னும் பெயரினை இட்டு மகிழ்ந்தார்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களின் எண்ணிக்கையில் திருமங்கையாழ்வாரின் பங்கு கணிசமானது.கவித்துவமாக, இலக்கணப்படி அமைந்த பல வகைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். பெரும்பாலான திவ்விய தேசங்களையும் பாடியிருக்கிறார்.






















வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்