மன்னர் ராமசந்திர தொண்டைமான் தனது மகளை அம்புநாட்டை சேர்ந்த குழந்தை பல்லவராயர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களது மகனான மார்தாண்ட பைரவ பல்லவராயரை தனது அரசியல் வாரிசாக தத்தெடுத்தார் தொண்டைமான்.(manual of pudukkottai state vol 2 part 1 pg 854). ராமச்சந்திர தொண்டைமானின் முதல் மனைவி போரம் பல்லவராயர் வழி வந்தவர்.
கிபி 1898 முதல் 1928 வரையிலான காலகட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தான திவான் மற்றும் ரீஜன்ட் ஆகிய பதவிகளை, மார்த்தாண்ட பைரவ பல்லவராயரின் சகோதரர் விஜய ரகுநாத ராய பல்லவராயர் வகித்து சிறப்பித்தார். (manual of pudukkottai state vol 2 part 1 949-950)