செவ்வாய், 2 மே, 2023

கள்ளர் என்று திருநாமம் கொண்டவன் பெருமாள்



ஆதித் தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் நானிலங்களுள்
முல்லைக்குரிய தெய்வமாகத் திருமாலைக் குறிப்பிடுகின்றது.

மாயோன் மேய காடுறை உலகமும் " என்பது நூற்பா, திருமால் விரும்பிய காடு பொருந்திய முல்லை நிலம். முல்லையின் தெய்வம்பின்னர் நிலம் கடந்த தெய்வமாய்த் திருமால் வணங்கப்பட்டத்தைச் சங்க இலக்கியங்கள் (கி.மு.500-கி.பி.300) காட்டுகின்றன.

‘சங்கப்     பாடல்களில்     மிகுதியாகக் குறிக்கப்பெறும்
தெய்வம் திருமாலே’ என்பது அறிஞர்கள்  கருத்தாகும்.

மன்னவர்க்குத் திருமாலை உவமை கூறும் மரபினைச் சங்க நூல்களிற் காணலாம். 

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்
(தொல்.புறத்: 5)

“மாயோனைச் சிறப்பித்து, ஏத்திய குறையாத சிறந்த புகழையுடைய பூவை நிலையும்” என்பது இதன் பொருளாகும். 

புறநானூற்றில் திருமால் ‘பூவைப் பூவண்ணனாகத் திகழும்
கண்ணனையும் அவன் அண்ணனாகிய பலதேவனையும் போல நிலைபெறுக’ என்று இருபெருவேந்தர் ஒருங்கிருந்த காட்சிகண்டு வாழ்த்துகிறார் புறநானூற்றுப் புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார். 

நூல் கடியலூர்     உருத்திரங்    கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படையில் பாட்டுடைத் தலைவனான தொண்டைமான் இளந்திரையன் என்பான் கரிய நிறத்தையுடைய திருமால் மரபில் உதித்த சோழர்களின்     வழி வந்தவனாகக் கொண்டாடப்படுகிறான். 

இடையர்கள் (கோனார்கள்) வைணவ வழிபாட்டினராக குறிப்பிட்டாலும், அவர்கள் தங்கள் அடையாளத்தை இங்கு ஊன்றவில்லை, ஆனால் கள்ளர்கள் வலிமையாகத் தங்கள் அடையாளத்தைப் பதிந்துள்ளனர். இங்கு நிலங்களைக் கைப்பற்றித் தங்கள் கடவுளுக்குக் கோயில்களை உருவாக்கியிருக்கிறார்கள். தங்கள் தெய்வமான திருமாலுக்குக் கோயில்கள் எடுத்துள்ளனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் கூட இடையர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும் மற்றும் திருக்கண்ணபுரம் முனையதரையன் போன்றவர்கள்  திருமாலைப் போற்றி வாழ்ந்தனர்.   

உள்ளம் கவர்ந்த கள்வன், உலகைக் கவர்ந்த ஆழ்வான்!

இப்படி தமிழ் நாடெங்கும் கோவில் கொண்ட முல்லை நிலத்து மாதவன் எங்கே எல்லாம் கள்ளர் என்று திருநாமம் கொண்டுள்ளான்.

ஸ்ரீ கள்ளழகர் 

கோவில் : அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்
ஊர் : அழகர் கோவில், மதுரை.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

"திருமாலிருஞ்சோலை வஞ்சக்கள்வன் மாமாயன்!"

தல்லாகுளம் ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் இருந்து வண்ண வண்ண துணிகளாலும் வண்ண வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் அழகர் கோவில் மலைக்கு கள்ளழகர் புறப்படுவார். இந்த பெருமாளை நம்மாழ்வார், "வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.

பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசம்.

ஸ்ரீ திருக்கள்வப்பெருமாள்

கோவில் : அருள்மிகு கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில்
ஊர் : திருக்கள்வனூர். (காஞ்சி காமாட்சி அம்மன்கோயிலின் உள்ளே), காஞ்சிபுரம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

மூலவர் கள்வப்பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 55 வது திவ்ய தேசம்.

ஸ்ரீ கள்வர் பெருமாள்

கோவில் : அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்
ஊர் : திருக்கார்வானம், காஞ்சிபுரம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

திவ்ய தேசங்களில் 53 வது, இறைவன்: கள்வர்-நின்றகோலம். நவநீத சோரன், வெண்ணெய் உண்ட கள்வன்.

"கள்வர் பெருமாள் கார்வானத்துள்ளாய் கள்வா" என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற தலம் இது.

ஸ்ரீ கள்ளபிரான்

கோவில் :  ஸ்ரீ  கள்ளபிரான்
ஊர் : திருவைகுண்டம், தூத்துக்குடி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது. உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்; தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதியும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளன.

ஸ்ரீவைகுண்டம்  கோயிலின் தலைமை அறங்காவலர் ஒரு கள்ளர் ஆவார்





ஸ்ரீ கள்ளர் பிரான்










கோவில் :  ஸ்ரீ கள்ளபிரான்

ஊர் : கங்கைகொண்டான், திருநெல்வேலி

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

திருநெல்வேலியில் இருந்து 18 km தொலைவில் உள்ள கங்கைகொண்டான் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ கள்ளபிரான் ஆலயம். பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட கோயில்.

மூலவர் ஸ்ரீ பெருந்தேவி ஸ்ரீகுமுதவல்லி சமேத ஸ்ரீ வைகுண்டபதி.

உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கள்ளபிரான்.

உள்ளே கருடன், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆஞ்சநேயர் மற்றும் சக்கரதாழ்வார் சன்னதி உள்ளது.பெரிய மணி மண்டபம்.அர்ச்சகர் கோவிந்த பட்டாச்சார்யார் தள்ளாத வயதிலும் கோயிலையும் பெருமாளையும் சிறப்பாக வைத்து இருக்கிறார். பக்கத்தில் சிறப்பு வாய்ந்த ஆனந்தவல்லி சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது.

ஸ்ரீ கள்ளர் பிரான்
                                                                                      கள்ளர்பிரான் கருடசேவை

கோவில் : அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில்
ஊர் :  திருமலைவையாவூர், செங்கல்பட்டு.
பழமை : 500 வருடங்களுக்கு முன்

கள்ளர்பிரான், சீனிவாசர் என இரண்டு உற்சவர்கள் இருக்கின்றனர். சித்திரை பிரம்மோற்ஸ்வத்தில் கள்ளபிரானும், புரட்டாசியில் சீனிவாசரும் தேர் பவனி செல்கின்றனர்.  

தொண்டைமான் மன்னர் ஒருவர் தன் நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டி வெங்ஙடாசலபதியை வேண்டிய போது அவருக்கு அருள் செய்தார். தொண்டைமான் இந்த மலை மீது சுவாமிக்கு கோயில் கட்டினார்

ஸ்ரீ கள்ளர் திருக்கோலம் 

கோவில் : அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில், 
ஊர் :   ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் 
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கள்ளர் திருக்கோலம்.

ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகர் சுவாமிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான காரணம் இதுதான்.ஆண்டாள், கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாளாம்.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 90 வது திவ்ய தேசம். வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.

ஸ்ரீ கள்ளர் திருக்கோலம் 

கோவில் : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் 
ஊர் :   திண்டுக்கல்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலம் பூண்டு மேற்கு ரத வீதி, தாடிக்கொம்பு ரோடு வழியாக வலம் சென்று அங்கு நகர் தோட்டத்தில் இரவு தங்குவார்.

கள்வன் கொல் உற்சவம்

கோவில் :சிந்தனைக்கினியான் 
ஊர் :   திருவாலி - திருநகரி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

கோவில் : இரட்டைத் திருப்பதிகளான திருவாலி - திருநகரி என்பது 108 திருப்பதிகளில் ஒன்று. திருமங்கையாழ்வார் அவதாரச் சிறப்பினால் ஏற்றம் பெற்ற தலம்.

திருமங்கையாழ்வார் தம்பதிகள், வழிபட்ட சிந்தனைக்கினியான் என்கிற பெருமாள் விக்கிரகத்தை இன்றும் திருநகரி திருக்கோயிலில் தனிச் சந்நிதியில் காணலாம். திருமங்கையாழ்வாருக்கு இச்சந்நிதியில் தனிக் கொடிமரமும் உண்டு. கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் ஆழ்வாருக்கு உற்சவம் நடைபெறுகிறது. அதில் மிக முக்கியமான உற்சவம் கள்வன் கொல் எனும் உற்சவம். ஆழ்வார் ஞானம் கனிந்து பெண் தன்மையில், பரகால நாயகியாகத் தன்னை பாவித்துப் பதிகம் பாடினார். அன்றைய தினம் இத்தலத்துப் பதிகமான, அவரது ‘கள்வன் கொல்’ என்ற பதிகம் சேவிக்கப்படும்.

கள்ளர் செய்தான்



பசுவைக் கொல்லும் முஸ்லீம்கள் ஆதிக்கத்தில் இன்று இருக்கும் பாகிஸ்தானில் ராவல்பிண்டிக்கும், இஸ்லாமாபாத்துக்கும் இடையே 'கள்ளர் செய்தான்' Kallar Seydan செய்தான் என்று ஓரிடம் இருக்கிறது. இங்கு பசுக்களுக்குக் காவலனான கிருஷ்ணனுக்கு ஒரு கோவில் இருந்தது என்று கண்டு பிடித்துள்ளார்கள்  

சோழர்  - கள்ளர் - திருமால் 

தில்லையும், திருவரங்கமும் சோழர்களுக்கு முதன்மையான ஒரு தலமாகவே இருந்தது. சோழர்களின் பூர்விகத் தலைநகரான உறையூரைத் தொட்டடுத்து அமைந்திருப்பதாலும், சோழ குல இளவரசி ஒருவரே உறையூர் நாச்சியார் என்ற பெயரில் திருவரங்கத் திருமாலின் தேவியாக வழிபடப்பட்டு வருவதாலும், இத்தலம் சோழர்களின் 'குலதனமாக'க் கொண்டாடப்பட்டது. திருவரங்கம் திருமால் கோயில் ”சோழற்குக் குலதனமாய் வருகிற கோயில்” என்று மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டொன்றில் குறிப்பிடப்பெற்றுள்ளது.

முற்காலச் சோழர்களில் முதன்மைப் புகழுக்குச் சொந்தக்காரனான ‘கோச்செங்கட் சோழன்‘ எனப்படும் கோச்செங்கணானின் வீர வரலாறு, சங்க காலப் புலவர் பொய்கையார் பாடிய, ‘களவழி நாற்பது’ என்னும் அற்புதமான நூலினுள் பொதிந்து கிடக்கிறது. செங்கணான் பிறவிச் சைவன் என்றபோதிலும், எட்டுத் திருமால் ஆலயங்களையும் எழுப்பியுள்ளான் என்பது வரலாறு. அதனால்தான் திருமங்கையாழ்வார் இம்மாமன்னனை, ‘‘செம்பியன் கோச்செங்கணான், கோச்சோழன், தென்றமிழன் வடபுலக்கோன் சோழன், தென்னாடன் குடகொங்கன், தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்’’ என்றெல்லாம் புகழ்பாடிப் பரவசப்படுகின்றார்.

பிற்காலத்தில் கோனேரிராயன் எனும் சோழரின் குடியில் உதித்த கள்ளர்குலத்தலைவன் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை விஜயநகரத்திற்குட்பட்ட மஹாமண்டேலேஸ்வரனாக ஆண்டு வைணவம் போற்றி வந்ததும் வரலாற்றில் அறியப்பட்டு கிடக்கின்றன.

மறக்குல வாணாதிராயர்கள் வைணவ மரபின் பெரிய திருவடி கருடனைத் தங்கள் சின்னமாகக் கொண்டிருந்தனர். வாணாதிராயர்கள் மதுரையையடுத்து அழகர் கோயில் கள்ளழகரைத் தலைமைத் தெய்வமாகக் கருதினர். சேதுபதிகள் சைவராயினும் தங்களை ஸ்ரீராமனின் சகோதரர உறவுடைய குகனின் வழியினர் என கூறிக்கொண்டனர்.


பெருவயல் செப்பேட்டில் ஒப்பம் இட்டிட்ருக்கும் கள்ளர் குலத்தை சேர்ந்த சில நாட்டர்கள் தங்களை நாராயணப்பேரரசு வழிவந்த கள்ளர் படைத்தலைவர்கள் என கூறியுள்ளனர்.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்