"விஜய ரகுநாத பல்லவராயர்
துரை ராஜா " அவர்கள் புதுக்கோட்டையில் குழந்தைசுவாமி பல்லவராயருக்கு மகனாக பிறந்தார்.
புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட
பைரவ தொண்டைமான் அவர்கள் 1898 இல் ஏப்ரல் மாதம் ஐரோப்பா தேசங்களுக்கு பயணம் மேற்க்கொண்டார்.
மன்னரின் பயணக்காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தார்.
1898 - 1908 ஆம் ஆண்டு வரை நிர்வாக கவுன்சிலின் தலைவராக பணியாற்றி வந்தார். 1909 ல்
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவான் (பிரதம அமைச்சர்) பதவிக்கு உயர்ந்தார். 1922 இல்
அரசப் பிரதிநிதி (Regent) எனும் பதவியைப் பெற்று 1928 வரையிலான காலகட்டத்தில் புதுக்கோட்டை
சமஸ்தான அரசப் பிரதிநிதியாக இருந்தார்.
இவரது நிர்வாகத்தில் 1924
ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை சட்டசபை குழு உருவாக்கினார். 1926 ல் தொடக்க
கல்வி சட்டம் இயற்றப்பட்டது. கிராம பஞ்சாயத்து நீதிமன்ற சட்டம் இயற்றப்பட்டு, சிறு
கிராமங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயத்திற்கு கிணறுகள் தோண்டவும்
குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டது, முந்திரி பயிரிடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு,
விவசாய நிலங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டன.
1930 ஆம் ஆண்டு தனது 58 வயதில்
இறப்பெய்தினார்.