புதன், 17 ஜூன், 2020

கடாரம் கொண்டான் வரலாறு /கடாரம்கொண்டான் / கிடாரத்தரையன் / கடாரத்தரையர் மரபினர்



ராஜேந்திர சோழனின் படைவீரர்கள் மலேசியாவில் உள்ள கடாரம் பகுதியை கைப்பற்றி புலிக்கொடியை பறக்கவிட்டவர்கள்.

பண்டைய காலத்தில் கெடா, கிடாரம், காழகம், கடாரம், கடஹா என இந்தியர்களால் அழைக்கப்பட்டது.

இன்றும் கள்ளர் மரபினரில் மன்னையில் கடாரத்தலையர் என்றும், 

புதுக்கோட்டை மாவட்டத்தில்  கடாரத்தரையர் பட்டமுடையவர்களும், 

புதுக்கோட்டை வாரைவளர் வாராப்பூர் கள்ளர் நாட்டு பாச்சிக்கோட்டையில் கிடாதிரையர் என்றும், 

பர்மா பீலிகனில் கடாரம்கொண்டான், கடாரதலைவர் என்ற பட்டத்துடன் வாழ்கின்றனர். 

சோழமண்டலத்தில் பல பகுதிகளிலும் மேற்குறிப்பிட்ட பட்டத்தினர் வாழ்கின்றனர்.


1861 ல் பெ.ந. குப்புசாமி கடாரத்தலைவர் கட்டிய பர்மா பீலிக்கான் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில்




புதுக்கோட்டை






கல்வெட்டுகள்








தந்தை ராஜராஜசோழத்தேவருக்கு இணையாக உலகம் போற்றும் மகனாக திகழ்ந்தவர் முதலாம் ராஜேந்திர சோழத்தேவர். சிவசரணசேகரன், பூம்புகார்த் தலைவன், செங்கோல் வளவன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்னும் பல பட்டப்பெயர்களால் அழைக்கப்பட்டவர் .


ராஜேந்திர சோழத்தேவர். ஆடித் திருவாதிரைத் திருநாளில் பிறந்த ராஜேந்திர சோழத்தேவர் மட்டுமே இந்திய அரசர்களில் கடல் கடந்து சென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டிய மன்னர் ஆவார். தந்தை ராஜராஜசோழத்தேவரின் வலக்கரமாக விளங்கிய ராஜேந்திர சோழத்தேவர் 1012-ம் ஆண்டு சோழ சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.


ராஜேந்திர சோழத்தேவருக்கு 'கடாரம் கொண்டான்' என்ற புகழ் கிடைக்க காரணமான இடம், கடாரம்கொண்டான் என்றழைக்கப்பட்ட ராஜேந்திர சோழத்தேவர் வென்ற கடாரம், மலேசியாவில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியாகும் என்கிறார் மலேசியா வழக்கறிஞரும் வரலாற்று ஆய்வாளருமான டத்தோ வீ.நடராஜன்.


அதை, ‘சோழன் வென்ற கடாரம் பூஜாங் பள்ளத் தாக்கு’ என்கிற வரலாற்று நூலாகவும் ஆவணப்படுத்தியுள்ளார்.


பட்டினப்பாலையில் காழகம் என வழங்கப்படும் துறைமுக நகரம் இதுவே ஆகும். 


சோழர்களின் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினத்திலிருந்தும், பல்லவர் களின் துறைமுகமாக இருந்த மாமல்லபுரத்திலிருந்தும் இந்திய வணிகர் கள் கிழக்குமுகமாகப் போகும்போது முதலில் காணக்கூடிய நிலம் கெடா சிகரமாகும் (குனோங் ஜெராய்).



இதனை மாலுமிகள் கலங்கரை விளக்க மாக பயன்படுத்தினர். இதன் அருகேயுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பகுதி மலாக்கா நீரிணைக்குள் நுழைய ஒரு வசதியான இடமாக இருந்தது. இங்கு தங்கம், ஈயம், இரும்பு ஆகிய உலோகங்களுக்கான வர்த்தகம் அதிக அளவில் நடைபெற்றது.



பண்டைய கெடாவின் பூஜாங் பள்ளத்தாக் கில்தான் தமிழ்ப் பேரரசன் ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் இருந்தது. இந்தியா, இந்தோனேஷியா, சீனா இடையிலான கடல் வணிக வழியில் கடாரம் அமைந்திருந்ததால் இங்கு சிறப்பான முறையில் வர்த்தகப் போக்குவரத்து நடைபெற்றது.



இந்தப்பகுதி பண்டைய காலத்தில் கெடா, கிடாரம், காழகம், கடாரம், கடஹா என இந்தியர்களால் அழைக்கப்பட்டது. பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாற்றை இலக்கிய ஆதாரங்கள், புராதன பொருட்கள் வழியாக ஆராய்ந்தபோது இந்த உண்மைகள் தெரிய வந்தன.



மேலும், சீனர்களின் வம்சம் பற்றிய பதிவுகள், சமய பயணிகளின் குறிப்புகள், அரபுக் கடற்பயணிகள், புவியியல் பதிவுகள் ஆகியவற்றில் கிடைத்துள்ள குறிப்புகள் வழியேயும் இவற்றை அறியமுடிகிறது.


இத்துறைமுகம் மலைகள் சூழ்ந்த பாதுகாப்பு பகுதியில் இருந்த மிகச் சிறந்த துறைமுகமாக அக்காலத்தில் விளங்கியது.

சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் செல்லும் கப்பல்கள் இத்துறைமுகம் வழியாகவே சென்று வந்தன. சங்க காலம் முதல் தமிழர்களின் கடல்வாணிகம் சிறந்த நிலையில் இப்பகுதியில் நிலவி வந்தது. 11-ம் நூற்றாண்டில் இப்பகுதியில் சீன வணிகர்களின் அச்சுறுத்தல்கள் மிகுந்தன. தமிழ் வணிகர்களுக்கும் இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கும் இதனால் பல இன்னல்கள் நிகழ்ந்தன. ஸ்ரீவிஜயத்தை ஆண்ட அரசர்களும் சீன அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரத்தைப் போக்க மாமன்னன் ராஜேந்திரன் பெரும் கப்பற்படையை உருவாக்கி இவ்வரசுகளை அடிபணியச் செய்து தமிழர்களுக்கும், தமிழ் வணிகர்களுக்கும் ஆதரவு நல்கினார். 



தஞ்சை பெரிய கோயிலின் தெற்குச் சுவரிலுள்ள 1030-ம் ஆண்டு மெய்கீர்த்தியில் ராஜேந்திர சோழனின் படையெடுப்புகள் குறிக் கப்பட்டுள்ளன. இதனை நீலகண்ட சாஸ்திரி மொழிபெயர்த்திருக்கிறார். அதில், “ராஜேந்திரன் அலைகடல் நடுவில் கப்பல்களை அனுப்பிய பின், கடார மன்னனான சங்கரம-விஜய துங்கவர்மனை சிறைபிடித்து அவனது யானைகளையும் படைகளையும் வென்று, அந்த மன்னனின் செல்வத்தையும் கைப்பற்றினான்” என்றிருக்கிறது. மேலும், திருவாலங்காடு செப்பேட்டிலும் கடாரப் படையெடுப்பு பற்றி குறிக்கப்பட்டுள்ளது.



ராஜேந்திர சோழன் வென்றதாக சொல்லப்படும் கடாரம், சுமத்ராவிலும், ஜாவாவிலும் இருப்பதாக பலர் சொல் வார்கள். ஆனால், இது மலேசியாவின் பூஜாங் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிற பகுதியில் உள்ளது.



இதை செப்பேடுகள், சங்க இலக்கிய பாடல்கள், அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய காலப் பொருட்கள், அதில் குறிக்கப்பட்டுள்ள முத்திரைகள் வழியே நிரூபித்துள்ளேன் என்கிறார்.



இப்படிக்கங்கா நதியும், கடாரமும் கைக் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோனை, கங்கை கொண்டான் என்று எப்படி அழைத்தார்களோ, அப்படியே கடாரம் கொண்டான் என்றும் அழைத்திருக்க வேண்டுமே. கங்கை கொண்ட சோழிச்சரம் போல், கடாரம் கொண்ட சோழிச்சரம் ஒன்றும் உருவாக்கியிருக்க வேண்டுமே. சோழ நாட்டில் தஞ்சை ஜில்லாவிலே மாயூரத்துக்கு வடகிழக்கே எட்டு மைல் துரத்தில் ஒரு சிறிய ஊர் 'புன்செய்” என்ற பெயரில் இருக்கிறது. இந்த ஊருக்கே தேவாரத்தில் நனிபள்ளி என்ற பெயரும் வழங்கியிருக்கிறது. ஆனால் அந்த வட்டாரத்தில் விசாரித்தால் புன்செய் என்ற பெயரும் தெரியாது, நனிபள்ளி என்ற பெயரும் தெரியாது. மக்கள் இந்த ஊரை அழைப்பது எல்லாம் 'கிடாரம் கொண்டான்' என்ற பெயரில்தான். 



திருவாரூர் பக்கம் கிடாரங்கொண்டான் என்ற ஊர் உள்ளது. கிடாரங்காய், அங்கே இருந்து வந்ததுதான் என்றும் கூறுவர்.


குலோத்துங்கரின் திருவரங்கம் கல்வெட்டில்
சேனாபதிகள் என்றழைக்கப்பட்ட சோழர் படைத்தலைவர்களான இளங்கோவேளார், வீரராஜேந்திர அதியமான், செய்யபாதம், தளியில் மதுராந்தகனான ராஜேந்திர சோழக் கிடாரத்தரையன், ராஜேந்திர சோழனான கங்கைகொண்ட சோழ முனையதரையர், வீரசோழ முனையதரையர் எனும் அறுவரும் அதிகாரிகளைப் போலவே இந்நந்தவன வேள்வியில் பங்கேற்று மணலடித்த நிலங்களை விளை நிலங்களாக மாற்ற உதவியுள்ளனர்.



புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் கி.பி. 1168ஆம் ஆண்டுக் கல்வெட்டில் "சதுரன் ராஜனான கிடாரத்தரையன் எடுப்பித்த சதிர விடங்க நாயகற் திருமுன்பில் சாந்திக் கூத்தி நாச்சி உமையாள்வாரான சதிர விடங்கை நங்கை ...வைகாசித் திருவாதிரை திருநாளுங்கண்டு திருநாளுக்கு கூத்தாடுகைக்கு ...இத் திருநாளைக்கு ஆறு கூத்தாடுவாராகவும் விளையினும் விளையாவிடினும் இக் கூத்தாறும் ஆடக் கடவதாகவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



லீய்டன் பெரிய செப்பேடு -



நாகப்பட்டினத்தில், முதலாம் இராஜராஜன், தன்ஆட்சிக்கு உட்பட்ட, கடல்கடந்த தூர கிழக்கு நாடான, ஸ்ரீவிஜய நாட்டுத் தலைவனும், [இன்றைய சுமத்திரா-ஜாவா, Keddah] கிடாரத்தை ஆளும் சைலேந்திரகுல அரையனான மாற விஜயதுங்க வர்மன், தன் தந்தையின் பெயரால் எடுப்பிக்கின்ற, சூடாமணிபன்ம விகாரம் என்னும் பௌத்தர் வழிபாட்டுத் தலத்திற்கு, வேண்டும் நிவந்தங்களுக்கு க்ஷத்ரிய சிகாமணி வளநாட்டு ஆனைமங்கலம் எனும் ஊரில் நிலம் தொண்ணூற்றேழே இரண்டுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் மூன்றுமா முக்காணி முந்திரிகைக்கீழ் அரையே இரண்டு மாவினால் இறைகட்டின காணிக்கடன் நெல், எண்ணா யிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பது முக்கலனே இருதூணிக்குறுணி ஒருநாழியும், தன் ஆட்சியின் ஆண்டு 21 வது, நாள் தொண்ணூற்று ஆறில் தலைநகர் தஞ்சையில் இருந்த புரம்படிமாளிகை 'ராஜஸ்ரயன்' தெற்குமண்டபத்தில் எழுந்தருளி இருந்தவாறு, பள்ளிச்சந்த இறையிலியாக வரியிலிட்டுக் கொடுத்த தானம்அளி ஆணையை விவரிக்கும் ஆவணமாகும் ஆணைநிறைவேற 2 ஆண்டுகளும் 18 நாட்களும் கடந்தன இவ்வாணை அவன்மகன் இரோஜேந்திர சோழன் காலத்தில் தாமிரசாசனமும் செய்யப்பட்டுள்ளது.



ஆனைமங்கலச் செப்பேடுகள் (1)
(லீய்டன்-பெரியது)



முலம்
(வடமொழியில் உள்ளதின் தமிழ் மொழிபெயர்ப்பு)



வரிகள் 73 முதல் 86 வரை பல நூல்களாகிய கடலின் கரைகண்டவனும் அரசர்களின் மணிமுடிகளிலிருந்து வீசும் ஒளியினாலேயே பொன்போல் விளங்கும் கால்மணை உடையவனும் ஆன இந்த அரசன் இராஜசேரிவர்மன் இராஜராஜன் தனது 21 ஆவது ஆண்டில் இதனை வழங்கினான்.



"தன்னுடைய அறிவின் மேன்மையினாலேயே தேவகுருவை வென்றவனும் கற்றறிந்தார் என்னும் தாமரைக் காட்டிற்கு ஓர் சூரியன் போன்றவனும் இரவலர்களுக்கு கற்பகமரம் போன்றவனும் சைலேந்திர குலத்தில் பிறந்தவனும் ஸ்ரீவிஜயநாட்டின் தலைவனும் கடாஹாதேசத்தை ஆட்சி செய்பவனும் மகரமுத்திரை உடையவனும் அரசதந்திரம் எல்லாம்அறிந்த, சூளாமணிவர்மனின் குமாரனும்ஆன, புகழ்பெற்ற மாற விஜயயோத்துங்க வர்மன் என்னும்அரசன்" 



'நல்லொழுக்கத்திற்கு உறைவிடமான மிக்க ஆற்றல் வாய்ந்த இந்தக் கடாகதேசத்து அரசன் அதிர் காலத்து அரசர்களை இவ்வாறு வேண்டிக் கொள்கிறான் இந்த என்னுடைய அறச்செயலை எக்காலத்திலும் காத்தருளுங்கள்"




ஏடு-1 பக்கம்-1



"" .005 தஞ்சாவூர்ப் புரம்படி மாளிகை ராஜஸ்ரயனில் தெற்கில் மண்டபத்

006 து நாம் இருக்கக் கிடாரத்தரையன் சூளாமணிமன்னன் க்ஷத்ரிய சிஹா

007 மணிவளநாட்டுப் பட்டநக் கூற்றத்து நாகப்பட்டினத்து எடுப்பிக்கின்ற சூளா

008 மணிபன்ம விஹாரத்துப் பள்ளிக்கு வேண்டும் நிவந்தத்துக்கு க்ஷத்ரிய சிஹாமணி வ

009 ளநாட்டுப் பட்டநக் கூற்றத்து ஆனைமங்கலம் பள்ளிச்சந்தம்" 



ஏடு-1 பக்கம்-2
"... 
013 ரத்து நாற்பது முக்கலனே இருதூணிக் குறுணி ஒருநாழியும் கடாரத் தரையன்

014 க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நாகப்பட்டனத் தெடுப்பி

015 க்கின்ற சூளாமணிபன்ம விஹாரத்துப் பள்ளிக்கு இருப்பதாக யாண்டு இருபத்.."

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்