புதன், 24 ஜூன், 2020

வீரர் கந்தசாமி சாளுவர்


என் பெற்றோர்களின் திருமணம் கூடநாணல் சக்கரை நாட்டார் இல்லத்தில் நடைபெற்றதாகவும், அதற்கு அப்போதைய தஞ்சை  நாடாளுமன்ற உறுப்பினர் சிங்காரவடிவேலு தலைமை தாங்கினார் என்றும் கூறுவார்கள் ..யார் அந்த சிங்காரவடிவேலு என்ற தேடல் என் மனதில் துளைத்தெடுத்து கொண்டே இருந்தது அதற்கான விடையை இன்றைய வாசிப்பில் கண்டேன்.!

ஆம் ஐயா ! சிங்காரவடிவேலுவின் தாத்தா ஒரு விடுதலை போராட்ட வேங்கை;
1939-ம் ஆண்டில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போட்டியிடுவதாக அறிவித்து களம் காண்கிறார். நேதாஜியை எதிர்த்து காந்தி களம்காண எண்ணினார். காந்தி,நேரு அவர்களை சந்தித்து தான் போட்டியிட வேண்டிய அவசியத்தை கூறி தன் பெயரை முன்மொழியக்கூறினார்.இதனை ஏற்காத நேரு மெளலானா ஆசாத் பெயரை முன்மொழியக்கூறி,மெளலானா ஆசாத் நேதாஜியை எதிர்த்து போட்டியிட மறுத்து, அதன்பின்னர் காந்தியார் தன் வேட்பாளராக ஆந்திர மாநிலத்தை சார்ந்த பட்டாபி சீத்தாராமையாவைக் களத்தில் இறக்கினார்.

* அக்காலகட்டத்தில் நேதாஜியின் நம்பிக்கைக்குரிய களமாடும் வேங்கையாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழகம் முழுவதும் சுற்றிவந்து வாக்கு சேகரித்தார்..

*ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அப்பொழுது மூவருக்கு வாக்களிக்கும் தகுதி இருந்தது.. ஒன்று பூண்டி ஶ்ரீமான் கிருஷ்ணசாமி வாண்டையார் (துளசிய்யா வாண்டையாரின் தந்தை)...அடுத்து சிங்காரவடிவேலுவின் தாத்தா கந்தசாமி சாளுவர், மற்றொருவர் பெரியகோட்டை ஜமீன் தியாகராஜ சோழகர் ...தேவரை அப்போது இவர்களை சந்திக்க அழைத்து வந்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாத்தா கோபாலசாமி நாயக்கர்.

*சோழநாட்டில் நேதாஜிக்கு இரண்டு வாக்குகள் கிடைக்கின்றன ஒன்று திருவாளர்.சிங்காரவடிவேலுவின் தாத்தா கந்தசாமி சாளுவர் அளித்த வாக்கு மற்றொன்று பெரியகோட்டை ஜமீன் தியாகராசர் சோழகர் அளித்த வாக்கு.

அப்பொழுது சர்வ வல்லமை பெற்றவராக திகழ்ந்த காந்தியையே எதிர்த்து நேதாஜிக்காக வாக்களித்த சிங்காரவடிவேலுவின் தாத்தா ஒரு போர்வீரர் எனலாம்.... அவர்மரபுவழித்தோன்றல்தான் தியாகச்செம்மல் சிங்காரவடிவேலு சாளுவர்.

ஒரு இடைத்தேர்தல் மற்றும் மூன்றுமுறை (1980,84,89) தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தவர் அரசியல் வித்தகர் ,மனிதநேய மாண்பாளர் சிங்காரவடிவேலு சாளுவர். இக்கால அரசியலில் தன்னால் நிலைக்க முடியாக என உணர்ந்து விலகி தனித்துவம் காத்தவர் சிங்காரவடிவேலு சாளுவர் அவர்கள்.

என்றும் அன்புடன்

இ. பரத் கூழாக்கியார்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்