சனி, 27 ஜூன், 2020

நத்தமாங்குடி



திருச்சி, தந்திநாட்டு நத்தமாங்குடி, லால்குடிக்கு 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது நத்தம் என்ற கஜாரண்யத் தலம். திருச்சியிலிருந்து ஆலங்குடி மகாஜனம் வழியாகவும், புள்ளம்பாடியிலிருந்து வெங்கடாசலபுரம் வழியேயும் இத்தலத்தினைச் சென்றடையலாம். 

பாண்டிய மண்டலத்தில், மதுரையில் கள்ளர் மரபினர் வாழும் ஊர் நத்தம். அதை போல் சோழமண்டலத்தில் கள்ளர் மரபினர் வாழும் பகுதி நந்தை என்ற ‘ஸ்ரீநந்தையூர்’ எனப் பெயர் பெற்றிருந்தது, நத்தமாங்குடி தற்போது நத்தம், ஆகிவிட்டது. 

நத்தம் மற்றும் மாங்குடிக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் சேரும் சிறுநதி நந்தியாறு பாய்கிறது.

இங்கே ‘ஆதிமூலப்பெருமாள்’ என்ற திருநாமத்துடன் கஜேந்திரவரதப் பெருமாள் காட்சி தருகிறார். பள்ளிகொண்ட திருக்கோலத்தில், கஜேந்திரனின் தலைமீது கரம் வைத்து ஆசிதரும் பாவனையில் பெருமாள் சயனித்திருக்கிறார். தாயார், ஆதிலட்சுமி என்ற திருநாமத்துடன் தனிச் சந்நதி கொண்டுள்ளார். யோக நரசிம்மர் சந்நதியும் இங்கே உள்ளது

கோயிலின் விமானத்தையும் இதன் முன் திருமண்டபத்தையும் செந்தாமரை கண்ணணான மழவராயன் என்பவர் கட்டியதாக குறிப்பிடப்படுகிறது.

நத்தமாங்குடி காளியம்மன்



கள்ளர் மரபினரின் அறப்பணிகள்





அரிகண்ட வீரர் நடுகல்:-


யாஊயாகே குழுவினர் இந்த ஊரை பற்றிய ஆய்வு தகவல்.

இவ்வூரில் ஒரு நம்பிக்கை, அங்கு ஒரு கற்சிலை உண்டு. என்னசிலையென்று ஊரார் அறிந்திருக்கவில்லை, இச்சிலை எப்போதும் கவிழ்ந்தே கிடக்கும், ஊரில் தண்ணீர்பஞ்சம் வரும்போது, இச்சிலையை பிரட்டிவிடுவர். அன்று மழைபெய்யும், மறுபடியும் தண்ணீர் பஞ்சம் போய் வெள்ளக்காடாய் ஆனதும், மீண்டும் அச்சிலையை கவிழ்த்துவிடுவார்கள். அவ்வூரிலுள்ள ஓர் ஆசாரி குடும்பத்திற்கு குலதெய்வமாய் உள்ளார் இவ்வீரர். தண்ணீர்பஞ்சம் ஊரில் வந்தபோது இவர் தன்தலையை இறைவனுக்கு கொடுத்து பஞ்சம் போக்கியவர் என்பது ஊரார் கருத்து.





தலைப்பலிவீரரின் பாதி தலைவரை தார்ஊற்றி மிகவும் பரிதாபமாய் இருந்தார். நம் யாஊயாகே சார்பாய் குழுவினர் சென்று அவரை சுத்தப்படுத்தி, ஊரார் ஒத்துழைப்புடன் அங்குள்ள ஆதிமூலநாயகப் பெருமாள் கோவிலின் வாசலில் மேடையமைத்து நிரந்தரமாய் அவருக்கு ஓர் இடம் ஏற்ப்படுத்தி கொடுத்தோம். 

இச்சிலை கவிழ்ந்து கிடந்த அன்று, ஊரார் ஒத்துழைப்புடன் சிலையை கழுவமுயற்சித்தோம். நாங்கள் சென்ற பொழுது நல்ல வறட்சி, காவிரி, கொள்ளிடம் இரண்டும் வறண்டுபோய் பாலைவனமாய் இருந்தது. சிலையை நிமிர்த்திய சமயம், அங்கு சிறுவர்கள் குழுவாய் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்கையில் அவ்வூர் ஓடையில் தண்ணீர் வருவதாய் கூறிக்கொண்டு ஓடினர், ஒருகனம் வியப்பாகத்தான் இருந்தது எங்களுக்கு, காரணம் நாங்கள் அவ்வோடையைத்தாண்டி தான் இருசக்கரவாகனத்தில் வந்தோம்,

பலவருடமாய் அங்கு தண்ணீர் பாய்ந்த சுவடே இல்லை. காரணம் அது கொள்ளிடகரை ஓடை. கொள்ளிடத்திலேயே தண்ணீர் எப்போதாவதுதான் வரும். காவிரி பெருக்கெடுத்து ஓடி, அதன் உபரிநீரைத்தான் கொள்ளிடத்தில் திருப்புவர். காவிரியே வறண்டது, கொள்ளிடத்தின் ஓடையில் நீர் எப்படியென ஆச்சர்யம். தெரிந்த நண்பர்களிடம் விசாரித்ததில், குளித்தலை தாண்டி மாயனூர் கதவணை யில் தேக்கிய நீர், நீண்டநாட்களாய் இருந்ததால் அதனை வெளியேற்ற திறந்துவிட்டிருந்தனர். முக்கொம்பு பாலம் மதகு உடைந்திருந்தசமயம் வேறு. ஆகவே தண்ணீர் தேக்க வழியில்லாது, நேராக கொள்ளிடம் பாய்ந்து நத்தம் வந்தது தெரியவந்தது.

இதுதற்செயலோ, ஊராரின் நம்பிக்கையோ, அல்லது இறந்தவீரனின் உயிர்க்கொடையோ.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்