வி. வி. ராஜன் செல்லப்பா தேவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினரான இவர், 1992 இலிருந்து 1998 வரை தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
வி. வி. ராஜன் செல்லப்பா தேவர் அவர்கள் ஆகஸ்ட் 16, 1949 பிறந்தார். துணைவி மகேசுவரி, இவரது மகன் வி. வி. ராஜ் சத்யன் தேவர்.
மதுரை பசுமலை உயர்நிலைப்பள்ளியில் எஸ்எஸ்எல்ஸியும், மதுரை காமராஜர்பல்கலைக் கழகத்தில் பி.ஏ மற்றும் எம்.ஏ படித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் படித்தவர். இவருக்குசொந்த ஊர் மதுரை அருகேயுள்ள சாக்கிலிபட்டி கிராமம்.
தற்போது பசுமலையில் வசித்து வருகிறார்.
இவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக தொடங்கிய போது, சென்னை சட்டக்கல்லூரிமாணவரணி அதிமுக செயலாளராக அரசியலில் நுழைந்தார். 1977ம் ஆண்டு பி.எல் முடித்ததும் மதுரையில்தர்மராஜ் சந்தோசத்திடம் ஜூனியர் வக்கீலாக பணியாற்றினார்.
1980ம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா தொகுதியிலும், 1989ம் ஆண்டில் ஜெயலலிதா அணி சார்பில்திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1992ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் ராஜ்யசபா எம்பியாகவும் இருந்துள்ளார். முன்பு அதிமுகவில் பிளவுஏற்பட்டபோது, இரட்டை இலை, சின்னத்தை முடக்க திருநாவுக்கரசர் தலைமையில் ராஜ்யசபா எம்பிக்கள்கையெழுத்திட்டனர். அதில் கையெழுத்திட்ட எம்பிக்களில் இவரும் ஒருவர்.
ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக மறைந்த எஸ்டி.சோமசுந்தரம் நமது கழகம் என்ற தனிக்கட்சியைதொடங்கியபோது அதில் இணைந்தார் ராஜன் செல்லப்பா.
2001 தேர்தலின் போது மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராஜன்.
அக்டோபர் 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் பாக்கியநாதனைத் தோற்கடித்து மதுரை மேயரானார்.
2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சில முறை அதிமுகவை விட்டு வெளியேறி மீண்டும் இணைந்தாலும் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர்.
அமெரிக்க நாட்டில் உள்ள புளோரிடா மாநிலத்தில் நடைபெறும் குளோபல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் உலக அளவில் கழிவு மேலாண்மை கூட்டமைப்பு நிகழ்வு பற்றிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை மாநகராட்சி மேயராக இருந்த போது வி.வி. ராஜன் செல்லப்பா தமிழக அரசின் அனுமதியோடு ஒரு வார கால அரசு முறை பயணமாக சென்றிருந்தார்.
வி. வி. ராஜ் சத்யன் தேவர்