புதன், 24 ஜூன், 2020

உசிலம்பட்டி




பாண்டிய மண்டலத்தில், உசிலம்பட்டி என்பது கள்ளர் மரபினரின் கோட்டை ஆகும். புத்தூர் நாட்டில் உசிலங்காட்டை திருத்தி உசிலம்பட்டி எனும் ஊர்கட்டிய (உருவாக்கிய) உசிலம்பட்டி ரெட்டை வீரத்தேவன், இன்று பட்டவன் சாமியாக வணங்கி வருகின்றனர்.

இங்கு கள்ளர் மரபினரின் குடும்ப பட்டம் "தேவர்". பழமையான மரபணுடைய பாண்டிய மரபினரின் வழித்தோன்றல்கள் .

உசிலை மரம் சங்ககாலத்தில் இதன் பெயர் சிலைமரம். இதுதான் உசிலை மரம் என்பதும் தெரிகிறது: உசிலம்பட்டிக்கு பெயர்க் காரணமாக இருந்ததும் இந்த சிலை மரம்தான். 

‘உசிலம்பட்டி பெண்குட்டி’ பாடலுக்கு கவிஞர் வைரமுத்து தேவருக்கு காலெடுத்துக் கொடுத்ததும் இந்த மரம்தான். சமீப காலமாக இந்த மரம், அரப்பு மரம் என்றும் ‘ஷேம்பு மரம்’ என்றும் கூட அழைக்கிறார்கள்.

தமிழ் மக்கள் இதனை 54 வேறுவேறு பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். இன்று உறுதியான மரம் என்று தாவரவியல் இன்று சொல்லுகிறது.


இதே கருத்தினை 2000 வருஷத்துக்கு முன்னாடி சொல்லியிருக்கிறார்கள். சங்க இலக்கியப் பாடல்கள் 'வில் அம்பு’ செய்ய உறுதியான மரம் என்று சொல்லுகின்றன.

“சிலை விற் பகழிச் செந் துவர் ஆடைக் கொலைவில் எயினர் தங்கை!.....’) – ஒதலாந்தையார்

 (ஐங்குறுநூறு – 363 வது பாடல்)


‘சிலை’ என்பது கருவாகை மரத்தைக் குறிக்கும். பகழி என்றால் அம்பு. ‘துவராடை’ என்றால் செந்நிற ஆடை. எயினர் என்றால் பாலை நிலத்தில் வசிப்பவர் என்று பொருள். பாலை நில மக்கள் கள்ளர்.

“சிலை மரத்தால் செய்த வில்லையும்

அம்புகளையும், சிவந்த ஆடையை அணிந்து,

கொலை புரிதலை தொழிலாக கொண்டவனின் தங்கையே..”

என்று சொல்லும் பாடல். 



சோழமண்டலத்தில் ஒரு உசிலம்பட்டி


திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது உசிலம்பட்டி கிராமம். இங்குள்ளது உசிலை வனநாதர் ஆலயம். இறைவி சொர்ணரேகா. உசிலை மரங்கள் நிறைந்த தோப்பில் அருள்பாலித்து வரும் இந்த ஆலய இறைவனின் மேனி உளி படாத திருமேனி. இறைவனின் திருமேனியில் பல வியக்கத்தக்க அதிசயங்கள் உள்ளன. இறைவனின் தலையில் இடதுபக்கம் சந்திரபிறை போன்ற பள்ளம் உள்ளது. தலைப்பகுதியின் பின்பக்கம் சடை போன்ற வரிகள் உள்ளன. இறைவனின் நெற்றியில் விபூதி பட்டை போல் மூன்று பட்டையான கோடுகள் உள்ளன. இறைவனின் இடையைச் சுற்றி தங்கரேகை போன்ற அமைப்பு உள்ளது. இறைவனின் இடதுபுறம் அம்பாளின் சின்னமான திரிசூலம் போன்ற அமைப்பும் உள்ளது. இப்படி அமைப்பு உள்ள லிங்கத் திருமேனி வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.


பாண்டிய மண்டல உசிலம்பட்டி 

பெருங்காமநல்லூர்  தியாகிகள்

வெள்ளையர்களை எதிர்த்து வீரமரணம் அடைந்த பெருங்காமநல்லூர்  தியாகிகளின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வீரத்தியாகளின் புகைப்படம்.

உறங்காப்புலி  ஐயா.பி.கே.மூக்கையாதேவர்


உசிலம்பட்டி மண்ணின் மைந்தர், உசிலம்பட்டி தொகுதியில் 25 வருடம் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சபாநாயகராகவும், விளங்கிய கள்ளர் மரபில் தோன்றிய மாணிக்கம், ஏழை எழிய மக்களின் கல்வி  நலனுக்காக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியும், பசும்பொன் ஐயா.உ.முத்துராமலிங்கதேவருக்கு வானுயர சிலை வைத்து அழகு பார்த்தவர், கச்சத்தீவு நாயகன், உறங்காப்புலி'  ஐயா.பி.கே.மூக்கையாதேவர்.


மலையாண்டித்தேவர்


சுந்தரவள்ளி அம்மன்


உசிலம்பட்டி  எட்டுக்கரங்களுடன் அசுரனை தலையில் மிதித்து ஆக்ரோசமாக நின்ற சுந்தரவள்ளி அம்மன்.மிகப்பெரிய அளவில் பலகைக்கல்லில் வடிக்கப்பட்டுள்ள அம்மன் நிசம்பசூதணியை ஞாபகப்படுத்துகிறது. கோயிலில் பைரவர் சிற்பமும் உண்டு.

கோயிலை வலம் வரும்பொழுது நடுகற்கள் இரண்டு இருந்தன. வாள் ஒன்றை உறையுள் இருந்து உருவுவது போன்ற அழகில் அமைக்கப்பட்டுள்ளது . திருமங்கலம் வட்டம் சித்தாலை- உறப்பனுர் இடையே சுந்தரவள்ளியம்மன் கோவில் அமையப்பெற்றுள்ளது.




அணைப்பட்டி , குறுக்குப்பாறை பாறை ஓவியங்கள். கள்ளர்களின் தொன்றுதொட்ட ஏறு தழுவலை நினைவூட்டும் மாடு பிடி காட்சி உள்ள இடம்.






குதிரை வீரன் நடுகல்

 

உசிலை ஆனையூரில் ஐராவதீஸ்வர் சிவன்கோவிலில் இருக்கும் தவ்வை


உசிலை- தேனி சாலையில் தொ.விலக்கு தாண்டி வலதாக திரும்பினால் இந்த இடிந்த கோயிலைக்காணலாம். பாண்டியர் கலைப்பாணி  


















புத்தூர் முருகன் கோவில் 

புத்தூர் முருகன் கோவில் மிக உயரமான மரங்களர்டந்த இடத்தில் அமைதியா பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது.

பரிவாரக்கோயில்கள், நவக்கிரக சன்னிதிகள் உண்டாக்கப்பட்டு உள்ளன. சுற்றில் ஆவுடை இல்லாத பாணலிங்கம் மட்டும் இருப்பது சிறப்பு.

பலதரப்பட்ட காலங்களிலும் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. கருவறையும், அர்த்த மண்டபமும் பாண்டியர் காலகட்டம், மகா மண்டபம் நாயக்கர் காலமென்றும் கூறுகிறார்.

மகா மண்டபத்திற்க்கும் முன்பாக அமையப்பெற்றுள்ள மண்டபம் உபபீட தளத்தையே அடித்தளமாக கொண்டு கொடுங்கை அமைப்புடன் விளங்குகிறது. பிரஸ்தரத்தின் மேலிருக்கும் சிம்ம யாளி வரி மற்றும் வலபியில் இருக்கும் நாகதல அமைப்பு கண்டு இது பாண்டியர் கலைப்பணி என விளங்குகிறது.

கருவறையில்.வீற்றிருக்கும் முருகன் பாதரச்சை அணிந்திருக்கிறார் இடையில் வாள் உண்டு என்ற தகவலை சொல்லியபொழுது, காலில் செருப்பு அணிந்த வாள் கொண்ட முருகன் என்றே நான் கொள்வோம்.











பாண்டிய மன்னர்களின் இலைச்சினையான இரட்டைமீன்கள் செண்டுடன் காணப்படுகிறது. அரிதாகவே இப்படியான சூலக்கல் காணக்கிடைக்கிறது. ஆயிரம் ஆண்டு பழமையை கொண்டுள்ள பாண்டியர் சூலக்கல், உசிலம்பட்டி


பேரையூர் சாலையில் அமைந்திருக்கும் அய்யனார் கோவில். முழுவதும் செங்கலால் கட்டப்பட்ட கோயில். கோயில்கள் முன்பு செங்கல் தளிகளாகத்தான் இருந்தன அதனால் இதனுடைய காலத்தையும் அவ்ளோ பின்னோக்கி கொண்டு செல்ல மனமில்லை. உசிலம்பட்டி, அய்யனார்கோயில்.













பண்ணைப்பட்டி கண்மாய்க்கு கீழே இருக்கும் அய்யனார் கோவிலின் அருகே உள்ளது இந்த சதிகல்.


தே.கல்லுப்பட்டி- பேரையூர் சாலையில் உள்ள புலிக்குத்திக்கல். மக்களைக்காக்கும் பொருட்டோ.. ஆநிரைகளைக்காக்கும் பொருட்டோ.. புலியுடன் சண்டையிட்டு உயிர்நீத்த வீரனின் நினைவாக எடுப்பித்த கல் தான் புலிக்குத்திக்கல்.

தேவன்குறிச்சி மலையடிவாரத்தில் உள்ள அக்னீஸ்வரர் கோயிலின் பின்புறம் சிறிய மண்டபம் எழுப்பி அதனுள் இந்த புலிக்குத்திக்கல்லை வைத்து வணங்கி வருகின்றனர். 


உசிலம்பட்டி - முதலைக்குளம் கண்மாயில் இருக்கும் தூம்பு. மடை. வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ள தூம்பு கல். தென் கல்லக நாடு என்ற குறிப்பு இதில் உள்ளதால் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.

சந்தனம், குங்குமம் , பூ , பொங்கலுடன் ஒரு சிறப்பான வழிபாட்டுடன் நடப்பட்டு இருந்தது.



நன்றி : 
உசிலை மரபு & தொல்லியல் ஆர்வலர் குழு

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்