இரண்டாம் இராசராச சோழனின் அரசியல் தலைவனாக குலோத்துங்க சோழகடம்பராயன் விளங்கினான். அவர்களின் வழித்தோன்றல்களுக்கு கடம்பராயர் என்ற பட்டம் வழங்கி வருகிறது. வண்டல் மண் படிந்த நீலமுடையார், வலுவுடன் வாழ்பவர். கரம்பையார் என்றும் கடம்பராயர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய படை தளபதியும் , கோனாட்டு (இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி) அரையர்களில் முதன்மையானவனுமான "ஊருடைப்பெருமானான எதிரிலிசோழ கடம்ராயன் " என்ற கள்ளர் குல பெருமகன் , மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டியர்களுக்கு எதிரான மூன்றாவது போரில் வெற்றி பெற்று பாதுகாப்பாக சோழநாடு திரும்பினால் மடத்துக்கோவிலில் உள்ள திருப்பெருமானாண்ட நாயனாருக்கு (இறைவன்) நிலக்கொடை தருவதாக சபதம் செய்துள்ளார்.மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய படை தளபதியும் ,கோனாட்டு(இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி) அரையர்களில் முதன்மையானவனுமான "ஊருடைப்பெருமானான எதிரிலிசோழகடம்ராயன் " என்ற கள்ளர் குல பெருமகன் , மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டியர்களுக்கு எதிரான மூன்றாவது போரில் வெற்றி பெற்று பாதுகாப்பாக சோழநாடு திரும்பினால் மடத்துக்கோவிலில் உள்ள திருப்பெருமானாண்ட நாயனாருக்கு(இறைவன்) நிலக்கொடை தருவதாக சபதம் செய்துள்ளார்.
அவர் பிரார்த்தனை படி மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனை வீழ்த்தி போரில் வெற்றி பெற்று பாண்டிய தலைநகரமான மதுரையில் சோழ பாண்டியன் என்று வெற்றி மகுடம் புனைந்துக் கொண்டு பாதுகாப்பாக சோழநாடு திரும்பினார்.
தன் வேண்டுதல் நிறைவேறியதால் இறைவன் திருப்பெருமானாண்ட நாயனாருக்கு நிலக்கொடை வழங்கியுள்ளார் ஊருடைப்பெருமானான எதிரிலிசோழகடம்ராயன்.
அக்காலத்தில் மன்னர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்து படைதளபதிகள் தன் மன்னன் போரில் வெற்றி பெற வேண்டும் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளனர் என்ற செய்தி இவ்வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டு மூலம் நமக்கு தெரியவருகிறது.
செண்பகப் பெருமாள் கடம்பராயர்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் புல்வயல் கோயில் மடாபாத்தியமும் கோயில் கணக்கருமான செண்பகப் பெருமா கடம்பராயர் ஊராரும் இணைந்து சுந்தரசோழபுரத்து சூரியன் பூமனுக்கு நில ஒற்றி கொடுத்தமை. வாரப் பங்கீடு பற்றிய செய்தி
மாடத்துக்கோயில் :-- புதுக்கோட்டை சமஸ்தானம், தாங்குபட்டி - பழைய சிவாலயம்- இங்கு சப் தரிஷிகளின் சிலைகள் உள்ளன. இங்குள்ள கல்வெட்டு களால் இக்கோயில் சேர கடம்பராயர் என்பவரால் கட்டப் பட்டது.
ஆதார நூல் :-
1)INSCRIPTIONS IN THE PUDUKKOTTAI STATE ( TRANSLATED INTO ENGLISH) - PART 2 (EARLY COLA AND PANDIYA INSCRIPTIONS) - BOOK PAGE NUMBER 155&156.
2) PUDUKKOTTAI STATE INSCRIPTION NUMBER 169