விபூதி வீரமுத்து தேவர் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஊரில் கள்ளர் மரபில் தேவர் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்தவர்.
ஈவேரா தமது காலத்தில் ராமர் படத்தினை சேர்ப்பால் அடித்து ஹிந்து வெறுப்பை காட்டியபோது. எதிர்த்து கேள்வி கேட்டார்.
திராவிடர் கழகத்தினர் ... “ என் பணத்தில் நான் காசுகொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் நான் அடிப்பதில் என்ன தவறு? இதை கேட்க நீயார் ? என விபூதி வீரமுத்து தேவரை கேட்டனர்.
மறுதினம் அதே இடத்தில் ஈவேராவின் படத்தினை வரைந்து அதை செருப்பால் அடித்தார் வீபூதி வீரமுத்து தேவர். கேள்விகேட்டு கோபத்துடன் வந்த திராவிடர் கழகத்தினருக்கு, அவர்கள் பாணியிலேயே பதில் சொன்னார் வீபூதி வீர முத்து தேவர், என் பணத்தில் நான் காசுக்கொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் அடிப்பதில் என்ன தவறு இதை கேட்க நீயார் ? என்றார்.
திராவிடர் கழகத்தினருக்கு பதில் சொல்ல முடியவில்லை, அதனால் அராஜக செயலில் இறங்கினர்.
விபூதி வீரமுத்து தேவர், பெரியார் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் போவதாகச் சொன்னதும். திருச்சி திராவிடர் கழகத் தலைவர் டி.டி.வீரப்பா, எந்தத் தோழரும், விபூதி வீரமுத்து தேவர் பக்கம் போக வேண்டாம் என்று கண்டிப்பாக உத்தரவிட்டார், அறிக்கையும் விட்டார்.
திராவிடர் கழக திருச்சி தியாகராசன் என்பவன், சகாக்களை அழைத்துப் பேசினான்.
டி.டி.வீரப்பா, கட்சியின் கட்டுப்பாடு படி நடக்கட்டும். ஆனால், நாம் நமது ‘சட்டத்திட்டப்படி’ அதை சந்திப்போம் என்று கலந்து பேசினான்.
திருச்சி தியாகராசன் கையில் கத்தி இருந்தது. அப்போது மணி மாலை 7. திருச்சி டவுன் ஆலை நோக்கி, கூட்டத்தைக் கலைக்க, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால், விபூதி வீரமுத்து தேவரிடம் 25 பேர் மட்டும் போராட்டத்தில் இருந்தனர்.
விபூதி வீரமுத்து தேவர் பெரியார் ரஷ்யாவுக்குப் போன போது எடுத்த படத்தை ஒரு மூட்டையில் ஒட்டி, அந்தப் படத்தை செருப்பால் அடிக்கத் திட்டமிட்டிருந்தார்.
‘வெள்ளைக்காரனுக்கு காட்டிக் கொடுத்த நாயை செருப்பால் அடிக்கிறேன்’ என்று கூறி - பெரிய செருப்பை வைத்து, விபூதி வீரமுத்து தேவர் அடித்தார்.
திருச்சி தியாகராசன் சோட விற்பவனைப் போல் உள்ளே நுழைந்தான். டவுன் ஆல் கதவை உடைத்து, டவுன் ஆல் கோபுரத்தின் மீது ஏறி, டவுன் ஆல் கோபுரத்திலிருந்து சோடா பாட்டிலையும், கற்களையும் விபூதி வீரமுத்து தேவர் தலையை இலக்கு வைத்து அடித்தான்;
7 பேர் மொட்டை அடித்துக் கொண்டு பெரியார் படத்தை வைத்துப் பாடை கட்டி தூக்கி வந்தனர். அத்தனை பேரையும் இலக்கு வைத்து தாக்கினார்கள்.
விபூதி வீரமுத்து தேவரை நோக்கி திராவிட கழகத்தினர் மலத்தை வீசினார்கள்;
திருச்சி தியாகராசனை கைது செய்து விட்டார்கள். பெரியாருக்கு 3 ஆண்டு தண்டனை தரப்பட்டது.
கருப்புக்கு ஒரு மறுப்பு போன்று பல நூல்களை எழுதி பதிப்பித்து நாஸ்திக அராஜக கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் வீபூதி வீரமுத்து தேவர்.
ம.பொ.சி அவர்கள் திராவிட எதிர்ப்பு மாநாடு நடத்தியபோது அதில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்.
விபூதி வீரமுத்து தேவரின் நூல்கள் அடுக்கு மொழியில் துணிவுடன் கடுமையாக திராவிட கழகத்துக்கும், அதன் தலைமைக்கு சவுக்கடி கொடுத்து வந்தது.